Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

3. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
இன்னும் இரண்டு நாட்களில் திருவின் முப்பதாம் நாள் காரியம். காரியம் முடிந்து மறுநாள் எல்லோரும் கோவிலுக்கு செல்வது என முடிவானது. கோவிலில் எல்லாம் முடிந்து அன்று இரவே வேலனும் தனாவும் வேலனின் நண்பர் சொன்ன இடத்திற்கு கிளம்ப வேண்டும் என எல்லா வேலைகளையும் சீக்கிரமாகவே முடிக்க தொடங்கினர்.

இன்னும் ரெண்டே நாள். சீக்கிரம் அங்க போயே ஆகனும். அதுக்குள்ள எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது. கடவுளே நீ தான் அருள் புரியனும் என தனா ஒவ்வொரு நிமிடமும் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு இத்தனை நாட்களையும் கடந்தது ஒரு பெரும் யுகமாய் தான் இருந்தது. மீண்டும் ஏதாவது நடந்து விடுமா, மறுபடியும் அது வந்து விடுமா, என்னை பயமுறுத்தியது போல வேற யாரையாவது பயமுறுத்திடுமா?? ஐய்யோ ஐய்யோ என பல பயத்துடனே நாட்களை கழித்துவிட்டான். இன்று வீட்டில் எல்லோரிடமும் சொல்லிவிட்டு கடைக்கு வந்தவனுக்கு முன் வந்து நின்ற பெரியவர்,

இங்க கீர்த்தனன் யாரு தம்பி.

சொல்லுங்க தாத்தா நான் தான் கீர்த்தனன். உங்களுக்கு என்ன வேணும்.

அது வந்து தம்பி உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.
கொஞ்சம் அந்த பக்கம் வர்றீங்களா.

ம்ம் சரி வாங்க தாத்தா.

யோசனையுடன் அவரை பின் தொடர்ந்தவன், அவரிடம் சொல்லுங்க தாத்தா என்ன பேசணும்.

ஒரு முக்கியமான விஷயம் தம்பி. என் பேரு சித்தண்ணன். நான் இப்போ காஞ்சிபுரத்தில இருந்து வர்றேன். அங்க இருக்குற சிவன் கோவில்ல அறங்காவலரா இருக்கேன். எப்போவும் மாசா மாசம் உங்க அப்பா அங்க கோவிலுக்கு வருவாரு. அதன் மூலமா தான் எனக்கு அவரை தெரியும். அவர் இப்போ கடைசியா வந்து ஆறு மாசம் ஆகிடுச்சு.

அது வந்து தாத்தா...

ம்ம் எனக்கு தெரியும் அவர் இப்போ உயிரோட இல்லையின்னு.

தாத்தா...

இருப்பா நான் முழுசா சொல்லி முடிச்சுக்கிறேன். உங்க அப்பா இப்போ உயிரோட இல்ல. அவர் இறக்க போறது எனக்கு முன்னாடியே தெரியும்.

இதை சொன்னதும் தனாவிற்கு பெரும் அதிர்ச்சி. குழப்பத்துடன் பெரியவரை பார்க்க,

அவர் மேலும் தொடர்ந்தார்.

அதுமட்டுமில்ல தம்பி உங்க அப்பா இறக்க போற விஷயம் முன்னாடியே அவருக்கும் தெரியும். என்கிட்ட அதை சொன்னதும் அவர் தான். இப்போ உன்ன வந்து பார்க்க சொன்னதும் அவர் தான்.

என்ன தாத்தா சொல்லுறீங்க. அப்பாக்கு அவர் சாக போறது முன்னாடியே தெரியுமா? என்னையும் அவர் தான் பார்க்க சொன்னாரா? எப்பிடி தாத்தா???

ஆமாப்பா. உங்க அப்பா இந்த தேதியில நீங்க கீர்த்தன பார்க்கணும். கூடவே இந்த செய்தியையும் அவன்கிட்ட சேர்க்கணும். அவனுக்கு இது கண்டிப்பா உதவியா இருக்கும்னு சொன்னார்.

