Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 09

Advertisement

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..இந்த வரி தான் ஞாபகம் வருது....
 
அத்தியாயம் 09

தினமும் கண்களை திறந்ததும் தன்னருகே உறக்கும் மைதிலியை பார்த்து சிரித்துவிட்டே, அவளுக்காக காபியை கலந்து எடுத்து வருவான் ராம். இன்று தன்னருகே அவளை காணாததால் 'எங்கே தன்னைவிட்டு சென்றுவிட்டாளோ? ' என தோன்ற பதறிக்கொண்டு பாத்ரூம், கிட்சன், ஹால் என தேடினான்.

எங்கும் இல்லாததால் வீட்டின் வெளியே தேடி வந்த ராமை, ஏமாற்றாமல் அங்கே அவனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தாள் மைதிலி.

அதுவரை இருந்த பதபதைப்பு அழுகையாய் மாற, தாயை தேடிய கன்று போல் ஓடி சென்று அவளை பின்னிருந்து அணைத்தபடி நின்றான் ராம்.

"ஏன் மையு... என்னை விட்டு போன? " அழுகையில் மூக்கு சிவக்க வினவினான்.

"தூக்கம் வரல ராம்.... அதான் இங்க வந்து நின்னேன்.... அதுக்குள்ள அழுகையா? " என கண்களை துடைத்துவிட்டாள்.

"பயந்துட்டேன்...." அவளை ஒட்டியபடி நின்றுக்கொண்டான் ராம்.

அவனையே பார்த்தபடி நின்றவள் பின், "ராம்? நான் எங்கயாவது போய்ட்டா என்ன பண்ணுவ? " என்றாள்.

"எங்க போற மையு? "

"எங்கயோ?! "

"என்னையும் கூட்டிட்டு போ! "

"நீ இல்லாம நான் மட்டும் தான் போறேன்..." என்றவளை விழிவிரிய பார்த்தான் ராம்.

"ஏன்? "

"சும்மா!!! நான் எதுக்கு உனக்கு? "

'நீ இல்லாமல் இருக்கமாட்டேன் ' என்று ராம் சொல்லவேண்டுமென மைதிலியின் உள்ளம் வேண்டி நின்றது.

அவளிடம் ஒன்றும் பேசாமல் விறுவிறுவென வீட்டினுள் சென்று நுழைந்தான் ராம். மனதில் படர்ந்த ஏமாற்றத்தை மறைந்தபடி சிறிதுநேரம் இயற்கையை ரசித்தபடி நின்றுவிட்டு வீட்டினுள் நுழைந்தாள் மைதிலி.

அதிகாலை பொழுது பிரகாசிக்கும் சமயத்தில் மைதிலியின் அலைபேசி சிணுங்கியது.

"ஹலோ? சொல்லுங்க அண்ணா!" கெளதம் தான் அழைத்திருந்தான்.

"மைதிலி நான் அங்க பேசிட்டேன்ம்மா... நீங்க தங்குறதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்ண சொல்லிட்டேன்... நீங்க என்னைக்கு போக ரெடி ஆகுறீங்களோ, போகலாம்"

"இன்னைக்கே கிளம்பலாம் அண்ணா!!! நாங்க ரெடிதான்..." உடனடியாய் பதில் சொன்னாள் மைதிலி.

"இன்னைக்கேவா? திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணியாச்சா? அந்த ஊருல நீங்க ஷாப்பிங் பண்ணுறமாறி ஒன்னும் இருக்காது... சோ எதுவும் வேணும்னா இங்கயே வாங்கிக்கோங்க?! ஒன்னும் அவசரமில்லை.."

"அதெல்லாம் இல்லை அண்ணா.... எல்லாம் ரெடி தான்....நீங்க சொன்னதும் கிளம்புறோம்...." அவள் அத்தனை உறுதியாய் சொன்னதும்,

"ஓ!! அப்ப சரிம்மா.... நானும் உங்ககூடவே வந்து எல்லாம் ஏற்பாடு செஞ்சு குடுத்துட்டு கிளம்புறேன்" என்றான் கெளதம்.

"உங்களுக்கு எதுக்கு அண்ணா சிரமம்...?"

"என் தங்கச்சிக்கு பண்ணுறதுல என்னம்மா கஷ்டம்? பிளைட் டிக்கெட் வாங்கிட்டு மெசேஜ் பண்ணுறேன்.... நீங்க ஏர்போர்ட் வந்துடுங்க " என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான் கௌதம்.

