Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

15. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றாய் அமர்ந்து மகிழ்வுடன் உணவுண்டு கொண்டிருக்க, மேலிருந்து பொருட்கள் எல்லாம் படார் படார் என கீழே விழும் சத்தம் கேட்டது. சத்தத்தை கேட்டு அனைவரும் ஒரே போல மேலே நிமிர்ந்து பார்க்க...

நாதனுக்கு அதை கேட்ட அடுத்த நொடி அவர் உயிர் கையில் இல்லை. பிள்ளைகள் இருக்கும் நொடி அந்த உருவம் கீழே வந்துடுமோ???
அந்த உருவத்துனால நம் பிள்ளைகளுக்கு ஏதும் நடந்துடுமோ??? ஐயோ கடவுளே.... எதுவும் தப்பா நடந்திடக் கூடாது ஆண்டவா என அந்த நொடிக்குள் அவருக்கு புத்தியில் தோன்றிய எண்ணங்களோ ஆயிரம் ஆயிரம்.

சட்டென உடனே எழுந்தவர், எல்லாரும் சாப்பிடுங்க நான் என்னன்னு போய் பார்த்திட்டு வர்றேன்.

இல்ல மாமா, நீங்க இருங்க. நான் போய் பார்த்திட்டு வர்றேன்.

அட இல்ல மாப்பிள்ளை நீங்க இருங்க நான் போறேன். நீங்க சாப்பிடுங்க. மகா எல்லாருக்கும் பரிமாறுமா.

சாதாரணமாக மாடிபடிகளை கடந்து வருவதற்குள் அவருக்கு உள்ளுக்குள் பெரும் போராட்டமே நடந்தது. அவரது பயத்தை மறைப்பது அவருக்கு பெரும்பாடாகத் தான் இருந்தது.

மற்றவர்களின் அறையை கடந்து, அந்த கடைசி அறைக்கு செல்ல அவர் பூட்டி வைத்திருந்த அறை இப்போது சாவி இல்லாமலே தானாகவே திறந்தது. அறை வாசலில் நின்றிருந்த அவர் ஒரு முறை கீழே எட்டிப் பார்க்க, மற்றவர்கள் சாதாரணமாக இருப்பதை உறுதி செய்து விட்டு அடி மேல் அடி வைத்து அறைக்குள் நுழைந்தார்.

நான்கடி தூரத்தை கடப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து முழுதும் நனைந்த நிலைக்கே போய்விட்டார் நாதன். இப்போது அந்த அறையின் நடுப்பகுதியில் அவர் நின்றிருக்க, அணைந்திருந்த விளக்கு தானாக வெளிச்சத்தை பரப்ப, திறந்திருந்த கதவு சத்தமில்லாமல் மூடிக்கொண்டது.

வெளிச்சத்தில் அறையை நோட்டமிட, பல வருடங்களாய் அவர் சேகரித்து வைத்திருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழுந்து உடைந்து கிடந்தன. அந்த பொருட்களின் மீதே பார்வையை வைத்துக் கொண்டிருக்க, அவரின் பின்புறமாக அந்த உருவத்தின் கிர் கிர் சத்தம் மிக அருகில் கேட்டது.

தலையை மட்டும் லேசாக திருப்பி அதை பார்க்க அந்த உருவம் அவரின் தோள்களை அதன் கைகளாய் தொடப்போகும் சமயம், விருட்டென திரும்பி பின்னோக்கி அப்படியே நகர்ந்து விட்டார்.

ரிர்.....ரி என்ன தரணி நாதா பயம் உயிரைக் குடிக்கிறதா. ரிர்ரி.... வர வேண்டும் தானே..... என்னை பார்த்து பயம் வர வேண்டும் தானே. ரிர்...ரிரே அது தானே எனக்கும் வேண்டும்.

ரிர்... உன் பயம் தான் எனக்கு பலம் தரணி நாதா. என்னை பற்றி கடுகளவேனும் உன் குடும்பத்திற்க்கோ அல்லது வெளி ஆட்களுக்கோ நீ சொல்ல நேர்ந்தால்.... நன்றாக கேள்... நீ சொல்ல நேர்ந்தால் அது உன் குடும்பத்திற்கே பெரும் ஆபத்தை விளைவிக்கும். நீ கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொருவரின் உயிரையும் உருவி குடித்து விடுவேன் ஜாக்கிரதை.

ரிர்... அது குழந்தையானாலும் சரி, குமரிகள் ஆனாலும் சரி. குடும்பத்தின் மீது பாசம் இருந்தால் இனி என்னை பற்றி வெளியே சொல்லும் எண்ணம் இருந்தால் அதை முழுவதுமாக இன்றே அழித்துக் கொள்.

