Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெள்ளக்கார வேலாயி 2

Advertisement

Jeyalakshmimohan

Member
Member
திவ்யா பயணக்களைப்பில் இருந்தாள் "என்ன பாப்பா....? ஜாலியா உக்காந்துட்ட மாமனுக்கு கொஞ்சம் கஞ்சி ஊத்துறது" என திவ்யாவை சீண்டினான் கதிர்
"என்னது மாமாவா..." என கதிரை முறைத்துவிழுங்கினாள் திவ்யா.
"மாமா இல்ல மாட்டுக்கு கழனி தண்ணி வைக்கவில்லையா என்று கேட்டேன்; உனக்கு சரியா கேக்கல போல; சாரி..." என மழுப்பினான்.
"நீங்க இருங்க நான் பார்த்து கொள்கிறேன்; இன்னைக்கு தான் ஊரில் இருந்து வந்து இருக்கீங்க போய் ரெஸ்ட் எடுங்க' என்றாள் ராதா.
"நீ வேற அதெல்லாம் மேடம் செய்வாங்க; என்ன மேடம் போங்க போய் கழனி தண்ணிகாட்டுங்க என்ன சவாலை மறந்துட்டீங்களா?" ஞாபகப்படுத்தினான் கதிர்.
"சவாலா... என்ன சவால்" என கேட்டாள் ராதா
"அது திவ்யா மேடம் போட்ட சவால்; என்ன அப்படியே எடுத்து வைக்கிற நீ மட்டும் நைட்டுக்கு பிரியாணி பண்ணிடு ராதான்னு நல்லா வக்கனையா கேட்கிற இல்ல; மாடு என்ன பாவம் பண்ணிச்சு திவ்யா" என்றான் கதிர்.
"மாட்டுக்கும் சேர்த்து பிரியாணி போடணுமா"
"அது எல்லாம் இல்ல கொஞ்சம் தவிடும் ஊறவச்ச பல தானியத்தையும் கழனி தண்ணில ஊத்தி கொஞ்சம் உப்பு போட்டு நல்லா கலந்து அப்புறம் அதை மாட்டுக்கு வை; அப்படியே குடிப்பேன் என்று எல்லாத்தையும் மாடு காலி செய்துவிடும்" என லெக்சர் கொடுத்தான் கதிர்.சரி என எல்லாத்தையும் கலந்து மாட்டுக்கு வைத்தாள் திவ்யா
"என்ன தான் கதிர் அண்ணா திவ்யா அம்மாவுக்கும் உங்களுக்கும் சண்டை" என ராதா கேட்க சொல்ல ஆரம்பித்தான் 'உங்க வயக்காட்டுல ஹாயா நின்னுட்டு ஒருஒரு ஸ்டோரியை உங்க திவ்யமா பேஸ்புக்ல போஸ்ட் பண்ணி இருக்காங்க அதுல கிராமம் தான் சொர்க்கம் விவசாயம் தான் பெருசு விவசாயத்தை யாரும் விடக் கூடாது அப்படி இப்படின்னு ஓவரா போட்டிருந்தாங்க திவ்யா; அதுக்குஎக்கச்சக்க லைக் வேற;அதுக்கு நான் என்னன்னு கமெண்ட் செய்தேன் தெரியுமா... நல்லா சொல்லுவீங்க ஆனா நீங்க மட்டும் ஜாலியா ஏசி ரூம்ல வேலை பார்த்துட்டு சம்பளம் வாங்கிட்டு விவசாயம் பெருசு விவசாயத்தை விட கூடாதுன்னு சொல்லுவீங்க தைரியம் இருந்தா ஒரு மாசத்துக்கு வயக்காட்டுல மழையிலும் வெயிலிலும் இறங்கி வேலை செஞ்சு பார்த்துட்டு அப்புறம் விவசாய பெருமை பேசுங்க என விளையாட்டாக தான் சொன்னேன். அதுக்கு நெறைய லைக் கமெண்ட் தலைவா சூப்பர் பா... நல்லா சொன்னப்போ... இனிமேல் எவனும் வெறும் விவசாய பெருமை பேசி இப்படி வாயிலேயே வடை சுட மாட்டாங்க; அப்படி இப்படின்னு ஒரே கமெண்ட்ஸ் தான் போ. அப்புறம் என்ன ஆச்சுன்னா உங்க திவ்யா அம்மா சவாலை ஏத்துக்கிட்டாங்க ஒரு மாசம் நான் வயல்ல வேலைபார்க்கிறேன்னு சொல்லிட்டாங்க"
