Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்) - 4

Advertisement

praveenraj

Well-known member
Member

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

என்ன தான் வினீத் வழக்கம் போல் அவளை தான் வம்பிழுப்பதாகவே நினைக்க பெண்ணவளுக்கு அந்த ஆடவனின் ஆசை விளங்காமல் போகுமா என்ன? கடந்த பதினேழு மாதங்களாக வினீத்தை அவளுக்குத் தெரியுமே! வயதில் தன்னைவிட பெரியவனாகவே இருந்தாலும் இந்த கிச்சனை பொறுத்தவரை வினீத் அஞ்சுவுக்கு ஜுனியரே. மும்பையில் ஒரு புகழ்பெற்ற நட்சத்திர விடுதியில் பணியில் இருந்தவன் எதிர்பாரா விதமாகத் தந்தை தவறியதும் சென்னைக்கு குடியேற வேண்டியதாகப் போனது. அவன் பணியில் சேர்ந்த நாளன்று வேணு மஹேந்திரன் மனோஜ் ஆகியோர் ஒரு அரசாங்க ஆர்டரில் பிசியாக இருந்ததால் அவனை ரிஸீவ் செய்து அவனுக்கு ஜாயினிங் ஃபார்மாலிட்டீஸ் அனைத்தையும் சொல்லிக்கொடுத்து அவனை கிச்சன் டூருக்கு அழைத்துச் சென்றது முதல் அவனுடைய அக்கோமடேஷன் வரை அனைத்திலும் உதவியவள் அஞ்சனாவே தான்.

நியூ ஜாய்னியாக அந்த விடுதிக்கு வருபவர்களுக்கு மூன்று நாட்கள் அந்த விடுதியின் அறையிலே தங்கிக்கொள்ள அனுமதியுண்டு. அதற்குள் அவர்கள் தங்குவதற்கான வேறு இடத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட அறை லக்ஸூரி சூட்ஸ் வகையைச் சார்ந்தவை. தினசரி வாடகையே பல ஆயிரங்கள் இருக்கும். மூன்று நாட்களுக்கு மேல் தங்க விருப்பட்டதால் அதற்கான வாடகையை அவர்கள் செலுத்தவேண்டியதாகி விடும்.

மேற்சொன்ன நடைமுறைகளை அஞ்சனா வினீத்திடம் தெரியப்படுத்தியதும் சிறிதும் யோசிக்காமல்,

"அப்போ எனக்கு ரெண்ட்டுக்கு வீடு பார்க்கவும் ஹெல்ப் பண்றிங்களா அஞ்சு..." என்று வெகு சாதாரணமாகவே அவனும் கேட்டுவிட அஞ்சனாவிற்கோ தவிர்க்க முடியாதவாறு ஒரு தர்மசங்கடமான சூழல் உண்டானது.

"இப்போதைக்கு எனக்கு இங்க தெரிஞ்ச ஒரே ஃப்ரண்ட் நீங்க தான்..." என்று சொன்னவனுக்கு தலையசைத்தவள் மாலை தனக்கு டூட்டி முடிந்ததும் தன்னுடன் வருமாறு சொல்லி தன்னுடைய எண்ணையும் கொடுத்துச் சென்றாள்.

கடந்த கால யோசனையில் இருந்தவளை அனிஷா இருமுறை அழைத்தும் திரும்பாமல் இருக்க மூன்றாவது முறையாக அவளைத் தொட்டு அழைக்க அதில் நிகழ்காலத்திற்கு வந்தவள் காஃபீ வால்நட் கேக்கிற்கு அவர்கள் செய்துவைத்த பதத்தைக் காட்டி அவளிடம் ஒப்புதலைப் பெற்றதும் அந்த பிரம்மாண்ட கிட்சனில் இருந்த பெரிய ஓவனில் தாங்கள் தயார் செய்துவைத்திருந்த மிக்ஸை பேக்கிங் ட்ரேவில் ஊற்றி ஓவனை மூடினார்கள்.

