Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennai Ariyum Kadhalan 1

Advertisement

ilakkikarthi

Active member
Member
என்னை அறியும் காதலன் 1

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்.” அவன் செல்லிடைப் பேசி மெல்லிசையாய் ஒலிக்க அதை கேட்டுகொண்டே விழித்தான் ரகு.


“ சொல்லு டா...”


“டேய் மணி என்னனு தெரியுமா?” அவன் உயிர் தோழன் ராஜேஷ் கேட்க


“உன் வீட்டுல கடிகாரம் வொர்க் ஆகலையா...”


“இல்லையே, ஏன் கேட்க்குற.”



“அப்புறம் எதுக்கு டா எனக்கு போன் போட்டு டைம் என்னனு கேக்குற.”


“கடவுளே...” என தனது செல்போனை கொண்டு தனது தலையிலே அடித்துகொண்டான் அவன் தோழன் ராஜேஷ்.


“டேய் மச்சான்... இன்னைக்கு முக்கியமான கேஸ் வருது. அதுக்கு தான நீ ஒரு மாசமா அலைஞ்சு திரிஞ்சு டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணி வச்சயேட... அந்த கேஸோட ஹியரிங் இன்னைக்கு இருக்கு அதை சொல்ல தான் டா உனக்கு போன் பண்ணேன்.” அவன் சொல்ல.


”ஓ... அதுவா” என் அவன் சாதாரணமாக கேட்டுவிட்டு போனை வைத்தான்.


“அவன் போனை வைத்தது கூட தெரியாமல்... அவன் தோழன் பேசிக்கொண்டிருந்தான்.”


“மச்சான் இன்னைக்கு, அந்த கேஸ் முடிஞ்சதும் ஹோட்டல் மாருதில எனக்கு ட்ரீட் தரனும் மறந்துடாத டா நண்பா” என அவன் பேச... போன் பீப் பீப் என்ற சத்தம் கேட்டது.


“வச்சுட்டான்... நினைச்சேன் அவன் அதுவானு கேட்க்கும் போதே போனை வச்சுருவானு...” புலம்பிக்கொண்டே கோர்ட்டுக்கு கிளம்பினான்.


“தனது போனில் ஸ்கீரின் சேவரில் உள்ள போட்டோவையே பார்த்துகொண்டு இருந்தவனின் மனதில் ஆயிரம் எண்ணங்கள். அதை எல்லாம் நிறைவேற்ற முடியுமா?”


“இப்படியே இருந்தால் இன்று வேலை நடந்த மாதிரி தான் என நினைத்துகொண்டு வேலைக்கு கிளம்ப ஆயுத்தமானான்.”



“மதுரையில் புகழ் பெற்ற வழக்கறிஞர்களுள் இவனும் ஒருவன். இவன் எடுத்த எந்த வழக்கும் தோற்றதாய் இல்லை. ஆனால் நியாயத்திற்க்கு எதிராகவும் செயல்படமாட்டான். இவனுக்கு கீழ் 5 ஜீனியர்கள் இருக்கின்றனர். அவர்களுள் ஒருவன் என்றே அவன் எண்ணிக்கொள்வான்.”



“சரியாக 9.30 க்கு நீதிமன்றத்தில் நுழைந்தான். நேராக அவன் சென்றது, சீனியர் லாயர் பழனிக்குமார் அலுவலக அறைக்கு. அவரிடம் தான் ஜூனிய்ராக இருந்தான் ஒரு காலத்தில்.”



“கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்...”


“மார்னிங் சார்”


“மார்னிங் ரகு...”


“ஆசீர்வாதம் பண்ணுங்க சார்... இன்னைக்கு முக்கியமான கேஸ்க்கு நல்லபடியா தீர்ப்பு வரனும் சார்” சொல்லிகொண்டு அவரின் பாதம் பணிந்தான்.


“எப்போவும் போல நீ தான் இந்த வழக்குல ஜெயிப்ப... என் ஆசீர்வாதம் எப்போவும் உனக்கு இருக்கும்.” அவரும் ஆசீர்வதித்தார்.


“இன்னைக்காவது உன் தாடிய சேவ் பண்ணிருக்கலாமே ரகு” அவர் சொல்ல.


“ அவனோ, ஓகே சார், நான் கிளம்புறேன்.” என இதை பற்றி இனி கேட்க வேண்டாம் என்ற ரீதியில் கூறினான்.

“சரிப்பா.”