அன்று,

சித்தன் ஐயாவிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று தனாவின் அப்பா தரணிநாதன் அவரை தனியாக அழைத்து வந்தார்.

என்ன நாதன், என்ன விஷயம். ஏன் இவ்வளவு சோர்ந்து போய் இருக்கீங்க...

விரக்தியாய் ஒரு புன்னகையை சிந்திய நாதன், நீங்க சொன்னா நம்புவீங்களான்னு தெரியல. இருந்தாலும் சொல்லுறேன்.. நான் இன்னும் கொஞ்ச நாள்ல சாக போறேன் ஐயா.

ஐய்யோ நாதா என்னப்பா இப்பிடி சொல்லுற.

ஆமாங்க ஐயா இன்னும் கொஞ்ச நாள் தான் நான் சாக போறேன். நான் செஞ்ச ஒரு சின்ன விஷயம், என் குடும்பத்தையே உருகுலைக்க போகுது. என் கடைசி புள்ள ரொம்ப கஷ்டப்பட போறான். இதோ இது அவன் கைக்கு கிடைக்கிறப்போ எத்தனை இழப்பு என் குடும்பத்துல நடக்க போகுதோ தெரியல..?? என கையிலிருந்ததை காட்டினார் நாதன்.

இனி நடக்க போற எல்லாத்துக்கும் காரணம் நான் தான். அதான் அதுக்கான ஒரு சின்ன வழியையும் நானே கண்டுபிடிச்சு இதுல சொல்லியிருக்கேன். இதை அவன் கிட்ட கொண்டு போய் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு.

நானே இதை அவன் கிட்ட கொடுக்கலாம் தான். ஆனா இது இப்போ இந்த ஈசனோட பார்வையிலேயே இருக்கணும்றது தான் ஈசனோட கட்டளை. சரியா இந்த தேதியில இதை அவன் கிட்ட சேர்த்திடுங்க.. உங்களுக்கு இதை அவன் கிட்ட சேர்க்கிற வரை பல இன்னல்கள் வரலாம். எல்லாத்தையும் நீங்க கடந்து தான் ஆகனும். அதற்கான பலத்தையும் தாங்குற சக்தியையும் இதோ இந்த மாலை உங்களுக்குத் தரும்.

ஆனா எனக்கு ஒரு சந்தேகம் நாதா.

தெரியும் ஐயா. இதை ஏன் குறிப்பிட்டு உங்க கிட்ட குடுக்கணும்னு தானே.

ஆமாப்பா...

அதுவும் இந்த ஈசனோட கட்டளை தான். அது மட்டுமில்ல இனி கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்க போகும் என்னோட குடும்பத்துக்கும், மகனுக்கும் இதை கொடுக்க போறதும், உறுதுணையா இருக்க போறதும் நீங்க தான். என் பையன் இதை படிக்கும் போது நீங்களும் கூட இருந்து படிங்க. உங்களுக்கே புரியும். பல விஷயங்கள் தெளிவா தெரியும்.

சரிப்பா நாதா கண்டிப்பா நான் இதை செய்யுறேன்.

ரொம்ப நன்றி ஐயா. அப்புறம் ரொம்ப கவனமான விஷயம் ஐயா, எக்காரணத்தை கொண்டும் இந்த கையேடு அந்த வீட்டுக்குள்ள மட்டும் நுழையவே கூடாது.

பத்திரம்...பத்திரம்.. ரொம்ப பத்திரம் ஐயா, நீங்களும்.... இந்த கையேடும்..

அதோடு போனவர் தான். திரும்ப வரவே இல்லை
என தனாவின் அப்பா சொன்ன அனைத்தையும் சொல்லி அந்த கையேட்டை அவனிடம் ஒப்படைத்தார் சித்தன்.

அவன் கேட்ட செய்தி அவனை பல சிந்தனைக்கு தள்ளினாலும் பெரியவர் கொடுத்ததை வாங்கிக் கொண்டான்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் தம்பி.இதை இங்க இருக்குற ஏதாவது கோவில்கள்ல தான் பத்திரப்படுத்தனும். ரொம்ப முக்கியம் தம்பி.

