Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)- 6

Advertisement

praveenraj

Well-known member
Member

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

பெட்ரோல் டீசல் ஆகியவற்றில் இயங்கும் ice (internal combustion engine - உள் எரி பொறி) வாகனங்கள் தான் இன்றைய உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் சிக்கல்களுக்குத் தீர்வாக ev எனப்படும் மின்சார வாகனங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் பல சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்க இதை உடனடியாக அமல்படுத்தும் விதமாய் பிரபல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றின் டீலர் ஷிப் பெறுவதற்காக கோவைக்குச் சென்றிருந்தான் நவிரன்.

இப்போதெல்லாம் குமாரசாமி தங்களது தொழில் சம்மந்தமாக எதிலும் தலையிடுவதில்லை. ஷோ ரூம் ஃபைனான்ஸ் நிறுவனம் என்று அனைத்தையும் தன் மகன்களிடம் ஒப்படைத்து விட்டு தன்னுடைய ரிட்டையர் மென்ட் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் பவித்ராவுக்குத் தான் இந்த பாக்கியம் கிட்டவில்லை. அவரே நிறுத்த நினைத்தாலும் அவருடைய வாசகர்கள் அவரை நில்லாமல் ஓடிக்கொண்டிருக்க வைக்கிறார்கள். இத்துடன் அவருடைய உடல்நலம் வேறு அவ்வப்போது அவரை வாட்டிக்கொண்டே இருக்கிறது. அத்துடன் அவருடைய ரைட்டர் ஜீனானது அவருடைய மூன்றாம் தலைமுறையான நற்றிணையிடம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்பது வயது முடியும் தருவாயில் இருக்கும் நற்றிணை பிழையேதும் இன்றி தமிழில் கவிதைகள் சிறு கதைகளை எழுதத் தொடங்கிவிட்டாள். அப்படி ஒருமுறை அவள் எழுதியதை பவியிடம் ஒருமுறை காட்டிய போது,

"நத்துமா, நீ நல்லாவே எழுதுற. ஆனா ஒன்னு நினைவுல வெச்சிக்கோ. நீ ஒரு வரி எழுதணும்னா குறைந்தது ஆயிரம் வரிகளாவது வாசிச்சிருக்கணும். அப்போ தான் உனக்கு அந்த மொழியுடைய நெளிவுசுளிவு ஆளுமை வார்த்தைகள் எல்லாம் சரளமா வரும். வாசிப்பைப் பழகிக்கோ. நல்ல புத்தகங்களைத் தேடிதேடிப் படி. ஒரு பத்து புத்தகங்களை நீ தேடிப்போனா அதுவே உனக்கு நூறு புத்தங்கங்களை அறிமுகப்படுத்தும். உன் வாசிப்பு ஆழமாக ஆழமாக உன் கற்பனை விரிவடையும். ஒரு சிறந்த வாசகனால் தான் சிறந்த எழுத்தாளர் ஆக முடியும். பொறுமையா எழுதிக்காலம். முதல நிறைய வாசி..." என்று பவித்ரா சொன்னதை அப்படியே பிடித்துக்கொண்டாள் நற்றிணை.

நற்றிணை தன்னை மனதால் ஒரு முதிர்ந்த(mature) பெண்ணாக மாற்றிக்கொண்டிருக்க அவளுடைய குழந்தைத்தனத்தை எல்லாம் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தான் அவள் உடன் பிறந்த நிலன். இரண்டு வயது முடியும் தருவாயில் இருந்தவன் தன்னுடைய குறும்பு வாலு தனத்தால் தன் தாத்தா பாட்டிக்கு நவிரனின் குழந்தைப்பருவத்தை நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறான்.

இந்த இரண்டு வருடம் அவர்கள் வாழ்வில் இன்னும் பல மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்தி இருந்தது. நிலனின் வருகை அக்குடும்பத்தில் வசந்தத்தை ஏற்படுத்தியது என்றால் இன்னொருவரின் வருகையோ அக்குடும்பத்தின் நிம்மதியை அலைகள் போலே 'ஹை' அண்ட் 'லோ' பாயிண்ட்ஸை கொடுத்து அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது.
தங்கள் பிள்ளைகளில் ஒருவனின் வாழ்க்கை ஆச்சர்யக்குறியாகவும் மற்றொருவனின் வாழ்க்கை கேள்விக்குறியாகவும் இருக்கும் பட்சத்தில் எந்தப் பெற்றோருக்குத் தான் தங்கள் வாழ்க்கை இனிக்கும்?

