Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennai Ariyum Kaadhalan 8

Advertisement

ilakkikarthi

Active member
Member
என்னை அறியும் காதலன் 8

”என்ன முடிவு பண்ணிருக்க... பாரதி...”ரகு கேட்க.

“அவன் முன் அமைதியாக அமர்ந்திருந்தால்... எதுவும் பேசாமல் இல்லை இல்லை பேச முடியாமல்...”

“உன்னை தான் கேக்குறேன் சொல்லு டி... என்ன முடிவு பண்ணிருக்க...” கொஞ்சம் கோவமாக கேட்க.

“அவளோ, அவனை நிமிர்ந்து பார்த்து ‘தெரியலை... எந்த முடிவு எடுக்குறதுனு...’

“இப்படி சொன்னா என்ன அர்த்தம்... ஒன்னு உன் முடிவ சொல்லு... இல்லை உன் அப்பாக்கிட்ட நான் பேசவா?”

“அம்மா அப்பாக்கிட்ட பேசிட்டாங்க ஆனா, அப்பா ஒத்துக்கலை”

“சரி... அவர் ஒத்துகலைனா என்ன, வா இப்போவே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்...”

“என்னால முடியாது... அப்பா சம்மதம் வேணும்... நம்ம கல்யாணத்துக்கு.” அவள் மெதுவாக சொன்னால்.

“சரி நீ கிளம்பு... எனக்கு வேலை இருக்கு...” அவன் எரிச்சலில், அவளை இங்கிருந்து போக சொல்ல.

“அவளோ, அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காங்க...”

“யாரை,”

“ராகுல்...”

“உன் காலேஜ் சீனியரா...” அவன் சரியாக சொல்ல.

“ம்ம்...” என அவள் தலையாட்ட.


“அப்புறம் என்ன ******* க்கு டி என்னை தேடி வந்த...” அவன், அவள் மன நோகும் படி பேச.


“அவளோ, கண்கள் கலங்கி அவனை நிமிர்ந்து பார்த்தால்... ‘என் காதல் உங்கமேல இப்பவும் இருக்கு அதுக்கு தான் உங்களை தேடி வந்தேன். என் அப்பா எதிர்த்து நான் எதுவும் பேச முடியாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என் அப்பாக்கிட்ட பேசுங்க.” அவள் சொல்லிவிட்டு எழுந்தால்.


“அவள் எழுந்து ஒரு அடி வைக்க போகையில் அவள் கையை பிடித்து நிறுத்தினான். ‘சாரி பாரதி... ஏற்கனவே நாம மூனு வருஷம் பிரிஞ்சு இருந்திட்டோம், இப்போ மறுபடியும் நாம பிரிஞ்சுடுவோமுனு பயத்துல தான் அப்படி பேசிட்டேன் சாரி டீ. உன்னை ஒரு நிமிஷம் கூட என்னால பிரிஞ்சு இருக்க முடியலை.”


“நான் அந்த அளவுக்கு உன்னை விரும்புறேன் டீ... புரிஞ்சுக்க பாரதி. சீக்கிரம் உன் அப்பாக்கிட்ட பேசுறேன் நம்ம காதல் பற்றி. ஆன உன் அப்பா நம்ம காதலுக்கு ஒத்துகலைனா என்கூட நீ வந்திறனும். இது தான் என் முடிவு.”


“அப்பா கண்டிப்பா ஒத்துப்பாரு மனு... நீ பேசு... நான் இன்னைக்கு ஈவ்னிங் ராகுல்கூட பேசி, எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்ல போறேன்.”


“சரி... நீ போகும் போது என்னையும் கூப்பிடு நானும் வரேன்.”


“ம்ம்... சரி. நான் போயிட்டு வரேன்.” அவளை ஹோட்டல் வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தான்.


“அவனை சந்திக்க வந்ததால் அவளது காரில் வந்திருந்தால். காரை ஓட்டிகொண்டிருக்கும் போது அவளது அன்னை பார்வதி அழைத்தார். போனை கட் செய்துவிட்டு நேற்று நடந்ததை நினைத்துப்பார்த்தால்.”


“பாஸ்கரன் வீட்டில் இருந்து, அவர்கள் வீட்டிற்க்கு வந்ததும் அனு தனது அறைக்கு செல்ல மாடியில் ஏறினால். அவளது வேகத்தை பார்த்த சிவபாலன், அவளை அழைத்தார்.”


