கதை அருமை. கதை ஆரம்பத்தில் சிறிது அலைபாய்வது போல இருந்தாலும் பார்த்த சாரதி இருக்கையில் பயம் எதற்கு என்பது போல் flashback உடன் தேர் அழகாக பவனி வந்து நிலை சேர்ந்தது. கீதாசாரங்கள் அற்புதம். அவை உரிய இடத்தில் உரிய விதத்தில் பொருத்திய விதமும் அவற்றுடன் தொடர்ந்து வந்த சூழ்நிலை அல்லது கருத்து அபாரம்.
"என் தவறை உணர்த்த கண்ணன் மழையை அனுப்பி வைத்திருக்கிறான்", "பேரில் பார்த்த சாரதி இருப்பதால் மட்டும் கண்ணன் உன் பக்கம் இருப்பதாக அர்த்தமில்லை", குட்டி ஆராவின் chocolate Ethics என சின்ன சின்ன சரங்களை கோர்த்த அழகான 'கனமான' மாலை.
இந்த கண்ணன் bro ஆராக்கு மட்டுமல்ல எனக்கும் வழி காட்டியதற்கு நன்றிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.