Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

aththiyaayam--18

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-18
தஞ்சாவூரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள,ஒரு ஹோட்டலின் மினி ஹாலில் வைத்து,ரவிவர்மன்-தாமரை,துருவன் –நந்தினி இரண்டு ஜோடிகளுக்கும்,திருமண நிச்சயதார்த்த விழா,,,,இரு வீட்டாரும்,பொறுப்பு,பணம் இரண்டையும் பகிர்ந்து செய்வதென முடிவாயிற்று.

..தங்களது பிள்ளைகளுக்கு,ஒரே குடும்பத்தில் இருந்து மணமக்கள் கிடைத்ததில்,ராகவேந்த்ரா மற்றும் தினகரன் வீட்டினருக்கு மிகுந்த மனநிறைவு....தினகரன் மனைவி லோகாவிடம் இது குறித்து ஏகப்பட்ட விசாரணைகள்....
‘’டீ,,,லோகா....நாட்டுல பொண்ணுக கிடைக்கிறதே டிமாண்டாயிடுத்தே...நீ உன்னோட ரெண்டு பிள்ளைகளுக்கும்,பொண்ணுகளை பிடிச்சுட்டே....கெட்டிக்காரிதான்...’’

‘’பொண்ணாத்துல,அக்காவை உக்கார வச்சிட்டு,தங்கையை கட்டிக் குடுக்க,கொஞ்சம் சங்கடப்பட்டா...பார்த்தேன்....எங்க ரெண்டாவது பிள்ளை துருவனுக்கு குடுத்துடுங்கோன்னு சொல்லிட்டேன்...ரவியைபோல அவனுக்கும் ஐ.டி.கம்பெனி வேலை...அவனுக்கும் வீடு கட்ட இடம் வாங்கிப் போட்டு இருக்கேன்..என்ன குறை? அதான் உங்க ரெண்டு பொண்ணுகளும் எங்க வீட்டுக்கே வந்துடட்டும்...அனுப்பி வச்சிடுங்கோ....தங்கமா பார்த்துக்கறேன் ன்னு சொன்னோம்...அவாத்துலயும் சம்மதம் சொல்லிட்டா...’’
‘’ஏன் சரி சொல்ல மாட்டா...கசக்குமா என்ன....உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்.லோகா..’’

‘’ஆமா....முடிவு பண்ணினோம்,,,இதோ நடந்துண்டிருக்கு...அவன் முடிச்சை போட்டுட்டான் ,,நாம யாரு முன்ன தள்ள...பின்ன தள்ள...’’
இது இப்படியென்றால்,பெண் வீட்டில் வேறு மாதிரியான விசாரணை...
‘’அண்ணா...சுலபமா வேலையை முடிச்சிட்டேள்’’
‘’என்ன சொல்றேள்?’’
‘’இல்ல...ஒரே பிரயாணத்துல,ரெண்டு பொண்ணுகளையும் .பார்த்துட்டு வந்துடலாம்...ஆளுக்கொரு திசையா அலைய வேண்டாம் இல்லியா..’’

‘’ஆமா....ஒண்ணா வளர்ந்த பிள்ளைகள்...ஒரே வீட்டுக்கு மருமகள்களா போறது குடுப்பினை..என் தம்பி மனசு அப்பிடி...’’

இப்பிடியாக பெற்றோர்கள் பெருமை பேசிக்கொண்டிருந்தாலும்,தாமரையிடம் இருந்த முக மலர்ச்சி,நந்தினியிடம் இல்லை...மூத்தவளான தனக்கு பின்வரிசைப் ,பந்தியில்,இடம் போடப்பட்டது போல் உணர்ந்தாள்..துருவனிடமோ,அந்தகுடும்பத்திடமோ,கண்டுபிடித்து சொல்வதற்கு பெரிதாக அல்ல,சிறிதாகக் கூட,
குறையேதுமில்லை என்பதால் நந்தினி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாள்..

‘’டீ,,,நந்தினி முகத்தை கொஞ்சம் சிரிச்சா மாதிரிதான் வையேண்டி’’ என்று சொன்ன தாய் விஜயாவிற்கும்,அதே முறைப்புதான் பதிலாயிற்று...தாமரைக்கு மனமார்ந்த மகிழ்ச்சி என்றால்,அவள் அம்மா சரஸ்வதிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி...இருக்காதா பின்னே.

..இப்படி ஒரு நாளுக்காக,காலமெல்லாம் காத்திருந்தாளே...அவளுக்கு இது கடமை அல்ல...கனவு...ஆகவே,கால் தரையில் பாவாமல் பம்பரமாய் சுற்றி வந்தாள்...தாமரைக்கு சட்டென்று,சிறப்பான இடம் அமைந்தாலும்,நந்தினியின் விஷயம் ஒரு நெருடலாகவே இருந்தது..நந்தினிக்கும் அதே வீட்டில் மாப்பிள்ளை அமையவும்,அதுவும் தீர்ந்தது...அப்பாடா!இனி நந்தினி தாமரையை நினைத்து மனதுக்குள் பொரும மாட்டாள் என்ற நிம்மதி..முழுமையான சந்தோஷம் கிடைத்தது

...இரண்டு ஜோடிகளுக்கும் ஒரே மாதிரி உடை,நகை,மாலை ,அலங்காரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...அது வந்திருந்த விருந்தினார்க்கு,கண்டு களிக்க,இனிய காட்சியாக அமைந்தது..பொதுவாக திருமண விழாக்களே கண்ணுக்கும்,கருத்துக்கும்,கூடவே வயிற்றுக்கும் விருந்தளிக்கும் நிகழ்வுதானே...!

தாமரைக்கு அப்பா இல்லையென்பதால்,ராகவேந்த்ரா-விஜயா ஜோடியே ,இரு பெண்களுக்கும் பெற்றவர்கள் ஸ்தானத்தில் இருந்து,மங்கள காரியங்களை செய்தனர்..
தட்டு மாற்றியாயிற்று...தாமரை,நந்தினி இருவருக்கும் இலைப்பச்சை நிறத்தில் நிச்சயதார்த்த புடவை....இருவரும் அணிந்து கொண்டு வந்தார்கள்..
..லோகா இரு மருமகள்களுக்கும்,நெக்லஸ் அணிவித்தாள்...ராகவேந்த்ரா மருமகன்கள் இருவருக்கும்,பிரேஸ்லெட் போட்டு விட்டு,இருவரையும் ஆனந்தக் கண்ணீருடன் கட்டி அணைத்தார்....பெற்றவர்கள்,பெரியவர்கள் ஆசீர்வதித்து முடித்ததும்,விருந்தினர்கள் ஆசீர்வாதம் செய்தனர்,,,,அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது...

‘’மாலை சூடும் மண நாள்..இள
மங்கையின் வாழ்வில் திருநாள்...
சுகமேவிடும் காதலின் எல்லை...
வேறொரு திருநாள் இனி இல்லை...
மங்கலக் குங்குமம் போதும்..
சிறு மலரும் மணமும் போதும்..
.பொங்கிடும் புன்னகை போதும்...மனம்
புது மணத் திருநாள் காணும்’’
மனங்கள் பாடிய சந்தோசப்பாட்டு சத்தியமாகுமா....?காலம்தான் பதில் சொல்ல வேண்டும்...








 
என்னப்பா இது?
அக்காளுக்கு தம்பி புருஷன்
தங்கச்சிக்கு அண்ணன் புருஷனா?
அக்காவின் கணவர் தங்கையை எப்படி அண்ணின்னு கூப்பிடுவது?
ஒரே குழப்பமா இருக்கே
 
Top