Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi--10

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-10
‘’சொல்லுங்க சார்....ஜெயராம் ஸ்பீக்கிங்’’
‘’உங்க வீட்லதான் இருக்கறோம்....உடனே வாங்க’’
‘’எதுக்கு சார்’’
‘’ஒரு என்கொயரிக்கு’’
‘’என்கொயரியா .....?என் வீட்டுலயா?என்ன விஷயம் சார்’’

‘’எல்லாம் ஃபோன்லயே சொல்லிடனுமா....புறப்பட்டு வாங்க சார்.....நேர்ல சொல்றேன்’’
மனைவி பிள்ளைகளுக்கு,எதேனும் ஆபத்தா?வீட்டில் திருட்டா? வீட்டை விட்டு கிளம்பி வந்து ஒரு மணிநேரம் இருக்குமா....அதுவரை நார்மலாக இருந்த வீட்டில்,அதற்க்குள் என்ன ஆகியிருக்கும்?அதுவும் போலீஸ் வருமளவுக்கு....தலையும் புரிய வில்லை....வாலும் புரிய வில்லை...சுந்தரை கடையை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு,வீட்டுக்கு விரைந்தான் ஜெயராம்....அரை மணி நேரப் பயணம்தான்.

...எப்பொழுதும் போல்தான்....இருந்தாலும், இன்று நீண்டு கொண்டே போவது போல் இருந்தது....வீட்டை அடைந்ததும்,பரபரப்பாக உள்ளே ஓடினான்...இன்ஸ்பெக்டரும்,கான்ஸ்டபிளும்,வராண்டாவில் நாற்காலி போட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்....அவர்களுக்கு வணக்கம் சொல்லி விட்டு,மனைவியைத் தேடி உள்ளே போகப்போனவனை மடக்கினார் இன்ஸ்....

‘’சொல்லுங்க சார்’’-ஜெயராம்...
‘’நீங்கதான் பதில் சொல்லணும்’’
‘’ எது விஷயமா சார்’’

‘’ம்‌.....நாட்டுல ஜிஎஸ்டி யால என்னென்ன பொருளாதார மாற்றங்கள் ஏற்ப்பட்டிருக்குன்னு சொல்லணும்....ஏன் சார் படுத்தறீங்க? உங்க வீட்டுல நடந்த விஷயத்துக்குத்தான் பதில் சொல்லணும்...

‘’ப்ளீஸ்...அந்த விஷயம் என்னன்னு சொல்லுங்க சார்’’

‘’யோவ்..சாருக்கு டீடைல் சொல்லுய்யா’’ என்று இன்ஸ் கான்ஸ்டபிளை கை காட்ட..அவர் வாய் திறந்தார்..
‘’சார்...உங்க தெருவுல,நாலு மாசமா ரெண்டு,டெர்ரரிஸ்ட் வீடு எடுத்து தங்கியிருந்திருக்காங்க...அவங்களை நேத்து அரெஸ்ட் பண்ணியாச்சு....விசாரணை நடந்திட்டு இருக்கு’’
‘’சரி’’

‘’என்ன சரி..சரிதப்பெல்லாம் உங்களைக் கேக்கலை ...விபரம் சொல்லுங்க சார்’’
‘’நான் எதுக்கு சார் சொல்லணும்...எனக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்’’ என்று எரிச்சலானான் ஜெயராம்...
‘’இரூக்கே...சம்பந்தமிருக்கே...ஏன்னா,உங்க மிஸஸ் ஒரு வாரமா அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு போட்டு இருக்காங்க’’ என்றார் இன்ஸ் வேகமாக....

ஆஹா!கடைசியில் என் மனைவி அங்கு தொட்டு இங்கு தொட்டு அடி மடியிலையே கை வைத்து விட்டாளே...இவள் உதவி செய்கிறேன் பேர்வழி என்று,ஊர்வம்பு இழுத்துக் கொண்டிருப்பதால்,என்றாவது ஒரு நாள் வீடு தேடி போலீஸ் வருமென்பது எதிர்பார்த்த ஒன்றுதான்...!ஆனால்,அது இவ்வளவு சீக்கிரமாகவா....சரி சமாளிப்போம்....சத்தம் கேட்டு,உள்ளேயிருந்து சிவசங்கரி கதவருகே வந்து பூனை போல் நின்றாள்....இருக்கையை விட்டு எழுந்தார் இன்ஸ்...

