Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode - 5 Unai Theendum Alaiyaai Naane

Advertisement

அலை – 5

அடுத்தடுத்த நாட்கள் மிக சாதாரணமாக என்று சொல்ல நினைத்தாலும் நேத்ராவின் திருவிளையாடல்கள் அனைத்தும் அப்படி சொல்ல முடியவில்லை.

தினமும் இல்லை என்றாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையேனும் ரிஷியின் கண்களில் பட்டுக்கொண்டே தான் இருந்தால் நேத்ரா. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக.

அவனின் கோவத்திற்கு தீனிபோடும் விதமாகவே இருந்தது அவளின் நடவடிக்கைகள். அவள் இருக்குமிடம் கல்லூரியானதால் அவனால் தன்னைத்தான் கட்டுக்குள் கொண்டுவர முடிந்ததே.

அன்று ஞாயிறு ஆதலால் மிக நிதானமாக எழும்பலாம் என அயர்ந்து உறங்கியவனை எழுப்பினார் சுமங்கலி.
எரிச்சலோடு புரண்டு படுத்தவன், “சண்டே கூட தூங்க விடமாட்டீங்களா? இன்னைக்கும் என்ன மாம்?...” சோம்பலான குரலில் கூறினாலும் எழுந்தமர்ந்தான்.

விஷயமில்லாமல் தன்னை தாய் தொந்திரவு செய்யமாட்டாரே.
“இன்னைக்கு நாம தாத்தா வீட்டுக்கு போறோம் ரிஷி. எழுந்து குளிச்சிட்டு கீழே வா. நானும் அப்பாவும் ரெடி ஆகிட்டோம்...” அவனிடம் கூறிக்கொண்டே அவனின் அறையை ஒழுங்கு படுத்தினாலும் பார்வை அவனிடமே.

“வாரத்துல ஆறு நாளும் அங்கதானே இருக்கீங்க. இன்னைக்கும் என்ன?...” மனதின் புகைச்சலை வார்த்தைகளில் பூசியபடி கேட்க,
“எல்லாம் நல்ல விஷயம் தான். நம்ம காவேரியை பேசி முடிக்க இன்னைக்கு மாப்பிள்ளை வீட்ல இருந்து இன்னைக்கு வராங்க...”

அவனை பார்த்தபடியே இதை கூறியவர் மகனின் முகத்திலிருந்து எதையோ தேடினார். எத்தனை எதிர்பார்த்தும் ரிஷியின் முகத்தில் தெரிந்த விடுதலை உணர்வில் ஏமாற்றமே மிஞ்சியது அவருக்கு.

“இது ஒரு பெரிய விஷயமா? இதுக்கு கூட நாமதான் போய் நிக்கனுமா?...” என்றபடி தன்னுடைய உடைகளை எடுத்தான்.

“இது பெரிய விஷயமில்லாம என்ன ரிஷி? காவேரி நம்ம வீட்டு பொண்ணு. அவளுக்கு ஒரு நல்லது நடக்குது. தாய்மாமாவா உன் அப்பா சபையில இருக்கனும்...”

“ஹைய்யோ ப்ளீஸ் மாம். போதும் உங்க ஊர் சம்பிரதாயம். கேட்டு கேட்டு காதே வலிக்குது...” என சலித்தான்.
அதில் பெரிதும் கவலை கொண்டார் அவனின் தாய். இவன் இப்படியே பற்றில்லாமலே கடைசிவரை இருந்துவிடுவானோ என கலக்கம் கொண்டார்.

சுமங்கலியின் முகத்தில் தெரிந்த கவலையில் நிதானித்தவன், “இப்போ என்ன நான் அங்க வரனும். அவ்வளோ தானே? வரேன். இப்போவாச்சும் கொஞ்சம் முகத்தை சிரிச்சதா வச்சுக்கோங்க மாம்...”

