Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

23. Ivan Vasam Vaaraayo!

Advertisement

கதை ஓரளவுக்காவது நல்லா இருக்கா நண்பர்களே?

  • ம்..ம்.. ஏதோ பரவால்ல..

    Votes: 5 83.3%
  • ரொம்ப மொக்க..

    Votes: 0 0.0%
  • பழைய template மா.. நீங்க இன்னும் இம்ப்ரூவ் செய்யணும்..

    Votes: 1 16.7%

  • Total voters
    6

Annapurani Dhandapani

Well-known member
Member
கடைசி எபி டைப் செய்துகிட்டே இருக்கேன்.. நைட்டுக்குள்ள போஸ்ட் பண்ணிடுவேன் நண்பர்களே.. அதுக்குள்ள நீங்க இதப் படிச்சிடுங்க..



23. இவன் வசம் வாராயோ!


வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் கதவருகில் நின்று தன் மீது வேகமாய் மோதும் காற்றை ரசித்தபடி இருந்த தமிழின் அருகில் சென்றாள் நிரஞ்சனா.

அவளுடைய வளையொலி கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் அவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான்.

பதிலுக்கு, அவனைப் பார்த்து புன்னகைக்க முடியாமல் தவித்தாள்.

"என்ன? என்கிட்ட எதாவது சொல்லணுமா?" சரியாக கணித்துக் கேட்டவனை வியப்பாய்ப் பார்த்தாள்.

"ம்.."

"சொல்லு!"

".." அவள் தயங்க, அவள் கையை உரிமையுடன் பிடித்து தன்னருகே இழுத்து நிறுத்திக் கொண்டான்.

வேகமாக மோதும் காற்று அவனுடைய வாசத்தையும் சேர்த்தே அவளிடம் அனுப்ப, அவள் இல்லை என்பது போலத் தலையசைத்து அவனிடமிருந்து தன் கையை உறுவிக் கொண்டு நகர்ந்து நின்றாள்.

"இன்னுமா என் மேல உனக்கு நம்பிக்கை வரல.."

"ஐயோ.. அப்டியில்ல.." அவசரமாக மறுத்தாள்.

"வேற என்ன?" சந்தேகமாகக் கேட்டான்.

"வந்து.. இ.. இந்த.. கல்யாணத்த.." மேற்கொண்டு எப்படி சொல்வது என்று வார்த்தைகளைத் தேடினாள்.

"நீ கவலையே படாத.. எந்த பிரச்சனை வந்தாலும் இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கும் நிரஞ்சனா!" என்றான் உறுதியான குரலில்.

கடவுளே! எனக்கு ஹெல்ப் பண்ணு! இத அவர் கிட்ட சொல்ற தைரியத்த எனக்கு குடு.. கடவுளிடம் வேண்டியபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

அடர்த்தியான கேசமும், அடர்ந்த பெரிய நெற்றி கரு கரு புருவங்கள், கூர்மையான விழிகள், முகத்துக்கு ஏற்ற கூர் நாசி, சிரிப்பை மட்டுமே நிரந்தரமாகச் சிந்தும் புகை படியாத உதடுகள், அடர்த்தியான முறுக்கு மீசை கொஞ்சம் பூசினாற் போல இருக்கும் கன்னங்கள்.. மாநிறத்தில் கொஞ்சம் நீள் வட்ட முகம்.. இன்னும் இன்னும் அந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கத் தூண்டுவது போலிருந்தது அவளுக்கு.

தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டு, புன்னகையின் அளவைக் கூட்டி,

"அழகாதான் இருக்கேன்ல.." என்றான்.

"ம்.." அதிர்ந்து போய் தன் தலையை குனிந்து கொண்டாள்.

அவளுடைய நாடியைத்தன் ஒற்றை விரலால் நிமிர்த்தினான்.

"நீ என்ன கேக்க வந்திருக்கன்னு நா சொல்லட்டா.." என்றான்.

அவளுடைய முகம் இப்போது பயத்தைப் பூசிக் கொண்டது.

"எதுனாலும் கல்யாணம் முடியட்டும்.. அப்றம் பேசிக்கலாம்! போய் நிம்மதியா தூங்கு.." என்றான்.

