விதியையும் மாற்றும் (நம்)பிக்(கை)

Advertisement

Crazy Queen

Well-known member
Member
ஒரு முறை ராஜா எதிரிகளைத் தாக்க ஓர் இராணுவப் படை ஒன்றை தயார் செய்து போருக்குத் தயாரானார். அவர் எப்படியும் இந்தப் போரில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்தப் படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்ந்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள்

இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.

அப்போது அந்தத் துறவி ராஜாவிடம், ஒரு யோசனையைச் சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால்,

அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வக் கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொன்னார்,

வீரர்களிடம் "நம் தலைவிதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதைக் கூர்ந்து கவனித்தனர்.

அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளைத் தாக்க தயாரானார்கள்.

யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி " விதியை யாராலும் மாற்ற முடியாது ." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதைக்" காண்பித்தார்.

நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.
 

Advertisement

Advertisement

Back
Top