Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 12

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 13

" என்னோட, ரெண்டு மாதச் சம்பளம் பணம் மட்டும் தான் அவங்க எனக்குக் கொடுத்தாங்க. எனக்கும் அதுக்கு மேல எதுவும் அவங்க கிட்ட கேக்கணும்னு தோணலை. எங்கேயோ, போய் நான் அழுக்காகிட்டு வந்த மாதிரி மனசு முழுக்க, ஒரு விரக்தி வந்துடுச்சி எனக்குள்ள. அழுது, அழுது தான் கொஞ்ச , கொஞ்சமா என் அழுக்கைக் கழுவிக்கிட்டு இருக்கேன் நான் " என்றாள் பிரீத்தா.


அவளிடம் இருந்து மெலிதான விசும்பல் ஒலி வெளிப்பட்டது.

தீபக், ஒரு கணம் செய்வதறியாது திகைத்துப் போனான்.

" மேம், காம் டவுன் பிளீஸ். இப்ப வெண்ணிலாவைக் கடத்திட்டாங்க. நாம, அவங்களை எப்படியாவது கண்டுபிடிக்கணுமே. அதுக்கு நீங்களும் எங்க கூட கொஞ்சம் ஒத்துழைக்கணும். உங்களுக்கு ஹாஸ்பிட்டல்ல, நடந்த அநியாயத்தைப் பத்தி எனக்கும் இந்த லெட்டர்ல உள்ளது போலவே, ஒரு புகாரை எழுதிக் கொடுங்கம்மா. இப்ப உடனே வேணாம். இப்ப, நீங்க ரொம்பவே பலவீனமா இருக்கீங்க, மனசளவுல; அதான் இப்படி அழுகை வருது. ஒரு பத்து நாள் போகட்டும். அதுக்கப்புறமா, விரிவா அங்கே உங்களுக்கு நடந்த அநியாயத்தைப் பத்தி எனக்கு ஒரு புகார் எழுதிக் கொடுங்க. நான் வெயிட் பண்றேன் , அண்ட் டேக் கேர் " என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான் தீபக்.
******_*******_******
பொழுது புலர்ந்தது. மற்றொரு காலை அழகாக ஜனித்து விட்டிருந்தது.

ஜன்னல் வழியாக , அறைக்குள் நுழைந்த சிறிதான வெளிச்சப் புள்ளி அதனைக் காட்டியது விழித்துக் கொண்ட வெண்ணிலாவிற்கு முதலில் தான் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை. அவள் அமர்ந்து கொண்டிருந்த நாற்காலியை, படுக்கையைப் போல விரித்து, அவளைப் படுக்க வைத்திருந்தாள் சாரதா . அதனால் தான், தான் நன்கு அசந்து உறங்கி விட்டோம் என்பது அவளுக்குப் புரிந்தது.

ஆனால், நாற்காலி இன்னமும் கட்டிலோடு தான் பிணைக்கப்பட்டு இருந்தது.
மெதுவாகக் கட்டிலின் பக்கம் திரும்பிய அவளது கண்களில், குழந்தை சுஷ்மியும், அவளை அணைத்தபடி அருகில் படுத்துக் கொண்டிருந்த சாரதாவும் தெரிந்தார்கள்.


தூங்கிக் கொண்டிருந்த , குழந்தையை வெறித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

' ம் இப்படி, குழந்தையாவே இருந்திருந்தால், எந்தக் கவலையும் இல்லாமல், நானும் தூங்கிட்டு இருந்திருப்பேனே ' என்றது அவள் மனம்.

அவளது மனம் தனது பெற்றோர்களை நினைத்து, உள்ளுக்குள் அழத் தொடங்கியது.

' அம்மா, அப்பா , நேத்து விடிஞ்ச பொழுதிலே, கூட நான் இப்படி, ஒரு சம்பவம் எனக்கு நடக்கும்னு, நெனச்சுக் கூடப் பார்க்கலியே. இனிமே எப்ப நான் உங்களைப் பார்க்கப் போறேன்னு தெரியலயே ' என்று தேம்பித் தொடங்கினாள்.

" ஐ, சிட்டு, சிட்டு குருவி. பாட்டிம்மா இங்கே பாரு " என்ற குரலைக் கேட்டு , வெண்ணிலாவின் முகம் , குரல் வந்த திசையை நோக்கித் திரும்பியது.

" மூடி இருந்த, ஜன்னல் கதவுக்கு மறு புறம், இரண்டு சிட்டுக் குருவிகள் கீச்சிடும் ஓசை கேட்டது.

கட்டிலில் இருந்து, எழுந்து கொண்ட சுஷ்மி ஜன்னலுக்கு அருகில் சென்று, அதனை அழைத்துக் கொண்டு இருந்தாள்.

ஜன்னலுக்கு மறு புறம் என்பதாலா என்று தெரியவில்லை, சிறுமியால் தங்களை எதுவும் செய்து விட முடியாது என்று தைரியம் கொண்டு , அவை கண்ணாடிக் கதவினைத் தங்களின் அலகினால் கொத்திக் கொண்டிருந்தன.

