Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(25)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
ரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(25)



“ ஹர்ஷா அப்போ நாளைக்கு நீங்க ஆதாரங்களோட வரிங்களா??.....”

“ ………. ………”

“. நேருல பேசலாம்”

“ …….. ……… ……….”

“ ஓ!... சரி இன்னும் ரெண்டு நாளைக்குள்ளவா???”

“ ….. ………………………… ………….”

“ சரி சரி ஹர்ஷா. Thank u very much”

“ …. …….”

“ ஹ்ம்ம் வச்சுடவா”

“ …….. ……”

“ bye”

போனை வைத்துவிட்டு வான் வெளியையை நோக்கி கொண்டிருந்தான் ருத்ரன். அதே நேரம் அறைக்குள் ஓடிவந்த தென்றல் வேக மூச்சுகளுடன்,

“ என்ன இவரு முத்தம்…. மாமான்னு… என்ன என்னமோ பேசுறாரு. முதல்ல நாம இவருகிட்ட சொல்லிட்டு ஊருக்கு போகணும். இவரு ஒன்னும் சரி இல்ல” என்ற புலம்பலுடன் தரையில் உடுத்தி இருந்த சேலையின் முந்தானையை விரித்து கைகளை தலையணையாக்கி படுத்து உறங்கிவிட்டாள்.

ருத்ரனோ மனதில் குழப்பத்துடன் நின்றுகொண்டிருந்தான்.

“ அவரு எதுக்காக என்னைய கொல்ல பார்த்தாரு??. நான் என்ன கெடுதல் செஞ்சேன் அவருக்கு??. இவரால் என்னோடு தோழி இன்னைக்கு இல்ல. இதுக்கு கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்” என எண்ணிக்கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

அங்கு தரையில் உறங்கிக்கொண்டிருந்த தென்றலை கண்டு அவன் பிரச்சனை பின்னுக்கு செல்ல காதல் மனம் விழித்துக்கொண்டது.

‘ இவளை நான் என்ன பண்ணிடுவேன்னு இப்படி கீழ படுத்துருக்கா??’ என கோபத்துடன் எண்ணிக்கொண்டு

“ ஏய்!!..” என சத்தமாக எழுப்ப தென்றல் அசையக்கூட இல்ல. அதில் கடுப்படைந்த ருத்ரன் தென்றலின் தோற்பட்டையில் தட்டி “ ஏய்!!... எழுந்திரு முதல்ல” என கூற வேகமாக எழுந்தமர்ந்து ருத்ரனை உற்றுநோக்கிய தென்றலிடம் பல்லை கடித்துக்கொண்டு “ கட்டில் மேல ஏறி படு” என கூற ஒன்னும் கூறாது சமத்தாக கட்டிலில் ஏறி படுத்துகொண்டாள்.

அதனை கண்டு, “ என்னடா இது ஒன்னும் சொல்லாம படுத்துட்டா. நான் ஒத்துக்கமாட்டா கத்துவா இல்ல எதாவது தத்துபித்துன்னு உளறுவான்னு பார்த்தே. ஒரு வேளை இந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டாளோ??...... ஹ்ம்ம் வாய்ப்பில்லையே. சரி பார்ப்போம் காலையில என்ன பண்றான்னு” என தனக்குள் கூறிக்கொண்டு அவளின் அருகில் படுத்தான் ருத்ரன்.


தென்றலின் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தவன் அவள் முகத்தில் விழுந்திருந்த கூந்தலை ஒதுக்கி கொண்டே,

“ ம்ப்ச் சின்னு நான் உன்னைய காதலிக்க ஆரம்பிச்சு மூணு வருஷம் ஆச்சு. ஆனா என் காதல் உனக்கு தெரியாது. அதுக்குள்ள எனக்கும் உனக்கு கல்யாணமே ஆகிடுச்சு. உன்னைய நினைச்சுகிட்டே இருப்பேன் சிந்தியாகூட நான் கிளம்புனதுக்கு காரணம் உன்னைய பார்த்து என் காதலை சொல்ல தான்.

