Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

7. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
திரு எப்படி இறந்தான் என்று சுமதி கேட்க, தனாவும் காரணத்தை கூறினான்.

அப்போ அந்த பணம் நம்ம வீட்டுல இருந்து வந்தது தானா என வினவியவள், அப்போ பணம் இங்க எந்த ரூம்ல இருக்கு.

என்னோட ரூம் தான் அக்கா.

போச்சு போச்சு.... அப்போ அவ தான். அவ தான். நம்ம அந்த ரகசியத்தை சொல்லலாமா வேணாமா என பல தடவை மனதினில் யோசித்து, ஆனா இது உயிருக்கே ஆபத்தை உண்டாக்க இருக்குதே என எண்ணியவள்,

தனா அப்போ அடுத்து அந்த உருவம் பலின்னு சொன்னது நம்ம செல்விய தான்டா...

என்னக்கா சொல்லுற,

ஆமாண்டா....

இதை நான் இதுவரைக்கும் யார்கிட்டேயும் சொல்வே இல்லை. ஆனா இப்போ அது இவ்வளவு தூரம் வந்து நிக்கும்னு எனக்கு தெரியாதுடா.

மாமா இறந்து போனதுக்கு முதல் நாள் செல்வியும் அவரும் ரொம்ப தீவிரமா பேசி சண்டை போட்டுட்டு இருந்தாங்க. திடீர்னு உங்க மாமா ரூம்க்கு வந்து கை நெறய பணத்தை கொண்டு போய் செல்விக் கிட்ட கொடுத்து, இனியும் அதே எண்ணத்தோட இருக்காத. நான் பண்ணதே ரொம்ப ரொம்ப தப்பு. அதே தப்பை நீ ஒரு போதும் செய்யவேக் கூடாது அப்பிடின்னு சொன்னாரு.

நான் ஏதுங்க இவ்வளவு பணம்னு கேட்டதுக்கு, அது ஒன்னும் இல்ல சீட்டு பணம். அவ கேட்டா நான் குடுத்திருக்கேன்னு சொன்னார். ஆனா அவரு எந்த சீட்டும் போடவே இல்லடா.

எங்க திரும்பவும் ஏதாவது கேட்டா சண்டை வந்துரும்னு நான் அடுத்து எதுவும் கேட்கல. அடுத்தநாள் காலையில உங்க மாமாவே இல்ல. ஒரேதா என்னவிட்டு போய்ட்டார்.

ஆனா எப்பிடிக்கா செல்வி தான்னு சொல்லுற. அவ பணத்தை வாங்க மட்டும் தானே செஞ்சிருக்காங்க.

ம்ம்கூம். இன்னிக்கி காலைல செல்வி இங்க வந்தா.

என்ன???

ம்ம் ஆமா செல்வி இங்க வந்தா. வந்தவ யார்கிட்டேயும் சொல்லல. தற்செயலா நான் வெளிய வர்றேன், அவ மேல இருந்து இறங்கி வந்தாடா. என்னன்னு கேட்டதுக்கு இது எங்க அத்தை வீடு, எங்க அத்தை வீட்டுக்கு வரதுக்கு உன்கிட்டயெல்லாம் சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லையின்னு சொன்னா. மேலே இருந்து வந்தவ பசங்களை கூட பாக்கலடா, அப்படியே போய்ட்டா.

நான் நினச்சது சரின்னா அப்போ அடுத்தது அவ தான்டா.

அவங்க எண்ணம் பணம் மட்டும் தான் போலக்கா. ப்ச் வெறும் பணத்தை மட்டும் எடுத்திருந்தா ஒன்னும் இல்லக்கா. ஆனாலும் கொஞ்சம் சந்தேகமா தான் இருக்கு. ஏன்னா அந்த உருவம் ஏதாவது பண்ணி இருந்தா இழப்பு நமக்கு தான்.

இருந்தாலும் இதுவரை அது பலியெடுத்த எல்லாருமே ஆம்பளங்க தான். அதனால தான் எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலக்கா.
தாத்தா நீங்க என்ன சொல்லுறீங்க. சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க தாத்தா.

வேற வழியில்ல தனா, இங்க நின்னு பேசுறதுக்கு இப்போவே அவங்களை வீட்டுல போய் பார்த்திட்டு வந்திடலாம் வா தனா.

சரி தாத்தா வாங்க போகலாம். அக்கா நீ பத்திரமா இரு எந்த காரணத்தை கொண்டும் மாடிக்கு மட்டும் போகாத. முடிஞ்ச அளவுக்கு ரூம்லயே இரு. எல்லாரும் பத்திரம். பாத்துக்கோ அக்கா.

ம்ம் சரி தனா.

தனாவும் சித்தன் ஐயாவும் வண்டியில் ஏறிக்கொள்ள இரண்டு தெரு தள்ளி இருந்த வேலனின் வீட்டிற்கு இரண்டே நிமிடத்தில் வந்து விட்டனர்.

கதவை தட்டிவிட்டு இருவரும் காத்திருக்க, தூக்கத்துடன் வேலன் தான் வந்து கதவை திறந்தார்.