அவரின் கன்னம் கிள்ளி சொல்லியவன் புன்னகைக்க ரிஷியின் முகத்தில் தெரிந்த சோர்வில்,

“என்ன ரிஷி, என்னுடைய சுமையை உன் தோள்ல இறக்கி வச்சுட்டேனோ?. ரொம்ப கஷ்டமா இருக்கா?...” கன்னம் வருடி பாசத்தால் பரிதவித்து கேட்ட தாயை கனிவோடு பார்த்தவன்,

“இது என்னுடைய கடமை தானே மாம். இதை போய் சுமைன்னு சொல்றீங்க? நீங்க அப்டியா நினைச்சீங்க?...” கிடுக்கிப்பிடி போட,
“ச்சே ச்சே நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. காலேஜ் பொறுப்பை உன்கிட்ட வலுக்கட்டாயமா ஒப்படைச்சுட்டோம்ன்ற கில்டி கான்ஷியஸ் என்னை விட்டு இன்னும் போகலை ரிஷி...” என்றவர்,

“ஆனா ஒன்னு. இந்த சேஞ்ச் உனக்கு ரொம்பவே பிடிக்கும். போக போக நீயே இன்ட்ரெஸ்ட் ஆகிடுவ பாரேன். எல்லாம் உன் நல்லதுக்குதான் ரிஷி...”

மகனிற்கு புரியவைத்துவிடும் வேகத்தில் சுமங்கலி பேசிக்கொண்டே இருந்தார். அவரின் நெஞ்சம் புரிந்தவனும்,
“திணிக்கப்பட்ட எதுவுமே எப்பவும் இனிக்காது மாம். இது உங்களுக்காக ஏத்துக்கிட்டது. அதுவும் இப்போதைக்கு...” தனக்குள் கூறிக்கொண்டவன் தாயை பார்த்து,
“ஓகே மாம், நான் குளிச்சுட்டு ரெடியாகி வரேன்...” சின்ன சிரிப்போடு சொல்லி குளியறைக்குள் நுழைந்தான்.

தயாராகி வெளிவரும் போது கையில் காபியோடு அவனுக்காக அறையிலேயே காத்திருந்தார் சுமங்கலி.

“தேங்க்ஸ் மாம்...” காபியை பெற்றுக்கொண்டவன் அவரருகில் அமர்ந்து குடிக்க ஆரம்பிக்க அவனையே பார்த்த சுமங்கலி தாளமுடியாமல் கேட்டேவிட்டார்.

“ஏன் ரிஷி உனக்கு காவேரியை பிடிக்கலை?...” மிதமிஞ்சிய வருத்தம் அவரின் குரலிலேயே வெளிப்பட்டது. அதிர்ந்து பார்த்தவன்,

“காவேரியை நான் பிடிக்கலைன்னு எப்போ சொன்னேன்?...” கேட்டதும் சட்டென ஒளிர்ந்த தாயின் முகத்தை பரிதாபமாக பார்த்தான்.

“பிடிக்கிறது வேற, விருப்பம் வேற மாம். கல்யாணத்துக்கு பொண்ணை பிடிச்சா மட்டும் போதாது. நீங்களும் ஏன் மாம் என்னை புரிஞ்சுக்கலை?...”

அவனின் பதிலில் நொடியில் அனிச்சம் மலராய் வாடித்தான் போனார் சுமங்கலி. இப்படி தன் தாயை பார்த்திராதவன் செய்வதறியாமல் அமைதியாக இருந்தான்.

ஒரு கல்லூரி நிர்வாகத்தையே கம்பீரமாக கட்டி ஆண்ட சுமங்கலி இன்று பெற்ற மகனுக்காக சராசரி தாயாக மாறியதை என்னவென சொல்வான்?

சுமங்கலிக்கு காவேரி என்றால் கொள்ளை பிரியம்.நேரம் வரும் போது தானே இந்த பேச்சை எடுக்கலாம் என நினைத்திருக்க அதற்குள் காவேரியாக ரிஷியிடம் பேச போய் விஷயம் வீட்டு பெரியவர்களிடம் சேர்ந்து வேறு திசையில் திரும்பிவிட்டது.

கை மீறி சென்றுவிட்ட ஒன்றை எத்தனை முயன்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை. காவேரி தன்னிடம் இதை கோடி காட்டியிருந்தால் கூட அதை எப்பாடுபட்டாவது நினைவேற்றி இருக்கமாட்டேனா?

