Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Chapter 1.2 TTV

Advertisement

Krishnanthamira

Well-known member
Member
“அம்மா, கண்ணனுக்கு ரெண்டு அம்மா இருக்காங்கள்ள! அதே மாதிரி எனக்கும் வேணும்”
“ரெண்டு அம்மா வேணுமா என் செல்லத்துக்கு? ஏன் இந்த அம்மா மட்டும்போதாதா” என்று அவள் தாடையைப் பிடித்து கொஞ்சினாள் பார்வதி.
தீவிரமாக நாடியில் கை வைத்து யோசித்து, “ரெண்டு இருந்தா தான அதுல எது பெருசுன்னு சொல்ல முடியும்?”
“ஆஹான்.இந்த பெரிய பேச்சு எல்லாம் எங்க இருந்து படிச்சீங்க அபிக்குட்டி ?”
“சொல்ல கூடாது அது ரகசியம்” என்றபடியே அம்மா மடியில் புரண்டு படுத்தாள் அபி.
“இன்னொரு ரகசியம் அம்மா சொல்லவா உனக்கு சீக்கிரமே அம்மா இன்னொரு அம்மா கொண்டு வருவேணாம். ஆனா என் பட்டு சமத்தா இருக்கணும். அந்த அம்மா கிட்ட இந்த அம்மா வேணும்னு கேக்க கூடாது சரியா”
“முடியாது எனக்கு ரெண்டு அம்மாவும் வேணும். எப்போவும் என்கூடவே இருக்கணும்.”
“என் பட்டு இல்ல அம்மா சொன்னா கேப்பேன் சொல்லுவ. இப்ப இந்த சின்ன விஷயம் கூட கேக்க மாட்டேன்கிற..”
மகளுக்கு பதிலாக அழுகையே வந்தது அம்மா இல்லாமல் எப்படி இருக்க முடியும். அதுவும் இவளுக்கு அம்மா தான் எல்லாம். அப்பா பாசமானவர் தான். ஆனால் அவர் அம்மா கிடையாதே. அம்மா ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாள். தான் இரண்டு அம்மா வேண்டும் என்று கேட்டதால் தானா. அத்தை வீட்டில் விந்தியா கேட்டதிற்கு அத்தையும் மாமாவும் பரிசு தானே வாங்கி தந்ததாய் கூறினாள். நம் அம்மா மட்டும் ஏன் இப்படி செய்ய வேண்டும்.
மகள் அழுகை கண்டு பார்வதி கண்கள் நீர் கோர்த்தன. அவருக்கு மட்டும் என்ன வேண்டுதலா. ஆசையாய் பெற்ற மகள் அன்பான கணவன் விட்டு செல்ல வேணும் என. இந்த பாழாய் போன நோய் அல்லவா இதற்கு காரணம் அவரும் முயன்ற வரை முயற்சி செய்கிறார் அவர் இந்த நோயிடம் தோற்று விட கூடாதென. செய்யாத வேண்டுதல் இல்லை கடை பிடிக்காத கைவைத்தியம் இல்லை. கேட்கவில்லையே உடம்பும் அவர் பேச்சு கேட்கவில்லை. கடவுளும் இவர் வேண்டுகோளுக்கு செவி மடுக்கவில்லை. இப்போது அவர் பெற்றதும் அவளை கட்டியவரும் கேட்பதாயில்லை.
இவள் பேசுவதை உள்அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த சண்முகவேல் மனதில் ஒன்று தான் ஓடியது. என் அன்னை போல் இருக்கிறாள் இருக்கிறாள் என்று சொல்லியே அவரை போல் இவளும் பாதியிலே என்னை விட்டு செல்ல தயாராகி விட்டாளே.
மனிதனுக்கு இந்த நோய் பற்றி தெரிய வந்தது முதல் முகம் இருளடைந்து தான் சுற்றுகிறார். அவரது புலன்கள் செயல்பட்டாலும் பார்வதி இல்லாமல் செயல்படுமா என்ற ஐயம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது.
சண்முகவேல் கல்யாணம் என்று ஒன்று இருப்பது தெரியவந்தது முதல் எந்த மாதிரி ஒரு பெண் தன் வீட்டிற்கு வர வேண்டும் என்று நினைத்தாரோ அதே போல் தான் இத்தனை நாள் பார்வதி நடந்து கொண்டதும் செயல்பட்டதும்.

அவர் அம்மா இறந்த பின் அவரின் குடும்பம் ஒரு சிதறிய தேங்காயை போல் ஆகியது. அதை எடுத்து செல்ல ஆயிரம் பேர் இருப்பது போல் அவரின் குடும்ப உறுப்பினர்களும் அவரவர் துணையோடு சென்று விட்டனர். அவர்களை எல்லாம் ஒன்றுபடுத்தியது பார்வதியின் வருகை. இவர் கல்யாணத்தை எடுத்து செய்ய கூட ஆள் இன்றி தவித்ததை சரியாக இனம் கண்டு கரை சேர்த்தவள் அவள். அவள் அவரின் வாழ்வில் வந்த தேவதை. தேவதைகள் சிலகாலம் மனிதரோடு கலந்து வாழ்ந்து விண்ணுலகம் திரும்பும் என்று கூறும் கதைகள் போல் அவளும் செல்ல போகிறாளா?
அவள் உடல்நிலை அவரின் மனதை போட்டு அரிக்கிறது ஒரு பக்கம் என்றால் இவளின் கல்யாண கோரிக்கை இவரை உயிரோடு கொள்கிறது. இது ஏன் இப்படி இவரின் வாழ்வில் என்று அவர் நினைத்து பல காலம் ஆகிவிட்டது. ஆனால் அனலாய் அவர் மனதில் எரிகின்றது இந்த வாழ்கையின் சூனியங்கள். கர்மா என்ற ஒன்று இருப்பின் அது இந்நேரம் அவர் மனைவியை மீட்டு அல்லவா குடுத்து இருக்க வேண்டும். ஆனால் ஏன் அவரின் தான தர்மங்கள் அவர் மனைவியின் உயிர் காக்க போதவில்லையா. ஏதாவது ஒரு மருத்துவர் குணப்படுத்த பத்து சதவீதம் வாய்ப்பு இருக்கு என்று கூறி விட்டாலும் அவர் வீடு வாய்கால் விற்று காப்பாற்றி விடுவார். கடவுள் போல் மருத்துவரும் கை விரித்து விட்டானே.




“சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன் ...
உனைப் பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்.
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்”
 
Feeling bad for this beautiful family. Hope some miracle happens. Waiting for the connections between paarvathi & daljeet family (from previous epi) to unfold. Your words bring apt emotions. Keep rocking dear :)
 
Feeling bad for this beautiful family. Hope some miracle happens. Waiting for the connections between paarvathi & daljeet family (from previous epi) to unfold. Your words bring apt emotions. Keep rocking dear :)
Thank you so much ka..?? Such unfortunate events when heard or experienced leaves a deep wound in our hearts.
 
நல்ல நடை, எதிர்பார்ப்பை தூண்டுகிற எழுத்து. ஆனால் இப்படி டீசர் மாதிரி குட்டியாக இருந்தால் எப்படி மா ?

சீக்கிரமே பெரிய எபியுடன் வரணும் ! :D
 
மிகவும் அருமையான பதிவு,
கிருஷ்ணன்தாமிரா டியர்
ஆனால் ரொம்பவே சின்ன அப்டேட்டா இருக்கே
கொஞ்சம் பெரிய அப்டேட்டா கொடுங்கப்பா
 
Top