“அனு... நில்லும்மா...”


“மாடிப்படியில் நின்றுகொண்டே ‘சொல்லுங்க ஐய்யா...’


“இங்க வாம்மா...” அவளை அழைத்து சோபாவில் அவரது பக்கத்தில் அமர வைத்தார்.


“என்மேல உனக்கு கோவம் இருக்கும்... அதை என்மேல காட்ட முடியாது உன்னால... அதான் வேகமா உன் ரூம்க்கு போற...” அவளது மனநிலையை கணித்துக்கூறினார்.


“எனக்கு கல்யாணம் வேண்டாம் ஐய்யா...” கண்ணீர் வழிய அவரிடம் சொல்ல.


“சரிம்மா... உனக்கு கல்யாணம் வேண்டாம். ஆனா, நீ காதலிக்குற பையனும் உன் வாழ்க்கையில வரகூடாது சரியா? நானும் உன் காதலுக்கு சம்மதம் சொல்லமாட்டேன்.”


“அவரை நான் எட்டு வருஷமா காதலிக்குறேன் ஐயா... அப்படி இருக்கும் போது எப்படி என் வாழ்க்கையில அவர் வரகூடாது. எது தடுக்குது உங்களுக்கு சொல்லுங்க ஐயா”


“அமைதியாக இருந்தார் எதுவும் சொல்லாமல்.”


“நான் சொல்லவா... அவர் வேறு மதத்தை சார்ந்தவர் தானே உங்க எதிர்ப்புக்கு காரணம்... நமக்கு ஈடா அவர் இல்லை... ஆனா நான் அவர்கிட்ட இதை பார்க்கலை ஐய்யா... என்னை எனக்காக நேசிக்க அவரால மட்டும் தான் முடியும். என் அந்தஸ்து என்னனு இப்போ கூட அவருக்கு தெரியாது. என்கூட பிறந்தவங்க யாராவது இருக்காங்களானுகூட அவருக்கு தெரியாது.”

“நாங்க மூனு வருஷம் பிரிஞ்சது என்னால மட்டும் தான்... அவர்கிட்ட நான் சண்டை போட்டு என்னை தேடி நீ வராதனு சொல்லிட்டு வந்தேன். ஒரு மாசத்துக்கு முன்னாடி வரை அவர் என்னை பார்க்க வரலை. ஆனா இப்போ வந்திருக்காங்க என் காதலுக்காக ஐயா.”


“இப்போவும் நான் அவங்களை இழக்க முடியாது... என் கல்யாணம் உங்க சம்மத்தோடு தான் நடக்கும் அதுவரை நாங்க காத்திருப்போம். நானும் அவரும் கல்யாணமே பண்ணிக்காம எங்க காதலுக்காக மட்டுமே வாழ்வோம், நீங்க, எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்குற வரை.”


“நான் சொன்ன தேதில தான் உனக்கும், ராகுலுக்கு கல்யாணம் நடக்கும். இது தான் உன் அப்பா முடிவு” அவள் இவ்வளவும் சொல்லியும் அவரது பிடியில் இருந்து அவர் இறங்கவில்லை.


“அழுதுகொண்டே அவளது அறைக்கு சென்றால். யமுனாவோ இங்கு நடந்ததை அப்படியே பார்வதிக்கு தெரிவித்தார்.”


“நேராக வீட்டிற்க்கு வந்தவள், உள்ளே நுழைகையில் அவளை எதிர்கொண்டார் பார்வதி. அவரை பார்த்ததும், கொஞ்சம் நம்பிக்கை வந்தது.”


“எப்போம்மா வந்தீங்க...” அவருடன் அமர்ந்து பேசினால்.


“இன்னைக்கு ஸ்கூல் போகலையா??”


“இல்லைம்மா... கொஞ்சம் மனசு சரி இல்லை”

“சரி... நேத்து அப்பாக்கிட்ட சண்டை போட்டயாமே... அவரை எதிர்த்து பேச பழகிட்டயா அனு” கொஞ்சம் கோவமாக பேசினார்.


“இனி பேச மாட்டேன் ம்மா... ஐய்யாக்கிட்ட சாரி கேக்குறேன்.”


