Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(21)

Advertisement

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(21)

ருத்ரவர்மன் சிறு வயதில் இருந்தே தகுதி தராதரம் என அவனை சிறு வட்டத்துக்குள் சுருக்கி கொள்வான். அவனை பொறுத்தவரை ஸ்டேட்டஸ் என்பது மிக முக்கியம். அதனால் அவனின் நட்பு வட்டம் சிறிதுதான். யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் நெருங்கி பழகிவிடமாட்டான்.

ஆனால் பழகியவரிடம் விலகல் என்பது சிறுதும் இருக்காது. அவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவன். அதே போல் பிடித்தம் இல்லாதவர்களிடம் இருந்து ஒதுங்கியும் ஒதுக்கியும் கொள்வான்.

வீட்டில் அம்மா சிம்மவர்மனை தவிர அனைவரிடமும் ஒரு விலகல், ஒரு நிமிர்வு கொண்டே உரையாடல் இருக்கும். அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் தனது கெத்தை விட்டுகுடுக்காது ஆணவத்துடன் தான் இருப்பான்.

இதனால் மாயாவதி லீலாவதிக்கு ஏக கடுப்பு அவன் மேல் சிறுது கூட தங்களை மதிக்கவில்லை என. ஆனால் அவர்களின் அந்த திருப்தி இல்லாத குணமும் ஜானவியிடம் வம்பு வளர்க்க செய்யும் செயல்களே ருத்ரனிடம் தரம் இறக்கி காட்டியது அதனால் எப்பொழுதும் மரியாதை நிமித்தமாக கூட நின்று பேச மாட்டான் அவர்களிடம்.

நான்கு வருடங்களுக்கு முன்பு,

தனது நான்கு வருட இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு முதுகலை படிப்பை வெளிநாட்டில் சென்று படிக்க விருப்பப்பட்டு இன்னும் மூணு மாதத்தில் கிளம்ப இருந்தான். அதற்கான எல்லா ஏற்பாடும் கிட்டத்தட்ட 80% முடிந்த நிலையில் ஒருநாள் இரவு அனைவரும் உணவை உண்டு கொண்டிருந்தனர். அப்பொழுது திருவாசக மூர்த்தி,

“ ருத்ரா” என அழைக்க

“ என்னப்பா??” என இட்லியை வாயில் வைத்துக்கொண்டு ருத்ரவர்மன் வினவ

“ அது நாளைக்கு நீ freeyயா???”

“ ஏன்ப்பா???”

“ இல்ல நாளைக்கு நீ நம்ம
ஊரு செங்காணம் வரைக்கும் போயிட்டு வரனும்”

“ எதுக்குப்பா??”

“ அது அங்க அண்ணாமலைன்னு ஒருத்தரு இருக்காரு. அவரோட நிலம் ஒன்னு பேயாடிக்கோட்டையில இருக்கு. அங்க நாம ஒரு சுண்ணாம்பு factory ஆர்மபிக்கலாம்ன்னு இருக்கோம். அதனால அந்த இடம் என்ன ஏத்துன்னு பார்த்து. இந்த அண்ணாமலைக்கு பாதி பணம் குடுத்தாச்சு.

அதை ரெஜிஸ்டர் பண்ணனும். அதுக்கு ஒழுங்கா அவரு ஒன்னும் பதில் சொல்லமாட்டேங்குறாரு. நீ போய் என்ன எதுன்னு முடிச்சுட்டு. ரெஜிஸ்டெரஷன் முடிக்க ஏற்பாட்டை பண்ணிட்டு எங்களுக்கு சொன்னா நான் அன்னைக்கே வந்துடுவேன். இதை கொஞ்சம் சீக்கிரம் முடிக்கணும்”

“ அப்பா அண்ணங்க யாரும் போக முடியாதா??”

“ இல்லடா பெரியவன் மும்பை போய்ட்டான். மத்தவங்க நாளைக்கு ஹைதெராபாத் போறாங்க. இங்க எனக்கும் முக்கியமான மீட்டிங் இருக்கு. நம்ம ஊருன்றதால உன்னைய அனுப்புறேன் இல்லைன்னா வேற யாரையாவது அனுப்பிருப்பேன் அங்க நீ நாலு வயசா இருக்கையிலே போனது இப்போ போய் பார்த்துட்டு அங்க நம்ம வீட்டையும் அப்படியே பார்த்துட்டு வாயேன்” என திருவாசகம் கூறி முடிக்க

