Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

5. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member
அன்புள்ளங்களுக்கு வணக்கம்.

எல்லாரும் என் மேல செம்ம காண்டுல இருப்பீங்கன்னு தெரியும்.. சாரி ப்பா.. கொஞ்சம் வேலை இருந்தாலே சோம்பி போற ஆளு நான்.. இப்போ வேல.. வேல.. வேல மட்டும் தான்.. டோட்டலா டல் ஆகிட்டேன்..

ஒரு வழியா வேல பண்ண கத்துக்கிட்டு.. மனசில தெம்பு ஏத்திக்கிட்டு.. கதையோட யூடியோட வந்துட்டேன்.

இனிமே யூடி சரியா வந்துடும்.. (வரலைன்னா.. அப்டின்னெல்லாம் கேக்கப்படாது..)

இதோ 5ம் அத்தியாயம். படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா..



5. இவன் வசம் வாராயோ!



கணவனை அலுவலகம் அனுப்பி விட்டு வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டே குழந்தைக்கு சோறூட்டி தூங்க வைத்த கயல்விழி குழந்தை சிணுங்கி எழுந்து கொள்வதற்குள் அவசரமாகச் சென்று குளித்துவிட்டு வந்தாள்.

தொலைக்காட்சியை சன்னமான சத்தத்தில் வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கவும் குழந்தை சிணுங்கியபடி எழுந்து வரவும் சரியாக இருந்தது!

"என்ன செல்லம்.. தூங்காம அம்மாவ இப்டி படுத்தறீங்க.. அம்மாவுக்கு பசிக்கிதுடா.." என்றபடியே குழந்தையைத் தூக்கிக் கொண்டு கொஞ்சினாள்.

தாயின் கொஞ்சலில் சிணுங்கலைக் கை விட்ட குழந்தை சிரிக்கத் தொடங்க,

"சரி! நம்ம ரெண்டு பேரும் சாப்பிடலாமா?" என்று கேட்டு குழந்தைக்கு ஊட்டியபடியே தானும் சாப்பிட்டாள்!

குழந்தை அப்படி இப்படி என்று ஆட்டம் காண்பித்து தரையில் சிந்தி தன் உடம்பெல்லாம் உணவினை பூசிக் கொண்டு ஆர்பாட்டம் செய்ய, கயல்விழிக்குப் போதும் போதும் என்றானது.

"அடியேய்.. ஏண்டீ இப்டி என்ன பாடா பாடு படுத்தற.. ஒழுங்கா சாப்பிடுடீ.. இல்லன்னா என்னையாச்சி சாப்பிட விடு.." என்று அழாத குறையாக கெஞ்சி கொஞ்சி ஊட்டி விட்டுவிட்டு குழந்தையை தூக்கிப் போய் அதன் உடம்பில் பூசியிருந்த உணவினை சுத்தம் செய்து தூக்கி வந்தாள்!

அவள் குழந்தையை சுத்தம் செய்து வீட்டுக் கூடத்தில் விட்டு விட்டு கழிப்பறைக்குச் சென்று வருவதற்குள் தத்தித் தத்தி நடந்து சென்று அவளுடைய அறையிலிருந்த ஒப்பனை மேஜையில் (dressing table) வைத்திருந்த முகம் பூசும் பௌடரை (talcum powder) எடுத்து தரையெல்லாம் கொட்டி அதன் மீது புரண்டு கொண்டிருந்தாள் முத்தழகி!

கழிப்பறையிலிருந்து வெளியே வந்த கயல்விழி குழந்தையின் கோலத்தைக் கண்டு அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் திகைத்துப் போய் நிற்க, தன் தாயைப் பார்த்து குறும்பாகச் சிரித்தாள் முத்தழகி.

"அடடா.. ஒரு செகண்ட் சும்மா இருக்க மாட்டியா நீ.." என்று அதட்டிக் கொண்டே ஓடி வந்து அவளைத் தூக்கிக் கொண்டு துண்டு வைத்து துடைத்து விட்டு, மெதுவாக வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

எதிர் வீடு பூட்டியிருக்க, நிரஞ்சனாவைப் பற்றி நினைத்தபடியே அடுத்த வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.

சில நிமிடங்களில் அந்த வீட்டுப் பெண் வந்து கதவைத் திறந்து விட்டு,

"என்ன கயல்? இந்த நேரத்தில?" என்று வினவ,

"இவள அஞ்சு நிமிஷம் வெச்சிக்கறீங்களாக்கா.. என்னைய சாப்பிடக் கூட விடாம படுத்தறா.." என்று கூறி நடந்ததை சுருக்கமாக விளக்க,

"அதுக்கென்ன.. நீ போய் சாப்பிடு.. நா பாத்துக்கறேன்.." என்று கூறிக் கொண்டே முத்தழகியை கயலிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.