ஆற்றாமையில் மனம் வெதும்பி நின்றார் சுமங்கலி. அந்த நேரம் முகம் அறியாத நேத்ராவின் மீது உள்ளுக்குள் புஸுபுஸுவென கோவம் பொங்கியது. அப்பெண் மட்டும் தேவையில்லாமல் பேசியிறாவிட்டால் விஷயம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை தானே.
ரிஷியும் நிச்சயம் காவேரியை பற்றி யாரிடமும் கூறியிருக்கவும் மாட்டான் என்பது நிச்சயம் அவருக்கு. இனி கவலை பட்டு ஆவதற்கு எதுவும் இல்லை என்றாலும் அப்படி ஒரு ஏமாற்றம் மனதில் வெற்றிடமாக பதிந்துவிட்டது சுமங்கலிக்கு.

“மாம், எத்தனை தடவை உங்களை கூப்பிட? என்ன கனவா?...” என சிரித்தபடி கேட்ட மகனிடம் ஒன்றுமில்லை என தலையசைத்தவர்,
“உனக்கொன்னும் வருத்தமில்லையே ரிஷி...” மீண்டும் மீண்டும் கேட்க,

“ஒரே ஒரு வருத்தம் தான் மாம். என்னை காரணமா வச்சு காவேரி மனசை மாத்தன்னு அவளுக்கு இவ்வளோ அவசரமா மாப்பிள்ளை பார்த்து மேரேஜ் செய்யனுமான்றது மட்டும் தான். வேற எந்த வருத்தமும் இல்லை...”

புஸ் என காற்று போன பலூன் போல ஆனது சுமங்கலியின் முகம். ரிஷிக்கு அவரது இந்த எண்ணம் சரியாக படவில்லை.

“உங்களுக்கு இன்னொரு விஷயமும் சொல்றேன். காவேரிக்கும் என் மேல இருக்கிறது வெறும் அட்ராக்ஷன் மட்டும் தானே தவிர வேற எதுவும் இல்லை...” என்றவனை நம்பாத பார்வை சுமங்கலி பார்க்க,

“தெளிவா தெரிஞ்சிக்கோங்க மாம். விருப்பமில்லாமல் உங்க ஆசைக்காக நான் காவேரியை கல்யாணம் செஞ்சிட்டா நிச்சயம் நான் சந்தோஷமா வாழமுடியாது. என்னோட நிம்மதி, உங்க நிம்மதின்னு எல்லாமே போய்டும்...”

“உங்களுக்காகன்னு நான் மேரேஜ் பண்ணி ஒவ்வொரு விஷயத்திலையும் ஒப்பாம ஒரு வாழ்க்கையை வாழ்ந்தா வாழ்க்கை முழுவதும் என்னோட சேர்ந்து அவளும் தான் கஷ்டபடனும்...”

“லைப் லாங் சகிப்புத்தன்மையோட வாழ நிச்சயம் என்னால முடியாது. நீங்க நினைக்கலாம் கல்யாணத்துக்கு பின்னால என் மனசு மாறும்னு. ஆனா காவேரியை மனைவி ஸ்தானத்துல ப்ச், சும்மா பேச்சுக்கு கூட சொல்ல என்னால முடியலை மாம்....”

பின்னந்தலையை அழுந்த கோதிக்கொண்டவன், “அப்புறம் எப்டி மாம்? ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க...” என்றவன் வேறுபுறம் பார்வையை திருப்ப சுமங்கலி மகனின் கூற்றுக்கு தலை சாய்த்தார்.

அவனின் விருப்பத்தை தாண்டி எதுவும் அவருக்கு பெரிதில்லை. இப்போது நடக்கும் கல்லூரி விஷயத்தில் கூட மகனின் விருப்பத்திற்கு மாறாக செய்துவிட்டோமே என அவர் வருந்தாத நாளில்லை.

சுமங்கலியின் மனம் ஓரளவு ரிஷியின் பேச்சில் தெளிய தான் வந்த விஷயத்தை மறந்து வேறெதுவோ பேசி மகனை வருத்தம் கொள்ள செய்துவிட்டோமே என தன்னையே கடிந்து,

“ஓகே லீவ் இட் ரிஷி. நான் வந்தது ஒரு முக்கியமான விஷயத்துக்காக. அப்பா சொல்ல சொன்னாரு. நீ தாத்தா வீட்டுக்கு வந்ததும் அவர்க்கிட்ட...” என்றவரை இடைமறித்து,