வீட்டினுள் அவள் பயன்படுத்திக்கொண்டிருந்த ஒரு சில பொருட்களை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

அங்கே தனது ட்ராவல் பேக்கை காணாமல் தேடியவள், சட்டென தோன்ற, "ராம்ம்ம்ம்? இங்க வா!" என அழைத்தாள்.

"என்ன? "அவளை பார்க்காமல் தரையை பார்த்தபடி சுருங்கிய முகத்துடன் நின்றான் ராம்.

"என்னாச்சுனு இப்போ முகத்தை இப்படி வச்சுட்டு இருக்க? " அருகே சென்று அவன் முகத்தை தன் கைகளில் தாங்கினாள்.

"ஒன்னும்இல்லை.." பார்வை தரைநோக்கியபடியே இருக்க, பதிலளித்தான் ராம்.

"ஹும்ம்.. சரி என் ட்ராவல் பேக்கை பார்த்தியா ராம்?"

"இல்லை....எனக்கு தெரியாது.." பதில் துரிதகதியில் வந்தது.

"இதை நான் நம்பனுமா? உன்கிட்டதான் இருக்குனு தெரியும்....சீக்கிரமா எடுத்து குடு.. கிளம்பனும்...."

"என்கிட்டதான் இருக்கு.. ஆனா தரமாட்டேன்... குடுத்தா நீ என்னை விட்டுட்டு போய்டுவ!" அதிமேதாவியாய் சொன்னான் ராம்.

"ஹா ஹா.. அந்த பேக் இல்லைனா என்னால போக முடியாதா ராம்?? " என சிரித்தாள் மைதிலி.

"ம்ப்ச்... போகாத மையு, என்னை விட்டுட்டு" முகம் சுணங்கி போனது.

"போய்தான் ஆகனும்... நான்மட்டும் இல்லை... நீயும் என்கூட வரப்போற... நேற்று சொன்னேன்ல... வேற ப்ளேஸ் போறோம்னு..." அவள் நியாபக படுத்தவே,

"என்னையும் கூட்டிட்டு போறியா மையு...?" முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது அவனுக்கு.

"ஆமா...!! உன்னையும் கூட்டிட்டுதான் போறேன்... இப்ப சொல்லு... என் பேக் எங்க? " கேட்டதும், வேகமாய் அவளை நகர்ந்திவிட்டு தரையில் படுத்தவன், கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த அவளது பையை எடுத்து நீட்டினான்.

"நீ இருக்கியே.........! " என செல்லமாய் அவன் சிகைகோதிவிட்டு, பயணத்திற்க்கு ஆயத்தமானாள் மைதிலி.

ரிசார்டின் அலுவலகத்தை தொடர்புக்கொண்டு, அவர்கள் செல்ல இருப்பதை தெரித்தாள் மைதிலி. பதினோரு மணிக்கு ப்ளைட் இருப்பதாக கௌதம் மெசேஜ் அனுப்பவும், நேரத்தை பார்த்தவள், 'இப்போவே கிளம்பினாதான் சரியா இருக்கும்' என எண்ணிக்கொண்டு ராமை அழைத்தாள்.

"ராம்...? நீ ரெடியா?? இப்பவே கிளம்பனும்.. போலாம்தானே? "

"நான் அப்பவே ரெடி மையு "

அங்கிருந்த இடங்களில் நினைவுசின்னமாக சுற்றி சுற்றி புகைப்படங்களை எடுத்துக்கொண்டு டாக்ஸியில் ஏர்போர்ட்டை நோக்கி விரைந்தனர் இருவரும்.

அங்கே அவர்களுக்கு முன்பு காத்திருந்த கௌதமை பார்த்து புன்னகைத்தபடி சென்றனர்.
"கரெட் டைம்க்கு வந்துட்டீங்களே? என்ன ராம்? ராம்னு இப்போ சொல்லலாம்தானே? " என பழைய ராமின் வார்த்தைகளை எண்ணி சத்தமாக சிரித்தான் கௌதம்.


அவன் சிரிப்பதை விநோதமாய் பார்த்த ராம் மைதிலியின் காதருகில், "இவன் என்ன லூசா மையு? " என கிசுகிசுத்தான். எழுந்த சிரிப்பை நாவடுக்கில் அடக்கினாள் மையு.

"என்னம்மா? என்ன சொல்லுறான் என் மச்சான்? " சிரிப்பை சிறிது குறைத்து கெளதம் கேட்க,

அவளோ, "அது......!! சித்ராகுட் போக இன்னும் எவ்ளோ நேரமாகும்னு கேக்குறாங்க அண்ணா" சிரிப்பை மறைத்துக்கொண்டு மறுமொழிந்தாள்.