"வாங்க.. வாங்க.. என்ன.. அம்மா போட்டு விட்ட பௌடர் போறலைன்னு நீங்களே போட்டுகிட்டீங்களா.. அதான் இவ்ளோ வாசனையா இருக்கீங்களா.. ம்.." என்று முத்தழகியிடம் செல்லம் கொஞ்சத் தொடங்கினாள் அந்தப் பெண்.

குழந்தை கிளுக்கிச் சிரித்தது.

"நீ போய் சாப்பிடு கயல். நா இங்கியேதான் இருப்பேன்.." என்று அவள் கூற, கயல் தன் வீடு நோக்கி நடப்பதைப் பார்த்த முத்தழகி சிணுங்கி அழத் தொடங்கினாள்.

"சரி! சரி! நானும் உங்க வீட்டுக்கு வரேன்.." என்றபடியே தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு தன் வீட்டை பூட்டிக் கொண்டு கயலுடன் அவள் வீட்டுக்கு வந்தாள்.

பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையைப் பார்த்துக் கொள்ள கயல் ஒரு வழியாய் சாப்பிட்டு முடித்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ்க்கா!" என்று கயல் அவளுக்கு நன்றி கூற, கயலின் கைப்பேசி சிணுங்கியது.

எடுத்தவள் தெரியாத எண்ணைப் பார்த்து குழம்பியபடியே அதை எடுத்து காதுக்குக் கொடுக்க, அதில் வந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்தாள்.

"ஐயோ.. எப்ப.. எங்க.. இப்ப எப்டி இருக்காரு.. சரி.. நா உடனே கிளம்பி வரேன்.." என்றவள், ஒரு நிமிடம் யோசித்துவிட்டு,

"ம்.. நா வர எப்டியும் ஒன் அன்ட் அ ஹாஃப் அவர் ஆகிடுமே.. அது வரைக்கும்.. நீங்க.. அவரு பக்கத்திலயே இருப்பீங்களா.." என்று கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டாள்.

அந்தப்பக்கம் என்ன பதில் சொன்னார்களோ, அதில் கொஞ்சம் துணிவு வரப் பெற்றவளாய்,

"ரொம்ப தேங்க்ஸ்ங்க.. நா இதோ.. உடனே கிளம்பறேன்.."

".."

"ஆமாங்க.. இப்பதான் சாப்பிட்டேன்.. வந்து.. சாரி.. நீங்க சாப்பிட்டீங்களா.." என்று கேட்டுவிட்டு பதிலைப் பெற்றுக் கொண்டு, அழைப்பை துண்டித்தாள்.

"என்ன கயல்? யார் போன்ல.. யாருக்கு என்னாச்சு.. பதட்டமா பேசின?" என்று அந்த பக்கத்து வீட்டுப் பெண் கேட்க,

"ம்ச்.. என்ன சொல்வேன்க்கா.. அண்ணன் எங்கியோ ந்யூஸ் சேகரிக்கப் போன இடத்தில மயக்கம் போட்டு விழுந்துட்டானாம்.. யாரோ பாத்து பக்கத்தில இருக்கற சின்ன க்ளினிக்ல வெச்சி ஊசி போட்டு தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போயிருக்காங்க.. அண்ணனோட வேல செய்யற ஆஃபீசுக்கு எப்பிடியோ தகவல் சொல்லிருக்காங்க. அவங்க ஆஃபீஸ்ல வேல பண்ற பொண்ணு போய் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணினாங்க.." என்று அவசர அவசரமாகக் கூறினாள்.

"அடடா.. சரி.. சரி.. நா இவள வெச்சிக்கறேன்.. நீ போய் ட்ரஸ் மாத்திக்கிட்டு வா.. குழந்தைக்கு பால் எடுத்துப்ப தானே.. நான் சூடு பண்ணவா.. எதுல எடுத்துப்ப.." என்று கேட்டபடி குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பாலை எடுத்து சூடு செய்யத் தொடங்கினாள் அவள்.

"ரொம்ப தேங்க்ஸ்க்கா.."

"தேங்க்ஸ் எல்லாம் அப்றம் சொல்லிக்கலாம்.. குழந்தைக்குத் தேவையானத எடுத்துக்கோ.. உன் வீட்டுக்காரருக்கு போன் செய்.. அவர கால் டேக்சிய எடுத்துட்டு வர சொல்லு.. இல்லன்னா.. நீ டேக்ஸி புக் பண்ணிட்டு.. வழியில அவர பிக்அப் செய்துக்கோ.. சீக்கிரம்.." என்று அவள் வழி காட்ட, கயல் அவள் சொல்படியே உடைமாற்றி வந்து தன் கணவனுக்கு அழைத்து விவரம் கூறினாள்.