“எத்தனை தடவை கேட்கிறது மாம்? தேஞ்ச ரெக்கார்ட் போல சொல்றதையே சொல்லிட்டு இருக்கீங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன்...” என கண்ணை மூடி கேலி குரலில் கூற,

“திருடன் டா நீ. ராஸ்கல்...” அவனின் காதை திருகி சிரித்தவர்,

“கொஞ்சம் என்னோட பேச்சை கேளு. ப்ளீஸ் அம்மாவுக்காக...” கேன்சல் குரலில் கூறியவரை பாவமாக பார்த்தவன்,

“ஓகே உங்களுக்காக. அதுக்குன்னு அய்யான்னுலாம் கூப்பிடமாட்டேன்...” கொஞ்சம் மிதப்பாக.

“நீ க்ரான்பான்னு கூப்பிடாம இருந்தாவே போதும் கண்ணா...” அவனை போலவே பாவனையாக கூறி சிரித்தார்.

ஒருவழியாக மூவரும் கிளம்பி துரைச்சாமியின் வீட்டிற்கு வந்திருக்க அதற்கு முன்பே சொந்தபந்தங்கள் நிறைந்திருந்தனர்.
அவர்கள் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷம் நடந்தாலும் அது துரைச்சாமியின் வீட்டில் தான் நடக்கும் என்பது அவர்கள் குடும்பத்தில் எழுதப்படாத விதி.

மற்ற நாட்களில் ஆள் அரவமின்றி இருக்கும் அந்த பெரிய மாளிகை இப்படி விசேஷ நாட்களில் விழாக்கோலம் கொண்டுவிடும்.
சிவராமன் தன் தந்தையை பார்த்துவிட்டு சகோதரர்களுடன் கலந்துவிட திலகாவை பார்த்ததும் சுமங்கலி அவரோடு நகர்ந்துவிட ரிஷி தான் தனித்து நின்றான்.

தன்னிடம் பேச வருபவர்களிடம் புன்னகை முகத்தோடே பட்டுகத்திரித்தது போல ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் அளவளாவி நழுவி சென்றான். இதை அனைத்தையும் துரைச்சாமியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.

வந்ததில் இருந்து தன்னிடம் வந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் தன்னை மிதப்பாக பார்க்கும் பேரனின் மேல் கொஞ்சமும் கோபம் எழாமல் பாசமே சுரந்தது.

“எம்ட்டு(என்னுடைய) பேரன்னா சும்மாவா?...” மனதிற்குள் மீசையை நீவிவிட்டுக்கொண்டார். ஆனாலும் வெளியில் விரைப்போடு முறைப்பாக கம்மீரமாக நின்றார்.
Nice
 
அவரின் அலட்சிய பார்வையை அலட்சியம் செய்தவனாக மொபைலை எடுத்து குடைய ஆரம்பித்தான்.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்ததும் அவ்வீடே அமளிதுமளிப்பட்டது. வந்தவர்களுக்கு குடுக்கும் மரியாதையென்ன? கவனிப்பென்ன? குடும்பம் மொத்தமும் விழுந்து விழுந்து கவனித்தது.

அனைவரையும் வரவேற்று அமர்த்தி அறிமுகப்படலம் நடத்தி சம்பிரதாயமான பேச்சுக்கள் ஆரம்பித்து பெண்ணை அழைத்துவர சொல்லப்பட்டது.

வரவேற்பறைக்குள் நுழைந்த காவேரி சபையினருக்கு பணிவோடு வணக்கத்தை தெரிவித்து அங்கே அமர்ந்தாள்.

அனைவரையும் அடிக்கண்ணால் ஒருமுறை வலம் வந்தவள் பார்வை வட்டத்தில் ரிஷி விழுக கோவத்தில் முகம் சிவந்தாள். அவளின் பார்வை குறுகுறுப்பில் அவனும் எத்தேர்ச்சையாக நிமிர்ந்து பார்த்தான்.

முதலில் கண்டுகொள்ளாதவன் பின் எதோ உறுத்த அவளை மீண்டும் கூர்மையாக பார்த்தவன் அவள் சுமங்கலியையும் விரோத பார்வை பார்த்ததையும், தான் தாய் ஒதுங்கி நின்றதையும் கவனித்துவிட்டான்.