"இங்கேருந்து நேரடியா போக முடியாது மைதிலி. சோ, பிளைட்ல டெல்லி போய்ட்டு, அங்கிருந்து நாலு மணிக்கு மஹகோஷல் ட்ரெயின்ல சித்ராகுட் போறோம். நாளைக்கு நமக்கு பொழுது விடியுறதே அங்கதான்..."

பேசிக்கொண்டே பார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்துக்கொண்டு விமானத்தின் அருகே சென்றனர்.

"ஹைய்யோ!!! மையுயுயு.. அங்க பாரு! எவ்ளோாா பெருசா இருக்கு? ஜாலி ஜாலி ஜாலி.." பரந்து விரிந்து நிற்கும் விமானத்தை கண்டு சிறுகுழந்தையென குதுகலித்தான் ராம்.

ஒன்றரை மணிநேரத்தில் இந்திராகாந்தி இன்ட்ர்நேஷனல் ஏர்போர்டை அடைந்தனர் மூவரும்.

"ட்ரெயின்க்கு இன்னும் நேரமிருக்கு மைதிலி... லன்ச் முடிச்சுட்டு பொறுமையா போனா போதும்..."

"ம்ம்ம்... ஆனா அதுக்குமுன்னாடி ஒரு சின்ன வேலை இருக்கு அண்ணா..." என்றாள்.

"என்ன வேலை மைதிலி..."

"சொல்லுறேன் அண்ணா.. " என்றபடி டாக்ஸியை அழைத்தவள் ரயில்வே ஸ்டேஷனின் அருகிலிருக்கும் சிவமந்திருக்கு போக சொல்லிவிட்டு அமர்ந்தாள்.

"கடவுள் நம்பிக்கை அதிகமா மைதிலி? கவலைப்படாத! ராம் சீக்கிரமே சரியாகிடுவான்.."

ஆறுதலாய் சொன்ன, கௌதமிற்க்கு சிறு புன்னகையை மட்டும் பதிலாய் அளித்துவிட்டு, ஜன்னல் வழியே புது இடத்தை ஆர்வமாய் பார்க்கும் ராமின் மீது பார்வையை ஓட்டியபடி கோவிலை அடைந்தாள் மைதிலி.

"இவ்ளோாா பெரியா கோவிலா மையு?? " விழிவிரிய பார்த்தபடி அவர்களுடன் நடந்தான் ராம்.

கடவுளின் முன் கைக்கூப்பி நின்ற
மைதிலியின் மனம், எதை நினைத்தும் தழும்பாது அமைதியாய் இருந்தது.
நிதானமாக தரிசனத்தை முடித்துக்கொண்டு பிரகாரத்தில் வந்து மூவரும் அமர்ந்தனர்.

தன்னிடம் இருந்த பிரசாதத்தை ராமிடம் கொடுத்துவிட்டு தன் கைப்பைக்குள் எதையோ தேடினாள் மைதிலி.

"என்னம்மா தேடுற? "

கௌதமிற்க்கு பதில் சொல்லும் முன்னர் அவள் தேடியது கைகளில் கிடைத்துவிட, "அண்ணா நீங்க இவரோட இங்கயே இருங்க.. நான் இதோ வந்துடுறேன்..." என எங்கோ விரைந்தாள்.

"எங்க மைதிலி போற?? நில்லுமா?!" கௌதமினின் குரலுக்கு நில்லாமல் சென்று மறைந்தாள் மைதிலி.

அதுவரை பிரசாதத்தை சுவைத்தபடி சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராம், மைதிலி எங்கோ செல்வதை கண்டு எழுந்துக்கொண்டான்.

"மையு.... நானும் வரேன்..." கத்திக்கொண்டு ஓட முற்பட்டவனை விரைந்து பின்னிருந்து பிடித்துக்கொண்ட கௌதம், " டேய் நில்லுடா! மைதிலி வந்துடுவா.. இங்கேயே இரு! " என திமிறியவனை முடிந்தமட்டும் பிடித்துக்கொண்டு சொன்னான்.

அவன் பேச்சை கவனிக்காது, "மையுயுயுயு!!! நானும் வரேன் மையு... மையுயுயுயுயு...! " மேலும் மேலும் அவன் குரல் ஓங்கத்தொடங்கியது.

"டேய் கொஞ்சம் கம்முனு இருடா... எல்லாரும் ஒருமாறி பார்க்குறானுங்கடா...." வேடிக்கை பார்க்கும் பலரையும் காட்டி ராமை அடக்க முயன்றான் கௌதம்.

"மையுயுயு...!! விடுடா... நான் மையுட்ட போனும்..." தன்னிடமிருந்து அவன் கையை பிரிக்க முயன்றான் ராம்.

