Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

16. Ivan Vasam Varaayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member
16. இவன் வசம் வாராயோ!




"நல்லா பெரிய மண்டபமா புக் பண்ணி ஊரையே கூப்பிட்டு விருந்து வெச்சி ஜாம் ஜாம்னு கல்யாணத்த பண்ணனும்.." வளர்மதி சொல்ல,

"இல்ல அத்த.. சிம்பிளா கோவில்ல வெச்சி தாலி கட்டி கல்யாணத்த ரிஜிஸ்டர் செய்துடலாம்.. முக்கியமான நண்பர்களை மட்டும் இன்வைட் பண்ணி விருந்து வெச்சிக்கலாம்.. போதும் அத்த.." என்றான் தமிழ்.

"என்ன இப்டி சொல்லிட்ட.. உன் கல்யாணம் எப்ப எப்பன்னு கேட்டுட்டிருந்த சொந்தக்காரங்கள எல்லாம் உன் கல்யாணத்துக்கு கூப்பிட வேணாமா.." என்று அங்கலாய்த்தாள் வளர்மதி.

"சரி அத்த.. பெரியவங்க என்ன விருப்பபடறீங்களோ.. அப்டியே செய்ங்க.." என்று பணிவாகச் சொன்னான் தமிழ்.

"ஏன் தமிழ்.. சிம்பிளா போதும்னு சொல்ற.. ஏதாவது காரணம் இருக்கா.." சாெக்கலிங்கம் கேட்டார்.

"அதெல்லாம் எதுவுமில்லப்பா.. எதுக்கு பெரிசா பண்ணி.. எப்டியும் சொந்தக்காரங்கல்லாம் வந்து வயிறு முட்ட சாப்பிட்டுட்டு வண்டி வண்டியா குத்தம் சொல்லிட்டு போவாங்க.. நம்ம கயல் - முகில் கல்யாணத்தில நடந்ததுல்ல.. அதான்.. அப்டி சொன்னேன்." என்றான் தமிழ்.

"சொந்தக்காரங்கன்னா அப்டிதாம்ப்பா இருப்பாங்க.. ஆனா அதுக்காக.. நாம விட்டுக் கொடுக்க முடியுமா.. பாரு.. ஊர் பெரிய மனுஷன்.. பெத்த புள்ள கல்யாணத்துக்கு கூட நம்மள கூப்பிட்டு சோறு போடல.. புதுப் பணக்காரன்ல.. அப்டிதான் இருப்பான்.. அப்டி இப்டீன்னு அதுக்கும் கூட பேசுவானுங்க.. குற்றம் பார்கின் சுற்றம் இல்லை தமிழு.. வேணும்னா ஒண்ணு செய்யலாம்.. கோவில்ல கல்யாணம் செய்துக்கலாம்னு நீ சொன்னதால.. நம்ம குல தெய்வம் கோவில்லயே கல்யாணத்த செஞ்சிடலாம்.. அப்டியே நம்ம சொந்தக்காரங்களுக்கு விருந்தும் வெச்சிடலாம்.. என்ன.. சரியா?" கேட்டார் அவர்.

"ம்.. சரிப்பா.. அப்டியே கல்யாணம் முடிச்சி சாமிக்கு படையலையும் போட்டுடலாம்.." என்று கயலும் யோசனை கூற, சரியாக இன்னும் ஒரு மாதம் கழித்து வரும் ஒரு நல்ல நாளில், தமிழ் - நிரஞ்சனாவின் திருமணம் அவர்களின் சொந்த ஊரில் அவர்களுடைய குல தெய்வம் கோவிலில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழ் - நிரஞ்சனாவின் திருமணத்துக்கு சொக்கலிங்கமும் ஈஸ்வர பாண்டியும் ஜோசியரைப் பார்த்து நல்ல நாள் குறித்துக்கொண்டு வருவதற்காகக் கிளம்ப, மதுரமும் வளர்மதியும் செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள், வாங்க வேண்டிய நகை என்று ஆலோசனை செய்யத் தொடங்கினார்கள்.

கயல் தனக்கும் நிரஞ்சனாவுக்கும் வாங்க வேண்டிய புடவைகள், அதற்கேற்ற டிசைனர் ப்ளவுஸ் என்று அடுக்கத் தொடங்கினாள்.

"ஆனா.. உன் கல்யாணத்துக்கு நீயே ப்ளவுஸ் டிசைன் பண்ணிடுவ.. இல்ல ரஞ்சி.. செம்ம டிசைன் ஒண்ணு காட்டறேன்.. அதே மாதிரி நீ டிசைன் செய்துகிட்டா ரொம்ப அழகா அப்டியே தேவதை மாதிரி இருப்ப.." என்று சொல்லி கண்ணை விரித்தாள்.