“ இல்லப்பா நாளைக்கு எனக்கு இதைவிட முக்கியமான வேலை இருக்கு” என ருத்ரவர்மன் மறுத்து கூற

“ ஏன் ருத்ரா அதான் அண்ணன் ரொம்ப முக்கியமான வேலைன்னு சொல்றாங்கல அதைவிட உனக்கு அப்படி என்ன முக்கிய வேலை இருக்கு??” என திருவாசத்திற்கு
ஆதரவாக பேசுவது போல ருத்ராவை அதட்டிய மயாவதியை கண்டு

“ அத்தை எனக்கு ஆயிரத்து எட்டு வேலை இருக்கு அதை எல்லாம் உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நான் போகலைன்னா போகல அவ்வளவுதான்” என சத்தமாக கடுப்புடன் கூறிய ருத்ரவர்மனை கண்ட லீலாவதி

“ அண்ணா பார்த்தீங்கள இவன் எப்பையுமே எங்களை மதிக்க மாட்டான். நாங்க உன் வீட்டுல உட்கார்ந்து சாப்புடுறதுக்கு அத்தைன்னு கொஞ்சகூட மட்டு மரியாதை இல்லாம பேசுறான். அக்கா என்ன கேட்டுட்டாங்க??. உனக்கு உதவி செய்ய சொன்னா மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறான். என்ன செய்ய எல்லாம் பெத்தவங்க சொல்லிகுடுக்குறதுல இருக்கு” என ஜானவியை பார்த்துக்கொண்டே கூற
அதில் கடுப்படைந்த ருத்ரன்,

“ இங்க பாருங்க நாளைக்கு என் friend சிந்தியாவுக்கு பிறந்தநாள். அதனால பார்ட்டி இருக்கு நான் போயே ஆகணும் அப்பா உங்களுக்காக வேணும்ன்னா நாளை மறுநாள் செங்கானத்திற்கு போறேன்” என ருத்ரன் திருவாசகத்திடம் கூற திருவாசகமோ

“ டேய் நாளை மறுநாள் நீ போனா அதுக்கடுத்த மூணு நாள் அரசு விடுமுறை. அதனாலதான் இன்னும் ரெண்டு நாளுல முடிக்க பார்க்குறேன்” என திருவாசகம் கூற

“ ஆனா அப்பா சிந்தியா…..” என ருத்ரன் எதோ மறுத்து கூற இடைபுகுந்த மாயாவதி

“ அப்போ யாரோ ஒரு பொண்ணுக்காக உன் அப்பாவையே உதாசீனப்படுத்துற. அவரு சொல்றதை கேட்க மாட்டேங்குற” என வேற எதோ கூற வர மாயாவதியின் உள் நோக்கமான திருவாசகம் ருத்ரன் சண்டை ஏற்படுத்தவே இவ்வாறு பேசுவது என ஊகித்த ஜானவி இவர்களின் வாக்குவாதத்தில் இடைபுகுந்து

“ ருத்ரா எனக்காக தயவுசெய்து நாளைக்கு போய் அந்த வேலையை முடிச்சுட்டு வா” என கூற ருத்ரன் கோபத்துடன் ஜானவியிடம் எதோ கூற வர

“ ருத்ரா அம்மாவுக்காக……” என சற்றே இறங்கி கெஞ்சிய அன்னையின் குரலுக்காக நாளைக்கு செங்கானத்திற்கு செல்ல ஒத்துக்கொண்டு மாயாவதி லீலாவதியை முறைத்துவிட்டு விறுவிறுவென்று அறைக்கு சென்றுவிட்டான். ஒரு வேளை இந்த பயணத்தை ஜானவி கட்டாயப்படுத்தாமல் இருந்துருந்தால் ருத்ரன் காலத்துக்கும் அனுபவிக்க போகும் அவமானத்தை தடுத்திருக்கலாம். ஆனால் விதியை யாரால் தடுக்க முடியும்.

மறுநாள் விடியலில் ருத்திரவர்மன் தனது காரை எடுத்துக்கொண்டு google map உதவியோடு செங்கானத்திற்கு சென்றான்.