வெண்ணிலா, தன்னைக் கவனிப்பதை அறிந்து கொண்ட சிறுமி அவளருகில் நெருங்கி வந்தாள்.

" அத்தை, இங்கே பாரு , குருவி கண்ணாடியைக் கொத்திட்டு இருக்குது. ச்சூ,, ச்சூ போ..மாமா வந்து உன்னை அடிப்பாரு . போ.." என்று துரத்தத் தொடங்கினாள்.

" பாப்பா, அதை விரட்டாதே. பாவம். கொஞ்சம் நேரம் விளையாடிட்டு, அது ரெண்டும் போயிடும் " என்று சொன்னாள் வெண்ணிலா.

சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட சாரதா, " பாப்பா, சுஷ்மி அதுக்குள்ள முழிச்சுட்டியா? வா, பல் தேச்சுட்டு, பால் குடிக்கலாம் " என்று சொல்லிக் கொண்டே கட்டிலை விட்டு இறங்கினாள்.

வெண்ணிலா படுத்துக் கொண்டிருந்த ,நாற்காலியை நிமிர்த்தி நேராக்கி ,வைத்தாள்.

" அம்மா, எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும். என்னோட கட்டைக் கொஞ்சம், பிரிச்சு, விடறீங்களாம்மா " என்று சாரதாவிடம் கேட்டாள் வெண்ணிலா.

ஒரு கணம் தயங்கிய, சாரதா, பின், அவளது கை , கால் கட்டுகளைப் பிரித்து விட்டவள், பின் அவளை எழுந்து கொள்ளச் செய்தாள்.

வெண்ணிலா, அங்கிருந்த , குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் பல், தேய்த்து முகம் முகம் கழுவி விட்டு வரும் வரை காத்துக் கொண்டிருந்தாள் சாரதா.

" ம், ஒரு பத்து நிமிஷம், இரும்மா. உனக்குக் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன் " என்று சொன்னாள்.

சுஷ்மி, வெண்ணிலா எழுந்து கொண்டதைக் கண்டதும், " ம், எனக்கும் நீ இங்கேயே பால் கொண்டு வா பாட்டி . நான் இங்கேயே பல் தேச்சுக்கறேன் " என்றாள்.

" சுஷ்மி, அத்தையைத் தொந்தரவு பண்ணக் கூடாதுமா. நீ வா என் கூட " என்று மீண்டும் சாரதா அவளைத் தூக்க முயன்றாள்.

உடனே, ஓடி வந்து நிலாவின் கால்களைக் கட்டிக் கொண்டாள் சுஷ்மி.

இதனைச் சற்றும் எதிர்பாராத , வெண்ணிலா, குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

பின் சாரதாவிடம், " அம்மா நான் பார்த்துக்கறேன் இவளை. நீங்க போய்ட்டு வாங்க " என்றாள்.

குழந்தையை அணைத்தவாறே தூக்கி வைத்துக் கொண்டிருந்த வெண்ணிலாவைக் கண்டதும், சாரதாவின் மனம் நெகிழ்ச்சி உற்றது.

பின் கதவுக்கு அருகில், சென்ற போது தான், அறையின் சாவி, தன் மகனிடம் இருப்பது அவளது நினைவுக்கு வந்தது.

' அச்சச்சோ, இவன் என்ன நல்லாத் தூங்கிப் போயிட்டானா . இன்னும் கதவைத் திறக்கலியே. என் போனை வேற நான் எடுத்துட்டு வரலியே. இப்ப என்ன பண்றது ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவாறே, கதவுக்கு அருகில் செய்வதறியாது நின்று விட்டாள், சாரதா.

கதவைத் தட்டவும் செய்தாள். ஆனால், கதவு திறப்பதற்கு, வாசு வரவில்லை.

அதற்குள் குளியலறையில் இருந்து சுஷ்மியைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்த, வெண்ணிலா, " என்ன ஆச்சும்மா. ஏன் இப்படி இங்கேயே உட்கார்ந்துட்டீங்க ?" என்று கேட்டாள்

" வாசு, என்னை உள்ளே அனுப்பிட்டு, வெளியே கதவைத் தாழ் போட்டுட்டான்மா. சாவி அவன் கிட்ட தான்மா இருக்குது " என்று சொன்னாள் சாரதா.

" என்னம்மா சொல்றீங்க நீங்க? " என்று கேட்டவள், அவனது கடத்தல் நாடகத்திற்கான அர்த்தம் இவளுக்குத் தெரிந்திடுமா, என்ற அகக் கேள்வியுடன், அவளிடம், அவளை உற்று நோக்கினாள் வெண்ணிலா

அதற்குள் கதவை நெருங்கிய குழந்தை, " மாமா, பாப்பாவுக்குப் பசிக்குது. கதவைத் திறந்து விடு மாமா " என்று கத்திக் கொண்டே கதவைத் தட்டத் தொடங்கினாள்

வெண்ணிலா, சாரதாவை நோக்கி, " அம்மா, இது வாசுவோட குழந்தை தானே. அப்புறம் ஏன், அவனை மாமான்னு கூப்பிடணும்? " என்று கேட்டாள்.

