Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Comments

Advertisement

Rubyjosy

Active member
Member
மழைவாழ் மக்களின் முன்னேற்றம் , அடிப்படை வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கும் ஒரு அண்ணன் தம்பி அண்ட் அவர்களின் மனம் கவர்ந்த மங்கைகளின் கதை... ரொம்ப அழகா இதமான காதலோடு கொடுத்து இருக்காங்க... கிராம வாழ்வு, நகர வாழ்வு, மலை வாழ்வு என எல்லாம் கலந்த கலவை... மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், வேலை, திறமைகள், கட்டுப்பாடுகள் என தேவையான இடங்களில் தேவையான அளவு கொடுத்தது ரசிக்கும் படி இருக்கு...

வெற்றி???? எனக்கு இந்த கதையில் பிடித்தது இவனை தான் முதலில்... இரட்டைய ரில் ஒருவன் ஆனால் தாய் பாசமோ தாய்ப்பாலோ அக்கறையோ அன்பு எதுவும் கிடைக்காத ஜீவன்... என்ன காரணம் கதையில் தெரிஞ்சுக்கோங்க... அதற்கு பதில் ஆச்சியின் பாசமும், தங்கையின் அன்பும், அத்தைகளின் சீராட்டலும் என நிறைவாக தான் இருக்கான்... எந்த நிலையிலும் தாயை குறை சொல்லலை... மன்னிக்க கூட செய்யிறான்... ரொம்ப நல்ல மனசுடா உனக்கு எனக்கு எல்லாம் இப்படி மனசு வராது... உன் அம்மா மேல எனக்கு இருக்க கோபம் கூட உனக்கு இல்லை...

இவனின் இரட்டை புகழின் திருமணம் அவின் மாமா பெண்ணுடன் நிச்சயிக்க பட திருமண நாளில் அவன் காணாமல் போக வெற்றி திடீர் மாப்பிள்ளை ஆகிறான்... அவனின் தாய்க்கு பிடிக்கலை, காணாமல் போன மகனை பற்றி தான் கவலை... ஆனால் இவங்க திருமணம் நடந்து அவர் விலகி இருந்தாலும், பிடிக்காது இருந்தாலும் மங்கை இவனின் மனைவி இவனை தள்ளி நிறுத்தலை... அவன் தாயின் வளர்ப்பு தான் ஆனால் தங்கம் போல இருக்கா... படிப்பு தான் பிள்ளைக்கு எட்டிக்காய் ஆனாலும் எப்படியோ டாக்டர் ஆகிட்டா...

காணாம போன புகழை நினைத்து மங்கை n குடும்பம் எல்லாம் கவலையில் இருக்க அவனோ ஒரு காட்டில் விபத்து நடந்து கண் முழிக்க முடியா நிலையில் அங்குள்ளவர்களால் காப்பாற்றப்பட்டு இருக்கும் நிலையில் கன் முழித்ததும் உதவி செய்யும் பெண்ணின் அழகில் அக்கறையில் விழுந்து சைட் அடிக்கிறான்(காலக் கொடுமை)... அவள் அவள் ஊரின் கட்டுப்பாடு கண்டு ஒதுங்கி போக அவன் அவளை நெருங்கி நினைத்து சீக்கிரம் குணமாக வேண்டும் என முயன்று சிறிது சரியாகி சிட்டிக்கு போறான்... அங்கு அவனின் அண்ணன் வெற்றி n மங்கை உதவியால் அவன் காதலை சொல்ல அதற்கு காட்டு ராணி(புகழ் சைட்) தாத்தா விதிக்கும் கட்டளைகளை நிறைவேற்ற கணவன் மனைவி ரெண்டு பெரும் போறாங்க(ஹனி மூன் க்கு போறான்)..

அந்த மலைக் கிராம மனிதர் ஏன் அப்படி அவர்களிடம் சொன்னார், என்ன சொன்னார் எல்லாம் கதையில் படிங்க... அதன்படி அந்த கிராமத்துக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கும் அதே நேரம் அங்கு உள்ள மக்களின் கை வினைபொருள் செய்யும் திறன் அறிந்து அதையும் ஊக்குவித்து வாங்கி விற்று அவர்கள் வருமானத்துக்கு வழி செய்யுறாம்..

அரை டாக்டர் மங்கை கூட நிறைய பண்றா பா அவள் தோழிகள் உடன்... அப்படியே காட்டு ராணி கூட நல்லா பழகுறாங்க.. அவளின் பிடித்தமும் அதை தாண்டிய ஒதுக்கமும் எப்படி சரி பண்றாங்க...

இதெல்லாம் நல்லா போக அங்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து, அவர்களின் சிட்டி மக்கள் மீதான வெறுப்பு புரிந்து அதற்கு எடுக்கும் நடவடிக்கையால் காட்டு ராணி க்கு வரும் ஆபத்தால் அவள் நிர்கதியாகும் நிலை வர அவளின் தாத்தா எடுக்கும் முடிவு சூப்பர்... புகழுக்கு அவன் காட்டு ராணி கிடைக்க அதுவே காரணம்..

மலை வாழ் மக்களும் மனிதர்கள் தான் என எப்போதான் சில மிருகங்கள் புரிந்து கொள்ள போகுதோ தெரியலை.. அவர்களின் கடந்தகாலம் கேட்க கண்ணில் நீர் கோர்த்து விட்டது அக்கா???

அந்த கட்டிடங்களை திறந்து அவர்களுக்கு உதவிகள் செய்து எப்படி அதை எல்லாம் சாப்தித்தான் என்பதை அழகா சொல்லி இருக்காங்க...