அதேநேரம் விடியலில் எழுந்து காலை உணவை முடித்துவிட்டு மதிய உணவையும் செய்து முடித்துவிட்டு குளித்து தலையை சீவி கிளி பச்சைவண்ண பாவாடையும் சந்தன சட்டையும் அடர் பச்சை வண்ண பூனம் சேலையை இரண்டாக மடித்து தாவணியாக சுற்றிக்கொண்டு செங்கானத்தில் இருக்கும் மெக்கல் ஆண்டவர் கோவில் திருவிழாவிற்கு கிளம்பி வெளிய வந்த பூந்தென்றல் செல்வியை,

“ என்னடி காலையிலையே எங்கையோ கிளம்பிட்டாப்ல இருக்கு??” என சுந்தரி வழிய
மறிச்சு நின்றுகொண்டு கேள்வி கேட்க

“ இல்ல அது…” என தயங்கிய தென்றலை பார்த்துக்கொண்டே வந்த சின்னஆத்தா

“ என்ன செல்வி இன்னும் நீ கிளம்பலையா??” என கேட்க

“ இல்ல இதோ போகணும் ஆத்தா”

“ அந்த பிள்ளை ராணியோடதானே போற”

“ ஆமா ஆத்தா”

“ சரி
போய் அந்த பிள்ளையை கூட்டிகிட்டு பார்த்து சுதானமா போயிட்டு மதியம் மூணு மணிக்குள்ள வந்துட்டானும் சரியா ??”

“ ஹ்ம்ம் சரி ஆத்தா”

“ சரி இந்தா அம்பது ரூபா” என தனது சுருக்கு பையில் இருந்து சின்னாத்தா காசை எடுத்து குடுக்க,

அதனை கண்ட சுந்தரி,

“ இங்க என்ன நடக்குது??. இவ எங்க போறா??” என கோபத்துடன் கத்த அதனை காதில் வாங்காத சின்னாத்தா

“ சரி நீ போய்ட்டுவா நான் பார்த்துக்கறேன்” என கூறி சுந்தரி மேலும் பேச அவகாசம் கொடுக்காமல் தென்றலை அங்கிருந்து வெளியே அனுப்பிய பின்னர்,

“ இப்போ சொல்லு உனக்கு என்ன வேணும்??” என கேட்ட சின்னாத்தாவை கண்டு கோபத்துடன் பல்லை கடித்த சுந்தரி சின்னாத்தாவின் கேள்விக்கு பதில் கூறாது

“ என்னங்க…. என்னங்க…..” என கண்ணனை அழைக்க

“ என்ன சுந்தரி எதுக்கு கூப்புடுற??”

“ ஹ்ம்ம் இங்க வந்து இந்த அநியாயத்தை கேளுங்க”

“ என்ன கேட்கணும்???” சலிப்புடன் கேட்டுக்கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த கண்ணனிடம்

“ இதோ இங்க வீட்டுல நீங்க பெரிய மனுஷன் இருக்கிறீங்கன்னு மரியாதை வேணாம்” என சுந்தரி கேட்க

“ இப்போ யாரு எனக்கு மரியாதை கு
டுக்கல…. உன்னைய தவிர இங்க எல்லாரும் மதிப்பாங்க” என முற்பாதியை சத்தமாகவும் பிற்பாதியை முணுமுணுப்புடன் கூறிய கண்ணனிடம்

“ அதான் எல்லாம் உங்க அம்மாவும் உங்க மருமகளும்…”

“ ஏன்??... என்ன ஆச்சு??...”

“ உங்க அக்கா மகவாட்டுக்கு கிளம்பி எங்கையோ போறா. உங்க அம்மா காசு குடுத்து அனுப்புறாங்க. எங்கன்னு ஒரு வார்த்தை உங்ககிட்டையாவது சொல்லிருக்கலாம்ல” என கேட்ட சுந்தரியை கண்ட கண்ணன்

“ ஏண்டி பிள்ளை எங்க போயிருக்கப்போகுது அப்பிடியே போனாலும் அம்மாகிட்ட கேட்டுத்தான் போயிருக்கு. அதுக்கு எதுக்கு கத்துற”

“ ஹ்ம்ம் ஏன் சொல்லமாட்டிங்க ஆயி அப்பன் இல்லாத பிள்ளையை அத்தகாரி வளத்தா சொத்தையா வளத்துருக்கான்னு ஊரு என்னையல கறிச்சுக்கொட்டும்” என சுந்தரி ஒருபாடு ஒப்பாரிவைக்க

அதில் எரிச்சல் அடைந்த கண்ணன் சின்னாத்தாவிடம்

“ அம்மா எங்கம்மா செல்வி??” என சத்தாக எரிச்சலுடன் கேட்க

அதுவரை சுந்தரியின் செயல்களை கவனித்த சின்னதா வழக்கம் போல கண்டும் காணாதது போல பொதுப்படையாக

