Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

21. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
வேலனும் அக்காவின் குடும்பத்தை காப்பாற்ற பல இடங்கள் அலைந்து வந்து விட்டார். அப்படி ஒரு இடத்தில் தான் தற்செயலாக அவரது நண்பனை சந்திக்க, நல விசாரிப்புகளில் துவங்கி, இறுதியில் அங்கு வந்ததற்கான காரணத்தில் முடிந்தது. பிரச்சனையை முழுவதுமாக அவரிடம் சொல்ல, வேலனின் நண்பன் மனதில் முதலில் தோன்றியது நாகர் மலை தான்.

வேலனிடன் வேற எதுவும் அவர் சொல்லவில்லை. நீ அந்த பையனை கூப்பிட்டுகிட்டு வீட்டுக்கு வா. உனக்கு முக்கியமான இடத்தை பத்தி சொல்லுறேன். அங்க போங்க. கண்டிப்பா ஏதாவது வழி கிடைக்கும்.

நீ ஊருக்கு போய்ட்டு சீக்கிரம் வந்து சேரு. நான் இப்போ கிளம்புறேன் வேலா. பாத்து பத்திரமா போ.

சரிடா..

மறுநாளே வேலன் தனாவை அழைத்துக் கொண்டு அவரது வீட்டிற்க்கு சென்று பேசிவிட்டு வரும் போது தான் திருக்குமரனின் மரணம் நிகழ்ந்தது.

ஆக நாகர்மலை பயணம் முன் கூட்டியே முடிவு செய்யப்பட்டது தான்.
.........

என்ன தனா யோசிச்சுக்கிட்டே இருக்க.

அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டும் ஒரு வார்த்தை எங்க கிட்ட சொல்லவே இல்லயே மாமா. அண்ணனுங்க கிட்ட முன்கூட்டியே சொல்லியிருந்தா அவங்க இந்நேரம் உயிரோட இருந்திருப்பாங்க தானே. ஏன் மாமா இப்பிடி எல்லாரும் என்ன விட்டுட்டு போய்ட்டாங்க.

ஐயோ... ஐயோ... அம்மா.... என அங்கேயே அவன் கதறி அழ சித்தனும் பட்டரும் தான் அவனைத் தேற்றினர். வேலனும் ஒருபுறம் அழ, சிறிது நேரத்திற்கு பிறகே இருவரும் சமாதானம் அடைந்தார்கள்.

சரி தனா. இப்போ விஷயத்துக்கு வருவோம்..... உன்னோட பலன் உனக்கு தெரியுதா?

இல்ல... தாத்தா எனக்கு எதுவும் புரியவும் இல்ல தெரியவும் இல்ல.

இல்ல தனா உன்கிட்ட ஏதோ இருக்கு. அதனால தான் அந்த உருவம் நீ தொட போனதும் காணாம போய்டுச்சு.

யோசி நல்லா யோசி. உனக்கே அது புரிய வரும்.

எல்லாரும் யோசிங்க. ஏதாவது சின்ன துருப்பு கிடைச்சா கூட போதும். அதை வச்சே கண்டுபிடிச்சிடலாம்.

எல்லோரும் யோசிக்கத் துவங்க, தனாவால் அந்நிலையில் யோசிக்க கூட முடியவில்லை. இப்போ எனக்கு நடக்கிறது எல்லாம் அப்போ அப்பாவுக்கும் நடந்திருக்கு. எல்லாத்துக்கும் காரணம் அந்த... அந்த உருவம் தான். எப்பிடியும் அதை நான் அழிச்சே தீருவேன்... அழிச்சே தீருவேன். என்பதே இப்போது அவன் மனம் முழுதும் ஓடிக் கொண்டிருந்தது

அப்போது தான் சித்தன் ஐயா யோசனையுடன்,

வேலன், தனா... நல்லா நியாபகப் படுத்தி சொல்லுங்க. நாதன் கூட மகாம்மாவும் தானே சேர்ந்து போனாங்க. அப்போ நாதனை கொன்ன உருவம் ஏன் மகா அம்மாவை ஒன்னும் பண்ணல.

அவங்க ஆஸ்பத்திரி வரை உயிரோட தான் இருந்திருக்காங்க. அதுமட்டுமில்ல அடிபட்டதால மட்டும் தான் இறந்து போனதா தானே தனா என்கிட்ட சொன்ன.

ஆமா தாத்தா.

அப்போ மகா அம்மா கிட்ட அந்த உருவத்தால நெருங்க முடியாது போயிருக்கணும்.

ஆமா பட்டரே.. சரியா சொன்னீங்க. எல்லாத்தையும் சேர்த்து வச்சு பார்த்தா,.....