ஆனா அதுக்குள்ள அந்த விபத்து அப்போ கூட உன்னைய பார்க்கமுடியலையே என் காதலை உன்கிட்ட சொல்லமுடியலையேன்னு தவிச்சு போய்ட்டேன்” என அன்றைய நிலையிலில் தனது மன நிலையை கூறிக்கொண்டிருந்தான். மேலும் தொடர்ந்து,

“ அப்புறம் ஒரு வழியா குணமாகி உன்கிட்ட காதல் சொல்லணும் ஆவலா இருந்தா மேடம் கழுத்துல தாலியோட இங்க இருக்குற. கேட்டா புருசனுக்கு முடியல இங்க இருக்குறா நமக்கு சொந்தம்ன்னு என்னன்னவோ சொல்றாங்க. எனக்கு முதல்ல கடுப்புதான் விட்டா அங்கயே கழுத்தை பிடிச்சுருப்பேன் அவ்வளவு கோவம்.

அதான் உன்னைய வீட்டை விட்டு போக சொன்னே அப்புறம் அம்மா பேசி உன்னைய இங்க தங்க வைக்க சொன்னப்போ எனக்கு கோவம்தான். நான் அவ்வளவு சொல்லியும் நீ கல்யாணம் பண்ணிகிட்ட அதோட என் கண்மூன்னாடியே நிக்குறன்ற வெறி எல்லாம் சேர்த்து நான் உன்னைய வார்தையாலையே சாகடிச்சே. அதுவும் தெரிஞ்சே பண்ணுனேன்.

ஆனாலும் என்னால என்னையும் என் கோவத்தையும் கட்டுப்படுத்தமுடியல. என்னைய மன்னிச்சுடு சின்னு” என கூறிக்கொண்டே தென்றலின் நெற்றியில் முத்தம் வைத்தான்.


பின் மெதுவாக அவளின் தலையை தடவியவாறு ஏதோ சிந்தனையில் இருந்தான். பின் மீண்டும்,

“ அப்புறம் உனக்கு தெரியுமா ராணி பிரச்சனையில் என் அப்பா என்னைய நம்பலைன்னு நான் அவர்கூட பேசுறதே இல்ல. இதுல இந்த மாயாவதி அத்தை ராணி பிரச்சனை முடிஞ்சு கொஞ்ச நாளுல நான்தான் அந்த தப்ப பண்ணுனதாவும் பொய் சொல்லி கருணாகரன் என்னைய விடுவிச்சதாவும் எங்க அப்பாவை ஏத்திவிட்டாங்க.

ஆனா அப்பா மாயாவதி அத்தையை சத்தம்போட்டாங்க. அதுல வேற என்னைய அவுங்களுக்கு பிடிக்காது. எனக்காக அப்பா அன்னைக்கு மாயா அத்தைகிட்ட சண்டை போட்டாலும் அப்பா முதல்ல என்னைய நம்பலையேன்னு கோவம் இருந்துகிட்டே இருந்துச்சு இத்தனை வருசமா.

ஆனா வரலட்சமி பூஜை அன்னைக்கு நீ தாலிக்கு போட்டுவச்சுக்கிட்டு சும்மா தேவதை மாதிரி நின்னுகிட்டு இருந்தியா என்னால கண்ணை அங்குட்டு இங்குட்டு திருப்ப முடியல. அப்பன்னு பார்த்து உங்க பாட்டி வேற உன் பொண்டாட்டின்னு சொல்றாங்க.

என் மனசுக்குள்ள ஒரு நப்பாசை நமக்கு கல்யாணம் ஆகிடுச்சோ நாம இந்த விபத்துல அம்னிஷியா மாதிரி வந்து மறந்திடுட்டோமோன்னு என்னென்னமோ நினைச்சு பதறிக்கிட்டே இருந்தேன்.