“குமரனின் மனைவி மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். ஆனால் கொலைக்கான குற்றத்தை நியத்துடன் நிருபிக்க, குமரன் தேடி சென்றது ரகுவிடம். தன் மனைவி மீது எந்த தவறும் இல்லை. அதுக்கான ஆதாரத்தையும் சேர்த்து அவனிடம் காட்டினான். அந்த ஆதாரம் மட்டும் போதாதே என நினைத்துகொண்டு அவனும் சேர்ந்து ஆதாரம் சேகரித்து இப்பொழுது அதை நீதிமன்றத்தில் சேர்க்க உள்ளான்.”


“ யுவர் ஹானர்... என் கட்சிக்கார்ரின் மீது சுமத்தப்பட்ட குற்றம் முற்றிலும் பொய், அவரின். கொலை பழி சுமத்தப்பட்டு தேவி என்கிறவர், வீட்டில் கார் டிரைவராக வேலை செய்பவர் தான் பாலா. அவர் பதின் வயது பெண்ணின் மீது தவறாக நடக்க முயன்றதை பார்த்து, தேவி அந்த பெண்ணை காப்பாற்ற முற்ப்பட்டார். ஆனால் அவன் தேவியை தாக்கிவிட்டு அந்த பெண்ணின் ஆடையை அகற்றும் போது தேவி பக்கத்தில் இருக்கும் இரும்பு கம்பியை எடுத்து அவனின் பின் தலையில் அடித்துவிட்டு, அந்த பெண்ணை இழுத்துகொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டார். கொலையான பாலா உயிருடன் இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா என பார்க்காமல்.”


“ஆனால் தேவி சென்ற பின், பாலா தலையில் அடிவாங்கியதில் மயக்கத்தில் இருந்தார். இதை அறியாமல் தேவி, அவரின் கணவரிடம் நடந்ததை சொல்லி, உடனடியாக போலீஸில் கம்ப்ளைட் கொடுத்த பின் தான் தெரிந்தது பாலா இறந்த்து.”
“பாலா இறந்தற்க்கு காரணம் அவரின் நண்பனா கருணாகர் தான். அவரும், பாலாவும் எந்த வீட்டில் வேலை செய்தாலும் அந்த வீட்டிலோ, இல்லை பக்கத்தில் விளையாடும் பெண்களின் மீது குறி வைத்து அவர்களை கடத்தி, அவர்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்வார்.”



“அப்படிதான் இந்த பெண்ணையும் பயன்படுத்த முயன்றனர். ஆனால் தேவி காப்பாற்றிவிட்டார். அவர் சென்றபின் கருணாகரன், பாலாவை தலையிலேயே அடித்து கொன்றுவிட்டார். இதை அறியாத தேவி தான் குற்றவாளி என நினைத்துகொண்டு போலீஸில் உண்மையை கூறி, சரண்டைந்தார்.”


“கருணாகரன் தான் இந்த கொலையை செய்தார் என்பதற்க்கான ஆதாரம் இருக்கா, மிஸ்டர். ரகு” நீதிபதி கேட்க.


“இருக்கு யுவர் ஹானர்... கருணாகரன் பாலாவை தலையில் அடிக்கும் போது கருணாகரனின் தங்க மோதிரமும், அவரின் சட்டையின் கிழிந்து, அவரின் இடதுப்பக்கம் கையில் ஆழமான காயம் உள்ளது. அந்த காயத்திற்க்கு **** ஹாஸ்பிட்டலில் ட்ரீட்மெண்ட் எடுத்துகொண்டதற்கான ப்ரிஸ்க்ரிப்சன்.” என ஆதாரத்தை அவாரின் முன் சமர்ப்பித்தான்.


”அது மட்டும்மில்லை... இவர்களின் மீது பல குற்ற செயல் செய்ததற்க்கான ஆதாரமும் சேர்த்து சமர்ப்பிக்கின்றேன்.”


“ நீதிபதியோ... ஆதாரத்தை சரிப்பார்த்து முடித்து... தீர்ப்பு எழுத முனைந்தார்.”


“பெண்கள் இந்நாட்டில் ஆண்களுக்கு மத்தியில் நடமாடுவதும், அவர்களுக்கு சமமாய் அனைத்து துறைகளிலும் கால் பதித்து, வெற்றியும் கண்டுள்ளனர். நல்ல ஆண்களுக்கு இடையில் சில காமக் கொடுரர்களும் இருக்கின்றனர். அதே போல் தான் கொலை செய்யப்பட்ட, பாலாவும், உயிருடன் இருக்கும், கருணாகரனும்”


“விரைவில் கருணாகரனை கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிடுகிறேன். ”


“கொலை சுமத்தப்பட்ட திருமதி. தேவியை இந்த கோர்ட் விடுதலை செய்கின்றது.”