கண்டிப்பா அந்த பலன் மகா அம்மாவே தான். நேக்கு புரிந்திடுத்து. அவங்க வீட்டுல பசு மாட்டுக்கு துன்பம் வந்த போது என்கிட்ட தான் முதல்ல பரிகாரம் கேட்டு வந்தா. அப்போ நானும் கெட்ட சகுணம்னு தான் சொன்னேன். அதனால என்கிட்ட கேட்டா மாதிரி வேறு யார் கிட்டயும் கேட்டிருந்தா?

ஆமா பட்டரே... நீங்க யோசிக்கிறது சரி தான்.

தனா... வீட்டுல பசுவுக்கு நடந்த பிரச்சனைக்கு அப்புறம் மகா அம்மா உன்ன எங்கயாவது கூட்டிட்டு போனாங்களா..

அது... தாத்தா... ஆங்.. ஆமா தாத்தா.. ஒரு மூனு நாளைக்கு அப்புறம் ரெண்டு பேரும் நம்ம குளக்கரை கோயிலுக்கு போனோம். அங்க அம்மா ரொம்ப நேரமா ஒருத்தர் கிட்ட பேசிட்டு இருந்தாங்க. அதுக்கு அப்புறம் மறுபடியும் மறுநாள் காலையில கோவிலுக்கு போனோம். அப்போ அவர் ஏதேதோ சொல்லி அம்மாவ பூஜை பண்ண சொன்னார். அம்மாவும் பண்ணாங்க. கடைசியா ஏதோ என்ன பாத்து கை நீட்டி சொன்னார். அம்மாவும் சரின்னு சொன்னாங்க. அவ்வளவு தான் எனக்கு தெரியும். வேற எதுவும் தெரியலையே தாத்தா.

அவர் எப்போதும் அங்க இருக்கவர் தானா.

ஆமா தாத்தா. அங்க இருக்க சாமி தான்.

அப்போ சரி வேலன், நாம குளக்கரை கோயிலுக்கு போனா எல்லாம் தெரியவரும். வாங்க உடனே போகலாம்.

சித்தனையா நீங்க, வேலன், தனா மூனு பேரும் போங்கோ. நான் இந்த கையேட்டை பத்திரப்படுத்திட்டு பிரயானத்துக்கு தயாரா இருக்கேன். நீங்க புறப்பட்டு நேரமாவே கோவிலுக்கு வந்துடுங்கோ. அய்யனை சேவிச்சிட்டு எல்லாரும் சேர்ந்தே கிளம்பலாம்.

ம்ம் புறப்படுங்கோ...

சரிங்க பட்டரே.

மீண்டும் மூவரும் குளக்கரை கோயிலுக்கு போக அங்கே கோயில் பூசாரி இல்லாமல் அவரது மகன் இருக்க, என்ன தம்பி அப்பா இல்லையா?

இதோ பின்னாடி தான் இருக்கார். இருங்க வரச் சொல்லுறேன்.

கோவில் பூசாரி வர, மூவரும் பெரும் எதிர்பார்ப்போடு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சித்தனையுடன் புருவம் சுருக்கி பார்த்த பூசாரி, என்ன வேலன் எல்லா உண்மையும் தெரிய வந்திருச்சா.

பூசாரி ஐயா...

ஆமா வேலன் எனக்கும் முன்னமே தெரியும். அதுமட்டுமில்ல உங்க அக்கா மகாவுக்கும் தெரியும்.

என்ன பூசாரி ஐயா நீங்க ஒன்ன சொல்லுறீங்க.

ஆமா வேலா.. மாகவுக்கு எல்லா உண்மையும் தெரியும். அந்த உருவத்தையும் தெரியும். அது நாதனை படுத்தின பாடும் தெரியும்.

அந்த உருவத்தை பத்தி உங்களுக்கு தெரியாத பல விஷயங்களும் எனக்கு தெரியும்.

ஆனா பேசவேண்டிய சூழ்நிலை இப்போ இல்ல. நாம பேச வேண்டிய இடமும் இது இல்ல. உங்களோட பயணத்துல எனக்கும் பங்கு இருக்கு.

எல்லாரும் சேர்ந்தே போகலாம். வாங்க.

ஆனா பூசாரி ஐயா.. எனக்கு...

தெரியும் கீர்த்தனா... வா நேரம் வந்ததும் உனக்கே தெளிவா புரியும்.

இப்போவே பயணத்தை தொடங்கினா தான் நாம நாளைக்கு காலைல நாகர்மலை போக முடியும். ம்ம் சீக்கிரம் வாங்க.

மனதில் பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும் வீட்டின் பாதுகாப்பிற்காக சித்தன், இளா இருவரும் வீட்டில் இருக்க,

தனா, வேலன், பட்டர், குளக்கரை கோவில் பூசாரி என நால்வரும் நாகர்மலை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர்.

மீண்டும் நாகர்மலையில் பலவேறு நிகழ்வுகளை காண காத்திருப்போம்....


விடை தேடி பயணம் தொடரும்...
Prabhaas....
 
Top