“ செங்கானத்தில இன்னைக்கு மெக்கலாண்டவர் கோவில் திருவிழா அதுக்கு பக்கத்துவீட்டு ராணிகூட போயிருக்கா”

“ எது ராணி பிள்ளையா அதுவே பதினோரு வயசு பிள்ளை அது உங்க பேத்திக்கு துணையா??” என மீண்டும் சுந்தரி கத்த

“ ஏண்டி இப்போ என்ன இங்க இருக்குற ஊருக்குதானே போயிருக்கா பொடி நடையா போனா பொடி நடையா வந்துடலாம். அதோட திருவிழா பகல்ல தானே போயிருக்காங்க. நீ ஏன் தேவை இல்லாம கத்துற??”

“ ஆமா உங்க அக்கா மக ரொம்ப விவரம், அதுல சின்ன பிள்ளை வேற துணைக்கு நல்லா எனக்கு வாயில வந்துடும்” என சுந்தரி மீண்டும் சத்தம் போட

“ இப்போ என்ன வேணும் உனக்கு எதுக்கு கத்திகிட்டே இருக்க??” என கேட்ட கண்ணனிடம்

“ போங்க போங்க உங்க அக்கா மகளை கூட்டிட்டு வாங்க” என சுந்தரி கூறிக்கொண்டிருக்கையில் இடைபுகுந்த சின்னாத்தா

“ அது எல்லாம் யாரும் போய் கூப்பிட்டு வர வேணாம். அவ அது எல்லாம் போயிட்டு பத்திரமா வந்துடுவா. எப்போதும் அவளுக்கு யாரு துணையா வர முடியாது. அவளும் இந்த உலகத்துல தனியா போய் வந்து கத்துக்கிடட்டும்.

அதோட அவளும் ஒன்னும் சின்ன பிள்ளை இல்ல வீடு குள்ளையேதானே இருக்கா அவளுக்கும் எங்கையாவது போகணும்ன்னு ஆசை இருக்கும்ல அவளும் வயசு பிள்ளை தானே” என சின்னாத்தா கூறிக்கொண்டிருக்கையில்

“ அத வேணும்ன்னா சொல்லுங்க வயசு பிள்ளைதான் ஆனா வயசுக்கு வந்த பிள்ளை இல்லையே. பாருங்க பதினஞ்சு முடிஞ்சுச்சு. போன மாசத்தோட பதினாறு ஆரம்பிச்சுடுச்சு இன்னும் வயசுக்கு வரல. என்னத்த சொல்ல??.... இவளுக்கு குறைஞ்ச வயசு பிள்ளைகள் எல்லாம் சமஞ்சுச்சுடுச்சுங்க இவ என்னனா கடைசிவரைக்கு வயசுக்கு வராமலையே போய்டுவா போல” என சுந்தரி தன்போக்கில் கூறுவது போல குத்தி பேச

இதில் கோபமடைந்த சின்னாத்தா,

“ இங்க பாருடி என் பேத்தி எப்போ பெரியமனிசியாகணுமோ அப்போ ஆகிட்டுப்போறா. நீ ஒன்னும் அக்கறையும் படவேணாம் சக்கரையும் படவேணாம் உன் வேலையை பார்த்துட்டுப்போ” என சின்னாத்தா கூற

அதில் கடுப்படைந்த சுந்தரி முறைக்க

“ என்ன முறைப்பு போ போயி என் பேத்தி செஞ்சுவச்சதை கொட்டிக்கிட்டு போயி தூங்கு பெருசா பேச வந்துட்
டா வல்லாரை கீரை” என நொடித்துக்கொண்டு சின்னாத்தா சென்றுவிட

சுந்தரி கண்ணனை முறைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

“ கால கொடுமைடா சாமி. செவனேன்னு கிளம்பிகிட்டு இருந்தவனை கூப்பிட்டு
பிரச்சனைன்னு சொல்லிட்டு அவுங்களுக்குள்ளையே சண்டையும் போட்டுக்கிட்டு என்னைய முறைச்சா நான் என்ன செய்றது எல்லாம் என் கிரகம்” என கண்ணனும் புலம்பலுடன் வெளியே சென்றுவிட்டார்.