"அது வந்து.."

"நிரஞ்சனா! என்னை நெனச்சி நீ எதுக்கும் பயப்பட வேணாம்.. கவலப்படவும் வேணாம்.. புரியுதா.." என்றான்.

"நீங்க ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க நெனக்கறீங்க?" ஒரு வழியாய் கேட்டே விட்டாள்.

அவனுக்கும் அப்படிதான் தோன்றியது போல!

"ஹப்பாடா.. ஒரு வழியா மனசில இருக்கறதக் கேட்டுட்டியே.. சூப்பர்!" என்றான்.

"பதில் சொல்லுங்க.."

"இது என்ன கேள்வி! உன்ன பிடிச்சது. கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசப்பட்டேன்.." என்றான்.

"கல்யாணம்ங்கற பேர்ல நா ஏற்கனவே ஒருத்தனால ஏமாற்றப்பட்டவ.. அவனால கர்ப்பமானவ.. அதுவும் கூட நிலைக்காம போனவ.. என்னைப் பாத்ததும் போட்டுத் தள்ளணும்னு ஒரு கும்பலே அலைஞ்சிகிட்டிருக்கு.. என் தலைக்கு மேல எப்பவும் கத்தி ஒண்ணு தொங்கிட்டிருக்கு.. எப்ப வேணும்னாலும் அது என் நடு மண்டையில குத்தலாம்..

அது மட்டுமில்ல.. என் பிறப்பே தப்புதான்.. படிப்பு கிடையாது.. இப்ப ஓரளவு படிக்கறேன்னா கூட அது நீங்களும் உங்க குடும்பமும் எனக்கு போட்ட பிச்சதான்..

எந்தத் தகுதியுமே இல்லாத என்னை எதுக்கு நீங்க கல்யாணம் செய்துக்கணும்னு இவ்ளோ பிடிவாதமா இருக்கீங்க.." என்று அவள் கேட்டாள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தவன்,

"ம்.. இந்தத் தகுதிகள் மட்டும்தான் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் செய்யத் தேவையான தகுதிகளா என்ன?"

"இல்லங்கறீங்களா.."

"ஒரு பெண்ணுக்கு கல்யாணம் செய்துக்க மட்டுமில்ல.. வாழறதுக்கும் கூட தேவையான தகுதிகள் என்ன தெரியுமா.. அன்பு, பாசம், நேசம், சகிப்புத்தன்மை, துணிவு, என்ன பிரச்சனை வந்தாலும் அத தகர்த்தெரியற தைரியம்.. என்ன மாதிரி சிட்யுவேஷனையும் ஹேன்டில் பண்ற சாமர்த்தியம்.. புத்திசாலித்தனம்.. இதெல்லாம்தான் தகுதிகள்னு நான் நெனக்கிறேன்..

இதெல்லாம் உன் கிட்ட நிறையவே இருக்கு..

அப்றம் கடைசியா சொன்னியே.. ஒரு கத்தி உன் தலைக்கு மேல தொங்குதுன்னு.. அது எப்டியிருக்குன்னு பாக்கணும்.. அதுக்குதான் உன்ன கல்யாணம் செய்துக்கணும்னு நெனக்கிறேன்." என்றான் தமிழ்.

நிரஞ்சனா அவன் சொன்னதைக் கேட்டு கண்கள் விரித்து அவன் கண்ணையே பார்த்தாள்.

"இது மாதிரிலாம் இனிமே ஒனக்கு டௌட்டே வரக் கூடாது." என்று சொல்லிக் கொண்டே அவளைத் தன்னருகே இழுத்தவன் அவளுடைய இதழ்களைத் தன் இதழ்களால் சிறை செய்ய முற்பட்டுவிட்டு, அவனுடைய செய்கையில் அதிர்ந்தவளின் முகம் பார்த்து,

"இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்றமா.. உன் கிட்ட பர்மிஷன்லாம் கேக்கவே மாட்டேன்.. எனக்கு எப்பல்லாம் தோணுதோ.. அப்பல்லாம்.." என்று குறுஞ்சிரிப்புடன் கூறிக் கண் சிமிட்டிவிட்டு, அவளை கை பிடித்து அவர்களின் இருக்கைக்கு அழைத்து வந்தான்.

