Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

லக்ஷ்மி -2

Advertisement

Crazy Queen

Well-known member
Member
எழில்விழி பதவி உயர்வு கிடைத்த காரணமாக ஆபிசில் பார்ட்டி கேட்டார்கள் !

பதவி உயர்வில் ஒரே ஒருவருக்கு மட்டும் இடமாற்றம் உத்தரவு வந்தது. அவரே அமெரிக்கா கேட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்து யாராவது ஒருவர் சென்னைக்கு வர விரும்பினால், தரலாம் என்றார்கள்.

அங்குள்ள கிருஷ்ணா என்று உயர் அதிகாரி சென்னைக்கு வர விரும்பியதால், இவருக்கு கிடைத்தது விட்டது.

அனந்த கிருஷ்ணன் நாளை வருகிறார் என்றார்கள்.

அனந்த கிருஷ்ணன் வயது 57 . இந்தக் கம்பெனியின் வேர். இதை முன்னுக்கு கொண்டுவர அதிகமாக உழைத்தவர். கண்டிப்பும் கறாரும் நிறைந்த மனிதர் . உழைக்காத அவர்களை ஒப்புக்கொள்ள மாட்டார்.

அவர் வருவதை சொன்னதும் ஆபீஸ் மொத்தமும் ஆடிப்போனது.

இனிமேல் சந்தோஷம் குறைந்துவிடும் என்ற கலக்கம் உண்டானது.

இன்னைக்கு கொண்டாடலாம் என்ற நோக்கில் விருந்து நடந்தது.

எழில்விழி கவலைப்படவில்லை.

எழில்விழி நயமாக உழைப்பதால் யார் வந்தாலும் கவலையில்லை என்ற மனப்போக்கில் இருந்தாள்.

நிறைய செலவழித்த அன்றைக்கே பதவி உயிர் கிடைத்த நாலு பேரும் ட்ரீட் கொடுத்தார்கள்.

கம்பெனி வீடு என்று காலியாக இருந்தது.

ஆனந்த் கிருஷ்ணன் அதில் குடித்தனம் வருவார் என்பதால் அதை சீரமைக்க தொடங்கினார்கள்.

ஆபீஸ் முத்தம் கொஞ்சம் பதற்றமாக இருந்தது எழில்விழி தவிர.

காரணம் இல் விழிக்கு நன்றாக இந்தி மற்றும் ஆங்கிலம் பேச வரும். பள்ளிக்கூட தொடக்கத்திலிருந்து ஹிந்தியும் ஆங்கிலமும் நன்று கற்றுக் கொண்டாள்.

ஏற்றத்தாழ் நான்கு ஐந்து மொழிகள் பேச ,எழுத, படிக்க, எழில்விழிக்கு தெரியும்.

ஆனந்த் கிருஷ்ணாவுக்கு இங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சகல விபரங்களும் போய்விட்டது.

எல்லாம் தெரிந்து கொண்டு உள்ளே வர நினைக்கும் சின்சியரான ( sincere) மனிதர்.

அவரது குடும்பத்தைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

அன்று இரவு உணவு முடிந்ததும் அம்மா மகிழ்வதனி அருகில் வந்து உட்கார்ந்தாள் ‌

"எழில்! நெட் பாக்குறியா?"

"எதுக்கு மா?"

"நல்ல வரன் ஏதாவது இருக்கான்னு பார்க்கலாமா?"

"இப்ப எல்லாம் எல்லாரும் அப்படி பார்க்க முடியாதும்மா . நாம பணம் கட்டி என் விவரங்களைப் பதிவு செய்யணும்.அப்பதான் மத்தவங்க விவரங்களைப் பார்க்க முடியும் அந்த வெப்சைட்டில் என்ன இருக்குன்னு தெரியணும்."

"நீ ஆன்லைன் போய் பதிவு செய்யக் கூடாதா. கோவிலுக்குப் போகும்போது தான் நானும் நிறைய விசாரிக்கிறேன். ஆனாலும் பரவால்ல கிடைக்கிறதில்ல. ஏதாவது ஒரு மேட்ரிமோனி ஏஜென்சி இல்ல உன் விவரங்களைத் தந்தா , பிள்ளைகள் விட்டாரும் இந்தப் பக்கம் வரும் வருவாங்க இல்லையா?"

வருவாங்க....!

"ஏன் இழுக்கிற? இனி தாமதிக்க தமிழில் இன்னிக்கு நாளும் நல்லா இருக்கு! பதிவு பண்ணிடு."

"சரிம்மா."

சிஸ்டத்திற்கு முன் உட்கார்ந்தாள்.

ஒரு பிரபலமான மேட்ரிமோனி நிர்வாகத்தில் பிடித்த அதற்குள் நுழைந்தாள்.