நலனோ மனைவி குழந்தைகள் என்று வாழ்க்கை என்னும் ரயில் பயணத்தில் பர்த் டிக்கெட்டில் பயணிக்க நவிரனோ இன்னும் காத்திருப்போர் பட்டியலிலே இருக்கிறான்.

அன்றைய தினம் நலன் தன்னுடைய பணிமுடித்து வீடு திரும்பவே மணி பதினொன்றைக் கடந்திருந்தது. அவனுக்காகவே காத்திருந்த மெர்சி அவனுக்கு உணவு பரிமாற,

"சாரி மெர்சி. கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க். நாளைக்கு ஒரு பார்ட்டிக்கு கார் ஒன்னு டெலிவரி செய்யணும். அது இம்போர்ட்டட் வண்டி. அதான் ஷிப்ல இருந்து டெலிவரி ஆக லேட் ஆகிடுச்சு. நம்ம ட்ரக்ல வண்டியை ஏத்தி கிளம்பிடுச்சினு போன் வந்ததும் தான் வீட்டுக்கே கிளம்பினேன்..." என்று தன்னுடைய காதல் மனைவிடம் அவள் கேட்காமலே காரணம் ஒப்பித்தான் நலன். மெர்சியோ ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதைக் கண்டவன்,

"என்னாச்சு மெர்சி. ஒன்னும் பிரச்சனை இல்லையே? அம்மா நல்லா தானே இருக்காங்க?" என்று கேட்டவனிடம்,

"நவி வீட்டுக்கு வந்து மூணு நாளாச்சு. அவன் எங்க போயிருக்கான்?" என்று கேட்டாள் மெர்சி. கொழுந்தன் தான் என்றாலும் நவியை அவன் பள்ளிப் பயிலும் வேளையிலிருந்தே தெரியும் என்பதால் அவனை எப்போதும் உரிமையாகவே தான் அழைப்பாள் மெர்சி. அது மட்டுமா? இன்று பவித்ரா தன்னை முழுமையாக ஏற்றுக்கொண்டு தன்னை ஒரு மகள் போல் பார்த்துக்கொள்வதற்கும் அவன் தானே காரணம். இதுவும் ஒருவகை நன்றி நவில்தல் தானே?

"ஃபாரின் க்ளிண்ட்ஸ் கூட ஒரு முக்கியமான மீட்டிங். அது போக ஒரு முதலீட்டாளர்கள் மாநாடு வேற இன்னைக்கு இருந்தது. அநேகமா இந்நேரம் அவன் கிளம்பி இருக்கனும். இரு போன் பண்றேன்..." என்று நவியை அழைத்தான் நலன்.

"சொல்லுண்ணா..."

"எங்க இருக்க நீ? எப்போ வீட்டுக்கு வர?"

"கிளம்பிட்டேன். ஆன் தி வே. ஏதாவது முக்கியமான விஷயமா?"

"ஒண்ணுமில்ல. வீட்டுக்கு வா காலையில பேசிக்கலாம். அண்ட் நவி கூட மேனேஜர் வரார் தானே?" என்று கேட்ட நலனுக்கு,

"இல்ல அவர் அவரோட பொண்ணு வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டார். நான் மட்டும் தான் வரேன்" என்றதும் ஏனோ மெர்சிக்கும் நலனுக்கும் தங்களையும் அறியாமல் சிறு பதற்றம் தொற்றிக்கொள்ள அதை வெளிக்காட்டாமல்,

"ரெண்டு மணிநேரம் லேட் ஆனாலும் பரவாயில்லை. பொறுமையா வா. இல்லைனா வழியில எங்கேயாவது தங்கிட்டு காலையில கூட வா" என்று சொல்லவும் அவன் கூற வரும் விஷயம் நவிக்கும் புரிந்தது.

