Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

10. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
கோவிலில் இருந்து எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர். அன்று எல்லோருமே தனாவின் வீட்டிலேயே இருக்கட்டும் எனவும் பெண்களின் துணைக்கு, முக்கிய வேலையாக ஊருக்கு சென்றிருந்த வேலனின் சின்ன மகன் இளங்குமரனை விட்டுச் செல்லலாம் எனவும் முடிவெடுத்து அவனுக்காக காத்திருந்தனர்.

மதியம் சாப்பிட்டு முடிக்க இளங்குமரன் வந்துவிட்டான். திருவின் இறப்பிற்கு பின் அவன் பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் இப்போது இளா பார்த்துக் கொண்டிருப்பதால் அவனுக்கு வேலைகள் அதிகம் என்பதால் வீட்டில் நடந்தவை தெரியாது. எனவே,

இளாவிற்கு இதுவரை தெரியாத எல்லா விஷயங்களையும் கூறிவிட்டு ஆயிரம் அறிவுரைகளையும் வழங்கி விட்டு சித்தன் வேலன் தனா மூவரும் கோவிலுக்கு கிளம்பிச் சென்றனர்.

கடவுளை மனமுருகி வேண்டிவிட்டு மூவரும் அந்த கையேட்டை வைத்திருக்கும் பட்டரை நாடிச் செல்ல,

அங்கே தனாவின் வரவை எண்ணி பலமணி நேரம் காத்திருந்த பட்டர் அவனை கண்டதும், தனா வந்திட்டயா...

சீக்கிரம் வா. உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும்.

என்ன சாமி....

முதல்ல உள்ள வாங்க என, எல்லோரையும் அழைத்துக் கொண்டு வலது புற பிரகாரத்திற்குள் விடுவிடுவென நுழைந்தார். தனாவின் கையை பற்றி இழுத்துக் கொண்டு நடந்தவர், அங்கிருந்த லிங்கங்களின் புறம் கை நீட்டி காட்ட, பார்த்த மூவரும் அதிர்ந்து விட்டனர்.

சித்தன் ஐயாவின் உள்ளம் பக்தியில் புல்லரித்து போனது. இது கடவுளின் அருளால் மட்டும் தானே முடியும் என அங்கேயே விழுந்து வணங்கி மனமுருகி அமர்ந்து விட்டார்.

வேலன் தன் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாய் நினைத்து கையெடுத்து கும்பிட்டு வணங்கி அவரும் ஒருபுறம் நின்று விட்டார்.

தனா என்ன செய்வது என்றே அறியாமல் சிலை போல நிற்க,

பட்டரே தொடர்ந்தார்.

நீ போன்ல பேசிட்டு இந்த ஐயா இந்த கையேட்டை குடுத்து பாதுகாக்க சொன்னதும் நான் நல்லா யோசிச்சு இங்க வந்து வச்சிட்டேன் தனா. எப்போதும் போல அன்னிக்கி ராத்திரி பூஜை முடிஞ்சதும் நான் கிளம்பி வெளிய வரச்சே, திடீர்னு கோவில சுத்தி ஒரே காத்து. இன்னும் ரெண்டு அடி எடுத்து வச்சா வெளியே வந்திருக்கலாம். சட்டுன்னு பின்னாடி திரும்பி பார்த்தேன், அதுக்கு எதிர்மறையாக கோவில்ல அப்படி ஒரு ஆழ்ந்த அமைதி.

நல்லா கவனிக்கும் போது தான் தெரிஞ்சது வெளிய அடிக்கிற சூறாவளி காத்து கோவிலை மட்டும் தான் சுத்திக்கிட்டு இருந்தது. வித்தியாசமான அந்த நிகழ்வ பார்க்கவும் எனக்கு ஏதோ நெருடலா பட, மறுபடியும் கோவிலுக்குள்ள போய் பார்த்தா, நான் பூட்டியிருந்த பகவான் சன்னிதி ஜகஜோதியா காட்சியளிச்சது.

அன்று,

வெளியே அடிக்கும் சூறாவளி காற்றுக்கு எதிர்மறையாக கோவிலில் நிசப்தமாக இருக்கவும் பட்டர் மீண்டும் பிரகரத்திற்குள் நுழைந்தார். அங்கே அவர் பூஜை முடித்து பூட்டிச் சென்ற கதவு திறந்து கருவறை ஜகஜோதியாக காட்சியளித்தது. காண கண் கோடி வேண்டும் என்பது போல இறைவன் திருமேனி ஒளிர்ந்தது. பட்டர் நெடுஞ்சான் கிடையாக விழுந்து கும்பிட்டு கைகட்டி நிமிர, கருவறைக்குள் இருந்து ஆறடி நீளமுள்ள சர்பம் வெளியே வந்தது.

கை கூப்பி வணங்கி நின்றவரை ஒரு நிமிடம் பார்த்த சர்பம், வலப்பக்கம் திரும்பி ஊர்ந்து செல்ல, பட்டரும் பின்னே சென்றார்.

