Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

14. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
மனம் தாங்காமல் கோயிலுக்கு சென்ற மகா அம்மா, தன் பிள்ளைகளுக்கு எதுவும் வரக்கூடாது என ஈசனவன் திருமேனியை பார்த்தபடியே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். நடந்ததை கூறி ஏதாவது பரிகாரம் கேட்கலாம் என தனாவை பிரகார வெளிக் கூடத்தில் அமர்த்திவிட்டு கோவில் பட்டரிடம் சென்ற மகா அம்மா, வீட்டில் நடந்த அத்தனையையும் ஒன்று விடாமல் கூற, அதற்கு அவர் சொன்ன பதிலில் மகா அம்மா அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். ( தனாவிற்கு உதவி செய்த, செய்ய போகும் அதே பட்டர்)

அம்மா, உங்க வீட்டுல இப்பிடி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்குன்னா, உங்க குடும்பத்துக்கு கஷ்ட காலம் ஆரம்பிச்சு இருக்குன்னு தான் அர்த்தம்மா. பசு மாடுங்குறது தெய்வ கடாட்சம் நிறைந்த உயிர். அந்த உயிருக்கே இப்பிடி ஒரு சம்பவம் ஏற்பட்டிருக்கு. அப்போ இது நல்லதுக்கு இல்லம்மா. ஒரு குடும்பத்துக்கு வர போற கஷ்டம் அந்த வீட்டோட ஜீவ ராசிகளின் மூலமா தான் தெரிய வரும். இது எங்க பெரியோர்கள் எங்களுக்கு சொல்லி தந்தது. உங்களுக்கு நடந்ததும் அப்படி தான்மா இருக்கணும்.

சாமி... இதுக்கு வேற எதுவும் வழியே இல்லையா???

அதோ அந்த ஈசன் இருக்க எதுக்கு பயம். கடவுள சேவிச்சுக்கோ.. அவர் கைவிட மாட்டார். ஆனா

ஆனா.... என்னங்க சாமி.

இந்த லோகத்தில காரண காரியமில்லாம எதுவுமே நடக்குறது இல்லமா. சீக்கிரம் காரணத்தை கண்டுபிடிங்கோ. இல்லாத பட்சம் நடக்கிறது எல்லாம் நடந்தே தீரும்.

சாமி...

ம்ம்.. போய்ட்டு வாங்கோ.. நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

அத்தோடு மகா அம்மா வீட்டிற்க்கு வந்து விட்டார். அவரது மன வருத்தத்தை மறைத்து பிள்ளைகளின் முன்பும் கணவனின் முன்பும் சாதாரணமாக நடமாடத் தொடங்கினார்.

ஆனால், இவர்கள் கோவிலுக்கு சென்றதின் பின் வீட்டில் ஒரு பெரும் சம்பவமே அரங்கேறியிருந்தது. அதை நாதனும் மறைத்து விட்டார்.

காலையில் நடந்ததை மறந்து கடை கணக்கு வழக்குகளில் மூழ்கி போயிருந்தார் நாதன். திடீரென மேலே எதுவோ சத்தம் கேட்க, முதலில் அதை கவனியாது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அதே சத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்க, அப்போது தான் சத்தத்தை உணர்ந்து என்னவென பார்க்க மேலே சென்றார். (தனாவிற்கு கேட்ட அதே ரீங்கார சத்தம்) ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்துக் கொண்டே சென்றவர், கடைசி அறையிலிருந்து தான் சத்தம் வருகிறது என அறிந்து பையிலிருந்த சாவியை வைத்து அறையை திறந்த அடுத்த நொடி,

பெரும் திடுக்கிடலுடன் நடுங்கி அந்த இடத்திலேயே விழுந்து விட்டார். ஏனெனில் அந்த உருவம் நாதன் நேற்று எடுத்து வந்த பொருளில் பாதி உருவமும் சுவற்றில் பாதி ஊர்ந்த உருவமுமாகவும் தான் சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

கதவுக்கு அருகே பயத்தில் இறுக்க கண்ணை மூடி இருந்தவர் மெதுவாக கண்ணைத் திறந்து பார்க்க, இப்போது அவருக்கு நெருக்கமாய் மிக நெருக்கமாய் அதன் அழுகி உருகிய முகத்தை வைத்து, அதன் பழுப்பு நிற கண்களை அவருக்கு காட்டி நின்றது அந்த உருவம்.

அந்த நொடி நாதனுக்கு மூச்சே வரவில்லை. இதயம் இப்போதே துடிப்பை நிறுத்தி விடுமோ என்ற நிலையில் அதை பார்த்த மாத்திரம் முகத்தை திருப்ப, தன் சதை வடிந்த விரலை மெல்ல அவரின் நெற்றியில் வைத்து அவரை அதை நோக்கி திருப்பியது.