"ஒன்ஸ் பிட்டன் டுவைஸ் ஷை. எனக்கு நல்லாவே தெரியும். நீ நிம்மதியாத் தூங்கு..." என்று அழைப்பைத் துண்டித்தான்.
(ஒரு முறை தோற்றவனுக்குத் தான் மறுமுறை அதைச் செய்யும் போது கூடுதல் அக்கறை இருக்கும்)

நவிரனின் இந்தப் பதிலைக் கேட்ட பிறகு எப்படி நலன் மற்றும் மெர்சியால் நிம்மதியாகத் தூங்க முடியும்? அப்படியே யோசனையில் மூழ்கியவனுக்கு அப்போது தான் தன் பெற்றோர்களின் கவலை புரிந்தது. எழுந்தவன் சப்தம் வராமல் தன் பெற்றோரின் அறையைத் திருந்து உள்ளே சென்றான். அங்கே ஆளுக்கொரு புறமாகத் திரும்பி உறங்கிக்கொண்டிருந்தவர்களைக் கண்டவன் மீண்டும் அதே போல் அறையைச் சப்தமில்லாமல் சாற்றிவிட்டு உறங்கச் சென்றான்.

பின்னிரவு என்று அழைக்கப்படும் வைகறை வேளையில் வீடு திரும்பிய நவிரன் தன் அறைக்குச் சென்றதும் அவனையும் அறியாமல் அந்தக் கட்டிலை ஒரு கணம் திரும்பிப் பார்த்தான்.

நம் வாழ்வில் சிலர் இருந்த காலங்கள் குறைவென்றாலும் அவர்கள் நமக்குள் ஏற்படுத்திய பாதிப்பு என்பது கைகளில் ஒட்டிய ஜிகினா தூள்களாய் அழியாமல் மினுமினுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப் பட்டவர்களை நாம் என்ன தான் மறந்து விட்டதாகவே காட்டிக்கொண்டாலும் அவர்தம் விட்டுச் சென்ற நினைவுகள் 'அழியாக் கோலங்களாகவே' மிளிர்ந்துகொண்டு இருக்கும். நவிரன் வாழ்விலும் இதுபோல் இரண்டு நபர்கள் இருக்கிறார்கள். இரண்டுப் பெண்கள்! திரும்ப கிடைக்காத ஒருத்திக்காகக் கிடைத்த ஒருத்தியைத் திருப்பி அனுப்பிவிட்டான். இவனாக அனுப்பாமல் இருந்தாலும் கூட, திரும்பிச் சென்றவளை அழைக்காமல் விட்டதும் இவன் திருப்பி அனுப்பியதற்குச் சமம் தானே?

வேலை இல்லாத நேரத்திலும் வீட்டில் இருக்கும் நேரத்திலும் அவனைச் சுற்றி வட்டமிடும் இது போன்ற எண்ணங்களிடமிருந்து தப்பிப்பதற்காகவே அவனை முடிந்த அளவுக்கு பரபரப்பாகவே வைத்துக்கொள்கிறான். இருபத்தி நான்கு மணிநேரமும் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்க அவனென்ன இயந்திரமா? அப்படியே இயந்திரமாகவே இருந்தாலும் அதற்கும் ஓய்வில்லை என்றால் அதுவும் பழுதாகிவிடும் என்று அறிந்திராத இயந்திரவியல் பொறியாளரா அவன்?

மாற்றங்களே வினா. மாற்றங்களே விடை. ஆனால் இந்த இரண்டு மாற்றங்களுக்கும் இடையில் நிகழும் மாற்றங்களை எவ்வித மாற்றமும் செய்யாமல் ஏற்றுக்கொள்பவர்களுக்கே மாற்றம் வசப்படும். அப்படி ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த மாற்றங்களை மாற்றிட முனைபவர்களுக்கு மாற்ற முடியாத மாற்றம் ஏற்படும் என்று யார் தான் புரிய வைப்பது?

தன்னையும் மீறி ஆழ்ந்த நித்திரையில் இருந்தவனை வருடிய பிஞ்சுக் கரங்களின் ஸ்பரிசத்தில் விழித்தவன் அங்கிருந்த நந்துவைக் கண்டதும்,

"என்னாச்சு டா?" என்றான்.