மீறி சொல்ல நினைத்தால்...... இதோ இப்போதே அதற்கான முன்னோட்டம் காட்டட்டுமா....

இல்ல வேணாம்... வேணாம்.... என் குடும்பத்தை ஒன்னும் செஞ்சிடாத. நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன். சொல்லவே மாட்டேன்.

ரிர்...ரி... ஆகட்டும் உன் குடும்பத்தின் ஒட்டு மொத்த உயிர்களும் உன்னுடைய வாக்கில் தான் இருக்கிறது. சரி தானா...

ம்ம்.. சரி தான் சரி தான்.

ரிர்.... சரி இப்போது நான் சொல்வதை மட்டும் கேள்...

உன்னுடைய வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு உயிரின் இரத்தம் எனக்கு வேண்டும். அதுவும் இன்றே. இன்று இரவே...

ரிர்.... எந்த உயிர் என்று நீயே முடிவு எடுத்துக் கொள். காத்துக் கொண்டிருப்பேன்... விரைவில் வந்து சேர் நாதா.... தரணி நாதா.

இரத்தம் வேண்டும் என்று கட்டளையிட்டு சென்ற உருவம், மீண்டும் அதன் உடலை அந்த பொருளில் புதைத்துக் கொள்ள,
அது கூறிச் சென்ற கட்டளையை கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே சிறிது நேரம் நின்றவர், பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கீழே வந்தார்.

வந்தவரையே எல்லோரும் பார்க்க, அது ஒன்னும் இல்ல, ஏதோ பூனை மேல இருக்குற பொருளை தள்ளியிருக்கு அதான் நமக்கு சத்தம் கேட்டிருக்கு. நான் விரட்டி விட்டுட்டேன். நீங்க சாப்பிடுங்க.

வாங்கப்பா நீங்களும் பாதில எழுந்திட்டீங்க தானே.

இல்லப்பா போதும். நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வர்றேன். சுமதி அப்பா சட்டையா எடுத்திட்டு வாடா.

இதோப்பா..

நாதன் கிளம்பி சென்று விட்டார். மகாம்மா போகும் கணவரையே பார்த்து விட்டு பிள்ளைகளை கவனிக்க ஆரம்பித்தார். பாவம் அவரும் நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறார்.

வெகு நேரம் வெளியே சுற்றி விட்டு வீடு வந்து சேர்ந்தார் நாதன். எல்லோரும் தூங்கி இருந்தனர். மகா அம்மா மட்டும் அவருக்காக காத்திருந்தார். ஆனால் என்ன ஏதென்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஏனெனில் அவரும் பயந்து போய் தானே அமர்ந்திருந்தார். பட்டர் சொன்னபடி ஏதாவது ஆபத்து வந்து விடுமோ? அதிலும் இப்போது வெளியே சென்றிருப்பவருக்கு ஏதேனும் விபரீதம் நடந்தால்? ஐயோ ஆண்டவா அப்பிடி எதுவும் நடக்ககூடாது. நீ தான் எங்களுக்கு துணையிருக்கனும்.

ஆண்டவா ஆண்டவா என நாதன் வரும் வரை அதையேத் தான் வேண்டிக் கொண்டிருந்தார்.

நாதன் வீட்டுக்குள் நுழைந்ததும் தான் அவருக்கு மூச்சு சீராகவே வந்தது.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள்,

நேரமாச்சு வா தூங்கலாம்.

நேரமாச்சு வாங்க தூங்கலாம் என ஒரே போலவே கூற இருவருக்குமே புன்னகை அரும்பியது.

........

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. மகா அம்மா தூங்கியதை உறுதி செய்து கொண்டவர்...

மெதுவாக மாடி ஏறி அறையை நெருங்க போகும் சமயம், திடீரென தனாவின் அறைக் கதவு திறந்தது. சுவற்றில் ஓரம் மறைந்து நின்று அவனை பார்க்க, அவனோ கீழே அவர்களது அறையை நோக்கி தான் சென்று கொண்டிருந்தான்.

அறைக்குள் நுழைந்தவன் மகாவுடன் தூங்க ஆரம்பிக்க, நாதன் மீண்டும் கீழே வந்து தனாவை பார்த்துவிட்டு மறுபடியும் மெதுவாகவே கடைசி அறைக்குச் சென்றார்.

அவர் அறையின் வாசல் முன் வந்து சாவியை நுழைக்கும் முன் இப்போதும் கதவு தானாகவே திறந்து கொண்டது.

பயத்துடனே உள்ளே எட்டி பார்க்க,

இன்னும் உனக்கு நேரம் போதவில்லையா நாதா? என்னை வெகு நேரம் காக்க வைத்து விட்டாய் அல்லவா??? அதற்கான பலன் இதோ வாங்கிக் கொள்.......



விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas...
 
Top