" இல்லைம்மா, இது வாசு குழந்தை இல்ல. " என்று சொன்னாள் சாரதா அதற்கு மேலே அவளுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை.

ஆனால் வெண்ணிலா விடவில்லை, " அப்படின்னா, இது.. இது ரம்யாவோட குழந்தையா?" என்று கேட்டாள்.

சாரதா, மெதுவாகத் தலை அசைப்பது கண்டு, " ரம்யா குழந்தையா ?
அப்போ ரம்யா எங்கே? " என்று கேட்டாள் வெண்ணிலா.

சாரதாவினால் , அவளின் இந்தக் கேள்வி செவிகளில் விழுந்த பின்பு, அமைதி காக்க முடியவில்லை.

" ரம்யா, இப்ப இல்லை. அவ உயிரோட இல்லைம்மா. எங்களை விட்டுட்டு, இந்தப் பிஞ்சுக் குழந்தையை அவளோட அடையாளமா எங்க கிட்ட விட்டுட்டு, அவ போய்ச் சேர்ந்துட்டாம்மா " என்று சொல்லி விட்டு அழத் தொடங்கினாள்.

அதனைக் கேட்டதும் வெண்ணிலாவிற்கு அதிர்ச்சியில் நாவினில் இருந்து பேச்சு எழும்பவில்லை.

*************************************

முன் தினம், ஏற்பட்ட மன உளைச்சலினால், ரவி எழுந்து கொள்ள அன்று சற்று தாமதாகி விட்டது.

படுக்கையை விட்டு எழும் போதே, அவனுக்கு வெண்ணிலாவின் முகம் தான் நினைவுக்கு வந்தது.

' நிலா, நீ எங்கே இருக்கே. உன்னை நெனச்சு என் மனசு கிடந்து துடிச்சிட்டு இருக்கு. அது உனக்குத் தெரியுதா. என்னோட, அலைவரிசை உனக்கு ரீச் ஆகுதா? என் எதிரிக்குக் கூட இப்படி ஒரு நிலைமை வரக் கூடாது. எங்கேயோ ஒரு மூலையில நீ பத்திரமா இருக்கேன்னு தான் என் உள் மனசு சொல்லுது. ஆனா உனக்கு என் ஞாபகம் வருதா? ' என்று தனக்குள் கேட்டபடி, தனது காலைக் கடன்களை விரைவாக முடித்துக் கொண்டான்.

பின், தனது அறைக்குள் நுழைந்து, தனது அலைபேசியில் இருந்த தீபக்கின் எண்களைத் தட்டினான்.

ரவியின் அழைப்பு, தீபக்கை எட்டிய போது, அவன் பிரீத்தாவின் வீட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

அலைபேசிக்கு உயிரூட்டிய தீபக், " ம், சொல்லுடா ரவி. சாப்பிட்டியா , " என்று வழக்கமாக, ஒரு நண்பனிடம் அவனது நண்பன் கேட்கும் கேள்வியைக் கேட்டான்.

" போடா, இப்ப சாப்பிடற நிலைமையிலயா நான் இருக்கேன்.

என்னாச்சு , நீ ரோகிணி ஹாஸ்பிட்டல் போனியா? அங்கே ஏதாவது உனக்கு எவிடென்ஸ் கிடைச்சுதா? ..?" என்று அவனிடம் கேட்க , "

டேய், டேய் நீ நிம்மதியா உன் வேலையைப் பாருடா. வெண்ணிலாவை சிஸ்டரை பத்திரமா உன் கிட்ட கொண்டு வந்து சேர்த்து வைக்க வேண்டியது, என் பொறுப்பு " என்று சொன்னான், தீபக்.

" சாப்பிடாம, இருந்தா எல்லாம் உடனே கிடைச்சிடுமா என்ன . போ, முதல்ல போய் சாப்பிடு. நான் போனை வக்கிறேன் " என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தான் தீபக்.

தீபக்கின் முயற்சி வெற்றி பெறுமா? வெண்ணிலா மீட்கப் படுவாளா?
( வரும் )
 
தஞ்சாவூர் ஹாஸ்பிடல் தான் ரம்யாக்கு இப்படி நடந்து ஆனா இப்போ நடக்கூறது சென்னை ஹாஸ்பிடல் ரெண்டும் ஒன்னோட ஒண்ணு சம்மந்தம் உள்ளதா இல்ல வேற வேற ஆட்களா .. தீபக் விசாரணை un official யா தானே பண்ணிட்டு இருக்கான்
 
எடுத்து கொண்ட கதை களம் சூப்பர் 👏
சூப்பர் ❤️
 
Top