Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

31. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
தனாவும், யாழினியும் கோயிலுக்குக் கிளம்பிச் செல்ல, இளா திருவின் சில பொருட்களோடு கூடவே வேலனையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

ம்ம்... வாங்க வேலன். என்ன இளா எடுத்திட்டு வந்திட்டயா.

எடுத்துட்டு வந்துட்டேன் தாத்தா. இதோ பாருங்க.

வாங்கி பார்க்க, அதனுள் அவனது சட்டை அவன் எப்போதும் உபயோகிக்கும் கைக்கடிகாரம், கைசங்கிலி என பல பொருட்கள் இருந்தன. சித்தன் ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்துக் கொண்டிருக்க, இவர்களை சாப்பிட அழைக்க வந்த சுமதி,

தாத்தா சாப்.... என்றதோடு அப்படியே நின்றுவிட்டாள்.

நிதர்சனத்தை புரிந்து நாட்களை அவள் கடத்த துவங்கியிருந்தாலும், கணவனை நினைக்காத நாளில்லை. அவன் உடல் மறைந்து தான் போனதே தவிர, உயிர் என்னருகில் என்னுடன் தான் இருக்கும் என்ற மனநிலை தான் அவளுக்கு. அதன்படியே வாழ்ந்து கொண்டிருக்க,

உயிரானவனின் பொருட்களைப் பார்த்ததும், பேச்சு கூட எழவில்லை.

கண்கள் திருவின் உடைமைகளின் மீதே இருக்க, கண்ணீர் தானாக வடியத் தொடங்கியது. நிமிடங்கள் கடந்தும் அவள் நிலை அப்படியே இருக்க, சித்தன் ஐயா தான் அவளின் தலையை வருடி ஆறுதல் படுத்தினார்.

பெரும் அழுகையாய் வெடிக்க வேண்டிய அழுகை, அவளின் மூலமே கட்டுப்படுத்தப்பட்டது. அழுகையை அடக்கி பெரும் பெரும் மூச்சுகளை வெளியிட்டவள், சில நிமிட அமைதிக்குப் பின், சாப்பாடு ரெடி தாத்தா. வாங்க எல்லாரும் சாப்பிடலாம் என சொல்லிவிட்டு மீண்டும் அடுக்களைக்குள்ளே நுழைந்து விட்டாள்.

அக்கா மகளின் வேதனையை தாங்க முடியாத வேலன், இன்னும் என்னனென்ன வேதனையெல்லம் பார்க்க போறேன்னு தெரியல ஐயா. வாழ வேண்டிய பிள்ளைகள் இப்பிடி கஷ்டப்பட, நாங்க இன்னும் இந்த உடம்ப தூக்கிகிட்டு திரியிரோம். கொல்லி போட வேண்டிய தலப்புள்ளைய தூக்கி கொடுத்துட்டு கண்ணுமுன்ன மருமக படுற கஷ்டத்தை ஜீரணிக்க முடியல ஐயா என தலையில் அடித்து அழுக... இளாவிற்கே ஒரு மாதிரி ஆகிப் போனது.

அண்ணனின் இழப்பை ஈடுகட்ட அவனாலும் முடியவில்லை தான். ஆனால் அவனது முடிவென்பது அவனால் உருவாக்கப்பட்டது எனும் போது தேவையில்லா ஆசையின் விளைவு என்று மட்டுமே எண்ண வைக்கிறது.

விடுங்க வேலன் இதெல்லாம் நீங்க பார்த்து தான் ஆகனும்னு அந்த ஆண்டவன் நம்மல ஆட்டிவைக்கிறான். அப்படியிருக்க, இப்பிடி அழுது புலம்பிகிட்டு இருந்தா, நம்ம சுமதிக்கு யாரு ஆறுதல் சொல்லுறது. ஒருபக்கம் மருமகளா இருந்தாலும், அவ உங்க அக்கா மகள் வேலன். தாய்மாமன் பாசமும் அன்பும் அவளோட தாய் பாசத்துக்கு சமம். அவளுக்கு துணையா நின்னு இனி வரும் காலத்தை அவளுக்கு வசந்தமாக்குங்க. அவளை கவலை இல்லாம பார்த்துக்க வேண்டியது உங்க கடமை வேலன். இளா நீயும் தான் பிள்ளைகளுக்கு ஒரு போதும் அப்பா இல்லங்குற கவலை இல்லாம நீ தான் பார்த்துக்கணும் புரியுதா.

ம்ம் புரியுது தாத்தா.

வேலன் போங்க, போய் சுமதியையும் சாப்பிட கூட்டிட்டு வாங்க.

வேலன் அடுக்களைக்குள் நுழைய, சுமதி எங்கோ பார்த்தபடி அமைதியாய் நின்றிருந்தாள்.

சுமதிம்மா...

மாமா...

ஏன்டா இப்பிடி நின்னுட்டு இருக்க. வா நீயும் சாப்பிடணும் தானே.

............

இப்பிடி அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்.