அதை மேற்பார்வை பார்த்தவள் சாக்லேட் அவகேடோ மௌஸ் செய்யும் அறைக்குச் சென்று அதில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தியவளுக்கு அன்று மாலை வரை வேறு எதையும் யோசிக்கும் நிலையில் நேரம் அமையவே இல்லை. என்ன தான் எட்டு மணிநேர ஜாப் என்று அவளுக்குச் சொல்லியிருந்தாலும் கிச்சனுக்குள் சென்று விட்டால் அன்றைய தினத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்யும் வரை அவள் பணிபுரிந்தே தீரவேண்டும்.

கிச்சனில் அனைவரும் பரபரப்பாகவே வேலை செய்துகொண்டிருக்க அங்கே இருந்த தீப்தி மட்டும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை தன்னுடைய கைக்கடிகாரத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அதை முன்னமே கவனித்த அஞ்சு இம்முறை அவளிடம் தானாகவே சென்று விசாரித்தாள்.

"மேம், அது இன்னைக்கு என் பேரெண்ட்ஸோட வெட்டிங் அன்னிவெர்சரி. ஈவினிங் எல்லோரும் கோவிலுக்குப் போகலாம்னு பிளான் பண்ணியிருந்தோம். ஆனா இப்போதைக்கு என்னால கிளம்ப முடியாது போல..." என்று தயங்கியவளுக்குச் சிறிதும் யோசிக்காமல்,"யு கேன் லீவ் நவ்..." என்று சொல்லியும் அவள் அங்கேயே நிற்கவும்,

"என்ன ஆச்சு, அதான் கிளம்ப சொல்லிட்டேனே?"

"இல்ல மேம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செஃப் வந்தாரு. இன்னைக்கு எவ்வளவு லேட் ஆனாலும் வேலை எல்லாம் முடிச்சிட்டுத் தான் போகணும்னு..." என்று அவள் இழுக்க,

"யாரு மகேந்திரன் சாரா?" என்றவளுக்கு,

"இல்ல மேம். மனோஜ் சார்" என்றதும் அவளது தயக்கத்திற்கான காரணம் அஞ்சுவுக்கும் புரிந்தது. இந்த கிச்சனில் வேணுவைக் கூடச் சமாளித்து விடலாம். ஆனால் மனோஜ் ஒரு ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி போன்றவர். ஒருமுறை இதேபோலொரு பார்ட்டியில் அஞ்சனா ஒரு டிஷ்ஷை செய்வதாகச் சொல்ல அதை மறுத்து மனோஜ் ஒன்றைச் சொல்ல இருவருக்கும் இடையில் பெரிய கருத்து மோதல் உண்டானது. பிரபல இத்தாலியன் டெசெர்ட்டான அல்மண்ட் செமிஃரெடோ (almond semifroddo) என்னும் ப்ரோஸென் ஐஸ்க்ரீம் கேக்கை (உறைந்த) செய்யப்போவதாக அஞ்சனா சொல்ல அதில் விருப்பமில்லாமல் அதை அவர் நிராகரித்து விட்டார். இந்த கிச்சனில் இருக்கும் பெரும்பாலானோர் இந்தியாவின் பிரபல கேட்டரிங் கல்லூரியில் பயின்றவர்களே. அப்படியே ஃபாரினில் பயின்றிருந்தாலும் தங்களுடைய மாஸ்டர்ஸ் டிக்ரீயை தான் அங்கே செய்திருப்பார்கள். ஆனால் அஞ்சனா தன்னுடைய பேச்சிலர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் இரண்டையுமே லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற கல்லூரியில் முடித்து அங்கேயே ஓராண்டு பணிபுரிந்தும் இருந்தாள். இல்லையேல் இத்தனை சிறிய வயதில் இவ்வளவு பெரிய நட்சத்திர விடுதியில் ஓர் உயரிய பதவியில் அவளால் இருக்கமுடியுமா என்ன?

அங்கே கையைப் பிசைந்தவாறு நின்ற தீப்தியைக் கண்டவள்,"யார் கேட்டாலும் அஞ்சனா மேம் கிட்டச் சொல்லிட்டேன்னு சொல்லு. யு கேன் லீவ் நவ்..." என்றவளின் வார்த்தையில் இருந்த உறுதி தீப்தியையும் தொற்றிக்கொள்ள அங்கிருந்து புறப்பட்டாள் தீப்தி.