அவளுடைய இருக்கையில் அவளைப் படுக்க வைத்து விட்டு,

"நிம்மதியா தூங்கு பேபி.. எல்லாம் ஆஃப்டர் மேரேஜ் பாத்துக்கலாம்.. சரியா?" என்று கேள்வியாகக் கேட்டுவிட்டு பதிலை வாங்கிக் கொள்ளாமல் மேல் பர்த்தில் ஏறிப் படுத்துக் கொண்டான்.

நிரஞ்சனா மீண்டும் இறைவனைத் துணைக்கு அழைத்தாள்.

என்ன கடவுளே.. எனக்கு நீ ஹெல்ப்பே பண்ண மாட்டேங்கற.. நா என்ன என் வாழ்க்கைய காப்பாத்துன்னா கேக்கறேன்!? அவரு வாழ்க்கைய காப்பாத்ததானே இவ்ளோ நேரமா வேண்டிட்டிருக்கேன்.. ப்ளீஸ் கடவுளே.. இந்த ஒரு உதவிய மட்டும் செஞ்சுடு.. அப்றம் வேற எதையும் வேண்டிக்க மாட்டேன்.. என்று கடவுளிடம் ஒப்பந்தம் போட்டபடி படுத்திருந்தாள்..

வேகமாகச் சென்று கொண்டிருக்கும் ரயிலின் அசைவு, தொட்டிலில் ஆடுவது போலிருக்க, அதை ரசித்தபடியே மற்ற எல்லாவற்றையும் மறந்து போனவளாய் உறங்கிப் போனாள்.

மறுநாள் அதிகலையிலேயே மதுரைக்குச் சென்று சேர்ந்தார்கள்.

ரயிலை விட்டு இறங்கியதுமே அவர்களை வரவேற்கும் விதமாக பெரிய ஃபோர்ஸ் ட்ராவலர் வாகனத்தை வைத்துக் கொண்டு இருவர் ரயில் நிலையத்திலேயே காத்திருந்தனர்.

"வாங்கத்த.. இப்பதான் ஊர்ப்பக்கம் வரணும்னு தோணிச்சா.." என்று உரிமையுடன் கேட்டபடி ஒருவன் வந்து பைகளையெல்லாம் எடுக்கத் தொடங்க,

"ஏய்.. தமிழு.. முகிலு.. எத்தன நாளாச்சுடே.. எப்டிடே இருக்கே.." என்று கேட்டு மற்றொருவன் தமிழிடமும் முகிலிடமும் நட்பு பாராட்டிவிட்டு,

"கயலு.. நல்லாயிருக்கியா தாயி.." என்று அவளிடமும் குசலம் விசாரித்தான்.

மூவரும் அவனுக்கு பதில்களைக் கூறிக் கொண்டே எல்லாப் பைகளையும் எடுத்து வண்டியில் பத்திரமாக அடுக்கினார்கள்.

"இதான் நீ கட்டிக்கப் போற புள்ளையா தமிழு.." என்று ஒருவன் நிரஞ்சனாவைப் பார்த்துக் கேட்க, தமிழ்,

"ஆமாண்ணே.. நல்லாயிருக்கா.."

"இந்தப் புள்ளைக்கு என்னா கொறச்சல்.. நல்லா செவ செவன்னு ஸ்ரீதேவி கணக்கா இருக்கா.." என்று கூறிவிட்டு பைகளைத் தூக்கத் தொடங்கினான்.

தமிழ் நிரஞ்சனாவைப் பார்த்து புன்னகைக்க, அவள் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

வளர்மதியும் மதுரமும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வண்டியில் ஏற, பின்னாலேயே நிரஞ்சனாவும் கயலும் ஏறிக் கொள்ள, அதன் பின் ஆண்கள் நால்வரும் ஏறினார்கள்.

