Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

4. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
என்னோட ரெண்டு அண்ணன்ங்களும் இறந்து மூனு மாசம் ஆகுது தாத்தா. ரெண்டு பேருக்கும் கைக் குழந்தை வேற இருக்கு. அதுலயும் ரெண்டாவது அண்ணன் இறந்தது தான் ரொம்ப கொடூரம் தாத்தா. இன்னும் அதை நினைச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு.

ஐயோ என்னப்பா சொல்ற, எப்பிடி இறந்தாங்க. அப்போ உன்னோட அப்பா இருந்தாரா? இல்லையா?

இல்ல தாத்தா அப்பா தான் முதல்ல இறந்து போனார். அப்பாவும் அம்மாவும் வெளியில போய்ட்டு வரும்போது வண்டி விபத்து ஆகிடுச்சு. அப்பா விபத்து நடந்த இடத்திலேயே இறந்துட்டாராம். அம்மாவை ரொம்ப ஆபத்தான நிலையிலதான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. தகவல் தெரிஞ்சு நாங்க போகுறதுக்குள்ள அம்மாவும் இறந்துட்டாங்க.

ரெண்டு பேரையும் போஸ்ட்மார்ட்டம் பண்ணி பொட்டலமா தான் எங்களுக்கு குடுத்தாங்க... அன்றைய நினைவை எண்ணி அழுதவனை ஆறுதல் படுத்தி தோள் சாய்த்துக் கொண்டார் சித்தன்.

சமாதானம் ஆனவன், ஆனா அங்க இருந்த டாக்டர் அப்பாவோட இறப்பை பத்தி சொன்னதும் எங்களுக்கு சந்தேகம் வந்தது தான், ஆனா அப்போ இருந்த நிலையில் அதை நாங்க பெருசா நினைக்கல. அண்ணன்கள் இறந்ததுக்கு அப்புறம் தான் அந்த சந்தேகம் இன்னும் எங்களுக்கு பெரிசாச்சு. ஏன்னா? அப்பா அண்ணன்கள் இறந்ததுல இருந்த அந்த ஒற்றுமை தான்.

என்னப்பா சொல்ற?

ஆமா தாத்தா. அப்பா அம்மா இறந்ததுல அம்மாவுக்கு மட்டும் தான் காயம் எல்லாமே, அப்பாவுக்கு..... அப்பாவுக்கு உடம்புல ஒரு சின்ன கீரல் கூட இல்லையாம். வலது கை பெருவிரல் மட்டும் தான் இல்லாம இருந்திருக்கு. ஆனா.. ஆனா...

தனா.. தனா.. வேலன் அவனை அழைத்தபடியே அருகில் வந்துவிட, அவர்களின் பேச்சும் அதோடு தடைபட்டுபோனது.

தனாவின் கலங்கிய முகத்தை பார்த்த வேலன், என்ன தனா என்னாச்சு. உன்ன பார்க்கத்தான் மறுபடியும் கிளம்பினேன். ஆனா நீ அதுக்குள்ள வந்துட்ட. ஆமா இவர் யாரு. ஏன் நீ இப்பிடி கலங்கி நிக்கிற.

அது ஒன்னும் இல்ல மாமா. சும்மா பழைய நியாபகம். இவர் சித்தன் ஐயா. இவர் அப்பாவுக்கு ரொம்ப தெரிஞ்சவர். அதுமட்டுமில்ல மாமா... என ஆரம்பித்து சித்தன் ஐயா கூறிய அனைத்தையும் கூறி முடித்தான் தனா.

ஐயா ரொம்ப நன்றி ஐயா. யாருமில்லா எங்களுக்கு குறிப்பா இந்த பிள்ளைக்கு தான் ரொம்ப பெரிய உதவி செஞ்சிருக்கீங்க. ரொம்ப நன்றி ஐயா.
அப்புறம் தனா எதுக்காக நான் வந்தேன்னா, என்னோட சிநேகிதன் ஃபோன் பண்ணியிருந்தான். நம்மை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்க வரச் சொல்லியிருக்கான். நீ என்ன சொல்லுற,

சரிதான் மாமா, ஆனா நாம அந்த கையேட்டை வேற படிக்கணுமே மாமா. அதுல ஏதோ வழி இருக்கிறதா அப்பா சொல்லியிருக்கிறார். அப்போ அதுவும் நமக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன். அதனால முதல்ல நாம அதை படிச்சு பாத்துட்டு அங்க போகலாம் மாமா.

ம்ம்.. சரி தனா நீ சொல்லுற மாதிரியே செய்யலாம். அப்போ கோவிலுக்கு போய்ட்டு வந்து முதல் வேலையா அந்த கையேட்டை படிப்போம். அப்புறம் நாம அந்த இடத்துக்கு கிளம்பலாம்.

மேலும் சில நேரம் மூவரும் பேசிவிட்டு கிளம்பினர்.

வீட்டிற்கு வந்த தனா சித்தன் ஐயாவை அவரது அறையில் விட்டுவிட்டு எல்லோருடைய அறைக்கும் சென்று பார்த்து விட்டு, கடைசியாக சுமதியின் அறைக்கும் சென்றான்.

அக்கா..

வாடா தனா. மாமா கிட்ட பேசிட்டியா.