என்ன நானே பக்குவ படுத்திக்கிறேன் மாமா. எனக்கு கொஞ்ச நேரம் குடுங்க. நானே சரியாகிடுவேன்.

ம்ம். சரிடா... வா. நான் வெளியில இருக்கேன்.

சுமதிக்காக இவர்கள் காத்திருக்க, அங்கு, கோயிலுக்குச் சென்றவர்கள் ரத்தினத்துடன் வெகு சிரத்தையாக காத்துக் கொண்டிருந்தனர்.

தனா அவர் வர எப்பிடியும் நேரம் ஆகத்தான் செய்யும் நீங்க குளக்கரையில காத்திருங்க. நானும் கடவீதிக்கு போய்ட்டு பூஜை சாமன வாங்கிட்டு வந்திடுறேன்.

சரிங்க சாமி நீங்க போய்ட்டு வாங்க. நாங்க இங்கேயே இருக்கோம்.

ரத்தினம் வண்டியில் புறப்பட, இவர்கள் இருவரும் குளக்கரைக்கு வந்தனர்.

அகரயாழினி தயங்கி தயங்கியே, அவனிடம் சைகையில் இருந்த குளத்திலிருந்து தான் அந்த பொருள் கிடச்சதா என கேட்க,

பெரும் மூச்சை வெளியிட்ட தனா, ஆமா என பதிலளித்தான்.

நிறைய இழப்பு நடந்து போச்சு. அன்னிக்கி மட்டும் அப்பா அதை எடுக்காம இருந்திருந்தா இப்போ எல்லாரும் உயிரோட இருந்திருப்பாங்க.

கவலப்படாதீங்க என கைகளை ஆட்டி தனாவை சமாதானம் செய்தவள், மீண்டும் சைகையிலேயே ஏதோ கேட்க,

சிறு சிரிப்போடு ஆமாம் என்றான். உனக்கு யார் சொன்னது என கேட்க,

உங்க பெரிய அண்ணி என சைகை அளித்தாள்.

அண்ணி என்றதும் அவன் மீண்டும் சோகத்தில் மூழ்க,

ஏன் என்னாச்சு என சைகை காட்டியவளிடம், கூறத் தொடங்கினான் அண்ணன்களின் இழப்பை பற்றி.

தனா அவனுக்கு தெரிந்தவற்றை மட்டும் யாழினியிடம் கூற, நாம் நடந்ததை முழுதாக பார்க்கலாம்.

ஏழு மாதத்திற்கு முன்பு,

தரணி நாதனும், மகா அம்மாவும் இறந்த செய்தி கேட்டு பிள்ளைகள் அனைவரும் மருத்துவ மனையை நோக்கி விரைந்தார்கள்.

நாதன் விபத்து நடந்த இடத்திலேயே உயிர் இழந்து விட்டார் எனவும், மகா அம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் தெரிய, எல்லோரும் உடைந்து போனார்கள். மூத்த பிள்ளைகள் அழுகையை காட்டிலும், தனாவின் அழுகை தான் எல்லோரையும் கஷ்டப்படுத்தியது.

உடற்கூறாய்வில் நாதனுக்கு உடம்பில் காயம் எதுவும் இல்லை எனவும், ஆனால் வலது கை பெருவிரல் மட்டும் இல்லை எனவும் சொல்ல, எல்லோருக்கும் ஆச்சர்யம் தான். ஆனால் ஏன் எதற்கு என்று ஆராயும் நிலையில் அவர்கள் இல்லை என்பதால் அந்த விஷயம் அப்போது மறக்கப்பட்டது. வீட்டிற்க்கு வந்து எல்லா சடங்குகளையும் முடித்து தாய் தந்தை உடல்களையும் தகனம் செய்தார்கள்.

அதற்குப்பின் தனாவிற்கு ஆறுதலாக அண்ணன்கள் இருவரும் கூடவே இருந்தார்கள். எங்காவது செல்ல நேர்ந்தால் கூட வீட்டில் இருப்பவர்களிடம் தனாவை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டுத்தான் செல்வார்கள். மகாவின் இழப்பினால் கூடவே இருந்தவன் ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் போனான். நாட்கள் நகர, அகிலனுக்கு குழந்தையும் பிறந்தது. அன்னை தந்தை இழப்புகளுக்கு பின் அண்ணன் மகனின் வரவால் தனா சிறிது ஆறுதல் அடைய, அடுத்து வந்த நாட்கள் நன்றாகத்தான் சென்றது.

குழந்தை பிறந்த இரண்டு மாத முடிவில் வேலை காரணமாக அகிலன் முகிலன் இருவரும் வெளியே சென்றிருக்க, அப்போது தான் மீண்டும் அந்த உருவம் அதன் ஆட்டத்தை தொடங்கியது.

நாதனின் இறப்பிற்கு பின் சற்று அமைதியாக இருந்த உருவம், மீண்டும் வெளிவந்து அடுத்த உயிரை குடித்து விட்டு குடும்பத்தில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.



விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas.....
 
Top