குழந்தைகளை வைத்துக் கொண்டு வளர்மதியும் மதுரமும் முதல் இருக்கையில் அமர, கயலும் முகிலும் அடுத்த இருக்கையில் அருகருகே அமர்ந்து கொள்ள, அவர்களுக்குப் பின்னே நிரஞ்சனா அமர, அவர்களுக்குப் பின்னே சொக்கலிங்கமும் ஈஸ்வர பாண்டியும் அமர, உடன் வந்த மற்றொருவன் ஓட்டுனரின் எதிரே அமர்ந்தான். தமிழ் வந்து உரிமையுடன் நிரஞ்சனாவின் அருகில் அமர்ந்து அவளுடைய கைகளைத் தன் கைகளுடன் கோர்த்துக் கொண்டான்.

எல்லாரும் ஏறியதும்,

"பொறப்படுவோமா.." என்றான் வண்டியோட்டி.

"ஆமாம்ப்பா.. வழியில எங்கனா நிறுத்து.. புள்ளைங்களுக்கு பாலு வாங்கிடலாம்.." என்றார் ஈஸ்வர பாண்டி.

வண்டி கிளம்பி வேகமெடுக்க, சிலுசிலுவென்று காற்று முகத்தில் மோத, எல்லாரும் மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றனர்.

கயலும் முகிலும் எதையோ குசுகுசுத்தபடி இருக்க, நிரஞ்சனாவுக்கு தமிழின் மேல் உரசியபடி அமர்ந்திருந்தது என்னவோ செய்யத் தொடங்கியது.

அவன் அவளுடைய கைகளைக் தன் கைகளுடன் கோர்த்துக் கொண்டு அதைத் தன் கன்னத்தில் வேறு வைத்துக் கொண்டான்.

அவனுடைய கன்னத்தின் வழவழப்பும், மீசையின் குறுகுறுப்பும் அவ்வப்போது உரசும் இதழ்களும் அவளை மயக்கிக் கொண்டிருந்தன.

தன்னிச்சையாக அவள் அவனுடைய தோள்களில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

அவன் அவளுடைய உச்சந்தலையில் முத்தமிட்டான்.

இந்தக் கல்யாணத்த நிறுத்தணும்னு நீ நெனக்கிற.. நா விட மாட்டேன் நிரஞ்சனா.. உன் பிரச்சனை என்னன்னு எனக்கு தெரியும்.. உன்னப் பாத்த அன்னிக்கே என் மனச நா பறி குடுத்துட்டேன்.. நீ அப்ப அடுத்தவன் பொண்டாட்டியா இருந்த.. ஆனா இப்ப.. எனக்கு.. எனக்கு மட்டும்தான்.. உன்ன எதுக்காகவும் யாருக்காகவும் விட்டுக் குடுக்க மாட்டேன்.. உன் தலைக்கு மேல தொங்கற கத்தி என்னன்னு எனக்கு தெரியும் நிரஞ்சனா.. இந்த சின்ன விஷயத்துக்காக உன்ன இழக்க மாட்டேன்.. அந்தக் கத்தியிலிருந்து உன்ன என் அன்பு பாதுகாக்கும்.. என்று அவளிடம் சொல்வது போல தனக்குள் சொல்லிக் கொண்டு, இன்னும் அவளை ஒட்டி அமர்ந்து கொண்டான்.

இந்த கல்யாணத்த எப்டியும் நிறுத்திடுவேன்.. இவரு நல்லா இருக்கணும்.. ஆனா.. இவரோட இந்த அன்பு.. இந்த பாதுகாப்பு உணர்வு.. நா காலம் முழுக்க தனியா தைரியமா வாழ இந்த உணர்வை எனக்குள்ள இப்ப சேமிச்சிக்கறேன்..

இப்பவே இவரு இவ்ளோ அன்பை கொட்டறாருன்னா.. கல்யாணத்துக்கு அப்றம்.. நெனக்கவே இனிப்பா இருக்கு.. ஆனா எனக்கு இனிப்பா இருக்கேன்னு நா இவருக்கு கசப்பான வாழ்க்கைய தரலாமா.. அது தப்பு.. எப்டியாவது இந்த கல்யாணத்த நிறுத்திடணும்.. என்று நினைத்துக் கொண்டே அதற்கு மாறாக அவளும் அவனுடன் இன்னும் அதிகமாக ஒட்டி அமர்ந்து கொண்டாள்.