‘’சார்...நீங்களே கேளுங்க உங்க மனைவியை....!அந்த பசங்களுக்கு சாப்பாடு போட்டது உண்மைதானான்னு...’’
ஜெயராம் வாய் திறக்குமுன்,பட்டென்று பதில் வந்தது சிவசங்கரியிடமிருந்து...
‘’நான் ரெண்டு பேருக்கு சாப்பாடு போட்டது உண்மைதான் ஜெயா...ஆனா,அவங்க டெரரிஸ்ட்டுன்னு எனக்குத் தெரியாது...’’சிவசங்கரியின் அப்பாவியான பதிலில்,சூடானார் இன்ஸ்...
‘’தீவிரவாதிகள்னு தெரியாது..சரி...ஒத்துக்கறேன்..முன்னே பின்னே தெரியாத ஆட்களுக்கு ஏன் மேடம் சாப்பாடு போடறீங்க’’

‘’சார்....ஒருத்தங்களுக்கு சாப்பாடு போடறதுக்கு,அவங்களுக்கு பசி இருந்தாப் போதும்...நம்மகிட்ட குடுக்கணும்னு மனசு இருந்தாப் போதும்...மத்தபடி,இதுக்கு குலம் கோத்திரம்லாம் விசாரிக்கணும்னு வேண்டாம்’’

‘’சரிதான்..ஒத்துக்கறேன்....இப்ப காலம் அப்டியிருக்கு மேடம்...நல்லவன் யாரு,நாராச வேலை பாக்கறவன் யாருன்னு தெரியாம நாங்களே திண்டாடறோம்..போலீசுக்கே இந்த நிலைமைன்னா,பொதுமக்கள் நீங்க இன்னும் ஜாக்கிரதியா இருக்க வேண்டாமா’’ என்று இன்ஸ் எகிற...

உஷ்ணத்தை தணிக்க இடையில் புகுந்தான் ஜெயராம்...
‘’சார்...சார்...ஒரு நிமிஷம்...நான் கேக்கறேன்...யாருமா அவங்க.?எப்ப நடந்தது இது’’

‘’இல்ல ஜெயா..போன வாரம் ஒல்லியா ரெண்டு வயசுப்பயனுக வந்தானுக...அக்கா இங்க மெஸ் இருக்கா,நாங்க இதே தெருவுல. கடைசியில ஒரு மாடி வீ ட்டுல தங்கி வேலை தேடிக்கிட்டு இருக்கோம்...ஹோட்டல் சாப்பாடு காஸ்ட்லியா இருக்கு...வயித்துக்கும் ஒத்துக்கலை...அதான் மெஸ் தேடறோம்...ஹோம்லியா இருக்கும்ல’’ அப்டின்னு கேட்டானுக...எனக்குத் தெரிஞ்சு அப்டி மெஸ் எதுவும் இங்க இல்ல...எங்க வீட்டுல சாப்பாடு இருக்கு தம்பி...தர்றேன்னு பாக்கிங்க் மெட்டெரியல்ல வச்சுக் குடுத்தேன்...இது போல ஒரு நாலைஞ்சு நாள் நடந்தது...அவ்ளோதான்....ஆனா,நேத்திக்கும் இன்‌னிக்கும் அந்த பசங்களைக் காணல’’ என்று கதை சொல்லி முடித்தாள் சிவசங்கரி...
‘’ம்க்கும்...இதுல காணலன்னு கவலை வேற...அவனுகளைத்தான் லாக்கப்புல போட்டு பெண்டு நிமித்திக்கிட்டு இருக்கோமே...இங்க எப்டி வருவாணுக’’ என்று தலையில் அடித்தார் இன்ஸ்...