“அனைவரிடமும் வாழ்த்து பெற்றுக்கொண்டு, அவன் அலுவலக அறைக்கு சென்றான். அவனுக்கு முன்பு அவனின் ஜூனியர்கள் அவனுக்கு வாழ்த்து கூறி, வரவேற்றனர்.”


“சார் ரொம்ப அருமையா வாதாடுனேங்க.”ஆனந்த்


“ஆமாம் சார், எல்லா வழக்கு போல இந்த வழக்கை நீங்க எடுத்து நடத்த போறேங்கணுதெரிஞ்சும், யாரும் முன் வரலை அந்த குற்றவாளிக்கு வாதாட.” வெங்கட்



“உங்க வாழ்க்கைல எப்போவும் நீங்க தேற்க்க கூடாது சார்” துருவ்



“டேய்… டேய் ரொம்ப புகழாதீங்கடா என் மச்சானுக்கு இந்த புகழ்ச்சி எல்லாம் பிடிக்காது. இல்லைடா மச்சான்.” அவன் மனம் இப்பொழுது எதை நினைக்க கூடும் என அறிந்து அவனை சகஜமாக்கினான்.”


“சரி எல்லாரும் இப்போ வேலை பார்க்கலாம?” அவன், அவர்களின் பாரட்டுதலில் இருந்து வெளிவந்தான்.
“மச்சான், வேலை இருக்கட்டும் டா, நீ ஜெயிச்சதுக்கு ட்ரீட் கொடுக்கனும் மறக்காதடா”


“சீனியர், சார் இப்போ வேலை பார்க்கலாமானு கேட்டாங்க” வெங்கட் மறுபடியும் சொல்ல.
“தெரியும் ஜூனியர்... உங்களுக்கு சேர்த்து தான நான் பேசிட்டு இருக்கேன்”.


“ட்ரீட் வேணும் கேக்குறவங்களுக்கு இந்த மாசம் சம்பளம் இல்லை. சம்பளம் வேணும் நினைக்குறவங்களுக்கு ட்ரீட் இல்லை. இப்போ எது வேணும், எது வேணாம்.” ரகு சொல்லிமுடித்து ராஜேஷை பார்க்க.


“அவனோ, சின்சியராக கேஸ் பைலை பார்த்துக்கொண்டு இருந்தான். அவனை பார்த்து மற்ற மூவரும் வாய்க்குள்ளே சிரித்துகொண்டு அவர்களின் வேலையை கவனிக்க சென்றனர்.”


” நெற்றியில் சாந்து பொட்டை அழகாக வைத்துகொண்டு. கண்ணுக்கு மை தீட்டி, உதடுக்கு லிப்பார்ம் தடவிவிட்டு. தனது அலங்காரம் இவ்வளவு தான் என முடித்துக்கொண்டு தன் அறையில் இருந்து வெளி வந்தால் அனு”


“ம்மா... நான் கிளம்பிட்டேன்...”


“இதோ டீ... சாப்பாடு எடுத்து வச்சுட்டேன் வந்து சாப்பிடு”


“இல்லை ம்மா... எனக்கு வேணாம்.”


“ஒழுங்க சாப்பிட்டு போ... தினமும், இப்படியே சாப்பிடமா கிளம்பிடுவ.”


“இல்லைமா... டீச்சர்ஸ் மீட் இருக்கு, இப்போ கிளம்புனா தான் இந்த ட்ராபிக்ல போய் சேரமுடியும் ஸ்கூல்க்கு.” சொல்லிக்கொண்டே திரும்பியவள் வாயில் அவள் அன்னை இட்லியை ஊட்டி விட்டார்.”


“ஓவ்வொரு நாளும், அவள் அன்னை தான் காலை உணவை ஊட்டி விடுவார் அவளுக்கு அது பழக்கம் தான் ஆனாலும் அன்னையின் பாசம் தந்தையில் பாசத்தை விட அதிகம் தான்.”


“போது ம்மா... நான் போயிட்டு வரேன். நீங்க பத்திரமா இருங்க.” சொல்லிக்கொண்டு தனது ஸ்கூட்டியை எடுத்துகொண்டு புறப்பட்டால்.”


“சிக்கனலில் நின்றவளின் மனம் தன் முன் இருந்த யமகா பைக்கின் மீது தான். அந்த பைக்கின் மீது அமர்ந்தவனின் பின் பக்கம் தான் இவள் இருந்தால். அந்த பைக்கை பார்த்ததும் அவள் மூளை பழைய நினைவுக்கு சென்றது.”


