Best of the best episode முகிலன் ஆத்தரே. மிகவும் வித்தியாசமான சந்திப்பு. வார்த்தைகளை விட இவர்கள் விழி மொழிகளே அதிகம் பேசியது.
நீயா நானா என சளைக்காமல் ஆதிக்கம் செய்கிறார்கள். எப்போதும் என் மனத்தில் விக்ரம்தான் ஸ்கோர் பண்ணுவான். ஆனால், இந்தமுறை ஆரா ஸ்கோர் பண்ணிட்டா.
அவன் எவ்வளவு சீண்டினாலும், எல்லா பக்கமும் சிந்திக்கும் ஆராவின் நிதானாமும் தெளிவும் அசத்தல்.
மகாபாராத போரில் தன் ப்ரோவின் பங்கை ஒப்பிட்டு சிடுவேஷனை அளவிடும் அவள் பாங்கு அசத்தல் (special credits to the author for scripting this scene)
மின்தூக்கியில் கிடைத்த தனிமையில், தன்மையாகப் பேசி புரியவைக்க நினைத்த அவள் பக்குவம் அசத்தல்.
எப்போதும் போல, அவள் மனவோட்டத்திற்கு இணங்க ஆத்தர் குறிப்பிட்டிருக்கும் பகவத் கீதை வரிகிளில் ஒருவித சிலிர்ப்பை உணர்கிறேன்.