அதே நேரம் காலையில் ராணியின் வீட்டிற்கு சென்ற தென்றல்

“ ராணி தயாராகிட்டியா போலாமா??” என கேட்க சிவப்புவண்ண பட்டுப்பாவாடை கணுக்காலுக்கு மேல இருக்க செந்தூர வண்ண பட்டு சட்டையும் ரெட்டை ஜடையுடன் மாநிறத்தில் கழுத்து கால் கை என எதிலும் சிறு நகையும் இல்லது துள்ளி ஓடிவந்த ராணி

“ அக்கா நான் கிளம்பிட்டேன். எப்பிடி இருக்கேன்??”

“ சூப்பரா இருக்க ராணிமா. நாம போலாமா??”

“ ஹ்ம்ம் போலாம் அம்மாவும் அப்பாவும் வயலுக்கு போயிருக்காங்க மதியம் மூணு மணி போல வந்துடுவாங்க அதுக்குள்ள வீட்டுக்கு வந்துடணும்ன்னு சொன்னாங்க க்கா”

“ அதெல்லாம் வந்துடலாம் வா” என இருவரும் பேசிக்கொண்டே செங்கானத்திற்கு பாதி தூரம் நடந்து சென்றனர். பாதி தூரத்தில் மாட்டு வண்டியில் வந்துகொண்டிருந்தார் மணிவாசன்.

மணிவாசன் பேயாடிகோட்டையில் ஒரு மளிகை கடை வைத்துள்ளார். அது ராணியின் வீட்டிற்கு எதிர்த்தாபில் இருப்பதால் ராணியின் குடும்பத்திற்கும் மணிவாசனிற்கும் நல்ல பழக்கம்.

மாட்டு வண்டியை கண்ட ராணி “ மாமா” என உரக்க அழைக்க வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த மருதை பார்த்து

“ மருது வண்டியை நிறுத்து” என கூற

“ என்னங்கய்யா??”

“ அங்க பாரு நம்ம ராணியும் சின்னாத்தா பேத்தியும் நடந்துவறாங்க ராணியும் என்னைய கூப்புட்டப்ல இருந்துச்சு என்னன்னு கேட்டுவாரேன்” என கூறி வண்டியை நிறுத்தி இறங்கி வந்த மணிவாசன் ராணியிடமும் தென்றலிடமும் அருகில் சென்று,

“ என்ன ராணி எதுக்கு கூப்புட்ட??” என கேட்க

“ மாமா நானும் அக்காவும் செங்கானத்தில இருக்குற மெக்கலாண்டவர் கோவிலுக்கு போறோம். திருவிழாவுக்கு நீங்க அங்க போனா எங்களை அங்குன இறக்கி விட்டுட்டுறிங்களா” என ராணி கேட்க

“ ஹ்ம்ம் சரி வாங்க நானும் அங்க போய்ட்டுதான் டவுனுக்கு போறேன் இறக்கி விடுறேன். நீயும் வாம தென்றல் எப்பிடித்தான் உன் அத்தை விட்டுச்சோ போ” என கேட்டுக்கொண்டே மூவரும் வண்டியில் எற வண்டி செங்கானத்திற்கு சென்றது.

அங்கு கோவிலில் இறங்கிய இருவரும் மணிவாசனிற்கு நன்றி தெரிவித்து விடைபெற மணிவாசனும் அங்கிருந்து செல்ல மருது மட்டும் இருவரையும் முறைத்துக்கொண்டு சென்றான்.

இதை அறியாத இருவரும் திருவிழா கடையை வேடிக்கை பார்க்க சென்றுவிட்டனர். அதே நேரம் ருத்ரன் சந்திக்க வேண்டிய அண்ணாமலை இங்கு கோவிலில் இருப்பதாகவும் அங்கு வரும்படியும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அலைபேசியில் கூறி இருந்ததால் ருத்ரனும் அங்கு வந்து அண்ணாமலைக்காக காத்திருந்தான்.

அப்பொழுது கோவில் எருது ஒன்று வேகமாக ஓடிவர எங்கே இடித்துவிடுமோ என்ற பயத்தில் தென்றல் வேகமாக அங்கிருந்து நகர பக்கத்தில் இருந்த கல் இடறி கீழே விழுக பார்த்தால்.

அப்பொழுது ஒருவாறு பக்கத்தில் இருந்த தூணை இடித்துக்கொண்டு அதனையே பிடித்துக்கொண்டும் விழாமல் நின்றாள் தென்றல்.

“ முதல்ல கையை எடு…..” என ஒரு குரல் காதில் பக்கத்தில் உறும அதிர்ந்து திரும்பிய தென்றல் அப்பொழுதுதான் கவனித்தால் அவள் தூண் என நினைத்து ருத்ரவர்மனின் கையை பயத்தில் அறியாது பிடித்துவிட்டதை.

