Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் ;இமையாக நீ --16

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 16


வெண்ணிலாவுக்கு ரவியின் நினைவு வந்ததும், அவளது கண்களில் நீர் கசியத் தொடங்கியது. ' ம், நீங்க என்னை வீட்டுக்கு வந்து பார்த்துட்டுப் போய், எல்லா விஷயங்களையும் நம்ப வீட்டுல பேசி முடிச்சி கல்யாணம் முடிவு ஆயிருந்ததுன்னா கூட நான் இப்படி உங்களை நெனச்சுட்டு இருந்திருப்பேனான்னு தெரியலை. ஆனா, இப்ப ஏதேதோ நம்ப முடியாத சம்பவங்கள் எல்லாம் என் வாழ்க்கையில நடந்துட்டு இருக்கு. இந்த நேரத்தில தான், நீங்க என் பக்கத்துலயே இருக்கணும்னு என் மனசு ரொம்பவே ஆசைப்படுது. என்ன செய்யறது. நடக்காத ஒன்னைத் தானே மனசு, எப்படியாவது நடத்திக் காட்டணும்னு பிரயாசைப்படுது ' என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள்.


அதன் பின் இட்லியிடம் அவள் கரங்கள் செல்லவில்லை. அருகே அமர்ந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்த சாரதாவிற்காக அவள் மேலும் இரண்டு விள்ளல்களைப் பிட்டுத் தனது வாய்க்குள் இட்டுக் கொண்டாள்.

" ம், இந்தாம்மா, இன்னும் கொஞ்சம் சட்னி போடவா உனக்கு? , இல்லை வேற ஏதாவது வேணுமா? " என்று கேட்ட சாரதாவிற்கு
வெண்ணிலாவிற்கு அப்போது என்ன வேண்டி இருந்தது எனத் தெரிந்து இருக்க வாய்ப்பில்லையே!

" இல்லைம்மா, எனக்குப் போதும், இதையே என்னால சாப்பிட முடியலை " என்று சொல்லி விட்டு, மீதமிருந்த இட்லியையும், அவசர கதியில் தனது வாய்க்குள் திணித்துக் கொண்டு, கை கழுவிக் கொண்டாள் வெண்ணிலா.

சுஷ்மி, அவளிடம், " அத்தை, என்ன இது, அப்படியே வாய்க்குள்ள போட்டு அடைச்சிக்கிட்ட, அப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது அத்தை. அப்புறம் தொண்டைக்குள்ள போய் சிக்கி நின்னுக்குமாம், எங்க பாட்டி சொன்னாங்க.அப்படித் தானே பாட்டி " என்றாள்.

" ஆமாம்டா செல்லம், என் சுஷ்மி குட்டிக்கு எல்லாமே தெரிஞ்சுருக்கே " என்று அவளை அணைத்து முத்தமிட்டாள் சாரதா.

வெண்ணிலா, அவர்களுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். அவளுக்கு சாரதாவிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் மிச்சம் இருந்தன.
" அம்மா, வாசு சொன்னான், ரம்யா பத்தி. ரம்யா.., ரம்யா கல்யாணம் ஆகாமலேயே...." அவளால் மேலே தொடர்ந்து பேச முடியவில்லை.

" ம்ம், ஆமாம் மா. வாசு உன்னிடம் எவ்வளவு சொன்னான் என்று தெரியவில்லை. எங்கள் ரம்யா அவளுக்குத் தெரியாமல் கர்ப்பமானாள், அவள் இதைப் பற்றி எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை அவளை எங்களுக்குத் தெரியாத இடத்தில், அவளைப் போல கர்ப்பம் தரிச்ச மத்த பொண்ணுங்களோட தங்க வச்சிட்டாங்க............... சாரதா கண்ணீருடன் கடந்த காலத்தை வெண்ணிலாவிடம் கூறினாள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனது மகனின் பொறுப்பில் மகள் பத்திரமாக இருந்திடுவாள் என்ற எண்ணத்தில், தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற சாரதா, அதன் பின் தன் மகளைப் பார்த்தது, கர்ப்ப ஸ்திரீ கோலத்தில் தான்!