அவள் வெளியேறும் சமயத்தில் அவளை மீண்டும் அழைத்த அஞ்சனா,"கீழ டிரஸ் சேஞ் பண்ணிட்டு ரிஷப்சனிஸ்ட் முகிலாவைப் பார்த்துட்டுப் போ..." என்றவள் தன்னுடைய வேலையில் மூழ்கிவிட்டாள். இதெல்லாம் நடக்கும் சமயம் மனோஜும் அங்கே வந்துவிட அடுத்து என்ன நடக்கும் என்பதையும் யூகித்தவாறு பேக்கிங் ஓவன் இருக்கும் அறைக்குள் நுழைந்து விட்டாள் அஞ்சனா. கீழே தீப்திக்கு தங்களது பேன்ட்ரியில் இருந்து ஒரு ஸ்பெஷல் கேக்கானது ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. அதிலிருந்த 'வித் லவ் அஞ்சனா' என்ற வார்த்தைகளை தன்னையும் அறியாமல் தடவிப் பார்த்தவள்,'பலாசுளைகளைப் போல் மனம் கொண்டவள் ஏன் அதே பலாப்பழத்தைப் போலே தன்னைக் கடுமையாகவே காட்டிக்கொள்கிறாள்' என்ற காரணம் புரியாமல் அங்கிருந்து புறப்பட்டாள்.

அதன் பின் நேரம் போனதே தெரியவில்லை. மாலை ஐந்து மணிக்குள் உணவு வேணுவின் அறையில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட அதற்கும் முன்னே மனோஜ் மற்றும் மஹேந்திரனின் ஒப்புதலைப் பெற்று அதை வேணுவிடம் சமர்ப்பித்து இருந்தாள் அஞ்சனா.

காஃபி வால்நட் கேக்கை சுவைத்ததும் தன்னுடைய புருவத்தை மட்டும் சிறிதளவு ஏற்றியவர் எங்கே அஞ்சனா கவனித்து விடுவாளோ என்று நொடியில் சமம் செய்துகொண்டு சாக்கோ அவகேடோ மௌசை சுவைத்தார். இப்போது அவர் முகத்தில் மாற்றமேதும் ஏற்படாமல் போக அஞ்சனாவின் மனம் சற்று வருத்தமடைந்தது என்னவோ உண்மை. இது தான் வேணுவின் குணம். உணவு நன்றாக இருந்தால் அதற்கு எந்தக் கருத்தும் சொல்லவே மாட்டார்.

"அஞ்சனா கமிங் சன்டே நீ ஃப்ரீயா?" என்றவர் தன்னையும் அறியாமல் அந்த அறையை ஒரு பார்வை பார்த்து யாருமில்லை என்றதும் தான் நிம்மதியடைந்தார்.

"எஸ் செஃப்..." என்றவளுக்கு,

"ஐ அம் நாட் எ செஃப் நவ்..."

"எஸ் அங்கிள்..."

"தென் மீட் மீ இன் தி பார்க் வி யூஸ்வல்லி மீட்..." (நாம் வழக்கமாகச் சந்திக்கும் பூங்காவில் என்னை வந்து பார்க்கவும்)

அப்போது மஹேந்திரன் அங்கே வந்ததும் வினீத், சந்தோஷ் ராபர்ட் ஆகியோர் வந்துவிட எல்லோர் உணவையும் சரிபார்த்துவிட்டு அவர்களை வீட்டிற்கு அனுப்பினார்.

உடைமாற்றி வெளியேறியவள் கணேசனால் வரமுடியாது என்று அறிந்து கேப் புக் செய்யும் வேளையில் அங்கே வந்த வினீத்,

"அஞ்சு, வா நான் உன்னை டிராப் பண்ணுறேன்" என்றான்.