நிரஞ்சனா வெறுமே புன்னகைத்து வைத்தாள்.

"கல்யாணத்துக்கு நல்ல பட்டுப் புடவை.. ரிசப்ஷனுக்கு.. ஏய் தமிழ்.. சென்னை வந்தப்றம் ரிசப்ஷன்லாம் உண்டுதானே.. ம்.. ரிசப்ஷனுக்கு அழகான லாங்க் ஸ்கர்ட், சோளி, தாவணி.. என்ன முகில்.. ஓகேயா?.." என்று அவள் தன் கணவனைக் கேட்க,

"ம்.. உனக்கென்ன.. நீ உலக அழகியாச்சே.. நீ எது போட்டாலும் செம்மையா இருக்கும்.." என்றான்.

"கல்யாணம் ரிசப்ஷன் ரெண்டுலயும் நானும் முத்தழகியும் ஒரே மாதிரி ட்ரஸ்.. ஓகேயா.." அடுத்த கேள்வி கேட்டாள்.

"ம்.. செம்ம.. ரொம்ப அழகா.. ட்ரண்டியா இருக்கும்.." என்றான் முகில்.

அனைவரும் ஆளாளுக்கு தனித் தனியாக, கல்யாணத்துக்காக திட்டமிட்டதைக் கண்டதும் நிரஞ்சனா பதறினாள்.

கல்யாணத்துக்கு ஒத்துகிட்டவுடனேயே இப்டி அவசர அவசரமா ஏற்பாடு செய்யறாங்களே.. இது சரியா வருமா.. நா அவரசப்பட்டு சரீன்னு சொல்லிட்டேனோ.. என்று உள்ளுக்குள் தவிக்கத் தொடங்கினாள்.

பெண்களின் பேச்சு நகை புடவையிலிருந்து திருமணப் பத்திரிகைக்குச் செல்ல, திடீரென்று மதுரம் நிரஞ்சனாவைப் பார்த்துக் கேட்டாள்.

"ஆமா ரஞ்சி.. நா ரொம்ப நாளா கேக்கணும் கேக்கணும்னு நெனச்சிட்டே இருந்தேன்.. குழந்தைக்கு என்ன பெயர் வெச்சிருக்க.. எப்பவும் கண்ணு.. ராஜான்னுதான் நீ கூப்பிட்டு கேட்டிருக்கேன்.. குழந்தைக்கு உண்மையா என்ன பெயர்?"

"நா எங்க பேர்லாம் வெச்சேன்.. எந்த பேரும் வெக்கல.. அதுக்கு நாள் நட்சத்திரம் பாக்கணும்.. பெரியவங்கள கூப்பிடணும்.. அப்ப இருந்த இருப்புக்கு உயிர் பொழைக்கறதே பெரிசா இருந்தது.. நீங்க சொல்ற மாதிரி கண்ணு, ராஜா, செல்லம்.. இப்டியே கூப்பிட ஆரம்பிச்சிட்டேன்.."

"ஓ.. சரி.. கவலப்படாத.. நாம இவனுக்கு சீக்கிரமே ஒரு சூப்பரான பெயர் வெக்கலாம்.." என்றாள் மதுரம்.

"ஆமா ரஞ்சி.. உன் டெலிவரி போது யார் உனக்கு உதவிக்கு இருந்தாங்க.."

"எல்லாம் அக்கம்பக்கததில இருந்த பெரியவங்க.. வேற யாருமில்ல.." என்றாள் மெல்லிய குரலில்.

"உனக்கு நார்மல் டெலிவரியா.. இல்ல சிசேரியனா.. பாவம் ஒத்தையாளா கஷ்டப்பட்டிருப்பல்ல.." என்று கேட்டு நலம் விசாரித்தாள் வளர்மதி.

"ச.. சி.. சிசேரியன்.."

"ஓ.. எத்தன நாள் ஆஸ்பத்ரில இருந்த.. தையல் பிரிச்சிட்டு வீட்டுக்கு அனுப்புனாங்களா.. இல்ல அப்றமா தையல் பிரிச்சிக்க வரச் சொன்னாங்களா.." என்று அடுத்த கேள்வி.

இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நிரஞ்சனா தவித்தாள். அவளுக்கு வெலவெலத்துக் கொண்டு வந்தது.

"சாரி.. கொஞ்சம் தலவலிக்கிது.. நா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கவா.." என்றாள்.

"அடடா.. மொதல்லயே சொல்ல் கூடாதா.. காபி தரவா ரஞ்சி?" கரிசனத்துடன் கேட்டாள் மதுரம்.