சென்னையில் நடந்த மருத்துவ மாநாடு முடிவுற்ற உடன், வாசுவின் திறமை மிக்க, உரைகளைக் கேட்ட அங்கு வந்திருந்த மருத்துவர் குழுவினர் , அவனை மும்பைக்கு, ஆராய்ச்சி நிமித்தமாக அனுப்பி வைத்தார்கள்.

தங்கை ரம்யாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு அதனைச் சொல்லி விட்டு, அவளை ஊருக்குப் போகச் சொன்னான் வாசு. " ரம்யா, இங்கே என்னை மும்பையில் நடக்கப் போற, பயிற்சிக்கூட்டத்திற்கு செலக்ட் பண்ணிட்டாங்க. நான் திரும்பவும் ஊருக்கு வர்றதுக்கு எப்படியும் மூணு மாசம் ஆகிடும். அதனால நீ மட்டும் தனியா அங்கே இருக்க வேண்டாம்மா. ஊருக்குப் போயிடும்மா " என்று சொன்னான்.

அதற்கு அவள், " இங்கே நான், ஹாஸ்பிட்டலுக்கு சொந்தமான ஹாஸ்டல்ல தான் அண்ணா, மத்த பெண் ஊழியர்களோட தங்கி இருக்கேன்.
அதனால எனக்கு இங்கே எந்தப் பயமும் இல்லை அண்ணா . நீ உன் வேலையை நல்லபடியா முடிச்சுட்டு வா. அது வரைக்கும் நான் இங்கேயே இருந்துக்கறேன் " என்று பதில் அளித்தாள்.

" ரம்யா, உனக்கு எதுக்கு இந்த வேலை. வெளி இடத்தில எல்லாம் எதுக்குத் தங்கிட்டு இருக்கே. அங்கே சாப்பாடு எல்லாம், நல்லா இருக்கா. உனக்கு பில்டர் காப்பின்னா, உயிராச்சே. அது அங்கே கிடைக்குதா? அப்புறம்.. அம்மாவைப் போய்ப் பார்க்கலையா நீ. நானும், அங்கே இருந்து போன் பண்ணும் போதெல்லாம் டவர் பிரச்சினை காரணமா என்னோட கால் , அவங்களுக்கு ரீச் ஆகவே மாட்டேங்குது . அதான் நீ போய் அவங்க கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டுப் பார்த்துட்டு வருவேன்னு நெனச்சேன் " என்று கேட்டான்.

முதலில் தன்னைச் சமாளித்துக் கொண்டு அவனிடம் , பேசிய ரம்யாவினால் ' அம்மா ' என்ற அவனது இதழ்கள் உதிர்த்த மூவெழுத்துச் சொல்லைக் கேட்ட பின், மடை திறந்த வெள்ளம் போல அழுகை பீறிட்டு வந்தது.

தனது கைகளில் இருந்த, அலைபேசியின் இணைப்பைத் துண்டித்துக் கொண்ட அவள், படுக்கையில் குப்புறப் படுத்துக் கொண்டே அழத் தொடங்கினாள் .

அங்கே, ஒரு அறையில், மூன்று நபர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.இவள் , தன்னை மீறி அழுது கொண்டே இருப்பதைக் கண்ட மற்ற இரண்டு பெண்களும், அவளை நெருங்கி வந்தனர்.

" அழாதேம்மா. இப்படி அழுவறதுனால நம்ம வாழ்க்கைல எதுவும் மாறப் போறது இல்லை. பிள்ளையைப் பெத்துப் போட்டுட்டு, இங்கே இருந்து எப்படியாவது தப்பிச்சு ஓடிப் போயிடணும்.அது வரைக்கும் பேசாம, இங்கே குடுக்கற ஜூஸ், சூப்பைக் குடிச்சுட்டு ரெஸ்ட் எடுத்துக்க வேண்டியது தான் " என்றாள் ஒரு பெண்.
ரம்யாவுக்கு அவர்களது பேச்சைக் கேட்டு சிரிப்பு வரவில்லை.அவளது மனம், உலையில் இட்ட அரிசி போல கொதித்துக் கொண்டு இருந்தது.