தயக்கமேதும் இன்றி அவனுடைய இருசக்கர வாகனத்தில் எறியவள்,"வினீத் நான் உன்கிட்டக் கொஞ்சம் பேசணும். இப்போ இல்ல. சம்டைம் லேட்டர். ஆனா ஒன்னு நல்லா ஞாபகம் வெச்சுக்கோ. நீ என்னுடைய ஃப்ரண்ட். நீ ஒரு பையங்கறதால மட்டுமே நீ எனக்கு ஒரு பாய் ஃப்ரண்ட். நாட் இன் தி அதர் சென்ஸ். ஹோப் யு கெட் இட்..." என்றவள் சிகப்பு விழுந்திருந்த சிக்னலில் தானாகவே இறங்கி,

"நாளைக்கு கிச்சன்ல பார்க்கலாம் பார்ட்னர்" என்று சென்றுவிட ஏனோ வினீத்திற்குள் சொல்ல முடியாத ஒரு பாரம் கூடியது. அஞ்சனாவை அவனுக்குப் பிடித்ததற்கான காரணமே இது தான். இந்த ஒன்றரை ஆண்டுகளில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவளை யாருக்கேனும் பிடிக்காமல் போனால் தான் ஆச்சர்யம்.

ஆச்சர்யமே ஆச்சர்யம் கொள்ளும் ஆச்சர்யம் அவள். அவள் தான் அஞ்சனா.
தன்னுடைய பி.ஜி சென்றவளுக்கு அப்போது தான் காலையில் நிகழ்ந்த கலாட்டாக்கள் எல்லாம் நினைவுக்கு வர அவள் இதழோரம் ஒரு குறுநகை அவள் அனுமதி இன்றியே குடிகொண்டது.

ரெஃப்ரெஷ் ஆகி வருவதற்குள் பாதி சமையல் வேலை முடிந்திருக்க ஜெஸ்ஸி கார்த்தி மதி ஆகியோர் தங்களுடைய அன்றைய நாளை பற்றிப் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.

கார்த்தி அஞ்சுவை முறைக்கவும்,"சாரி கார்த்தி இன்னைக்கு கொஞ்சம் ஒர்க் ஜாஸ்தி. இதுக்காகவே கமிங் சாட்டர் டே மூணு வேளையும் நானே செய்யுறேன். அதும் உங்களுக்குப் பிடித்த டிஷ் எல்லாமே. என்ன ஓகே வா?" என்றாள்.

அப்போது அவர்களது கிச்சனில் இருந்த எப்.எம் 'இந்திரா'வில் இருந்து நிலா காய்கிறது பாடலை ஒலிபரப்ப அஞ்சனாவின் நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தது.

"ஆ... ஆஅ... ஆஅ...
ஆஆ... ஆஅ... ஆஅ... ஆஅ...
ஆஅ... ஆஅ...

நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே...
இந்தக் கண்கள் மட்டும்
உன்னைக் காணும்...
தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே...
சின்ன கைகள் மட்டும்
உன்னைத் தீண்டும்...

காற்று வீசும் வெயில்
காயும் காயும்
அதில் மாற்றும் ஏதும் இல்லையே...
ஆஆ... வானும் மண்ணும்
நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்..."

என்று கண்களை மூடி ஆத்மார்த்தமாக மஞ்சள் மற்றும் சிகப்பு நிறைந்த பட்டுப் பாவாடையில் பாடிய அந்த பனிரெண்டு வயது சிறுமியின் மழலை நிரம்பிய காந்தக் குரல் அந்த அரங்கில் நிரம்பியிருந்த நடுவர்களை மட்டுமல்லாமல் பார்வையாளர்களாகவும் பிற போட்டியாளர்களின் பெற்றோர்களாகவும் இருந்தவர்களைக் கூட எழுந்து நின்று கைத்தட்டுமளவுக்குச் செய்திருந்தது என்றால் அது துளியும் மிகையல்ல. ரியாலிட்டி ஷோக்களின் மீது தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்திய அந்தப் பிரபலமான சேனலின் மழலையர் சிறந்த பாடகர் நிகழ்ச்சியின் ப்ரீ பினாலே சுற்றுக்கான ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அன்றைய ஷூட்டிங் முடிந்ததும் பெற்றோர் தாத்தா பாட்டி புடைசூழ தங்கள் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் அன்றைய விழா நாயகி. ஏனோ அந்த காரில் இருந்த எல்லோருக்கும் அடுத்த வாரம் நடைபெற போகும் இறுதிப் போட்டியின் முடிவைப் பற்றிய எண்ணமே மேலோங்கியது. ஆனால் அந்தக் கவலை துளியும் இல்லாமல் வழக்கம் போல் தன் தந்தையின் மடியில் அமர்ந்து தன்னைச் சுற்றி வளைந்திருக்கும் தந்தையின் கரத்திலிருக்கும் பிரேஸ் லெட்டை சுரண்டிக்கொண்டிருந்தாள் அஞ்சனா.