‘’சரி,சார் இப்ப என்னதான் சொல்ல வர்ரீங்க’’—சிவசங்கரி..’
‘’நீங்க அவனுகளுக்கு சாப்பாடு போட்டது தப்பு மேடம்’’

‘’சார்...நீங்க பேசறதைப் பார்த்தா,நாட்டுல டெரரிசத்தை வளர்க்கணும்னு,பிளான் பண்ணி,அந்த பையன்களுக்கு சாப்பாடு போட்ட மாதிரியில்ல பேசறீங்க..’’-என்று மனைவிக்குப் பரிந்தான் ஜெயராம்...
‘’இப்ப அப்பிடித்தானே சார் நினைக்க வேண்டியிருக்கு’’
‘’சார்..சார்...அப்பிடியெல்லாம் அபாண்டமா பேசாதீங்க...நாங்க பாவ புண்ணியத்துக்கு பயந்து வாழற சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்’’
‘’சரி சார் ....என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க...அறிமுகமே இல்லாத ஆட்களுக்கு, ஒரு வாரமா தொடர்ந்து சாப்பாடு போட வேண்டிய அவசியமென்ன’’
‘’இல்ல சார்...அது வந்து என்னன்னா.என் மனைவி வீடு தேடி வர்ற யாரையும்,சாப்பாடு போடாம அனுப்பமாட்டாங்க...’’ என்று தயங்கியபடி சொல்ல,

‘’எம்ஜியாருக்கு சொந்தக்காரங்களோ’’
‘’சார் ..ப்ளீஸ் கிண்டல் பண்ணாதீங்க....சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம் அப்டிங்கறது அவ்ளோட பாலிசி’’
இப்படியாக இன்ஸ்பெக்டரும்,ஜெயராமும்,சூடாக விவாதம் செய்துகொண்டிருந்தபோதே,தட்டில் நான்கு தேநீர் கோப்பைகளுடன் வந்தாள் சிவசங்கரி...

‘’இல்லம்மா...வேண்டாம்...நாங்க அபிசியலா போற இடங்கள்ள எதுவம் வாங்கி சாப்பிடமாட்டோம்...’’

‘’ஏன் சார் அப்படி நினைக்கறீங்க...உங்க சிஸ்டெர் வீடா நினைச்சுக்கங்க..இந்த டீயைக் குடிச்சுட்டு தெம்பா கேள்வி கேளுங்க.’’
சிவசங்கரியின் வார்த்தைகள் மனதைத் தொட,தேநீரின் மணம்‌ மூக்கைத் தொட, கூப்பைகளை கையில் எடுத்துக் கொண்டனர்
அனைவரும்.
...இதமான சூட்டில்,இஞ்சி –ஏலக்காய் சுவையுடன்,தேநீர் பதமாகத் தொண்டையில் இறங்கியது...சூடான தேநீர்,இன்ஸ்பெக்டரை சற்று குளிர்ச்சி ப்படுத்தியது....அது அவ்ரது வார்த்தைகளில்,பிரதிபலித்தது....
‘’ம்மா....உங்க நல்ல மனசு எங்களுக்குப் புரியுது...ஆனா,உங்ககிட்ட,சாப்பாடு வாங்கி சாப்பிட்டவங்க நல்லவங்க இல்லியே....இப்ப அ தானப் பிரச்சினை’’

‘’சார் ஒரு டவுட்டு...நீங்க அரெஸ்ட் பண்ணியிருக்கிற ரெண்டு பசங்களையும் ஜெயில்ல போடத்தானே போறீங்க’’—சிவசங்கரி...
‘’ஆமா...நாளைக்கு கோர்ட்டுக்கு கொண்டு போவோம்...அங்கே பதினைஞ்சு நாள் ரிமாண்ட் பண்ணுவாங்க...அதுக்கப்புறம் ஜாயில்லா போடுவோம்’’
‘’ஆங்...ஜெயில்ல,அவங்களுக்கு சாப்பாடு உண்டுல்ல’’

‘’ஆமாம்மா ....சாப்பாடு ,சௌகரியங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் ஜெயில் நிர்வாகம் செஞ்சு தரும்...அவங்களுக்கு மருத்துவ வசதிகள் கூட உண்டு...வேலை குடுப்பாங்க...அதுக்கு சம்பளமும் உண்டு...படிக்க விரும்பினா படிக்க வைப்போம்...சொந்த பந்தங்களை பார்க்க அனுமதியுண்டு...இந்தியக் குடிமகனுக்குரிய அடிப்படை உரிமைகள் எல்லாம் உண்டு...ம்மா.,இந்தியன் பீனல் கோட் , அதாவது ஐ‌பி‌சி சட்டத்தின் பிரகாரம்,குற்றவாளிக்கு தண்டனை அப்டிங்கறது திருத்தறதுக்கு தானே தவிர அவனை வருத்துறதுக்கு இல்ல.’’என்று இன்ஸ் வழக்கறிஞராக மாறி மூச்சு வாங்க விளக்கம் தர,அதையே தனக்கு சாதகமாக பிடித்துக் கொண்டாள் சிவசங்கரி...