ஏதேச்சையாக பின்னால் திரும்பிப் பார்த்த முகில், தமிழும் நிரஞ்சனாவும் ஒட்டி அமர்ந்து கொண்டு கைகளை இறுக்கமாகக் கோர்த்துக் கொண்டு ஒருவர் தோளில் மற்றொருவர் சாய்ந்து கொண்டு கண்களை மூடிய நிலையில் இதழ்களில் புன்னகையுடன் ஒரு விதமான மோன நிலையிலிருப்பதைப் பார்த்துவிட்டு, சத்தமில்லாமல் கயலிடம் காட்டினான்.

கணவனும் மனைவியும் ரகசியமாகப் புன்னகைத்துக் கொண்டார்கள்.

இருவரின் மனதிலும், இவர்கள் இருவரும் எப்போதும் இப்படியே அன்புடன் இருக்க வேண்டும் என்று வேண்டுதல் எழுந்தது.

காலை எட்டு மணி சுமாருக்கு அவர்கள் கம்பத்தை அடைந்தனர். நடுவே இரண்டு முறை குழந்தைகளுக்காக பால் வாங்கவும் தேனீர் அருந்தவும் வண்டியை நிறுத்தினர்.

சுற்றிலும் பச்சைப் பசேல் என்றிருக்கும் வயல்களும், சலசலவென்று இசையாய் ஓடும் நீரோடைகளும் அந்த இசைக்கு சரிசமமாய் சத்தமிட்டு குரலெழுப்பும் பல வகையான பறவைகளும் காலையின் இளவெயிலும் பார்க்கப் பார்க்க கண்ணுக்கு விருந்தாக அமைந்தன.

வண்டியின் ஜன்னல் வழியாகத் தெரிந்த இயற்கைக் காட்சிகளை நிரஞ்சனாவுக்குக் காட்டியபடியே வந்த தமிழின் மடியில் வந்து அமர்ந்தாள் முத்தழகி.

"அடி அழகம்மா.. முழுச்சிகிட்டீங்களா.. பால் குடிச்சீங்களா.." என்று கேட்டு தன் மருமகளை அவன் கொஞ்சத் தொடங்க,

"மாமா.. அஞ்சத்த.." என்று அவளும் பதிலுக்கு அவர்களிடம் செல்லம் கொஞ்சத் தொடங்கினாள்.

"அத்த.. கண்ணா.. இனூ.. தூங்கறான்.. எப்ப ஏந்துப்பான்.." என்று மழலையுடன் அவள் கேட்க,

"ஆமாடா.. அவன் உன்ன விட குட்டில்ல.. அதான் இன்னும் தூங்கறான்.. அவன் எழுந்துக்கற வரைக்கும் நாம வௌாடலாமா.." என்று நிரஞ்சனா கேட்க,

"ம்.. கத சொல்லு.." என்று அவள் தன் அத்தையை மிரட்டினாள்.

நிரஞ்சனா, அவளுக்குக் கதை சொல்லத் தொடங்க, எல்லாருமே கதை கேட்கத் தொடங்க, அனைவருக்குமே அந்தப் பயணம் இனிமையாக அமைந்தது.

கம்பத்தில் அவர்கள் சென்று இறங்கியதும் குசலம் விசாரிக்கவென்று ஊரே திரண்டு விட்டது. பெரிய மாளிகை போன்ற வீட்டின் முன்னால் சென்று இறங்கினார்கள்.

நிரஞ்சனா அந்த மாளிகையைப் பார்த்து மயங்கி விழாத குறைதான்.

இவ்ளோம் பெரிய வீடா.. இது வீடா இல்ல அரண்மனையா.. அப்ப இவரு பெரிய பணக்கார வீட்டு புள்ளையா.. நம்ம வீடு மொத்தமே இவங்க வீட்டு பாத்ரூம் சைஸ்தான் இருக்கும்.. இவங்க வீடு நம்ம ஊர் சைஸுக்கு இருக்கு..