காவேரியின் பார்வையில் தெரிந்த அப்பட்டமான குற்றசாட்டை எரிச்சலோடு கண்ணுற்றவன்,

“இவ திருந்தவே மாட்டா. மாம் இவளுக்காக சப்போர்ட் பண்ணினாங்க. கொஞ்சமாச்சும் ரெஸ்பெக்ட் குடுக்காளா?...”

தானும் அவளை ஒரு பொருட்டாக மதிக்காத பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து தனியாக சென்று அமர்ந்துகொண்டான்.

சுமங்கலிக்குமே காவேரியின் இந்த ஒதுக்கமும் பாராமுகமும் பெரும் அதிர்வை தந்தது. எப்போதும் பாசமும் அன்பும் மட்டுமே தெரியும் கண்களில் இருந்த விலகலும் அந்நியமும் அவரை பின்னடைய செய்தது.

சுமங்கலி தானாகவே விலகி நின்றார். இதையெல்லாம் பார்த்திருந்த ரிஷிக்கு அந்த வைபவத்தில் கலந்திருக்கவே பிடித்தமில்லை. தாய்க்காக சகித்தபடி இருந்தான்.

பெண் பிடித்து ஒப்புத்தாம்பூலம் மாற்றி காவேரிக்கு அவளின் மாமியார் வீட்டினர் பூ வைத்து சம்பந்தத்தை உறுதி செய்துவிட அனைத்தும் நல்லபடியா முடிந்து நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் முகூர்த்தநாள் குறித்துவிட்டு சென்றனர்.
அதன் பின் ஒரு நிமிடம் கூட தாமதியாது தாயை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் ரிஷி.

இருந்து செல்லலாம் என கூறிய சிவராமனையும், உசிதமணியையும் அழுத்தமான பார்வையில் அடக்கியவன் துரைச்சாமியை முறைத்துவிட்டு அணைவாக சுமங்கலியை அழைத்து சென்றுவிட்டான்.

ஒரு தலையசைப்போடு விடைபெற்ற சுமங்கலியின் சோர்ந்த முகமும், ரிஷியின் கோபமும் திலகாவிற்கு கவலையை கொடுத்தது. அவரும் தானே காவேரியை கவனித்துக்கொண்டிருந்தார். வீட்டிற்கு செல்லவும் சுமங்கலியிடம் பேசவேண்டும் என நினைத்தார்.

காவேரியின் செயலில் அதிகமான கோவம் மூண்டது திலகாவிற்கு. “அனைவரும் செல்லட்டும் இருக்கு இவளுக்கு...” என கடுகடுப்பாக இருந்தார்.

காரில் ரிஷியின் அருகில் அமர்ந்திருந்த சுமங்கலியின் கண்கள் கலங்கி சிவந்திருந்தது. மாமனார் வீட்டில் காவேரி செய்த செயல்கள் கண்முன் தோன்றி கண்ணீரை விழிவிட்டு வெளியே கடத்தியது.

காவேரியை ஆசையாக பார்க்க சென்றவர் பெண்ணாய் அலங்கரிக்கப்பட்ட அவளை, “அழகா இருக்கேடா காவேரி...” என சொல்லி ஆசையாக தழுவ வேகமாக அவரிடமிருந்து தன்னை பிய்த்து அவரை தள்ளி நிறுத்தினாள்.

அதிர்ந்த பார்வை பார்த்தவரை அலட்சியப்படுத்தி, “மேக்கப் கலைஞ்சிடும்...” தன்னை திருத்திக்கொள்வதை போல கண்ணாடி முன்பு திரும்பி நின்றாள்.

அடுத்ததாக சபையில் சிவராமனோடு தம்பதி சகிதமாக நின்ற சுமங்கலியை பார்க்காமல் மாமனின் காலை மட்டும் தொட்டு வணங்கியவள் சட்டென எழுந்து அவரிடம் மட்டும் விபூதி பூசிக்கொண்டு திரும்பி திலகாவிடம் எதையோ கேட்பது போல நகர்ந்தாள்.

இப்படி யாரும் அறியாவண்ணம் சுமங்கலியை அவமதிக்க அனைத்தையும் பொறுத்துக்கொண்டு அமைதிகாத்தார் சுமங்கலி.