இவர் அந்த கையேட்டை அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 லிங்கங்களின் நடுவே தான் வைத்திருந்தார். சரியாக அந்த இடத்திற்கு சென்ற சர்பம் லிங்கத்தை சுற்றியபடி அந்த கையேட்டின் முன்னே நின்றது.

அந்த நிகழ்வையையே பட்டர் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென கேட்ட குழந்தையின் குரலில் இடப்பக்கம் திரும்பி ஓடினார்.

அங்கே மஞ்சள் நிற பட்டாடை கட்டி ஆறு வயது சிறுமி நின்றிருக்க, குழந்தே, நீ எப்பிடி இந்நேரத்துக்கு வந்தே என்று சுற்றும் முற்றும் தேடினார்.

அழகாய் கண்ணக்குழி விழ சிரித்த குழந்தையோ... இன்னும் மூன்று நாட்கள் நீ உன் இல்லம் விடுத்து இங்கு தான் இருக்க வேண்டும் நீலகண்டா. உனக்கான பணி காத்திருக்கிறது. இப்போது நீ வெளியே செல்வது அவ்வளவு நல்லதல்ல. உன் குடும்பத்திற்கு காவலாக நான் இருக்கிறேன். கவலை கொள்ளாதே.

உனக்கான பணி என்னவென்று இன்னும் இரண்டு நாட்களில் எம் ஈசனே அறிய வைப்பார். கடமையை நிறைவேற்ற பல இன்னல்கள் துரத்தி வரும். அப்போதெல்லாம் அவர்களுக்கு துணையாய் நீயும் நில். என்றும் உனக்கும் அவர்களுக்கும் துணையாய் எம்பெருமான் ஈசனும், நானும் இருப்போம்,

என்றதோடு அச்சிறுமி காணாமல் போனாள். இவரும் பிரகாரத்தையே வலம் வந்து விட்டார். சிறுமியை காணவில்லை. (வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இது போன்ற ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்தது உண்மையே. 12 வருடம் கழித்து கோவில் திருவிழா பற்றி எல்லோரும் கூடி பேசும் பொழுது ஒரு சிறுமி வந்து இன்றைய நாளில் தான் எனக்கு திருவிழா வைக்க வேண்டும் என்று கூறிவிட்டு கோயிலுக்கு வெளியே சென்றதும் காணவில்லையாம்)

கூறிச் சென்றது அம்பாளை அன்றி வேறு யாருமல்ல. இனி அவள் இட்டதே என் பணி என இந்த மூன்று நாட்களும் இங்கு தான் இருக்கிறார் பட்டர் நீலகண்டர்.

நடந்த அனைத்தையும் சொல்ல சொல்ல மூவருக்கும் புல்லரித்துப் போனது. கடவுள் என்றும் நம்மை கைவிட மாட்டார் என முழுதாக நம்பினார்கள். தனா கைகூப்பி வணங்கி நிற்க சர்பம் இறங்கி மீண்டும் கருவறைக்குள் சென்று மறைந்தது.

கையேட்டை எடுக்க, அது முழுதும் மஞ்சள் குங்குமம் நிறைந்த துணியால் சுற்றப்பட்டு மேலே ஒரு ருத்ராட்சம் முடியப்பட்டிருந்தது.
மெதுவாக அதை அவிழ்க்க, உள்ளே இருந்த கையேடு தனாவை ஆச்சர்ய படுத்தியது. ஏனெனில் அது நாம் உபயோகப்படுத்தும் கையேட்டை போல் இல்லாமல், மஞ்சள் கயிரால் கோர்க்கப்பட்ட, மரக்கூல் காகிதங்களை கொண்டிருந்தது. அநேகமாக இப்போதிருக்கும் இயந்திரங்கள் அல்லாமல், கைகளால் செய்யப்பட்ட காகிதமாகத் தான் இருக்கும். ஏனென்றால் அதன் தடிமன் சற்று கனமானதாகத் தான் இருந்தது.

முதல் பக்கத்தில் மிகப்பெரிய பாம்பின் உருவம் ஏதோ கருப்பு நிற மையால் பட்டையாக வரையப்பட்டிருந்தது. எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அடுத்த பக்கத்தை திருப்ப தரணி நாதனின் கையெழுத்து அவரின் பெயரோடு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இங்கே தனா கையேட்டை பிரிக்க, அங்கே வீட்டில் அந்த உருவம் ஓர் ஆட்டம் ஆடி அடங்கியது.


ஆரம்பமாகிறது... தரணி நாதன் குடும்பத்தின் தலையெழுத்து..


விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas....
 
Romba superaa irukkum. Inner kkudhan story padikka aarambichen. Nejamace to dheklam nadakkara Madhiri irukku. Naanum dhana kooda irundhu udhellam nadakkaradhai paarpadhunpoke oru ninaivu

Romba azhaga ezhudi irukkenga
 
Top