கடவுள் இருக்க பயம் எதற்கு என தன்னைத் தானே தைரியப் படுத்திக் கொண்டு நாதன் அதை நேர் பார்வை பார்க்க, அந்த உருவம் இப்போது அதன் கோரபற்க்களை காட்டி சிரித்து,

என்ன தரணி நாதா.... கடவுள் இருக்கும் தைரியம் வந்து விட்டதா??? உனக்கு.

ரிர்ரி..... ரிர்ரீ....

அவன் வெறும் கல் பொம்மை தான். நான் அவனுக்கும் மேலானவன் தரணி நாதா. சில காலம் என்னை அவன் சிறையடைத்து வைத்தால் நான் அவனுக்கு அடிபணிந்து விடுவேனா?? இல்லை பயந்து தான் விடுவேனா???

முடியாது என்னை யாரும் அடக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. இனி அவனை என் காலடியில் மண்டியிட்டு விழ வைப்பதே என் வேலை என அதன் கிர் கிர் குரலில் கூறி ரிர்ரி..... ரிர்ரீ.... என சுவற்றில் மாறி மாறி ஊர்ந்து சிரித்தது.

நாதனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதிலும் அந்த உருவம் சொன்னதில் பாதி அவருக்கு புரியவே இல்லை.

அந்த உருவத்தையே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது சாடரென்று முன் வந்து நின்ற உருவம், தப்பிக்க முடியாது. இனியும் உன்னால் தப்பிக்க முடியாது... இப்போதே.....

என்று அந்த உருவம் பேசும் முன் சுமதி வந்திருந்தாள்.

அப்பா... அப்பா...

அப்பா...

சுமதியின் சத்தம் கேட்ட நொடி மீண்டும் அந்த உருவம் அந்த பொருளுக்குள் ஓடி புதைந்து போனது.

வெளிறிப் போயிருந்த முகத்தை துடைத்து சரி செய்து ஆங்.. சுமதி மா நான் இங்க இருக்கேன். இரும்மா வரேன்.

ஆன்.... வாங்கப்பா.

சாப்பிட்டீங்களாப்பா..

இல்லடா, இனி தான். வா சேர்ந்து சாப்பிடலாம்.

ம்ம் சரிங்கப்பா... அதுக்கும் முன்னாடி நான் போய் பின்னாடி மாட்டை பார்த்திட்டு வந்திடுறேன். அம்மா சொன்னதும் ரொம்ப கஷ்டம் ஆகிடுச்சுப்பா.

நாதன் எந்த பதிலும் சொல்லவில்லை. சுமதி பார்த்துவிட்டு வந்து உணவு பரிமாற, பேசியபடியே சுமதி சாப்பிட்டு முடித்து விட்டாள். ஆனால் நாதனுக்கு தான் தொண்டையில் சோறு இறங்க மறுத்தது. அடிக்கடி மேலேயே பார்த்துக் கொண்டிருந்தார்.

கோவிலுக்கு சென்றிருந்தவர்களும் வந்துவிட, அதற்கு மேலும் சாப்பிடாமல் அப்படியே எழுந்து விட்டார். மகா அம்மாவும் வெளியே யாரிடமும் சொல்லவில்லை. நாதனும் வெளியே சொல்லவில்லை. உள்ளுக்குள்ளேயே மருகியபடி இருவரும் இருக்க, விருந்துக்கு சென்றிருந்த அகிலன் முகிலன் தம்பதியினர் ஒன்றன் பின் ஒன்றாக வீடு வந்து சேர, குடும்பம் அப்போதைக்கு அனைத்தையும் மறந்து சந்தோசமாக சிரித்து பேசி மகிழ்ந்தது.

இடையிடையே நாதன் மேலே பார்க்கவும், மகா அம்மா கையெடுத்து வணங்கவும் என அன்றைய பகல் பொழுது கழிய, இரவும் நெருங்கியது.

எப்போதும் இரவு எல்லோரும் ஒன்றாக சாப்பிடுவது தான் வழக்கம். இன்று நாதன், அகிலன், முகிலன், தனா, சுமதியை அழைத்துச் செல்ல வந்திருந்த குமரன், சுமதியின் பிள்ளைகள், என அனைவரும் சேர்ந்து பேசியபடியே உணவுண்டு கொண்டிருக்க மேலே இருந்து படார் படார் என பொருட்கள் எல்லாம் கீழே விழும் சத்தம் கேட்டது.

எல்லோரும் ஒரே போல மேலே நிமிர்ந்து பார்க்க, நாதனுக்கு தான் பயம் நெஞ்சை அடைத்தது...

எல்லோருக்கும் முன்னம் அது வந்து விடுமோ???


விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas...
 
Top