பெறாத பெண்ணாக தான் நினைத்தவள் செய்த செயலை ஜீரணிக்கமுடியாமல் அழுகையை அடக்க வகையில்லாமல் திணற அதை பார்த்த ரிஷியின் கை முஷ்டிகள் இறுகின.

“மாம், லீவ் இட். நீங்க பீல் பன்ற அளவுக்கு அவ வொர்த் இல்லை...” ரிஷி சொன்னது தான் தாமதம் அவனின் தோளில் சாய்ந்துவிட்டார்.

மௌனமாக சென்றவர்களுக்கு அன்றைய நாள் மிகுந்த கனத்தநாளாக கடந்து சென்றது.
இரவே திலகா சுமங்கலியிடம் பேசி காவேரியை மன்னிப்பு கேட்க சொல்ல அவருக்காக வேண்டா வெறுப்பாக மன்னிப்பை கேட்டவளிடம் ம்ம் என்ற பதிலை மட்டும் கொடுத்துவிட்டு வைத்துவிட்டார்.

காவேரியின் இந்த குணத்தினால் மிகவும் கசந்துபோனார் சுமங்கலி. இப்படி ஒரு உதாசீனத்தை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

“இதுவரை யாரும் தன்னை இப்படி அவமானம் செய்ததில்லையே?...” அவருக்கு மனம் தாங்கவே இல்லை.

“இத்தனை நாள் தன்னிடம் காட்டிய பாசம் வெறும் பாசாங்கா? இதுதான் இவளின் உண்மை முகமோ?...” என எண்ணியவர் மனக்கண்ணில் ரிஷியின் முகம் வந்து செல்ல மகனிற்காக தன்னை வெளிக்கொணர்ந்தார்.

“ச்சே ச்சே என்னதிது? ஒரு சிறுபெண்ணின் நடத்தையால் நான் ஏன் பாதிக்கப்படவேண்டும்? அந்தளவிற்கு தான் பலகீனமானவளா?...”
கண்களை இறுக மூடி இரு நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தவர் விழி திறக்கையில் தெளிவாகியிருந்தார். தன் குடும்பத்தில் முழுமையான கவனத்தை செலுத்தினார்.
-------------------------------------------------------------------
ஹாஸ்டல் ரூம் கட்டிலில் ஒருகாலை மடக்கி இன்னொரு காலை முட்டியிட்டு அமர்ந்திருந்த நேத்ரா வாயில் ஒரு பேனாவை வைத்து கடித்துக்கொண்டிருந்தாள்.

“என்னடி நேத்ரா நான் சொல்றேன் கொஞ்சமும் சீரியஸ்நெஸ் புரியாம அமைதியா இருக்க. இப்போ என்ன செய்ய போற?...”

“இப்போ அதுக்கு என்ன செய்யனும்ன்ற?. கத்தி கதறி உருண்டு புரண்டு அழட்டுமா?..”

நேத்ராவின் அலட்சியபாவனை வனமலருக்கு பீதியை கிளப்பியது.
“நேத்ரா கொஞ்சமாச்சும் பொறுப்பா பேசு. உன் மேல ஹாஸ்டல் வார்டன்கிட்ட உன் ரூம் மேட் சத்யா தான் கம்ப்ளைன்ட் குடுத்திருக்கா நீ மொபைல் வச்சிருக்கன்னு. குடுக்க வச்சது ரஞ்சனி மேம்...” என சொல்ல,

“திரும்பவும் பாடுன பாட்டையே பாடாதே அமேஸான். எல்லா நியூஸும் வந்திருச்சு. என் ரூம்ல செக் பண்ணினாலும் போன் அவங்களுக்கு கிடைக்காது...” நேத்ரா திடமாக கூற,

“உனக்கு என்ன ஒரு நம்பிக்கை? நம்ம காலேஜ் ரூல்ஸை மீறி நீ போன் வச்சிருக்க. அது உன் ரூம்ல தான் இருக்கு. தேடினா கிடைக்காதா?...” ராகினி கேட்க,

“கிடைக்காது, கிடைக்காது...” நேத்ரா ராகம் பாட ரோஷிணி அனைத்தையும் பார்த்து மௌனமாக சிரித்தாள்.