“நீ, அப்பாவ எதிர்த்து பேசுனது அவருக்கு வருத்தாம போச்சு. அதனால அவர் இன்னைக்கு காலையில இருந்து சாப்பிடலை அனு.”


“நீங்களும் அவருக்கு சப்போர்ட் பண்ணுறேங்களாம்மா...”

“சப்போர்ட் இல்லைம்மா... எங்களைவிட உன்மேல அவருக்கு பாசம் அதிகம். உன் காதலுக்கு நீ சண்டை போடுறது சரி, ஆனா அவரு வருத்தப்படுற மாதிரி பேச கூடாதும்மா.”


“சரிம்மா... நான் பேசலை... இப்போ ஐய்யா எங்க நான் அவருக்கிட்ட பேசுறேன்... சாரி கேக்குறேன்.”


“அவரு இன்னும் வீட்டுக்கு வரலை...”


“சார் உங்களை பார்க்க, லாயர் ரஹ்மான் வந்திருக்காங்க... உள்ள அனுப்பட்டும்மா சார்.” அவரின் பி,ஏ கேட்க.


“ம்ம்… வரச்சொல்லுங்க.”


“கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் ரஹ்மான். ‘வணக்கம் சார் நான் உங்களை பார்க்கனும் சொன்னது.’ அவன் ஆரம்பிக்க.


“என் பொண்ணுக்காக... சரியா தம்பி...” அவன் எதை கூற வந்தானோ அதையே அவர் சரியாக சொல்ல.


“ஆமா சார்... நானும் பாரதியும் காதலிக்கிறோம்...” அவன் அடுத்து சொல்ல வருவதைகூட கேட்க்காமல்.


“என் பொண்ணுக்கும், என் நண்பரின் மகனுக்கு இன்னும் ரெண்டு நாளுல நிச்சயம் நடக்க போகுது. அதுனால உங்க காதல் கதையை இதோட விட்டுருங்க தம்பி. என் பொண்ணுக்கு நான் பார்க்குற பையன் தான் கணவனா இருக்கனும்.”


“ஓ... அப்படியா... சரி அப்போ நாம அந்த நிச்சயதார்த்தம் பங்ஷன்ல மீட் பண்ணலாம் மாமனாரே... நான் வரேன்.”


“அவரிடம் எப்படியாவது எடுத்து சொல்லி, தங்கள் காதலை புரியவைக்க நினைத்தவனுக்கு. அவரின் பெண்ணின் மேல் இருக்கும் அதிக பாசத்தால் அவனை ஒரு பொருடாய் மதிக்காமல் பேசியது அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதனால் தான் திமிராக பேசிவிட்டு வந்தான். இது மட்டும் அவளுக்கு தெரிந்தது அவனை போட்டு படுத்திவிடுவாள், இது வேறு கதை.”


“இருவரின் காதலும் ஒற்றுமை, தான் அவர்கள் பிரிந்திருந்தாலும் சேர்ந்திருந்தாலும். அவள் காதல் இல்லாமல் அவன் இல்லை, அவன் காதல் இல்லாமல் அவள் இல்லை”.


“ஏம்மா ஐய்யா என் காதலுக்கு சம்மதிக்கலை... அவருக்கு ஏதாவது காதல் தோல்வியா?? இல்லை... வேற எதாவது காரணமா” தனது இரு அன்னையிடம் அவள் கேட்க.


“இப்படி எல்லாம் பேசகூடது அனு..., என்ன காரணம் நீ அவருக்கிட்ட கேட்க வேண்டியது தானே.”பார்வதி சொல்லினார்.


“நான் கேட்ட ஐய்யா சொல்லுவாங்களா...”


“தெரியலையே...” யமுனா கூற.


“நீங்க ரெண்டு பேரும் அவருக்கு தான் சப்போர்ட்... என்மேல கொஞ்சம் கூட பாசம் இல்லை... போங்க... நான் போறேன்.”


“அப்பா இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்திருவாங்க... நீ சாப்பிட்டா தான் அவரு சப்பிடுவாரு... பிளீஸ் அனு... கோபம் படாம அவர்கூட சேர்ந்து சாப்பிட்டு போ.” யமுனா கெஞ்சினால்.