"பாட்டி மயங்கிட்டாங்க. டாக்டர் ஆண்ட்டி வந்திருக்காங்க. அம்மா உங்களை எழுப்பச் சொன்னாங்க..." என்றவளின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்க அந்த நொடி அவன் மனத்திரையில் எழுந்த கற்பனை குதிரைகளை எல்லாம் கண்டு அதிர்ந்தவன்,

'நோ. ஒன்னும் இல்ல. ம்மா சாரி மா...' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன் துரிதமாக கீழே விரைந்தான்.

"ஒன்னுமில்ல நலன். அவங்க ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா ஃபீல் பண்றாங்க. அவங்களை அவங்களே ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்குறாங்க. நீங்க ஏன் அவங்களுக்கு ஒரு புது ஏம்பியன்ஸ்(சூழல்) ஏற்படுத்திக்கொடுக்க கூடாது? எங்கேயாவது வெளிய போய்ட்டு வாங்க. அவங்ககிட்ட மனசு விட்டுப் பேசுங்க. நான் கொடுக்குற மெடிசின்ஸ் எல்லாம் தற்காலிகமானது தான். நிரந்தரமான மருந்து உங்க கிட்ட தான் இருக்கு..." என்று அவர் சென்றுவிட அங்கிருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்தான் நவிரன்.

"என் எல்லா எழுத்துகளும் புத்தகங்கள் ஆவதில்லை. அதை நான் விரும்புவதுமில்லை. என் எழுத்துகள் எல்லாம் என் வாசகர்களுக்குத் தான் என்றாலும் எனக்குள் இருக்கும் அந்த வாசகருக்கு என்று சில ப்ரத்தியேகப் பக்கங்களும் உண்டு. ஆயிரம் கதைகளை நான் எழுதியிருந்தாலும் எனக்குள்ளும் சில சொல்லப்படாத கதைகளுண்டு. அந்தச் சொல்லப்படாத கதைகளுக்கென்று சில சொல்லப்படாத வாசகர்கள் இருக்கிறார்கள். அப்படியொரு வாசகனாக என் நவிரனுக்கென்று நான் எழுதும் கதை இது. எல்லா அம்மாக்களுக்கும் தங்களை முதன்முதலில் அம்மா என்று அழைத்த பிள்ளைகள் மீது தனி ப்ரியம் இருக்கும். எனக்கும் நலனின் மீது அப்படியொரு பிரியம் இருந்தது. இருக்கிறது. எல்லாப் பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று ஒரு கர்வம் இருக்கும். இந்தக் கர்வம் செருக்கால் விழைந்தது அல்ல. அன்பால் விழை(ளை)ந்தது. நான் காதலுக்கு எதிரானவள் அல்ல. ஆனால் ஒரு சபையில் நான் சொன்ன சொல்லை என் மகன் காப்பாற்றுவான் என்று அறுதியாக நம்பியவள். நான் அந்தச் சொல்லை சொல்லும் முன்னும் அவனனுமதி பெற்றே அதை உரைத்தேன். நாம் பெரியதாக நம்பியவர்கள் நம்மை ஏமாற்றும் பொழுது நம் மனம் எவ்வாறு இருக்கும் என்பதை நீயும் அறிவாய் என்று நானும் அறிவேன். நீ என்னிலிருந்து என்னால் வந்திருந்தாலும் பல சமயங்களில் என்னைக் காட்டிலும் அதிக முதிர்ச்சியாய்த் திகழ்ந்ததுண்டு. நான் செய்த தவறால் நிகழ்ந்த குற்றயுணர்ச்சியில் இருந்து எனை மீட்க வந்த ரட்சகன் நீ. அதனாலோ என்னவோ உன்னைக் காட்டிலும் உன் மீது அதீத அக்கறை நானெடுத்துக்கொண்டேன். அப்படி நான் எடுத்துக்கொண்ட அந்த உரிமையை என்னிடமிருந்து நீ பறித்துக்கொண்டதும் நான் பரிதவித்துப்போனேன். நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டவள் நிஜத்தைத் தேடி நகரும் முன்னே நிழலோடு நிஜமும் கைவிட்டுப் போனது. என் காலதாமதம் உன்னுடனான என் காலவரிசையையே புரட்டிப்போடும் என்று அறிந்திருந்தால் அன்று நான் தாமதித்து தவறிழைத்திருக்கவே மாட்டேன். அதனால் இன்று இந்த எழுத்தும் தன் அவசியமற்றுப் போயிருக்கும். எத்தனையோ கதைகளை எழுதிய எனக்கு ஏன் உன் கதையை எழுதும் வாய்ப்பமையவில்லை? என் கதை மாந்தர்கள் சிரமப்படுவதையே விரும்பாத உனக்கு ஏன் நான் சிரமத்தைப் பரிசளித்தேன்? உன் கதைக்கு ஒரு சுபமிடும் வரை என் எழுத்துத் தொடரும்..."
ப்ரியங்களுடன்,
பவித்ரா குமாரசாமி
.