ம்ம் பேசிட்டேன்க்கா.

தனா உன் கிட்ட ஒன்னு கேட்பேன். எனக்கு நீ உண்மைய மட்டும் தான் சொல்லணும்.

சொல்லுக்கா.

அப்பா, தம்பிங்க இறந்ததுக்கும் மாமா இறந்ததுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா இல்லையா. உண்மைய மட்டும் சொல்லு.

அது வந்து அக்கா....

ம்ம் சொல்லுடா. சமந்தம் இருக்கா இல்லையா?

ம்ம் இருக்குக்கா. சம்மந்தம் இருக்கு.

தனா...

ஆமாக்கா எல்லாரும் இறந்ததுக்கும் காரணம் ஒன்னு தான். ஆனா இதுக்கு மேல வேற எதுவும் உனக்கு தெரிய வேணாம்க்கா. உனக்கு நிம்மதியே இல்லாம போய்டும். தேவையில்லாம கண்டதையும் யோசிக்காம நீ தூங்குக்கா. நான் வரேன்.

சுமதி விட்டால் போதும் என போகும் தனாவை பார்த்து யோசனையுடனே அமர்ந்திருக்க, அவனும் அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அவனது அறைக்கு செல்ல படியேறினான். ஐந்து படிகளை தான் தாண்டியிருப்பான். ஏதோ வண்டு ரீங்காரமிடும் சத்தம் போல கேட்க, சுற்றி சுறறிச்சுற்றி பார்த்தவன், மேலும் சில படிகளை கடந்து மெதுமெதுவாக அறைகளின் பக்கம் வந்துவிட்டான். சிறிது நேரத்திற்குள்ளாகவே லேசாக வந்து கொண்டிருந்த அந்த சத்தம் பெரும் இரைச்சலாகிக் கூடிக் கொண்டே சென்றது. சத்தம் எங்கிருந்து வருது, எனக்கு மட்டும்தான் கேட்குதா? என ஒருமுறை கீழே எட்டிப்பார்த்தான். கீழே சாதரணமாக இருக்க, சுமதியின் அறையில் மட்டும் வெளிச்சம் இருந்தது. ஆனால் எந்தவித சலனமில்லாமல் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆக தனக்கு மட்டும் தான் சத்தம் கேட்கிறது என ஒரு பக்கம் பயம் உண்டாகினாலும் மெல்ல மெல்ல சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்ந்தபடியே முன்னேறினான் தனா. இப்போது சத்தம் இன்னும் இன்னும் அதிகமாகி கொண்டே தான் இருந்தது.

ஒவ்வொரு அறையின் கதவையும் திறந்து திறந்து பார்த்தபடியே கடைசி அறையின் கதவையும் திறக்க.... அதுவரை கேட்டுக் கொண்டிருந்த சத்தம் திடீரென நின்று அவனது மூச்சு காத்து சத்தம் மட்டுமே அவனுக்கு கேட்கும் அளவு பேரமைதியாகி போனது.

இருட்டறையில் நிற்க நிற்க தனாவிற்கு பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது. சுற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் இருக்காது என கதவை சாத்த போகும் நேரம் அதுவரை இல்லாதிருந்த சத்தம் இப்போது காது செவிப்பறை கிழியும் அளவிற்கு அதிகமாக கேட்க ஆரம்பித்தது.

உடனே இங்கிருந்து நகர்ந்து விடு என மனமும் மூளையும் கட்டளை விதித்தாலும் கால்கள் அவ்விடம் விட்டு நகர மறுத்தது. சத்தம் அதிகமாக அதிகமாக தனா அவனாகவே காதுகளை அடைத்துக் கொண்டு கத்த ஆரம்பித்தான். சத்தத்திற்கு போட்டியாய் இவனும் கத்திக் கொண்டிருக்க, அதுவரை அந்த இருட்டறையில் பல்லி போல மேல் சுவற்றில் அப்பிக் கொண்டிருந்த உருவம் அவன் முன் இறங்கி நின்றது.

கண்கள் பழுப்பு நிறத்தில் கருவிழியில்லாமல் அழுகி உருகி வடிந்த கோர முகத்தின் தாடைகள் அசைந்து கொண்டே இருக்க சதை உருகி தொங்கிய படி இருந்த விரல்களை தனாவின் தலையில் வைக்க போகும் நேரம்,

ஏதோ உந்துதலில் மேலே வந்த சித்தன் ஐயா அவர் கழுத்தில் போட்டிருந்த, நாதன் அவருக்கு பாதுகாப்பிற்காக குடுத்திருந்த மாலையை தனாவை நோக்கி வேகமாக வீசினார். அவர் வீசிய மாலை தானாவின் தலையில் பட்டதுடன் கீழே விழாமல் அவனது சட்டையின் காலர் பகுதியிலேயே தொங்க, கை நீட்டி முன்னேறிய உருவம் சித்தனை நோக்கி கொடூர பார்வையை வீசி ஒற்றை விரலை உயர்த்தி ஏதோ கூறியபடி சட்டென மாயமாய் மறைந்து போனது.



உருகிய உருவம் உரைத்தது என்ன?



விடை தேடி பயணம் தொடரும்.....
Prabhaas....
 
Top