"டேய் லூசுபயலே... அவதான் வரேனு சொல்லுட்டு போனால்ல!? அறிவில்லை??? நில்லுடா சும்மா"

மைதிலியை காணாத கோவத்தில் "போடா பன்னி" என கத்திக்கொண்டே தன்னை பிடித்திருந்த கௌதமை அடிக்கத்தொடங்கினான் ராம்.

"அடேய் என்ன ஏன்டா அடிக்குற? " கௌதமினின் அலறலில் கூடத்தொடங்கிய கூட்டத்தை நகர்த்திக்கொண்டு அவர்களை நெருங்கினாள் மைதிலி.

"ஏய்ய்ய்ய்! ராம்? என்னடா பண்ணுற? அண்ணனை விடுடா.."

கௌதமிடமிருந்து சிரமபட்டு ராமை பிய்த்துதெடுத்த மைதிலி, "ராம்ம்ம்? என்னை பாரு! என்னடா ஆச்சு? "என்றாள் பதற்றத்துடன்.

தன்முன்னிருந்த மைதிலியை பார்த்த ராம், கோவமனைத்தும் அடங்க, அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

அவன் மனநிலையை ஒருவாறு கணித்தவள், "சாரி ராம்.. பக்கத்துல கடைக்குதான் போனேன்.. சொல்லாம போனது தப்புதான்.." அவனது அணைப்பு மேலும் இறுகியது.

'ரொம்ப பயந்துட்டான் போல! அவசரத்துல சொல்லாம போய்ட்டோமே.. ச்சே! ' தன்னையே திட்டிக்கொண்டாள் மைதிலி.

அவர்களை வேடிக்கை பார்த்தவர்கள் சண்டை நின்றுவிடவும் கலையைத்தொடங்கினர்.

"யம்மா?? " எங்கோ பரிச்சயமான குரல் கேட்டவும் திரும்பினாள் மையு.

"இங்க! இங்க! கொஞ்சம் கீழே பாரு..என்னை தூக்கிவிடும்மா.. முடிய்ய்யலலல? " கௌதமின் சுகவீனமான குரலை கேட்டதும்,

'அச்சோ ' என பதறியவள் அவனை தூக்கிவிட்டபின் "சாரி அண்ணா!" என்றாள். ராமோ அவனை முறைத்துக்கொண்டு நின்றான்.

"எங்கம்மா போன?" இடுப்பை பிடித்துக்கொண்டு கேட்டான் கெளதம்.

"அது....கயிறு!!!?
சொல்லுறேன் அண்ணா வாங்க! " இருவரையும் அழைத்துக்கொண்டு பிரகாரத்தின் முன் நின்றாள் மைதிலி.

தன் கையை இறுக பற்றிக்கொண்டு நின்ற ராமை தன் எதிரில் நிறுத்தியவள் தன் கைகளில் இருந்த பெட்டியை திறந்தாள்.


"என்னமா இது?"

"இது என் அம்மாவோட தாலி... எப்பவும் என்கூடவே வச்சுறுப்பேன்.... இனியும் இது என்கிட்டயே இருக்கணும்.... " ஒரு நொடி நிறுத்தியவள், "இனி என் கழுத்துல " என்றாள்.

"நமக்கு கல்யாணமா மையு??" ராம் பரபரத்தான். அவன்தான் தாலியை கட்டப்போகிறான் என அவனுக்கு எப்டி தெரிந்தது என்றே தெரியாது.

கௌதம் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான்... "இப்போ இதுக்கு என்னமா அவசரம்? "

"அவசரம் இல்ல அண்ணா ! அவசியம்!!! எனக்கு பயமா இருக்கு அண்ணா.... ராம் குணமானதும் என்ன விட்டுட்டு போய்டுவாரோன்னு ரொம்ப பயமா இருக்கு...." அவள் முகம் கலக்கத்தை வெளிக்காட்டியது.

"அதுக்காக? நாங்க எல்லாம் விட்டுடுவோமா? எடுத்து சொன்னா ராம் புரிஞ்சுப்பான்.." கெளதம் எடுத்துசொல்ல,

"என்னனு எடுத்து சொல்லுவீங்க அண்ணா ? அவருக்கு என்னை ஏத்துக்க முடியலன்னா?? என்ன சொல்லி என்னை அவருக்கு கல்யாணம் செஞ்சு வைப்பீங்க?"

"சரிம்மா... அப்டியே இருக்கட்டும்... இப்போ கல்யாணம் பண்ணிட்டா மட்டும் அவன் குணமானதும் உன்ன ஏத்துப்பான்னு எதை நம்பி சொல்ற?"