"இல்ல.. வேண்டாம்.. நா கொஞ்ச நேரம் படுத்திருந்தா சரியாகிடும்.." என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.

கயலும் முகிலும் அடுத்ததாக தமிழுக்கு திருமண உடை வாங்குவது பற்றி ஆலோசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அந்த வீட்டில் கல்யாணக் களை கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது.

எல்லாருடைய மனதிலும் உற்சாகம் பொங்கி வழியத் தொடங்கியது.

அவர்களுடைய சொந்த ஊரில் திருமணம் என்பதால் அங்கு சென்று திருமண ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று சொல்லி சொக்கலிங்கமும் ஈஸ்வர பாண்டியும் தங்களின் சொந்த ஊருக்குக் கிளம்பினார்கள்.

கயலும் முகிலும் வேலை வேலை என்று இருந்தாலும் ஷாப்பிங்கிலும் கருத்தாய் இருந்தனர்.

வீட்டுப் பெரியவர்களிடம் ஆலோசித்து ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வாங்கி வைத்தார்கள்.

பத்திரிகை அடிக்க, தங்கம் வெள்ளி வாங்க என்று ஒவ்வொன்றையும் அவர்கள் மெனக்கெட்டு செய்ய, தமிழுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இப்படிதானே, கயல் - முகில் கல்யாணத்துக்கு தான் ஒருவனே எல்லா வேலைகளையும் செய்தேன் என்று நினைத்துக் கொண்டான்.

தமிழுக்கு, நிரஞ்சனா உற்சாகமாக இருப்பதாகத் தோன்றினாலும் எதையோ நினைத்து ரொம்பவே கவலைப் படுவதாகவும் தோன்றியது.

ஆனால் அவளை என்னவென்று கேட்க அவன் விரும்பவில்லை. காரணம், சுயநலமே! ஆமாம்.. சுயநலமேதான்! பின்னென்ன? இப்பதான் ஒரு வழியா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கா.. இப்ப நா போய் என்ன விஷயம்னு கேட்டு வெச்சி.. இந்த கல்யாணத்தில எனக்கு இஷ்டமில்லன்னு சொல்லிட்டா.. அதனால எதையும் இப்ப கேக்க வேணாம்.. எதுனாலும் கல்யாணத்துக்கப்றம் பேசி தீர்த்துக்கலாம்.. இல்ல வேற எதாவது பிரச்சனைன்னாலும் தீர்த்து வெச்சிடலாம்.. என்று நினைத்து சும்மா இருந்துவிட்டான்.

அவர்களின் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

நிரஞ்சனா வேலை செய்யும் அந்த காதாநாயகியின் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும் தறுவாயில் இருந்ததால் இராப்பகலாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. திருமணத்துக்கு முந்தைய வாரம் வரையில் நிரஞ்சனாவுக்கு அந்த ஒப்பனை வேலை இருந்தது. அதனால் அவள் கால நேரம் பார்க்காமல் வேலைக்கு ஓட வேண்டியிருந்தது.

அவள் மிகவும் சோர்ந்து போனாலும் அவள் வேலைக்கு ஓடுவதை விரும்பினாள் என்றே சொல்ல வேண்டும்.

ஆம்! வீட்டிலிருந்தால், மதுரமும் வளர்மதியும்,

"குழந்தைக்கு எத்தன மாசம் வரை தாய்ப்பால் குடுத்த.."

"ஏன் அப்றம் குடுக்காம நிறுத்திட்ட.."

"குழந்தைக்கு தடுப்பூசிலாம் ஒழுங்கா போட்டியா.."

"இலவச போலியோ சொட்டு மருந்து முகாம்லாம் நடக்குமே.. அதுக்கெல்லாம் கூட்டிட்டு போனியா.."

இப்படி, குழந்தையைப் பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.. பதில் சொல்ல பொறுமையும் இல்லை.. இதெல்லாம் செய்தேனா இல்லையா என்று நினைவும் இல்லை.. அப்றம்தானே சொல்றதுக்கு.. என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அங்கிருந்து நகருவாள்.

வேலைக்கு வந்து விட்டால் இதையெல்லாம் தவிர்த்து விடலாம் அல்லவா? என்று கணக்கு போட்டு வேலை.. வேலை என்று அதிலேயே இருக்கத் தொடங்கினாள்.



ஆனால் இதனால் அவள் பெரிய பிரச்சனையை விரைவில் சந்திக்கப் போகிறாள் என்று தெரிந்திருந்தால் அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருப்பாளோ என்னவோ!?!?







- தொடரும்....




 
ஏன் குழந்தை பிறந்தது பத்தி
பேசுனா தடுமாறுறா
இன்னும் ரகசியம் இருக்கா
 
Top