என்ன தனா இந்த நேரத்தில.

உள்ள வாங்க மாமா. எல்லாத்தையும் சொல்லுறேன்.

இப்போ சொல்லு தனா. மாமா அதுக்கு முன்னே நான் செல்வி அண்ணிய பார்க்கணும். சீக்கிரம் வாங்க மாமா. தாத்தா நீங்களும் வாங்க.

எதுக்கென்று தெரியாவிட்டாலும், அவர்களின் அவசரம் அவரையும் தொற்றிக் கொள்ள, விறுவிறுவென செல்வியின் அறையை தட்டினார் வேலன்.

மூன்று நான்கு முறை தட்டிக் கொண்டிருக்க, நேரம் ஆக ஆக தனாவிற்கு தான் பயம் அதிகமானது. சித்தன் ஏதேதோ வேண்டிக் கொண்டே நின்றிருந்தார். செல்வி செல்வி கதவை திற, செல்வி, செல்வி என வேலன் தட்டிக் கொண்டே இருக்க, மெதுவாக தூக்கத்திலிருந்து விழித்த செல்வி, கதவை திறந்தாள்.

என்னப்பா ஏன் இப்பிடி ராத்திரியில கதவை தட்டிட்டு இருக்க.

உங்களுக்கு ஒன்னும் இல்லையே அண்ணி. தனா கேட்க,

மொத்த தூக்கமும் கலைந்து இவன் எதுக்கு இந்நேரத்துக்கு நம்ம வீட்டுக்கு வந்தான். ஒரு வேளை நாம பணத்தை எடுத்தது தெரிஞ்சு போச்சோ. ஐயயோ என மனதில் யோசித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல்,

ஏன் எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன். உங்களுக்கு தான் என்னவோ ஆச்சு போல, நட்டநடு ராத்திரியில வந்து இப்பிடி கதவை தட்டிட்டு இருக்கீங்க. முதல்ல போங்க எல்லாரும் எனக்கு தூக்கம் வருது. என எங்கே இன்னும் கொஞ்சம் நேரம் நின்றாலும் ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று இடைவெளி விடாமல் பேசியவள், மூவரும் நின்று கொண்டிருக்கும் போதே கதவை சாத்தி விட்டு, அதன் மீதே கதை வைத்தபடி வெளியே அவர்கள் ஏதாவது பேசிக்கொள்கிறார்களா என நோட்டமிட்டாள்.

சரி வாங்க மாமா போகலாம் என மாடிக்கு அழைத்து வந்த தனா.. யாரும் இருக்கிறார்களா என்று ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒன்றுவிடாமல் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டான்.

வேலனுக்கு மகளை நினைத்து கோபம் வந்தாலும், தான் சகோதரியின் பிள்ளைளுக்கு இன்னும் என்ன என்ன காத்திருக்கிறதோ என மனம் நொந்து போனது. தனாவை ஆரத் தழுவிய வேலன், இன்னும் உன் வயசுக்கு எவ்வளவு தான் பட போறியோ தெரியல தனா. நீ எப்போவும் நல்லா இருக்கணும். இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சு, நீ சந்தோசமா இருக்கணும் தனா. அதான் என்னோட ஆசை.

இல்ல மாமா. எனக்கு அவ்வளவு ஆசையெல்லாம் இல்ல. எப்பிடியாவது இந்த பிரச்சனையை முடிக்கணும். அதுல என் உயிரே போனாலும் எனக்கு கவலை இல்ல மாமா. பிரச்சனை முடிஞ்ச சந்தோசத்தோடவே செத்து போய்டுவேன்.

ச்சே.. என்ன தனா நீ அதெல்லாம் உனக்கு ஒன்னும் ஆகாது. அதான் நாளைக்கு நாம கிளம்பிடுவோம்ல. எந்த பிரச்சனையும் வராது. கவலை படாத.

ம்ம் சரி மாமா.

இருவர் மட்டும் பேசிக் கொண்டிருக்க, பிறகு தான் புரிந்தது, சித்தன் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது.

என்ன தாத்தா ஏன் அமைதியா இருக்கீங்க. அதான் செல்வி அண்ணிக்கு ஒன்னும் ஆகலயே.

ம்கூம்.. இல்ல தனா. நம்மளோட கணிப்பு தப்பா இருக்கும் பட்சத்தில் அந்த உருவம் சொன்னது அப்போ வேற யாரோ ஒருத்தரை. இப்போ நாம யாரன்னு சொல்லி தேடுறது சொல்லு.

ப்ச்.. நேரம் கடந்திருச்சு தனா. இனி நாம என்ன செஞ்சாலும் அதை தடுக்க முடியாது.

அந்த உருவம் சொன்ன அந்த ஒருத்தர், யாருன்னு நாளைக்கு தான் நமக்கு தெரியும்.





விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas.....
 
Padikka start pannuradhukku munnadiye. Goose pumps ? superb episode. But chinna episode mathiri feel aaguthu. Naalaikku yenna nadakkum nnu yethir parppoda wait pannuvom ?
 
Top