பணம் கட்டுவதில் இருந்து எல்லாமே ஆன்லைனில் நடந்தது.

பதிவு செய்தாள்.

"அம்மா! அவங்க அதை ரெஜிஸ்டர் பண்ணுவாங்க. நாளைமுதல் பார்க்க தொடங்கலாம்."

"நாளைக்கு லீவ் போட்டு உக்காரு!"

"சான்சே இல்ல அமெரிக்காவிலிருந்து கிருஷ்ணா னு பெரிய அதிகாரி வர்றார். உங்களுக்கு தான் இனி அவருடன் சீஃப்! ஆபிசே நடுங்குது. ரொம்ப கண்டிப்பு கறாருமா இருப்பாராம். பாஷை வேற பிரச்சனை."

"உனக்கு ஹிந்தி தெரியுமே."

"அம்மா! யார் வந்தா என்ன? நம்ம வேலைய ஒழுங்கா நாம செஞ்சா, யாருக்கும் பயப்பட வேண்டாம் புரியுதா."

மறுநாள் எல்லாருக்கும் ஆபீசுக்கு 10 நிமிடங்கள் முன்னே வந்துவிட்டார்கள்.

எழில்விழி எப்போதும் நேரம் தவறமாட்டார்.

ஒரு நாள் கூட லேட் பதிவு இருக்காது.

கூடுமானவரை ஆபீஸில் செல்போனில் பேச மாட்டாள்.

இப்படிப் பல நல்ல குணங்கள் இருக்கிறது எழில் இடம்.

சரியாக 9 மணிக்கு கார் வந்து நின்றது.

கிருஷ்ணன் இறங்கினார்.

நல்ல நிறம் ஓரளவுக்கு நல்ல உயரம், ரெட்டை நாடியான தளதளப்பான உடம்பு. உயர்த்தி வாரிய கேசம். கண்களுக்கு கண்ணாடி! கோட் சூட் ஷூக்கள் மீசை இல்லாத முகம் பளிச்சென்ற 57 வயதில் வசீகரமான துடிப்பாக இருந்தார்.

வந்ததும் அத்தனை பேரும் வணங்க.

சிரித்த முகத்துடன் அவரும் வணங்கினார்.

அவருக்கு அடுத்து உயர் அதிகாரி விஸ்வநாதன் பொக்கே தந்து வரவேற்றனர்.

கான்ஃபரன்ஸ் ரூம் எங்கே?

"வாங்க சார்."

"எல்லாரும் வாங்க! ஏற்கனவே எனக்கு தகவல் வந்தாலும் தனித்தனியாக ஒரு அறிமுகம் இருந்தா நல்லா இருக்கும்."

அழகான ஆங்கிலத்தில் சொல்ல, மற்றவர்கள் பின்பற்றி வந்தார்கள் .

அத்தனை பேரையும் உட்கார சொன்னார்.

"எல்லாருக்கும் வணக்கம்!"

அத்தனைப் பேரும் ஆச்சிரியமாக நிமர.

என்ன பாக்குறீங்க நான் பிறந்தது இருந்தது தஞ்சாவூர்ல நான்கு வயது வரைக்கும் காவேரி ஆற்று தண்ணீரைக் குடித்தவன் தாய்ப்பால் விட காவிரி அதிகமாக பருகினவன்.

அஞ்சாவது வயசுல சென்னைக்கு வந்தோம்.

என் பள்ளிக்கூட படிப்பெல்லாம் பத்ம சேஷாத்ரி பள்ளிக்கூடத்தில் தான். காலேஜ் ஐஐடி கிண்டி. அப்புறம் அகமதாபாத் எம்‌.பி.ஏ. சொல்லிக்கொண்டே போனார்.

"என் மனைவி காலமாகி பதினாலு வருஷம் ஆச்சு அப்புறம் ஏன் ஒரே மகன் தவரூபன்க்கு 14 வயசு இப்போ 28 அவர் சென்னையில் ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என் மகனுக்கு சென்னை வாழ்க்கை ரொம்ப பிடிச்சிருக்கு நான் வந்ததை என் பிள்ளை தவரூபன்காகத் தான்."

கிருஷ்ணனின் பேச்சு அனைவரும் கேட்டு ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தார்கள்.

"நான் வேலை நேரத்தில் ரொம்ப கண்டிப்பாக இருப்பேன். உழைக்காத உங்களை ஒத்துக்கவே மாட்டேன். மற்றபடி நான் உங்க எல்லாருக்கும் நல்ல நண்பனாக இருப்பேன்."

"நன்றி சார்!"

அத்தனை பேரும் கோரசாக சொல்ல.

"இப்ப அறிமுகம் தொடங்கலாமா?"

