Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi--11

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-11
அன்று தாமரையின் அப்பாவிற்கு நினைவு நாள்...சரஸ்வதி காலையிலேயே எழுந்து,தலை குளித்து,பூஜையறையை சுத்தம் செய்து,வடை பாயாசம் தயார் செய்தாள்...தாமரை அம்மாவிற்கு சில உதவிகள் செய்து விட்டு,தானும் குளித்து முடித்தாள்...அதற்குள்,தர்ப்பணம் கொடுக்க ஐயர் வந்து விட,மாடியில் போய் பெரியப்பாவை அழைத்துக் கொண்டு வந்தாள்.
..மூன்று இலை போட்டு,அரிசி,காய்கறிகள்,பரப்பி மூன்று தலைமுறை முன்னோர்களை நினைவு கூர்ந்து,எள்ளும்,தண்ணீரும் இறைத்து,தர்ப்பணம் மன நிறைவாக முடிந்தது...ஐயர் தட்சணை வாங்கிக் கொண்டு புறப்படவும், சரஸ்வதி,அப்படியே மூட்டு போட்டு,கணவனின் படத்துக்கு அருகே அமர்ந்து விட்டாள்.
..கண்மூடி பிரார்த்தனை செய்தாள்....வாய் திறந்து கணவனிடம் பேசினாள்..இது வழக்கமான ஒன்றுதான்...ஆகையால்,கண்டுகொள்ளாமல்,தாமரை கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.... திடீரென்று சத்தமேயில்லை...என்னாயிற்று...என்று தாமரை பூஜை அறையை எட்டிப்பார்க்க,சத்தமில்லாமல் முதுகு குலுங்க a அழுது கொண்டிருந்தாள் சரஸ்வதி...

‘’அம்மா...என்னம்மா..ஏம்மா...இப்பிடி’’ என தாமரை அம்மாவின் முதுகை தடவியபடி பதற,
‘’முடியலடி,..உங்கப்பா படத்துலெர்ந்து என்னைய குறுகுறுன்னு பார்க்கராரு பாரு...!பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிடுவியா சரசு...அவ்வளவு சாமர்த்தியம் உனக்குன்டான்னு ஏளனம் பண்றாப்புல இருக்கு..!அப்புறம் உன்னைய தனியா மாட்டிவிட்டுட்டு வந்துட்டேனடி அப்டின்னு மன்னிப்பு கேக்கறாப்புல கூட இருக்குடி.....அந்த கண்ணு பல கதை பேசுதேடி...நான் என்னடி பதி சொல்லுவேன் தாமரை’’ என்று கட்டுப்பாடில்லாமல்,மகளின் மார்பில் சாய்ந்து,அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு,சரஸ்வதி அழ,
....அம்மாவை சிறிது நேரம் அழட்டும் என்று விட்டவள்,தாங்க மாட்டாமல் தானும் கண்ணீர் விட்டாள்..அவளுக்கு மனம் மிகவும் வலித்தது....இந்த பரந்த உலகில் தாங்களிருவரும் மட்டும் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தாள் தாமரை...அம்மாவை இருக்கிக் காட்டிக் கொண்டு கேட்டாள்...

‘’அம்மா...ஏம்மா..தைரியமிழந்துட்டே?’’
‘’என்னமோ தெரிய்லடி...உங்கப்பா இறந்ததுலேர்ந்து,இன்‌னி வரைக்கும்,மூச்சைப் பிடிச்சுண்டு ஓடியாந்துட்டேன்...உன் முகத்தைப் பார்த்துண்டே காலத்தை கழிச்சுட்டேன்...இப்ப உனக்கு கல்யாணம் காட்சின்னு பேச்சு வர்ற ப்பதான்,திகைச்சு நின்னுட்டேன்....மதி மயங்கறது...தாயைத்தெடர குழந்தையாட்டம், என் மனசு அப்பாவைத் தேடுதடி...ஏண்ணா....வந்துடுங்களேன்...ஒரு நடை வந்துட்டுப் போங்களேன்...மனசைக் கல்லாக்கிண்டு, போட்டோவுக்குள்ள போயி உக்காந்துட்டு இருக்கேளே ’’ என்று சரஸ்வதி பெருங்குரலில் அழ....தான் அழுவதை நிறுத்தினாள் தாமரை..