மணி????? குட்டி புயல்.. வெற்றியின் பாசமிகு தங்கை... தாய் வெறுத்த அண்ணனை பாசத்தால் குளிப்பாட்டி எதற்கும் அவனை நாடி அவனை முன்னிறுத்தும் சேட்டைக்காரி.. இவளுக்கான ஜோடியா திரு கொஞ்சமா வந்தாலும் நிறைவாக இருக்கு(என்ன ரெண்டு பேருக்கும் இன்னும் காதல் வரலை)

ஆச்சி????? இவர் ரொம்ப பிடிச்சது... மருமகள் மீது அவ்வளவு தவறு இருந்தும் எங்கும் விட்டு கொடுக்கலை.. சண்டை போடலை.. கடைசியில் அவள் திருந்தியதாய் சொல்லிய சில வார்த்தைக்கு அவளை அப்படி பார்க்கிறாங்க...

வனிதா அவ்வளவு தவறுகள் செய்த அவர் கடைசியில் திருந்தி விட்டேன், பாசம் வந்து விட்டது என வெற்றியின் மன்னிப்பு கேட்டு இருந்தாலும் எனக்கு பிடிக்கவே இல்லை... பாசம் என்பதை விட அதிகாரம் தான் எனக்கு அதிகமா தெரியுது... தான் தவறு செய்து இருக்கோம் அவனிடம் கேட்கும் மன்னிப்பு மட்டும் போதாது என புரியாமல் மன்னிப்பு கேட்டதும் அவர் எல்லாவற்றையும் அவர் செயலிலே செய்வது, கிண்டல் பண்ணுவது எல்லாம் ரொம்ப ஓவர்... திருந்தியது எல்லாம் எனக்கு கண்ணுக்கு த்ரியலை.. அப்படி ஒன்னும் தெரியாம அவர் தவறு செய்யலை... அவரால் அவரின் தந்தைக்கும் கூட தலை குனிவு... யாரும் எதுவும் சொல்லலை என்றாலும் மங்கை அவரிடம் கேட்டது சரி... அவள் கூட அதை அவள் அத்தையிடம் கேட்கலை.. தூக்கி வளர்த்த பாசம்...

பாலன் எனக்கு இவரையும் கூட பிடிக்கலை... தவறு செய்த மனைவியை புகழ் நியாயமா கேட்ட கேள்வி கூட பிடிக்காம திட்டிய அவர், மனைவியை மத்தித்த அவர் அவள் தவறு செய்யும் போது ஆதரவு தந்தார்... வெற்றியை பற்றி நினைக்கவே இல்லை இருவரும்.. இன்று அவன் உழைப்பில் பெருமை பட மட்டும் என்ன உரிமை இருக்கு... அவன் பெருந்தன்மையை இருந்தாலும் இவங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லை... சகஜமா இருக்காங்க... யார் ஏத்துக்கிட்டாலும் என்னால ஏத்திக்க முடியலை.. இப்படியும் நாட்டில் பலர் உண்டு அதை சூப்பரா சொல்லிட்டீங்க...

வனிதா மேடம் பிறந்து ஆறு மணி நாளில் கிடைக்காத தாய் பால், எப்படி ஆறு வயதில் ருசிக்காதோ அப்படிதான் மழலையில் கிடைக்காதா தாய்ப்பாசம் முப்பது வயதில் கிடைத்தால் கொண்டாட தோணாது.. உங்கள் எதிர்பார்ப்பு அவன் அமைதியா போனாலும் நீங்க நல்லா தாய் இல்லை... பாலன் சார் நீங்க மனைவியை சமாதான படுத்த சொன்னாலும், என்ன தாங்கினாலும் நீங்க வெற்றிக்கு நல்ல பெற்றோர் இல்லை... அதை அவன் அமைதியாக கடப்பதால் உங்களுக்கு புரியலை, உறுத்தலை... உங்க ரெண்டு பேரையும் எனக்கு பிடிக்கலை..

புகழ் நல்ல சகோதரன், நண்பன், கணவன் நீயாவது இன்னும் கொஞ்சம் உங்க அம்மாவை கேள்வி கேட்டு இருக்கலாம்.. அழுததும் அப்பா சொன்னதும் நிறுத்தி இருக்க கூடாது.. சின்னதில் அப்படிதானே வெற்றி அழுது இருப்பான்.... பட் நீ ஒரு நல்ல சகோதரன்.

அக்கா நல்ல கதை அக்கா... அண்ணன், தம்பி பாசம்தான் அடிப்படை... அவர்களின் நல்ல எண்ணம், தர்மம் செய்ய விளையும் பாங்கு எல்லாம் சூப்பர் அக்கா... மணி my fav character அக்கா...

வெற்றி பெற வாழ்த்துகள் அக்கா????
 
Haiii Ruby maa.. :love: :love:
enna sollanum theriyala... ???neraiya neraiya happi akka..
romba santhosama irukku intha comment parthuttu???.. kathai eluthi mudikkum podhu kooda ippadi reach akumnnu thonala.. Thank u so much kuttimm?????a..
 
Haiii Ruby maa.. :love: :love:
enna sollanum theriyala... ???neraiya neraiya happi akka..
romba santhosama irukku intha comment parthuttu???.. kathai eluthi mudikkum podhu kooda ippadi reach akumnnu thonala.. Thank u so much kuttimm?????a..
கண்டிப்பா நல்ல reach ஆகும்
 
Top