“ சார்… சார்… மன்னிச்சுடுங்க சார் தெரியாம” என தென்றல் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்க

“ நீ எல்லாம் என் பக்கத்துல நிக்க கூட தகுதி இல்ல என் மேல இடிக்கிற” என சிவந்த விழிகளுடன் ருத்ர வர்மன் கிட்டத்தட்ட கர்ஜிக்க

“ எம்மாடியோ!!!.... சார் என்ன தெரியாம இடிச்சதுக்கு இப்படி கோவப்படுறீங்க போங்க சார் பொலிஎருது வந்துச்சு அதான்” என தென்றல் இயல்பாக ருத்ரனின் கோவத்தை கடந்துவிட

“ என்ன பொய் சொல்ற இங்க எங்க பொலிரோ கார் நிக்குது இந்த சந்துக்குள்ள என் கார் நிக்கவே இடம் இல்ல. இங்க இன்னொன்னு வந்துட்டு போச்சா” என தென்றல் பொய் சொல்வதாக எண்ணிக்கொண்டு ருத்ரன் பேசிக்கொண்டிருக்கையில்

“ சார் என்ன கூமுட்டைத்தனமா பேசுறீங்க கார் எங்க இங்க வந்துச்சு நான் அதோ அங்க இருக்கு பாருங்க அந்த எருதை சொன்னேன்” என பெரிய திமில்களுடன் கருப்பு மற்றும் சாமபல் நிறத்தில் பெரிய கொம்புகளுடன் சற்றே திமிராக பார்ப்போரை அஞ்சவைக்கும் தோற்றத்துடன் நின்று கொண்டிருந்த எருதை கண்டு ருத்ரன் பிரம்மிக்க தென்றலோ

“ சார் அந்த எருது கோவிலுக்கு நேந்துவிட்டது. அது வரும்போது குறுக்க நாம வந்தா நம்மள தள்ளிவிட்டுடும். அதான் நான் நகர்ந்தேன்.
உங்களையும் தெரியாம இடிச்சுட்டேன்” என கூறிவிட்டு அங்கிருந்து நகர பார்த்த தென்றலை கண்ட ருத்ரன்

“ ஆமா அது என்ன கூமுட்டைன்னு சொன்னில அப்பிடின்னா??” என சந்தேகம் கேட்க
ஏற்கனவே தகுதி என பேசிய ருத்ரனை கண்டு எரிச்சல்கள் இருந்தவள்

“ ஹ்ம்ம் கூவுற சேவல் போடுறதுதான் சார் கூமுட்டை” என நக்கலாக கூறிவிட்டு அங்கிருந்து நகர பார்க்க

“ ஓ!!! சேவல்ன்னா???”

“ எல்லாத்துக்கும் நான் விளக்கம் சொல்லமுடியாது சார். நான் என்ன உங்களை மாதிரி வெட்டியாவ நின்னுக்கிட்டு இருக்கேன். எனக்கு ஆயிரத்தி எட்டு ஜோலி இருக்கு சார்” என மீண்டு நக்கலுடன் கூறிவிட்டு அங்கிருந்த தென்றல் வேகமாக கூட்டத்தோடு கலந்துவிட

google உதவியுடன் சேவலை கண்டுபிடித்ததோடு கூமுட்டை அர்த்தத்தையும் கண்டுபிடித்த ருத்ரனோ

“ நீ மட்டும் என்கிட்டே சிக்குன்னு அவ்வளவுதான்” என ருத்ரன் தென்றலை திட்டிக்கொண்டிருந்தான் ஏனோ இன்னும் மூணு மணி நேரத்தில் அடுத்த சந்திப்பு இருக்கும் அதுவும் அது அவனுக்கு வாழ்க்கையில் அவனுக்கு மிக பெரிய அடியாக இருக்க போகவதை அறியாமல்

அதே நேரம் ராணியிடம் நடந்ததை கூறிக்கொண்டிருந்த தென்றல் அறியவில்லை அவளுக்கு உதவ வந்து அவனின் வாழ்வில் சந்திக்க போகும் அவமானங்களை

friends சீக்கிரம் போடணும்ன்னு சின்ன பதிவா குடுத்துருக்கேன் அடுத்த பதிவை பெருசா கொடுக்குறேன்
thanks for the supporting

&
plz share ur comments friends
Nice ep
 
Nice
 
Top