அப்போ நான் என்ன செய்றதுன்னு தெரியாம உன்னோட நினைவுலையே இத்தனை வருஷ கோவத்தை மறந்துட்டு எங்க அப்பாகிட்ட பேசிட்டேன். நீ என் பொண்டாட்டின்னு சொன்னவுடன்…… ப்பா!!!..... என்ன ஒரு பரவசம் தெரியுமா??.

அப்பிடியே அடுத்து எனக்கு என்ன சொல்றது என்ன செய்றதுன்னே தெரியல. அவ்வளவு சந்தோசம் நான் சொல்லாம என்னோட காதல் ஜெயிச்சுட்டுச்சுன்னு.

சந்தோசமா இருந்தா நீ தகுதி தரம்ன்னு எதோ லூசுத்தனமா உளறிக்கிட்டு போறேன்னு கிளம்ப பார்க்குற. அவ்வளவு சீக்கிரம் உன்னைய விட்டுடுவேனாடி. சாக கிடந்தவன் உன்கூட வாழ்றதுக்குத்தான் பிழைச்சு வந்துருக்கேண்டி. இனிமே நீ போறேன்ன்னு சொல்லி பாரு அப்போ தெரியும் இந்த ருத்ரன் யாருன்னு……….” என பேசிக்கொண்டே கண்ணயர்ந்தான் .

அதிகாலை 5 மணிபோல் தென்றல் “ ஐயையோ!!!......” என்று அலற அந்த சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான் ருத்ரன். பின் வேகமாக தென்றலிடம் திரும்பி,

“ என்னம்மா??..... என்ன??..... எதுக்கு இப்படி கத்துன????” என படபடப்புடன் கேட்ட ருத்ரனை கண்ட தென்றல்

“ இல்ல இல்ல நான் கீழ படுத்திருந்தேன் இப்போ மேல இருக்கே எப்பிடி???” என குழந்தைபோல் விழித்துக்கொண்டு கேள்வி கேட்ட தென்றலை கண்டு ஒன்னும் கூற முடியாது மறுபடியும் உறங்க ஆரம்பித்தான்.

அதனை கண்ட தென்றல் “ என்னங்க நான் கேட்டுட்டு இருக்கேன் நீங்க தூங்குறீங்க” என மெதுவான குரலில் கேட்க

அதில் எழுந்தமர்ந்த ருத்ரன் கடுப்புடன்,

“ அப்போ நீ எப்பிடி மேலவந்து படுத்தன்னு தெரியாது??”

“ ஹம்ம்ஹும்” எனும் விதமாக தலையை அசைத்த தென்றலை கண்டு

‘ அதன் பார்த்தேன் என்னடா நம்மாளு சொன்னவுடன் மேலவந்து படுத்துடுச்சுன்னு தூக்கத்துல வந்து படுத்துருக்கா தூக்கத்துலகூட யாரு கூப்புடுறான்னு நம்மள உத்துத்து பார்த்துட்டு எப்பிடி வந்தேன்னு கேள்வி வேற’ என மனதில் திட்டிக்கொண்டு தென்றலை காண அவள் மீண்டு

“ சொல்லுங்க சார் நான் எப்பிடி மேல வந்தே??” என கேட்க

“ ஏய் இப்போ உனக்கு மேலவந்தது பிரச்சனையா இல்ல எப்பிடி வந்தோம்றது பிரச்சனையா???” என ருத்ரன் கேட்க

என்ன கேட்பது என ஒரு நிமிடம் புரியாது விழித்தவள்,

“ அது… அது… நான் எப்பிடி மேல வந்து படுத்தேன் சார்??” என தயங்கி கேட்க

“ அப்போ உனக்கு என்கூட கட்டில்ல மேல படுத்தது பிரச்சனை இல்ல அப்போ நீ எப்பிடி இங்க வந்து படுத்தா என்ன இனிமே இப்படித்தான் இங்கதான் படுக்கணும் என்ன சரியா??” என சற்றே கடுமையான குரலில் பேசிய ருத்ரனை எதிர்த்து பேச தைரியம் இல்லது எல்லா பக்கமும் தலையை ஆட்டிய தென்றல் வேகமாக,