"அவருக்கு மனைவியா வாழ்ந்த கொஞ்ச நாட்களை நினைச்சுட்டே நான் இருந்துடுவேன் அண்ணா...." பிளாக் அண்ட் வொயிட் ஹீரோயின் போல பேசினாள் மைதிலி.

"இது என்ன மூணு மணிநேர படம்னு நெனச்சியா? உனக்கு அண்ணனா சொல்றேன்.... இது இப்போ வேணாம்... அவசரப்படாத!! ராம் குணமாகட்டும்....." கௌதமின் கண்டிப்பும் பலனளிக்கவில்லை.

"மன்னிச்சுடுங்க அண்ணா!! எனக்கு இப்போ இந்த தாலி என் ராம் கையாள என் கழுத்துல ஏறனும்...."

அவள் கையிலிருந்த தாலி பார்த்துக்கொண்டிருந்த ராமிடம் ,"ராம் ? உனக்கு என்னை பிடிக்கும் தானே?" என்றவள் கேட்டதும்,

"ம்ம்ம்... ரொம்ப பிடிக்கும் மையு..." என்றான் ராம்.

"அப்போ என்னை கல்யாணம் செஞ்சுக்கிருயா?? நான் உன்கூடவே இருப்பேன் எப்பவும்"

"ஓ!!!! செஞ்சுக்குறேன் மையு... நீ என்ன விட்டுட்டு போக மாட்ட தானே இனிமே !!!" அவன் முகத்தில் தெளிவான சந்தோஷம்.

"கண்டிப்பா!!!! " தன் கையிலுருந்த தாலியை ராமிடம் நீட்டினாள் மையு.

ஒருமுறை திரும்பி கௌதமை பார்த்தாள் மைதிலி.
"தங்கச்சி கல்யாணத்துக்கு ஆசிர்வாதம் பண்ண மாட்டீங்களா அண்ணா?"

சட்டென புன்னகையை பூசி கொண்டவன், " உன் நல்ல மனசுக்கு நீ ரொம்ப நல்ல இருப்ப மைதிலி " என்றான்.

ராம் கைகளில் தாலியை ஏந்த, அவனின் உடைமையாக போகும் நொடிக்காக நீர் தேங்கும் தன் விழிகளை மூடி, தலைதாழ்த்தி நின்றிருந்தாள் மைதிலி.

"கட்டு மச்சான்!!!" ராமின் தோள்களை பற்றிக்கொண்டன் கௌதம்.

"த்ரீ நாட்ஸ் போடணும் தானே??" முதல் முடிச்சை போட்டுவிட்டு சந்தேகம் கேட்டான் ராம்.

"அதான் எல்லாம் தெரியுதேடா உனக்கு!!! த்ரீ நாட்ஸ் தான்.... போடு!!!!"

தன் கழுத்தில் இருக்கும் தாலியை இன்னமும் ஆச்சர்யத்துடன் பார்த்தபடி, கண்களில் நிற்காமல் வழிந்த நீரை துடைக்கக்கூட தோன்றாமல் நின்றிருந்தாள் மையு.

"மையு??? இங்க பாரேன்... நான் உனக்கு பொட்டு வைக்க போறேன்.... " அவள் நாடியை இடக்கையால் பிடித்து முகம் தூக்கி, தன் மோதிர விரலால் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டான் ராம், கௌதமின் சொல்படி!

வகிட்டில் குங்குமத்துடன், கழுத்தில் புது தாலி மின்ன தனி பொழிவுடன் தோன்றினாள் மைதிலி. அவளின் கையை இறுக பற்றிக்கொண்டு விவரிக்க முடியாத சந்தோசத்தில் இருந்தான் ராம். இனி அவன் மையு எங்கும் அவனை விட்டு செல்ல மாட்டாள் என்ற நிம்மதியில்.

"மச்சான்!! என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைகிறேன்... அதுல வெங்காயம் வெட்டுனா கூட கண்ணீர் வரக்கூடாது டா" விளையாட்டாய் சொல்லி சிரிக்கும் கௌதமை கொஞ்சம் முறைத்த ராம்,

"யாரு மையு இவன்? மொக்க போடுறான்" என்றான். ராமின் பேச்சில் கௌதமை பார்த்து குலுங்கி சிரித்தாள் மைதிலி.

அவர்களை தன் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த கௌதம், அவர்களின் பின்னே தெரிந்த தெய்வத்திடம் அவர்களின் நல்வாழ்வுக்காக உளமார வேண்டினான்


-தொடரும்...
supera iruku sis
 
Top