இவ்வளவு நடந்துச்சா என கன்னத்தில் கைவைத்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள் ராதா.
"சரி மாடு இப்போ சாணி போட்டுருச்சு ஒரே சகதியா இருக்கு போய் கட்டுத்தறியை சுத்தம் பண்ணு' என ஆர்டர் போட்டான் கதிர். அம்மா பாவம் என ராதா வருந்தினாள். ஸ்டாப் நான் பார்த்துகிறேன் என கையசைத்து விட்டு சாணி அள்ளச் சென்றாள் திவ்யா.
"கிளவுஸ் கிடைக்குமா இதை கையில் அள்ளுவது எப்படி?"
"அம்மா பிளவுஸ் ஜாக்கெட் எதுக்குமா துணி ஏதும் மாற்ற போறீங்களா" என்றாள் ராதா
"ஆபரேஷன் பண்ண போறியா என்ன சாணி அள்ள சொன்னா சானிடைசர் கேப்ப போல; இந்தா இந்த சட்டிய பிடி கையில் அள்ளி இதுல போட்டு அங்க போய் குழியில் கொட்டு
மாட்டு சாணம் செடிக்கு எல்லாம் அமிர்தம் மாதிரி மூஞ்சை சுளிக்காதா" என்றான் கதிர்.
சரி என சாணி அள்ள தெரியாம உளப்பிக் கொண்டும் சாணியை முகத்தில் லைட்டா ஈசி கிட்டும் அள்ளினால் திவ்யா.
"இங்க பாரு சாணியை இப்படி லட்டு மாதிரி உருட்டி மெதுவா இப்படி அள்ளி போடணும் சரியா" என செய்துக் காட்டினான் கதிர் சரி என தலையை அசைத்தவாறு அள்ளினாள் திவ்யா. 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி" என திவ்யாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி பாடினான் கதிர்.எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினாள் திவ்யா.
"என்ன காளையா... கவலைப்படாதே நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் உனக்கு துணையா ஒரு பசுமாடு வரப்போகுது எத்தனை நாளைக்கு நீயும் என்ன மாதிரி மொரட்டு சிங்கிள் ஆகவே இருப்ப எனக்கு எப்ப தான் ஜோடி சேருமோ தெரியல" என திவ்யாவைப் பார்த்து பெருமூச்சு விட்ட படி கூறினான் கதிர்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் "ஹாய்...கவின் எப்ப வந்த" என கவினை பார்த்து கேட்டாள் திவ்யா.
"என்ன கையெல்லாம் அழுக்கா இருக்கு இதெல்லாம் செய்ய வீட்டில வேலை ஆள் இருக்காங்க இல்ல அப்புறம் எதுக்கு கஷ்டப்படுற" என்றான் கவின்.
"யாரை பார்த்து வேலைக்காரன் என்று சொல்லுற நான் இந்த வீட்டு மாப்பிள்ளை தெரியுமா!!" என்றான் கதிர். என்ன நீ மாப்பிள்ளையா... என நக்கலாக சிரித்தான் கவின்.
இரு நான் கைகழுவிவிட்டு வரேன் உன் கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு என சிரித்த முகமாக கவினிடம் பேசினாள் திவ்யா.
எவன் இவன் பார்த்ததே இல்லையே என கேட்டான் கதிர்.
"பக்கத்து தோட்டக்காரர் பழனி இருக்கார் இல்ல அவரோட பையன் தூரத்து உறவு முறை தான்; கவின் பட்டணத்தில் வேலை பார்ப்பவர் லீவுக்கு ஊருக்கு வந்திருக்கிறார்" என கூறினாள் ராதா.
பார்க்கப்போனால் நம்ம கதைக்கு இவன்தான் வில்லனா வருவான் போல என சிந்தனையில் ஆழ்ந்தான் கதிர்
வேலாயி வருவாள்
 
Top