‘’ம்மா....முதல்ல,நீ அழுகையை நிறுத்து....நான் தலையெடுக்கறதுக்குள்ளே,அப்பா,இந்த உலகத்தை விட்டு போயிட்டார்...என் உலகமே நீதான்....எனக்கு அப்பா,அம்மா,அண்ணா,அக்கா,எல்லாமே நீதான்...எனக்கு நீ எந்த குறையும் வைக்கலை...உன்னோட ஆசைகளை அடக்கிண்டு,,இந்த உலகத்துல,எண்னைய தலை நிமிர்ந்து வாழ வச்சிருக்கே....பெருமைப் படும்மா....உன்னோட முகத்தைப் பார்த்துதாம்மா நான் ஓடிக்கிட்டு இருக்கேன்...நீயே அழுதேன்னா,எனக்கு எனர்ஜியே இல்லாமப் போயிடுதும்மா..ப்ளீஸ் அழதாம்மா...நான் என்னிக்கும் உனக்கு துணையா இருப்பேன்மா’’ என்று பலவாறாக ஆறுதலும்,தேறுதலும் சொல்லி அம்மாவை அமைதிப் படுத்தினாள் தாமரை...

‘’அம்மா.....முகம் கழுவி, சூடா ஒரு காபி குடிம்மா’’
‘’தாமரை....சமையல் ஆச்சுடி...அப்பளம் மட்டும் பொரிச்சுடறேன்...ஒரு வாய் சாப்ட்டுட்டுப் போயேன்... ‘’ என்றாள்...
‘’வேண்டாம்மா...மதியம் வந்துடுவேன்...வந்து சாப்ப்ட்டுக்கறேன்..இப்ப வடை பாயாசம் மட்டும் குடு...அப்டியே என் ஃபிரண்ட் லாவண்யாவுக்கும் ஒரு டப்பாவுல தந்துடு’’ சுட சுட இரண்டு வடைகளை தம்ளர் பாயாசத்துடன் உள்ளே தள்ளி விட்டு,தனது ஸ்கூட்டியைக் கிளப்பினாள்...பாதி தூரம் சென்று கொண்டிருக்கும் போது கையில் இருந்த அலைபேசி ஒலித்தது....

‘’ஹலோ’’
‘’ ஹலோ...தாமரை இருக்காங்களா’’
‘’ஸ்பீக்கிங்க்....நீங்க’’
‘’ரவி....ரவிவர்மா’’
‘’ஓவியர் ரவிவர்மாவா’’
‘’இல்ல..அப்பாவி ரவி வர்மா’’
‘’அப்பாவிகள் கூடல்லாம் நான் பேசறதில்ல...ஃபோனை வைங்க’’
‘’தாமரை ப்ளீஸ் ஃபோனை வச்சிடாத...உன்னைய எங்க அப்பாம்மா கூட வந்து பொண்ணு பார்த்துட்டுப் போனேன்ல...அந்த ரவி வர்மாதான்’’
‘’தெரியுது’’
‘’ஓ ...என்னோட முகம் உன் ஃபோன்ல தெரியுதா...?நான் வீடியோ கால் கூடப் போடலையே....நல்ல அட்வான்ஸ் டெக்னாலஜி உள்ள ஃபோன் போல,,,இல்ல’’ என்றான் கிண்டலாய்..
‘’ஹலோ....காலங்கார்த்தால என்ன மொக்கை போட்டுகிட்டு...சிரிப்பு வரல...விஷத்தை சொல்லுங்க சார்....நான் காலேஜ் போயிட்டு இருக்கேன்’’ என்றாள் தாமரை பொய்யான கோபத்துடன்...எதிர் தரப்புக்கும் அது புரிந்தது...
‘’ஓகே...ஓகே....ரிலாக்ஸ்....டூவீலர்லயா போற’’
‘’ஆமா’’
‘’சரி....காலேஜ் போயிட்டு கூப்பிடேன் ப்ளீஸ்....’’
‘’ஓகே.’’என்று ஃபோனை கட் செய்து விட்டு வண்டியை ஒட்டினாள் ...வழியில் தனக்கும் ரவிவர்மாவுக்கும் இடையே நடந்த உரையாடலை நினைத்து சிரித்துக் கொண்டாள்..

நம்மைப் போலவே’’ லைட் ‘’ ஆன ஆளாக இருக்கிறான்...எல்லாம் சரிதான்...ஆனால், நான் இவனுடன் பேசுவது சரியா? தெரியவில்லை...ஏதோ ஒன்று வழி நடத்துகிறது....போகிறேன்...ஆயினும்,ரவி வர்மா நந்தினியைப் புறக்கணித்துவிட்டு,என்னைத்தான் பிடித்திருக்கிறது என்று சொன்னதற்கே வீடு ரெண்டு பட்டுக் கிடக்கிறது...இன்னும் நான் பேசுவது,பழகுவது தெரிந்தால்,என்னாகுமோ தெரியவில்லை.
..சரி...அதனாலேன்ன....ஆண்களிடம் பேசுவதே தவறாகி விடுமா..காதலா செய்யப் போகிறேன்..என்னை மதித்துப் பேசுபவருக்கு பதில் சொல்லுகிறேன் என்று தன்னைதானே சமாதானம் செய்து கொண்டாள் தாமரை...கல்லூரிக்குள் நுழைந்ததும்,தனது ஸ்கூட்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு,அவ்விடத்தில் நின்றவாறே ரவிவர்மாவுக்கு அழைப்பு விடுத்தாள்...