“ நான் ஊருக்கு போற வரைதானே சார் ஒன்னும் பிரச்சனை இல்ல” என தான் ஊருக்கு போவதை உறுதி செய்த தென்றலை கண்டு நமட்டு சிரிப்பு செய்த ருத்ரன்

“ ஊருக்கு இப்போ எதுக்கு போறீங்கோ???” என நக்கலாக வினவ அதில் தென்றல் கடுப்புடன் அவனை முறைத்துகொன்டே

“ ஹ்ம்ம் எரும மாட்டை குளுப்பாட்டுற வேலை இருக்கு அதுக்குத்தான் சார் போறேன்” என நக்கலாக கூற

“ ஓ அதுக்கு எதுக்கு ஊருக்கு போற என்னைய வேணும்ன்னா குளுப்பாட்டிவிடு. ஏன்னா உன்னைய கட்டிகிட்டத்துக்கு எனக்குதான் எருமையவிட பொறுமை அதிகம் பெருமையும் அதிகம் என்ன ரெடியா” என ருத்ரன் கேட்க

“ ஆத்தி!!!..” என வேகமாக கட்டிலில் இருந்து குத்தித்து இறங்கினாள் வெளியில் செல்ல அதனை கண்டு

“ ஏய் ஒரு நிமிஷம் நில்லு. அது என்ன எப்போ பார்த்தாலும் சார் சார்ன்னு சொல்ற” என ருத்ரன் கேட்க

“ அப்போ வேற எப்பிடி சார் கூப்புடறது"

" ஏன் நான் என்ன உனக்கு வாத்தியாரா இல்ல நீ என்கிட்டே வேலை செய்றியா நான் உன் புருஷன் தானே” என கேட்க

அதுக்கு பதில் கூறாது அமைதியாக நின்ற தென்றலிடம் கட்டிலில் இருந்து இறங்கி நெருங்கி நின்ற ருத்ரவர்மன்,

“ சொல்லு நான் உன் புருஷன் தானே??” என கேட்க

“ ஹ்ம்ம்” என மீண்டும் தலையை உருட்டிய தென்றலை கண்டு

“ அப்போ உங்க ஊருல புருஷனை எப்பிடி கூப்புடுவாங்க??” என கேட்ட ருத்ரனிடம் எதுவும் கூறாது அமைதியாக தலையை குனிந்து நின்றுகொண்டிருந்தாள் தென்றல். அதில் கடுப்படைந்தவன்

“ உன்னைத்தான் எப்பிடின்னு கேட்டேன்??”

“ அது…. அது… மாமான்னு”

“ அப்போ இனிமே நீயும் அப்படியே கூப்புடு”

“ நானா!!!...”

“ நீதான் என் பொண்டாட்டின்னா நீதான் கூப்புடனும்”

“ ஆனா நான் உங்க தகுதிக்கு…….”

“ ஏய் நிறுத்திடி முதல்ல எப்பப்பார்த்தாலும் தகுதி பகுதின்னுட்டு நான் சொன்னேனா நீ எனக்கு பொருத்தம் இல்லைன்னு”

“ இல்ல ஆனா ஆனா எனக்கே தெரியும்”

“ என்ன மண்ணாங்கட்டி தெரியும்”

“ என்ன திட்டிகிட்டே இருக்கீங்க. நீங்கதான் முதல் முதல்ல பார்க்கும்போது தகுதின்னு என்னென்னமோ பேசுனீங்க”

“ ஆமா பேசுனே”

“ இப்போ மட்டும் எதுவும் மாறலையா. நான் அதே பூந்தென்றல் செல்விதான்”

“ இல்லையே நீ இப்போ பூந்தென்றல் செல்வி ருத்ரவர்மன்” என தோரணையாக கூறிய ருத்ரனை கண்டு கடுப்படைந்த தென்றல்

“ ம்ப்ச் நீங்க ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்பினீங்கதானே”

“ ஓ”

“ ஹ்ம்ம் அந்த பொண்ணு செத்துப்போச்சு”

“ அப்படியா!!!...”