என்ன தான் மகளின் திறமை மீது அலாதி நம்பிக்கை இருந்தாலும் எதிர்பாராமல் அவளுக்கு வெற்றிக்கனி தட்டிப் போய் விடுமானால் அவளது பிஞ்சு மனதில் சலனம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஒரு தந்தையாக முரளிதரனுக்கு இருக்கவே செய்தது.

"பட்டு... ஏ பட்டுமா அப்பா உன்கிட்ட ஒன்னு கேக்கவா?" என்றதும் அவர் மடிமீது இருந்தவள் தன்னுடைய தலையை மட்டும் மேலே நிமிர்த்தி புருவத்தை உயர்த்தி என்னவென்று வினவினாள்.

"நீங்க எத்தனை பேருடா அம்மு ஃபைனல்ஸ்க்கு செலக்ட் ஆகியிருக்கிங்க?"

"ஐஞ்சு பேரு ப்பா. நீ தான் பார்த்தயில்ல?"

"ஆனா ஒருத்தர் தானடா அம்மு வின் பண்ண முடியும். வேணுனா ரெண்டு பேர் ரன்னர் அப் ஆகலாம். எப்படிப் பார்த்தாலும் ரெண்டு பேர்..." என்றவர் தோல்வியை எவ்வாறு தன்னுடைய மகளுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று யோசித்தார். படிப்பில் அஞ்சனா படு ஜூட்டி. விளையாட்டு மீது பெரிய ஆர்வமிருந்ததில்லை. ஏழு வயதில் திடீரென்று சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வந்து நின்ற மகளை ஒரு பிரபல சங்கீத ஆசானிடம் சேர்த்து விட்டார். போன வருட ஆனுவல் டேவில் பாடிய அஞ்சனாவின் குரல் வளத்தைக் கண்ட முரளியின் நண்பன் தான் அந்தப் பாடகர் போட்டியின் ஆடிசனுக்கு கூட்டிச்செல்ல சொன்னார். இன்று இவ்வளவு புகழ் வெளிச்சத்திற்கு ஆளாகக்கூடும் என்று முன்னமே தெரிந்திருந்தால் நிச்சயம் முரளிதரன் ஒன்றுக்கு இரு முறை யோசித்து இருப்பார் தான்.மகளின் முகம் தொலைக்காட்சியில் தோன்றியது முதல் சொந்த பந்தம் அக்கம் பக்கம் என்று எல்லோரும் இவளிடம் பெரியதாக எதிர்பார்க்க தொடக்கி விட்டார்கள். இந்த எதிர்பார்ப்பு ஒருகாலும் தன் மகளின் பிஞ்சு மனதில் சுமையாகி ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்ற பயமே அவர் மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் வீட்டில் இருப்பவர்களும் சும்மா இல்லாமல் தங்கள் நட்பு அலுவலகம் என்று எல்லோரிடமும் பெருமைப்பட்டு தம்பட்டம் அடித்து விட்டார்களே என்ற கவலையும் அவரை வாட்டியது.

"ஜெயிக்கிறோம் தோக்குறோம் இட்ஸ் ஆல் இன் தி கேம்னு நீ தானப்பா சொல்லியிருக்க? அண்ட் நான் வின் பண்ணாட்டிக் கூட நிச்சயம் ஒரு டிசர்விங் கேண்டிடேட் தானப்பா வின் பண்ணுவாங்க. எனக்கு ஒன்னு இல்லப்பா..." என்றவள் மீண்டும் தன் தந்தையின் மீதே சாய்ந்து வாகாக உறங்கினாள்.

இந்தக் கணம் அஞ்சனா போட்டியில் வெற்றிப்பெற்றதைக் காட்டிலும் அதிகம் மகிழ்ந்தார் முரளிதரன்.

பழைய நினைவுகள் அவளைத் தாக்க யாரிடமும் ஏதும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள். அவள் சொல்லாமலே அதற்கான காரணம் அறிந்து கொண்ட மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

காதலால் நிறைப்பாள்...
 
Nirmala vandhachu ???
 
Top