‘’உன் போனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்...பத்திரமா காலேஜுக்குப் போயிட்டியா’’
‘’ம்‌....வந்துட்டேன்...சரி...இப்பவாவது விஷயத்தை சொல்லுங்க’’
‘ ஈவினிங் காபி சாப்பிடலாமா ‘’
‘’நான் டெய்லி காபி குடிச்சிட்டுதான் இருக்கேன்’’
‘’அதான்...இன்னிக்கு என்கூட சேர்ந்து குடிக்க வர்ரியானு கேக்கறேன்’’
‘’என்னது! உங்களோட சேர்ந்து குடிக்க வரணுமா’’
‘’காபி...காபி...காபி குடிக்க போலாமான்னு கேட்டேன்’’
‘’அப்டி தெளிவா பேசுங்க...நானெல்லாம் நல்ல குடும்பத்துப் பொண்ணு’’
‘’நாங்களும் நல்ல குடும்பத்து பையந்தான்’’
தனது கவுண்டர் நிற்காமல் போகவே சிரித்தாள் தாமரை..
‘’சிரிக்கிறாப்புல தெரியுது’’-ரவி வர்மா..
‘’இல்ல...நல்ல குடும்பத்துப் பையனும்,நல்ல குடும்பத்துப் பொண்ணும் வீட்டுக்கு தெரியாமப் பேசிக்கறாங்க...அதை நினைச்சு சிரிச்சேன்...’’
‘’நம்மளை அறிமுகப் படுத்தி வச்சதே நம்ம குடும்பங்கள்தானே’’
‘’உண்மைதான்...அந்த ஒரு காரணத்துக்காகத்தான் உங்களை மதிச்சு பேசிக்கிட்டு இருக்கேன்...அது சரி...நெங்க இன்னும் சொல்ல வந்த விஷ்யத்தையே சொல்லலியே’’
‘’அந்த காபி விஷயம்...அதை தங்களோட மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்பறேன்’’
‘’ஓ!அதுதான் விஷயமேவா’’ என்று வாயி பிளந்தாள் தாமரை’’
‘’கிட்டத்தட்ட அப்டித்தான்’’
‘’சாரி...’’
‘’ப்ளீஸ்...கொஞ்சம் கண்சிடர் பண்ணலாமே’’
‘’சான்ஸே இல்ல’’
‘’ஓகே...ரொம்ப ஆசையோட இருந்தேன்...ஃபோன்லயே நான்...’’
‘’ஒரு நிமிஷம்....இன்னிக்குத்தான் முடியாதுன்னு சொன்னேன்....நாளை,நாளை மறு நாள் ....இதெல்லாம் உங்களுக்கு?’’
‘’ஏன்....ஏனில்ல....கட்டாயம் போலாம்...நாளைக்கு ஈவினிங் கூட போலாம்’’ என்றான் அவசரமாக...
‘’நாளைக்கு ஈவினிங்...டீல் ஓகே....சரி..எங்க வரணும்?’’
‘’தில்லை நகர் காபி ஷாப் ஓகே வா’’
‘’ஓகே...வர்றேன்...’’
‘’தாங்க்ஸ்...தாங்க்ஸ்..ரொம்ப சந்தோஷம்....இன்னிக்கு ஏன் வரமுடியாதுன்னு தெரிஞ்சிக்கலாமா’’
‘’இன்னிக்கு எங்க அப்பாவோட திவசம்...மதியமே வீட்டுக்கு போயிடுவேன்....’’
‘’ஓ...மாமாவுக்கு நினைவுநாளா’’
‘’என்னது மாமாவுக்கா’’
‘’யாருன்னாலும் முறை சொல்லி கூப்பிடறதுதானேங்க நம்ம பண்பாடு’’ என்று வழிய....மனசுக்குள் மகிழ்ந்தாலும்,அதைக் காட்டிக்கொள்ளாமல்,முறைப்பாக..
‘’இருக்கட்டும்...இருக்கட்டும்..’’ என்றாள் தாமரை...மறு நாளைய சந்திப்பை அவள் மனம் நாடத்தொடங்கியது.v
 
சரஸ்வதி பாவம்
ஆண் துணையில்லாமல் மகளைக் கஷ்டப்பட்டு வளர்த்தாச்சு
இனி அவளுக்கு கல்யாணம்ன்னு வரும் பொழுது எப்படி செய்வதுன்னு மலைத்துப் போவது இயற்கைதான்
அடேய் ரவிவர்மா
கடலையைக் கொஞ்சமா வறுடா
தீஞ்சுடப் போகுது
 
Top