“ என்ன கிண்டல் பன்றிங்களா. எனக்கு தெரியும் இந்த விஷயம் எல்லாம் எனக்கு சொல்லிட்டாங்க”

“ நான் சொன்னேனா??”

“ என்னன்னு”

“ நான் ஏற்கனவே காதலிச்சேன். அந்த பொண்ணு செத்துப்போச்சுன்னு”

“ இல்ல ஆனா….”

“ என்ன ஆனா ஊனா. லூசு லூசு”

“ என்ன திட்டிகிட்டே இருக்கீங்க” என அழுகுரலில் சற்றே கோபத்துடன் கேட்ட தென்றலை கண்டு

“ ஆமா நீ பேசுறதுகு எல்லாம் உன்னைய கொஞ்சுவாங்க பாரு. ஒழுங்கா கேட்டுக்கோ நீதான் என் பொண்டாட்டி இந்த வீட்டு கடைசி மருமக. சும்மா நான் ஊருக்கு போறேன் காட்டுக்கு போறேன்னு சொன்னேன்னு வச்சுக்க” என மிரட்டலாக கூறிய ருத்ரனிடம்

“ என்ன பண்ணுவீங்க??” என வீம்பாக கேட்ட தென்றலை நெருங்கி கன்னத்தில் முத்தமிட்டவன் அதில் அதிர்ந்து நின்றவளிடம்

“ ஊருக்கு போவ ஆனா பிரசவத்துக்கு சரியா???” என கூறிவிட்டு மீண்டு உறங்க சென்றுவிட்டான்.

தென்றலோ அழுகையில் உதடு பிதுங்க கலங்கிய விழிகளுடன் “ இருங்க இருங்க என் ஆத்தாகிட்ட சொல்றேன்” என வேகமாக அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

“ போடி போடி நாங்க எல்லாம் யாருக்கும் பயபுட மாட்டோம்” என கூறிவிட்டு உறங்க ஆயத்தமானான்.

அதே நேரம் சின்னாத்தாவை தேடி சென்ற தென்றல்

“ ஆத்தா… ஆத்தா….” என அழுகையுடன் தேம்பிக்கொண்டே அழைக்க அப்பொழுதுதான் தூக்கத்தில் இருந்து முழித்த சின்னாத்தா

“ என்ன செல்வி எதுக்குடா அழகுற??...” என கேட்க

“ ஹ்ம்ம் அவரு அவரு என் கன்னத்துல கன்னத்துல முத்தம் குடுத்துட்டாரு” என கூற சத்தமாக இல்லாமலும் கேவலுடனும் தென்றல் கூறியதை கவனித்த சின்னாத்தா

“ என்ன உன் கன்னத்துல ஒன்னு குடுத்தானா என் பேராண்டி???” என கேட்க

“ ஹ்ம்ம்…” என கேவலுடன் தலையை ஆட்டினாள்

“ ஆயி அப்பா இல்லாத பிள்ளையை அடிக்குறானா கேட்க நாதி இல்லைன்னு நினைச்சானா இந்த வாறன் இந்த சின்னாத்தா யாருன்னு காட்டுறேன்” என வேகமாக முடியை அள்ளி முடிந்து தென்றலை அழைத்துக்கொண்டு ருத்ரவர்மன் அறைநோக்கி செல்ல தென்றல் சின்னாத்தாள் கூறியதை கவனிக்காது

“ இல்ல நான் வரல அங்க விடு ஆத்தா” என கூறிக்கொண்டே வந்தாள்.


plz share ur comments .......

& thanks for the supporting friends......

`( small epithaan .....sry ... தூக்கம் வந்துடுச்சு type பண்ணுன வரை போட்டுட்டேன் கதை எப்பிடி இருக்கு boringaa இருக்கன்னு சொல்லுங்க friends
 
இந்த செல்விக்கு எப்போ இதெல்லாம் மண்டைல ஏறி அவ புரிஞ்சு... ம்ஹும் உன் பாடு திண்டாட்டம் தான் ருத்ரா ??
 
Top