அப்ப சொந்தக்காரங்க வேற நெறைய பேர் இருப்பாங்க.. என்ன இவரு கட்டினார்ன்னா இவருக்கு அவமானம்தான் மிஞ்சும்.. கடவுளே.. நீ ஏன் எப்ப பார்த்தாலும் என்னையே கரம் வெச்சி சோதிக்கற.. என்று நினைத்துக் கொண்டாள் நிரஞ்சனா.

"வாம்மா.. இதான் நம்ம வீடு.. வலது கால எடுத்து வச்சி உள்ள வா.." என்று சொல்லி வரவேற்றாள் வளர்மதி.

நிரஞ்சனா நடுங்கியபடி அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.

"மச்சான்.. நீங்க சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாட்டையும் செஞ்சாச்சி.. இனிமே கோவில்ல போய் தாலி கட்டறதுதான் பாக்கி.." என்றான் ஒருவன், ஈஸ்வர பாண்டியிடம்!

"எல்லாரு நல்லா கேட்டுக்கிடுங்க.. வர வெள்ளிக்கிழமை நம்ம ஊர் மாரியம்மங் கோவில்ல என் மருமவன் தமிழுக்கு கல்யாணம்.. எல்லாம் சரியா நடக்கணும்.. என்ன.." என்று அவர்களிடம் சொல்ல எல்லாரும் சம்மதம் என்பது போல தலையாட்டினார்கள்.

எல்லாவற்றையும் கேட்டபடி கயலின் பின்னால் சென்றாள் நிரஞ்சனா.

"ரஞ்சி! இந்த ரூம்ல நீ இருந்துக்கோப்பா.. கல்யாணத்துக்கப்றம் அண்ணன் ரூம்.." என்று சொல்லி கயல் கண் சிமிட்டி நிரஞ்சனாவின் கன்னத்தில் தட்டிவிட்டுச் சென்றாள்.

நிரஞ்சனா அந்த அறைக்குள் சென்று பார்க்க, விசாலமான அறையின் நடுவில் கட்டில் போடப்பட்டு பஞ்சு மெத்தை இருக்க, பெரிய பெரிய ஜன்னல்களின் உதவியால் அறை நல்ல வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது.

அறையில் சுற்றிப் பார்க்க, கதவு ஒன்று தெரிந்தது. அந்தக் கதவைத் திறந்து பார்த்தாள்.

அது பால்கனியாய் விரிந்தது. பால்கனியில் ஒரு ஊஞ்சலும் இருந்தது. பால்கனியிலிருந்து பார்த்தால் வீட்டின் பின்புறமிருந்த பூந்தோட்டம் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் இருந்தது கண்டு அவள் மனம் புத்துணர்ச்சியை நிரப்பிக் கொண்டது.

"எங்க வீடு உனக்கு பிடிச்சிருக்கா.." என்ற தமிழின் குரல் பின்னாலிருந்து கேட்க,

அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.

"இப்டி ஒரு அரண்மனைய யாருக்காவது பிடிக்காம இருக்குமா.." என்றாள்.

அவன் புன்னகைத்தான்.

இதான் சரியான சமயம்.. இவர் கிட்ட சொல்லிடலாம்.. என்று நினைத்து அவள் அவனுடைய முகத்தைப் பார்க்க,

"சரி! குளிச்சி ஃப்ரஷ் ஆகிட்டு சாப்பிட வான்னு அம்மா சொல்ல சொன்னாங்க.." என்றான்.

"ம்.. வந்து.." என்று அவள் ஆரம்பிக்க, அவனுடைய கைப்பேசி சிணுங்கியது. அதை எடுத்துப் பார்த்தவன்,

"முக்கியமான கால்.. அப்றம் பேசலாம்.. சீக்ரம் சாப்ட வா.." என்று சொல்லி சென்றுவிட்டான்.

அதன் பிறகு அவளுக்கு தமிழிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

அந்த வீடும் வீட்டு மனிதர்களும் ஊர்க்காரர்களும் அன்பாகப் பழகிக் கொள்வதைப் பார்த்த நிரஞ்சனாவுக்கு வியப்பாக இருந்தது.