அவன் இதைக் கேட்டு ஒரு நிமிடம் பதறினாலும், சமாளித்துக் கொண்டு,

"நீ டென்ஷனாகாத கயல்! நா டேக்ஸி எடுத்துகிட்டு வந்திடறேன். நீ ரெடியா இரு.. ம்.. சாப்டியா?" என்று விசாரித்தான் அக்கறையுடன்.

"ம்.. இப்பதான் சாப்டேங்க.. நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள்.

"இன்னும் இல்ல.. பரவால்ல.. வழியில கார்லயே சாப்பிட்டுக்கறேன்.. பாப்பாவுக்கு தேவையானத எடுத்துக்க.. பக்கத்து வீட்ல உதவிக்கு கூப்பிட்டுக்கறதுதானேம்மா.."

"ஆமாங்க.. பக்கத்து வீட்டு அக்காதான் கூட இருக்காங்க.."

"சரி.. சரி.. நான் இதோ கிளம்பிட்டேன்.. நீ ரெடியா இரு.." என்று அவன் அழைப்பை துண்டித்தான்.

கயல் அவன் வரும் வரை பதட்டத்துடனேயே அமர்ந்திருந்தாள்.

அண்ணன் நல்லாதானே இருந்தான்.. மயக்கம் வர அளவுக்கு அவனுக்கு என்னாச்சு.. கடவுளே.. அண்ணன காப்பாத்து.. ப்ளீஸ்.. என்று மனதுக்குள் வேண்டியபடி காத்திருந்தாள்.

"ஒண்ணுல்ல கயல்.. பதட்டப்படாத.. அண்ணனுக்கு ஒண்ணும் ஆகாது.." என்று பக்கத்து வீட்டுப் பெண்ணும் அவளுக்கு தைரியம் கூறியபடி அவளுடன் அமர்ந்திருந்தாள்.

முகிலனோ, கால் டேக்ஸியில் வந்தபடியே,

சே.. எல்லாம் என்னாலதான்.. தப்பு பண்ணிட்டேன்.. பெரிய தப்பு பண்ணிட்டேன்.. நா அந்தப் பொண்ணப் பத்தி அவன் கிட்ட சொல்லியிருக்கவே கூடாது.. அந்த நிரஞ்சனாவ தேடிப் போக ஆரம்பிச்சப்றம்தான் இவனுக்கு என்னமோ ஆகுது.. ரெண்டு நாளுக்கு முன்னாடியே ரொம்ப எமோஷனலா பேசினான்.. அவள கண்டு பிடிக்க முடியலன்னு.. ரொம்ப ஃபீல் பண்ணினான். ஒரு வேளை நெஜமாவே அவனுக்கு அந்தப் பொண்ணு மேல எதாவது ஈர்ப்பு ஏற்பட்டிருக்குமோ..

என்று எண்ணியபடியே தன் வீடு வந்து தயாராகியிருந்த கயல்விழியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு தன் மச்சான் தமிழ் வாணனைத் தேடி விரைந்தான்.

"வாட்ஸ் ராங் வித் டமில்? இஸ் ஹீ சஃபரிங்க் வித் எனி டிசீஸ்?" என்று ஜேக் தன் மனைவி ரக்ஷணாவிடம் கேட்டுவிட்டு அவளிடமிருந்து எந்த பதிலும் வரமால் போக, திகைப்புடன் அவளைப் பார்க்க, அவளோ தீவிர சிந்தனையில் இருந்தாள்.

யாரோ தெரிஞ்ச பொண்ணத் தேடணும்னு ஏதோ ஊருக்கு கூட்டிட்டு போனான். போன இடத்தில அவங்கண்ணன் எங்கள திட்டி அனுப்பினான்.. அவ அண்ணிக்காரி புருசனுக்குத் தெரியாம பின் பக்கமா ஓடி வந்து அவளுக்கு அந்த வீட்ல அவங்கம்மானாலயே பிரச்சனை.. அதனால அவள அங்கேந்து எங்கியோ போக சொல்லி அனுப்பி வெச்சதா சொன்னா.. அதுக்கப்றம் அவளுக்கு என்னாச்சுன்னு புரியல.. ஆனா அன்னிக்குலேர்ந்து இவன் இப்டி ஆய்ட்டானே.. யார் அந்த பொண்ணு.. ஒரு வேளை அவ இவனோட பழைய லவ்வரோ.. அதான் இப்டி ஃபீல் பண்றானோ.. என்று தனக்குள் யோசித்தபடி இருந்தாள் ரக்ஷணா!

இப்படி ஆளாளாளுக்கு தமிழைப் பற்றி சிந்தித்தபடி இருக்க அவனோ ஆழ்ந்த மயக்கத்திலிருந்தான்.


- தொடரும்....
 
Top