“உனக்கென்ன சிரிப்பு வேண்டி இருக்கு ரோஷி. இவளை கொஞ்சம் அடக்கேன்...”வனமலர் பொரிய,

“போனும் கிடைக்காது. ஒன்னும் கிடைக்காது. இவ கேடிக்கும் கேடி. நமக்கு தெரியாதா இவளை. என்னோட நினைப்பெல்லாம் அந்த சத்யாவுக்கு இது தேவையான்றது தான்...”

ரோஷிணியின் கூற்றில் இருக்கும் உண்மை உணர்ந்தாலும் ஏனோ ராகினிக்கும் வனமலருக்கும் அமைதி இல்லை.
“ப்ச் இவளுங்க இம்சை தாங்கலை. சரி நான் என் ரூம் போறேன். வார்டன் ரொம்ப நேரமா வெய்ட் பண்ணுவாங்க...” என போனால் போகிறது என்பதை போல கிளம்பியவளோடு வனமலரும் உடன் சென்றாள்.

அங்கே அறையின் வாசலில் வார்டன் கோப முகத்தோடு நேத்ராவை எதிர்க்கொள்ள இவளோ அவரை பார்த்து காதுவரைக்கும் ஈ என சிரித்துவைத்தாள்.

தன்னுடைய ரூம் மேட்ஸ் இருவரை தவிர புகார் குடுத்த சத்யா அங்கே இல்லாமல் போக வரட்டும் அவள் என நினைத்தபடி,
“சொல்லுங்க மேடம்...” என அவரிடம் கேட்க வார்டன் நேத்ராவிடம் என்கொயரியை ஆரம்பித்தவர் அவளின் பதில்களுக்கு எதிர்கேள்வி கேட்க முடியாதளவிற்கு ஓய்ந்து போனார்.

“உன் திங்க்ஸ் செக் பண்ணனுமே...” என அதிகாரமாக ஆரம்பிக்க அதற்கும் சளைக்காமல்,
“ஓ எஸ் மேம். தாராளமா. ஆனா போன் கிடைக்கலைனா நான் கரெஸ்பாண்டென்ட் சார்க்கிட்ட கம்ப்ளைன்ட் நிச்சயம் பண்ணுவேன்...”

திமிராக சொல்லியவள் தன்னுடைய உடமைகளை தன் கட்டிலில் எடுத்து பரத்தினாள்.

அவளின் பேச்சில் அதிர்ந்த வார்டன் கரெஸ்பாண்டென்ட் என்ற வார்த்தையில் நா உலர்ந்து போக வெற்றிகரமாக பின்வாங்கினார். அவரும் தான் ரிஷியின் கோபத்தை பற்றி கேள்விப்பட்டிருந்தாரே.

“இவ மட்டும் ஏனோ சிக்கவே மாட்டேன்றாளே?...” மனதிற்குள் நேத்ராவை கரித்துக்கொட்டியவர்,

“இன்னொரு முறை சிக்காமலா போய்விடுவாள் அப்போது பார்த்துக்கொள்வோம்...” என எண்ணி,

“சரி சரி. எல்லோரும் அவங்கவங்க வேலையை பாருங்க...” தன் சோடாபுட்டியை சரிசெய்துகொண்டே பொதுவாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் தன்னுடைய கட்டிலில் இருந்தவற்றை இறக்கி கீழே வைத்தவள் முகம் அப்படி ஒரு கனலை கொட்டியது. சைந்தவியும் இன்னொரு பெண்ணான சுசியும் பயந்து போய் ஒதுங்கி நின்றனர்.

சற்று நேரத்தில் சத்யா வந்துவிட வரும் போதே அவள் இப்போது நேத்ரா நிச்சயம் சிக்கியிருப்பாள், வார்டன் ரூமிற்கு சென்றிருப்பாள் என சந்தோஷித்தபடி இன்னொரு பெண்ணுடன் பாடிக்கொண்டே நேத்ராவை கவனியாது உள் நுழைந்தாள்.

“வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும் டும்...” என சத்யா பாட,

“கத்தி போய் கடப்பாரை வந்தது டும் டும் டும் டும்...” நேத்ரா எசைப்பாட்டு பாடினாள்.

அதிர்வாக சத்யா திரும்பி பார்க்க அங்கே கட்டிலில் சம்மணம் இட்டு ஒய்யாரமாக காளி அவதாரம் எடுத்திருந்தாள் நேத்ரா.

அலை தீண்டும்...
Nice
 
Top