ஊர்க்காரர்கள் தமிழ் கட்டிக் கொள்ளப் போகும் பெண்ணைப் பார்க்க வந்தனர். அவர்களுடன் வந்த நண்டு சிண்டுகளுக்கு எல்லாம் நிரஞ்சனாவை அடையாளம் தெரிந்ததுதான் வியப்போ வியப்பு.

"யேய்.. நம்ம ஊட்டூப்புல கத சொல்ற அக்காடா.." என்று ஒரு சின்ன வாண்டு கூவ, ஊரில் உள்ள குழந்தைகள் எல்லாம் தமிழின் அரண்மனையில் கூடி விட, நிரஞ்சனா தன் கதை சொல்லும் படலத்தை இனிதே தொடங்கினாள்.

தமிழ் அவள் கதை சொல்லும் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, முகில் வந்து அவனருகில் வந்து அமர்ந்து அவனைக் கலாய்க்கத் தொடங்கினான்.

"டேய்.. அடங்குடா.. இத்தன வருஷம் கழிச்சி எனக்கும் சைட் அடிக்க சான்ஸ் கிடைச்சிருக்கு.. போவியா.." என்று தமிழும் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த ஊர் இளைஞிகள் தமிழிடம் வம்புக்கு வந்தனர்.

"என்ன ஐத்தான்.. உள்ளூர்ல உங்களுக்காக இத்தன பொண்ணுங்க இருக்கோம்.. எங்கள வுட்டுப்புட்டு பட்டணத்தில பொண்ணு பாத்துகிட்டீக.."

"அவளும் கிராமத்து பொண்ணுதேன்.." என்றான் அவர்களுக்கு இசைவாய்.

"ஆங்.. எந்தூரு.."

"திருச்சி தாண்டி.. மணப்பாறை.." என்றான் தமிழ்.

"மாடு புடிக்கற ஊருதானே.."

"முறுக்கும் செய்வாங்களே.."

"அப்ப ஐத்தானுக்கு நெதம் நெதம் முறுக்குதேன்.."

"நெதம் முறுக்கு திங்க முடியுமா.."

ஒவ்வொருத்தியும் ஒவ்வொன்று பேசி அவனை வம்புக்கு இழுக்க,

"ஏய்! எல்லாம் வயசு புள்ளையா ஒழுங்கா இருங்க.. கண்ணாலம் கட்டப் போற பொண்ணப் பாத்தோமா.. போனமானனு இல்லாம.. அங்கென்ன வயசுப் பையன் கிட்ட பேச்சு ஒங்களுக்கு.." என்று ஒரு பெரிசு அதட்ட, வம்பு பேசிய இளைஞிகள் எல்லாம் நமுட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து நகர, தமிழும் முகிலும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

ஈஸ்வர பாண்டியும் சொக்கலிங்கமும் தமிழ் - நிரஞ்சனா திருமணத்துக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்ய, திருமண நாளும் அழகாய் விடிந்தது.

இந்தக் கல்யாணத்த எப்டியாவது நிறுத்திடு கடவுளே.. ப்ளீஸ் என்று வேண்டியபடியே தயாராகிக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா!

இவள் இப்படி நினைத்தது காதில் விழுந்ததோ என்னமோ, இரண்டு நபர்கள் இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் அந்த ஊரில் வந்து இறங்கினர்.

நிரஞ்சனாவால் அன்று மிகப் பெரிய பிரச்சனையை சந்திக்கவிருப்பது தெரியாமல் எல்லாரும் இனிய மனநிலையில் திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.



அவள் ஏன் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்கிறாள்? அப்படி என்ன பிரச்சனையை அவர்கள் சந்திக்கப் போகிறார்கள்?

அடுத்த அத்தியாயத்தில்..




- தொடரும்....

 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அன்னபூரணி தண்டபாணி டியர்
 
Last edited:
ஏன் நிரஞ்சனா, நல்லாத்தானே போகுது, நீ ஏன் குழப்புற யார் அந்த 2 பேர் ???
 
Top