யோசித்த தனா.. சரிங்க தாத்தா.. ஆனா இப்போ நாங்க கோவிலுக்குள்ள போக முடியாது. அதனால நீங்க உதவி செய்ய முடியுமா?

சொல்லுப்பா.

நான் கோவிலுக்கு வெளியில நிக்கிறேன். நீங்க உள்ள போய் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட இதை கொடுத்து பத்திர படுத்த சொல்லுங்க. அவருக்கு என்ன பத்தி முழுதா தெரியும். அவர் கிட்ட கொடுத்து வைங்க. இன்னும் ரெண்டு நாள் தான் அதுக்கு அப்புறம் நான் இதை வாங்கிக்கிறேன். சரிப்பா வா உடனே போகலாம்.

விரைவாக அதை எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்து விட்டார் சித்தன். தனா அலைபேசி வழியாக அனைத்தையும் சொல்லி அந்த கையேட்டை பத்திரப்படுத்தி விட்டு
சித்தனோடு வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனுக்காக காத்திருந்த சுமதி, தனாவுடன் வந்த சித்தனை பார்த்து யார் என்று தனாவிடம் கேட்க,

ஆங், அக்கா இவர் சித்தண்ணன் ஐயா. அப்பாவுக்கு ரொம்ப பழக்கம். பக்கத்து ஊர்ல கொஞ்சம் வேலை இருக்காம். நம்ம கடைக்கு வந்தாங்க, நான் தான் சரி வெளியில எங்கேயும் தங்க வேண்டாம், இங்கேயே தங்கிக்க சொல்லி கூட்டிட்டு வந்தேன்.

ஓ.. அப்பிடியா. வாங்க தாத்தா.

தாத்தா நீங்க அந்த ரூம்ல தங்கிக்கோங்க. இப்போ வாங்க சாப்பிடலாம்.

சுமதி பரிமாற இருவரும் உண்டு முடித்தனர். சாப்பிடும் வரை சித்தனின் பார்வை முழுதும் சுமதியிடமே இருந்தது. சரி தானாவிடம் கேட்டுக் கொள்ளலாம் என காத்திருந்தார் அவர்.

டேய் தனா, உன்னை தேடி மாமா வந்துட்டு போனார். போய் என்னன்னு கேட்டுட்டு வா சரியா.

ம்ம் சரிக்கா.

மீண்டும் சித்தன் ஐயாவை உடன் அழைத்துக் கொண்டு வேலனை தேடி கிளம்பினான் தனா.

தம்பி, ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்க கூடாது.

சொல்லுங்க தாத்தா.

அக்காவுக்கு வீட்டுக்கார் இல்லயாப்பா.

ம்ம் ஆமா தாத்தா. இப்போ தான் மாமா இறந்தாங்க.. நாளை மறுநாள் முப்பதாம் நாள் காரியம்.

என்னப்பா சொல்லுற,

ஆமா தாத்தா.

அக்கா ரொம்ப பக்குவம். எங்க குடும்ப சூழ்நிலை புரிஞ்சு, சீக்கிரம் அவளோட துக்கத்தில இருந்து வெளி வந்துட்டா. இப்போ வீட்டில இருக்குற எல்லாரையும் அவ தான் பார்த்துக்கிறா.

ஓ.. சரிப்பா. அப்போ வீட்டுல இன்னும் யார் யார் இருக்கா தம்பி.

இன்னும் ரெண்டு அண்ணிகள் இருக்காங்க தாத்தா.

அப்போ உன்னோட அண்ணன்கள் எங்க இருக்காங்க.

அவங்களும் இறந்துட்டாங்க தாத்தா.
இப்போ மூனு மாசம் ஆகுது. ரெண்டு பேருக்கும் கைக் குழந்தை வேற இருக்கு. அதுலயும் ரெண்டாவது அண்ணன் இறந்தது தான் ரொம்ப கொடுமை தாத்தா.

அவன் சாவே ரொம்ப கொடூரமா தான் இருந்துச்சு. இன்னும் அதை நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு....



விடை தேடி பயணம் தொடரும்.....

Prabhaas...
 
Top