“பழைய நினைவை துளியும் நினைக்க கூடாது என நினைத்தவள், தலையை குலுக்கிகொண்டு தன் உணர்வுக்கு வந்து, பச்சை சிக்னல் வந்தது தனது வேலை செய்யும் பள்ளியை நேக்கி சென்றால்”


“அவள் எப்பொழுது அந்த சிக்கனலில் வந்து நின்றாலோ, அப்பொழுதே ஒரு ஜோடி கண்கள் அவளை தான் நோட்டம்மிட்டு கொண்டிருந்தது. அவள் அந்த பைக்கை பார்த்து, முகம் மாறுவதையும், பின் தலையை உலுக்கி கொள்வதையும் பார்த்துகொண்டிருந்தது.”


“ஏன் டீ இப்படி கஷ்ட்டப்படுற...” அவன் மனம் வேதனைக்கொண்டது.


” பள்ளியில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, மீட்டிங் அறைக்கு சென்றால். அங்கு அவளுக்காக அவர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.”


“சாரி சாரி டீச்சர்ஸ்... அண்ட் குட் மார்னிங்.”


“குட் மார்னிங் மேடம்.”


“ அவர்களின் பள்ளியில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மியூசிக், டான்ஸ், 10த்,12ல்த் கோச்சிங் கிளாஸ், என அதை பற்றி ஆசிரியர்களுக்கு புரியும் படி கூறி, அதற்க்கான பொறுப்புகளை உரிய ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மாணவர்களின் படிப்பு பற்றியும், அதில் பின் தங்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் கேட்டு அதற்கான சிறப்பு வகுப்பு பற்றியும் ஆசிரியர்களும், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான அனு முடிவெடுத்துக் கொண்டிருந்தால்.”


“ஓகே டீச்சர்ஸ், மீட்டிங் ஓவர், இன்னும் ஒரு வாரத்து புதிய கால அட்டவனை வெளியிடப்படும், அதில் இருந்து எந்த டீச்சர்ஸ்க்கு எந்த கிளாஸ்னு சர்குலர் அனுப்புறேன்.” அவள் சொல்லிக்கொண்டு தனது அறைக்கு சென்றால்.


“மூர்த்தி அண்ணே...”


“சொல்லுங்கம்மா… 10த், 12த் கோச்சிங் கிளாஸ் டைம், அண்ட் நீயூ டைம் டேபில் சர்க்குலர்ல இருக்கு, நீங்க எல்லா கிளாஸ்க்கு போய் இந்த சர்க்குலர் மாணவர்களுக்கு தெரியப்படுத்தனும் டீச்சர்ஸ்க்கு சொல்லிடுங்க. அப்படியே, டீச்சர்ஸ்கிட்ட சைன் வாங்கிட்டு வந்திருங்க.”


“சரிங்கம்மா...” அதை வாங்கிகொண்டு சென்றார்.


“ அடுத்த வேலை என்ன என்பதை பைலை எடுக்கும் போது அவளது கைப்பேசி அழைத்தது, அதில் அந்த பள்ளியின் தாளாலர் தான் அழைத்தது.”


“சொல்லுங்க ஐயா... மீட்டிங்க முடிஞ்சது ஐயா... நீங்க சொன்ன மாதிரி ஆசிரியர்கிட்ட பேசிட்டேன் ஐயா.”


“அப்படியாம்மா சரிம்மா, நான் போன் பண்ணது உன்கிட்ட முக்கியமான விசயம் பேசனும், சாயங்காலம் என் வீட்டுக்கு வாம்மா.”


“சரிங்க ஐயா... நான் வரேன்.” போனை வைத்ததும் அவளுள் ஒரு பயம் வந்தது.”


” அந்த கல்லூரி வளாகம் எங்கிலும், மாணவர்களின் தலை தான். புதிய, பழைய மாணவர்கள் என ஐனுருக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இருந்தனர்.”



“புதிய நட்பு கிடைத்த மகிழ்ச்சியிலும், கல்லூரியின் முதல் நாள் துவக்கமும், அந்த மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தான். ஆனால் அதில் நான் சேர மாட்டேன் என்பது போல் யாரையும் கவனிக்காமல் தனது வகுப்பிற்க்கு செல்லும் அவளை அழைத்தது ஒரு ஆணின் குரல்.”

அவள் வருவாளா???
 
உங்களுடைய "என்னை
அறியும் காதலன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
இலக்கிகார்த்தி டியர்
 
Last edited:
Top