' தாய்மைப் பேறு என்பது எவ்வளவு பெரிய வரம். எனக்குத் தெரிஞ்சே எத்தனையோ பேரு, பிள்ளைப் பேறு கிடைக்காம , விரக்தியோட காலத்தை ஓட்டி இருக்காங்க . ஆனா இப்படி, ஏதோ சுமக்கக் கூடாத அவமானத்தைச் சுமக்கிற மாதிரி, இப்படி என்னை அழ வச்சி, வேண்டா வெறுப்பா ஒரு வரத்தைச் சுமக்க வச்சிட்டியே , நீ எல்லாம் ஒரு டாக்டரா? ' என்று தனக்குள் டாக்டரைத் திட்டித் தீர்த்துக் கொண்டாள்.

மீண்டும் அவளது அலைபேசி ஒலித்தது. வாசு தான் அழைத்து இருந்தான்.ஒருவாறு ,அழுகையைத் துடைத்துப் போட்டுக் கொண்ட ரம்யா,

தனது அலைபேசியை ஆன் செய்து, தனது குரலுக்குள் அதீத மென்மையை வரவழைத்துக் கொண்டவளாய், " ஆங் சொல்லு அண்ணா. இங்கே திடீர்னு லைன் கட் ஆயிடுச்சு. அதான் பேச முடியலை " என்றாள்.

" சரிடீ ரம்யா, நீ பத்திரமா இருந்துக்க. நான் வேலையை முடிச்சிட்டு வந்துடறேன். ஹாஸ்டல்ல ஒன்னும் பிரச்சினை இல்லையே . டேக் கேர், நான் வரும் போது உனக்கு சூரத் புடவைங்க வாங்கிட்டு வர்றேன் . ஓ.கேவா, சரிடீ. நான் வக்கிறேன் " என்று அன்பைக் குழைத்துப் பேசிய தனது அண்ணனின் குரலில் சற்றே மனம் நெகிழ்ந்தாள் ரம்யா.

ஆனால் விதி வசம் சிக்கிக் கொண்ட அவளது வாழ்க்கை பயணம், எங்கெங்கோ திசை மாறிச் செல்லத் தொடங்கியது.

எந்தத் தம்பதிகளுக்காக, அவள் இப்படி ஒரு கட்டாயப் பணியில் அமர்த்தப் பட்டாளோ, அவர்கள் இருவரும் ஒரு கார் விபத்தில், உயிரிழந்து விட்டனர்.அதனால் ரம்யாவின், நிலைமை அங்கே தலை கீழாக மாறிப் போய் விட்டிருந்தது .அப்போது அவளது வயிற்றுச் சுமையின் வயதும் ஆறு மாதங்களைக் கடந்து விட்டிருந்தது.

மூன்று மாதப் பயிற்சி வகுப்புகள் முடித்து விட்டதாகத் தன் தங்கையிடம் சொல்லி, அவளை வீட்டிற்கு வரும்படி அழைப்பதற்காக அவளது அலைபேசி எண்களைத் தட்டிய வாசுவிற்கு அலைபேசி விடை அளிக்கவில்லை.

எத்தனை முறை அழைத்த போதும் அதன் பீப், பீப் ஒலி மட்டும் தான் அவனை எட்டியது.' என்ன ஆச்சு, ஏன் இப்படி லைன் கிடைக்க மாட்டேங்குது. ரம்யாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே ' என்று முதன் முறையாக வாசுவுக்குள் பயம் எழுந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மருத்துவமனையில் ரவிக்காகக் காத்திருக்கத் தொடங்கினான் தீபக். ' ஒரு மெடிக்கல் ரெப்பா, அவன் முதல்ல போய் அந்த டாக்டரைப் பார்த்துட்டு வந்து அவளோட, நடவடிக்கைகளைப் பத்தி நம்ம கிட்ட சொல்லட்டும். அதுக்குத் தகுந்த மாதிரி பேசி, இவங்க கிட்ட இருந்து ஏதாவது விஷயத்தைக் கறக்க முடியுதான்னு பார்ப்போம் ' என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.

இரண்டே நிமிடங்களில், ரவியின் வண்டி, மருத்துவமனை வளாகத்தை எட்டியது.அதே நேரத்தில், மருத்துவமனை முகப்பிற்குள் சரசரவென்று புகுந்தன இரண்டு, டாட்டா இன்னோவா மகிழுந்துகள்.முதல் வண்டியில் இருந்து இறங்கிக் கொண்டவன், சென்னை ஆளுங்கட்சி எம்
எல்.ஏ தமிழ்ச்செல்வன்.அதனைப் பின் தொடர்ந்து வந்த வண்டியில் இருந்து இறங்க முயற்சித்தவர்களைத் தடுத்த அவன், " இதுலேயே இருங்க. நான் சொல்லும் போது வந்தாப் போதும் " என்றான்.