‘’ரொம்ப சரி சார்,,,ரொம்ப சரி...அதைத்தான் சார் நானுஞ்சொ ல்றேன்....டெரரிசம் தப்புன்னு அவங்களுக்கு புரிய வைக்கணுமே தவிர,பட்டினி போடறது என்ன நியாயம் சொல்லுங்க...’’
சிரித்தார் இன்ஸ்பெக்டர்...

‘’நல்லாப் பேசறீங்கம்மா...நீங்கல்லாம் வக்கீலுக்குப் படிச்சு வேலைக்கு வரலாம்‌மா...நாலு வார்த்தை கோர்வையாய்
பேசத்தெரியாதவனெல்லாம்,வக்கீலாகி எங்க தாலியை அறுக்கிக்கிறானுக ...அவனுகளை வச்சி கேசை நடத்தறதுக்குள்ள,நாக்கு தள்ளி போயிருது…அது கிடக்குது....ம்மா..பப்ளிக் எந்த விதத்திலும் டெரரிஸ்ட்டுக்கு உதவக்கூடாதுன்னு சட்டம் இருக்குமா’’

‘’சார்...திருப்பியும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நிக்காதீங்க...நீங்க சொல்ற ஆளுகளுக்கு நாங்க எந்த உதவியும் பண்ணல...பண்ணவும் மாட்டோம்..
ஏன்னா,நாங்களும்,டெரரிசத்துக்கு எதிர்ப்பு குரல் குடுக்கற வங்கதான்....பசியில இருக்கற சக மனுசனுக்கு சாப்பாடு போட்டோம்...அது தப்பா ஆயிடுத்து...ஒத்துக்காறோம்...இனி இப்டி நடக்காம பாத்துக்கறோம்’’ என்று கணவன் மனைவி இருவரும் உறுதியாகச்சொல்ல,..
....அதற்குள்,அக்கம் பக்கம் போயி ஜெயராம் குடும்பம் பற்றி விசாரித்து விட்டு வந்த கான்ஸ்டபிள்,
‘’சார்...பக்கத்துல விசாரிச்சேன்...ஃபேமிலி மேல பிளாக் மார்க் எதுவுமில்ல....க்ளீன் ரேகார்டுதான்...இந்த மேடம் உண்மையிலையே நல்ல ஹெல்பிங் டெண்டன்சி உள்ளவங்கதானாம்’’ என்று சொல்ல...

‘’ஓகே..ஓகே ..நம்ம விசாரணையிலும் வித்தியாசமா எதுவும் தெரியல..சரி சார்...ஜாக்கிரதையா இருந்துக்கங்க...இது எங்களோட டூட்டி..அதத்தான் நாங்க செஞ்சோம்....சாரி ஃபார் தி டிஸ்ட்டர்பன்ஸ்...’’ என்று இன்ஸ்பெக்டர் ஜெயராமுக்கு கை கொடுத்து,விடை பெற,
‘’நோ ப்ராப்ளம் சார்..மடியில கணமிருக்கரவங்க தான் பயப்படனும்’’
‘’எஸ்,,,யு ஆர் கரெக்ட்....மேடம் வர்றோம் ...உங்க பாலிசி என்னவோ நல்ல பாலிசிதான்...பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு பழமொழி உண்டு அதையும் ஞாபகம் வச்சிக்காங்க....இது போல வீண் பர்ச்சினைகளை தவிர்க்கலாம்’’ என்று சொல்லி விட்டு கான்ஸ்டபிளுடன் வெளியேறினார் இன்ஸ்பெக்டர்...
கணவனும் மனைவியும் பெருமூச்சு விட்டபடி வீட்டுக்குள் சென்றனர்...

‘’தர்மம் தலை காக்கும்...செய்த
தர்மம் தலை காக்கும்...
தக்க சமயத்தில் உயிர் காக்கும்...
மலை போலே வரும் சோதனை யாவும்
பணி போல் விலகி விடும்..
நம்மை வாழ விடாதவன்
வந்து நாம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்..
அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு.
..வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை.
.இது நான்கு மறை தீர்ப்பு’’







 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
Top