“சரி ம்மா...”


“வாசலில் கார் நிற்க்கு ஓசை கேட்டதும், டைனிங் ஹாலுக்கு சென்றுவிட்டார் யமுனா. சிவபாலன் உள்ளே நுழைந்ததும் அவர் பார்வையில் விழுந்தது பார்வதியும், அவரின் மடியில் தலை வைத்து படுத்திருக்கும் அவரின் மகளும் தான்.”


“எப்போ வந்த பார்வதி...” கேட்டுக்கொண்டே அவரின் அருகில் அமர்ந்தார்.


“இன்னைக்கு காலையில தான்... அனுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கீங்களாமே...”


“ஆமாம்... சாரி பாரு உன்கிட்ட சொல்ல முடியலை...”


“இருக்கட்டும் ஆனா... இந்த கல்யாணம் நம்ம பொண்ணுக்கு பிடிக்கலை அது உங்களுக்கு தெரியுமா.”


“தெரியும்... என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டா...”


“அதுக்காக, உங்க ஆசைக்கு அவளுக்கு பிடிக்காத கல்யாணமா?”


“ம்மா... விடுங்க..., ஐய்யா வாங்க சாப்பிடலாம்... நானும் இன்னும் சாப்பிடலை...” அவர்களின் பேச்சுக்கு முற்று புள்ளி வைத்து அவர்களை டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்றால்.


“மகளுக்கும், கணவனுக்கு உணவு பரிமாறி்னார் யமுனா. அப்பொழுது சிவபாலன் அனுவிடம் ‘ நாளைக்கு நீ ஃப்ரீ தான அனு...”


“ஸ்கூல் போனா தான் தெரியும் ஐயா... ஏன் கேக்குறேங்க.”


“ என்கேஜ்மெண்ட்க்கு ட்ரெஸ் எடுக்கனும்... நாளைக்கு எடுக்க போகனும்” அவர் சொல்ல.


“உங்க இஷ்டம் ஐயா... ஆனா நான் வருவேனு எதிர்ப்பார்க்காதீங்க.”


“இப்படி சொன்னா என்ன அர்த்தம் அனு.”


“நான் என்ன சொல்லுவேனு உங்களுக்கு தெரியாதா? ஐயா.”


“அவரோ... அமைதியாக இருந்தார்.”


“என்னை மன்னிச்சுருங்க ஐயா... நேத்து உங்ககிட்ட அப்படி பேசியிருக்க கூடாது. சாரி ஐயா.” அவள் மன்னிப்பு கேட்டுவிட்டு சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றால்.


“இன்னும் உங்க பிடிவாதம் போகலையா?, அவளுக்கு விருப்பம் இல்லைங்க...”


“ஆனா, என் பொண்ணு காதலிக்குற பையனை எனக்கு பிடிக்கலையே பாரு...”


“அது தான் ஏன்...”


“ஏற்கனவே உன்கிட்ட சொல்லிருக்கேன்... இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேக்காத பாரு. நான் பார்த்த மாப்பிள்ளைக்கும், என் பொண்ணுக்கும் தான் கல்யாணம்.”


“நீங்க அவ மனசை கஷ்டப்படுத்துறேங்க.”


“ என் பொண்ணு மனசை நான் கஷ்ட்டப்படுத்துவேனா பாரு.”


“அப்போ அவளுக்கு காதலிச்சவன கல்யாணம் பண்ணி வைக்கலாமே ஏன் இந்த பிடிவாதாம்.”


“ஆமாம், பிடிவாதம் தான்... யார் என்ன சொன்னாலும், என் மகளுக்கு நான் பார்த்த மாப்பிள்ளையோட தான் கல்யாணம்.” பார்வதியோட சண்டை போட்டுவிட்டு வெளியே கிளம்பிவிட்டார்.


“அனுவோ, தன் காதலனோடு சேர்ந்து எடுத்த புகைபடத்தையும், அவனோடு இருந்த நாட்களையும், இறுதியாக அவனிடம் சண்டை போட்டுவிட்டு பிரிந்த நிமிடத்தையும் நினைத்துப்பார்த்தால்.”

அவள் வருவாளா???
 
Cமிகவும் அருமையான பதிவு,
இலக்கிகார்த்தி டியர்
 
Last edited:
Top