மக்களே நேத்தும் சம்பவம் சிறப்பாகவே அரங்கேறியது. இனி எல்லாம் அவன் கையில். உங்களுடைய பிராத்தனைகளுக்கு நன்றி. இனிமேல் வாரம் இரண்டு vkn இரண்டு mm கட்டாயம் வரும். இன்று நான் book fair போகப்போகிறேன். நீங்க படித்த சில சிறந்த non fiction கதைகளைத் தெரிவிக்கவும். fiction வேண்டாம்.
இந்தக் கதையைப் பற்றி ஒன்று சொல்ல விரும்புகிறேன். இது மொத்தம் ஐந்து காலகட்டத்தில் நடக்கும் கதை. non linear முறையில் இது வரும். அதனால் ஒவ்வொரு அத்தியாயத்தில் விடுபட்ட மீதி இனி வரும் அத்தியாயங்களில் தொடரும்.

Nirmala vandhachu ???
 
வாழ்த்துகள் ???
இனி இதுக்கான ரிசல்ட் எப்போ வரும் ??

இனியாவது சொன்ன சொல்லை காப்பாத்துறீங்களான்னு பார்க்கிறேன் ???
 
மாற்றங்களே வினா. மாற்றங்களே விடை. ஆனால் இந்த இரண்டு மாற்றங்களுக்கும் இடையில் நிகழும் மாற்றங்களை எவ்வித மாற்றமும் செய்யாமல் ஏற்றுக்கொள்பவர்களுக்கே மாற்றம் வசப்படும். அப்படி ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த மாற்றங்களை மாற்றிட முனைபவர்களுக்கு மாற்ற முடியாத மாற்றம் ஏற்படும் என்று யார் தான் புரிய வைப்பது?
The best part of this episode, அருமையான வார்த்தைகள், !!! :love: :love: :love:

naviyai, and pavi ai en kastapadutheeranga, ? ? eppadiதுறுதுறுனு இருந்த பையன்...???

இந்த ரைட்டர் என்ன தப்பு செஞ்சாங்க, அதுவும் நவியை ரட்சகன் சொல்லும் அளவுக்கு??? நவிக்கு எதாவது பண்ணிட்டாங்களஆ??

எல்லா கேள்விக்குறியும் சீக்கிரமே ஆச்சர்யக்குறியாக வெயிட்டீங்!!

ஐந்து காலகட்டம்,

நவிக்கு 22

தென் மெர்சி ப்ரக்னெண்ட் ஆன சமயம்./ ஒரு கல்யானத்துக்குப் போவாங்க, அது?

அடுத்து இப்போ இரண்டு வயசு நிலன்.

ஹீரோயின் குழந்தை பருவம்.

?? சரியா? இன்னும் ஒன்னு என்னதூ???

பயங்கர non linear :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

சீக்கிரமே நவி வாழ்க்கையிலும் ப்ரவீன் வாழ்க்கையிலும் பாசிட்டிவ் ரிசல்ட் எதிர்ப்பார்க்கிறேன்,:love:

ஆவலுடன்:love::love::love:
 
ரொம்ப நன்றி? நான் admire பண்ற writer கிட்ட இருந்து இது கிடைப்பதில் இன்னும் happy? எஸ் ஒரு சம்பவம் செஞ்சிட்டாங்க. அதான் நவி கோவமாக இருக்கிறான். நன்றி. 2014ல ஹீரோக்கு 22, ஹீரோ ஆஸ்திரேலியா போவது. மேரேஜ், present, அஞ்சு பாஸ்ட். இது போக அங்கங்கே சில fb வரும்.

உங்க வார்த்தை பலிக்கட்டும்?
 
Top