பின் அவன் ரிசப்ஷனைத் திரும்பிக் கூடப் பாராமல், நேராக மருத்துவரின் அறையை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.சற்றுத் தாமதமாக அதனைக் கவனித்த பிருந்தா, " சார், சார் வெயிட் பண்ணுங்க. இங்கே, உங்களுக்கு முன்னாடியே வந்து டாக்டரைப் பார்க்க நிறைய பேரு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க சார் " என்று சொல்லி அவனைத் அவள் நிறுத்த முயன்றாள்..

" என்னம்மா நீங்க, உங்க டாக்டர் அம்மா கிட்ட, நான் நிறைய பேச வேண்டி இருக்குது. இப்ப எனக்கு வழியை விடப் போறியா, இல்லையா? " என்று உரத்த குரலில் பேசிட, தீபக் தனது இருக்கையை விட்டு எழுந்து கொண்டான்.

ரவியும் அவனுடன் இணைந்து வர முற்ப்பட்டான். தீபக் அவனைத் தடுத்து, அவனிடம் , அங்கே நடப்பவற்றை எல்லாம், அலைபேசிக்குள் சிறைப் படுத்தச் சொன்னான்.

பிருந்தா மீண்டும் தமிழ்ச்செல்வனைத் தடுத்து, " சார் இப்ப மேடம் இப்ப ஸ்கேன் பார்க்கற நேரம். இந்த நேரம் மத்த யாரையும் உள்ள விட மாட்டாங்க சார் . பிளீஸ் சார். ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நீங்க வந்திருக்கிறதா அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன். அதுக்கு அப்புறமா..." அவள் முடிப்பதற்குள்

அவன் அவளை அடிப்பதற்காகத் தனது கைகளை ஓங்கிட, அதனைத் தடுத்துப் பிடித்தான் தீபக்." சார், அதான் சொல்றாங்க இல்ல. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார். நாங்களும் டாக்டர் அம்மாவைப் பார்க்கத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் " என்று சொல்ல

" டேய், என் கையைவே தடுத்துப் பிடிச்சுட்ட இல்லை. நீ யாருடா என்னைக் கேக்கறதுக்கு. இந்த ஆஸ்பத்திரியில மட்டும், இது வரைக்கும் எனக்கு இருபது லட்சம் வரைக்கும் செலவு ஆகியிருக்கு. அதுக்கு ஒரு கணக்கு, சொல்லாம இந்த டாக்டரம்மா எஸ்கேப் ஆயிட்டே இருக்குது. அதைக் கேக்கத் தான் நான் இப்ப வந்திருக்கேன் . நீ உன் வேலையைப் பார்த்துட்டுப் போயிட்டே இரு.எனக்கு அறிவுரை சொல்ற வேலை எல்லாம் வச்சிக்காதே " என்று மிரட்டல் குரலில் சொன்னான்.

"சார், சார் இங்கே பாருங்க. உங்க அராஜகத்தை எல்லாம் எனது செல்போனில் பதிவு செய்துள்ளேன், ஊடகப் பக்கத்தில் பதிவிடலாமா?? " என்று அடங்கிய குரலில் கேட்டான், தீபக் .

அதனைக் கேட்ட தமிழ்ச்செல்வன் கடுங் கோபத்துடன், " டேய். டேய், எல்லாரும் வாங்கடா உள்ளே " என்று வாசலை நோக்கித் தன்னுடன் வந்த அடியாட்களை அழைத்தான்.

( வரும்)

.








AGNmyxZniWkxWtcO0_2zKP44Z-QlCPdTKoamX9VHH23qQA=s40-p
ReplyForward

 
ரவி தீபக் கிட்ட மாடிக்கிறது க்கு முன்னாடி mla கிட்ட மாட்டிக்க போறாங்க போல டாக்டர்
 
Interesting..
இந்த டாக்டர் அம்மா மாட்டிக்கிட்டாங்க போல... எவ்ளோ பெண்கள் வாழ்க்கையை அழிச்சு இருக்கும்.. ?
 
Top