அடுத்த அதிகாரி விஸ்வநாதன் ஒருவகிருஷ்ணன் அவர்களைப் பற்றி சொல்லத் தொடங்கினார். ஆச்சரியப்பட்டார்கள்.

"நான் தகவல்களைத் திரட்டி ஆச்சு! நீங்க சரி பாருங்க!"

நாலாவது ஆக எழில்விழி இன் முறை, வர அவள் எழுந்து நிற்க, கிருஷ்ணன் ஏற இறங்க பார்த்தார்."

"உன்னைப் பற்றி தான் ரொம்ப நல்ல ரிப்போர்ட் எனக்கு வந்திருக்கு உனக்கு கூடுதலாக சில பொறுப்புகள் நான் தரலாம்னு இருக்கேன்."

"நிச்சயமாக! நான் சந்தோஷமாக அதை ஏத்திக்கறேன்."

"தட்ஸ் குட்!"

மற்ற அறிமுகங்களும் முடிய தரைக்கு வந்த கிருஷ்ணன் கையெழுத்திட்டார்.

மதிய உணவுகள் அந்த நிறுவனத்தின் நாடித் துடிப்பை பிடித்து விட்டார்.

பம்பரமாக எல்லாரையும் சூழல் விட்டு, கேள்வி மேல் கேள்வி கேட்டு, தகவல்களை வாங்கி, ஊழியர்களுக்கு நாக்கு தள்ளி விட்டது.

கடவுளே! முதல் நாளே இப்பிடி பெண்டை கழட்டறாரே! போகப் போக என்னாகும் தெரியலை?

எழில் மட்டும் அசரவேயில்லை.

கிருஷ்ணன் கேட்ட 100 சதவீத கேள்விகளுக்கும் சரியான பதில் தந்தவள் எழில் மட்டும் தான்.

விசுவநாதன் வந்தார்‌

"எல்லா வசதிகளோடு உங்களுக்கு கம்பெனி வீடு - தயார் இருக்கு சார்."

"ஓகே. இன்னிக்கி நான் ஓட்டல்ல தங்கியிருக்கேன்‌ . நாளைக்கு நாள் நல்லா இருக்காணு தெரியலை‌. ஒரு அய்யர் வைத்து பூஜை நடத்தணும்."

"அதுக்கும் நான் ஏற்பாடு பண்றேன் சார்."

விசுவநாதன் முயற்சித்தார். அந்த மனிதர் ஊரில் இல்லை.

"சார். நான் அம்மாவை போன்ல கேக்கட்டுமா."

"அது செய் எழில்."

எழில் உடனே அம்மாவுக்கு போன் போட்டு விவரம் சொல்ல, அம்மா பஞ்சாங்கம் பார்த்து.

"நாளைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு! நான் அய்யர் கிட்ட பேசறேன்."

அடுத்த பத்து நிமிடங்களில் அந்த அய்யரிடம் சகலமும் பேசி விட்டாள் எழில்விழியின் அம்மா.

அவருக்கு கிருஷ்ணன்வின் புது கம்பெனி பங்களாவின் விலாசம் தரப்பட்டுள்ளது.

வேண்டிய பொருட்களுடன் அய்யர் வருவதாக சொல்லி விட்டார்.

காலை 5மணிக்கு உள்ளே நுழைத்து உடனே பால் காய்ச்ச வேண்டும். அதன் பிறகு கணபதி பூஜை - நவகிரக ஹோமம்.

ஊழியர்கள் 20 பேருக்கும் அழைப்பு.

கேட்டரிங் பற்றி எழில்யிடம் கேட்க.

"லட்சுமி கேட்டரிங் ஒரு கேட்டரிங் சர்வீஸ் இருக்கு. பிரமாதமாக செய்வாங்க சார்.. நான் ஏற்பாடு பண்றேன்."

"சரிம்மா எழில் ! காலை 5 மணிக்கு உங்கம்மாவையும் கூட்டிட்டு நீ வந்துடு. நானும், என் மகன் தவரூபன்யும் வந்தூர்றோம்."

எழில் அழுத்தம் திருத்தமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்தார் மதிப்பு கூடி போனது கிருஷ்ணாவுக்கு.

எழில் வீடு திரும்ப இரவு 10 ஆகிவிட்டது.

அம்மா புது எம்.டி .ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் உனக்கு தான் நன்றி சொன்னாரு.

இருக்கட்டும் எழில். நமக்குத் தெரிஞ்ச ஏரியா உதவி செய்கிறோம் .இதுல எதுக்கு நன்றி.

காலை 3 மணிக்கு அம்மா எழுப்பி விட்டாள்.

இரண்டு பேரும் குளித்து தயாராகி விட்டார்கள்.

கம்பெனி கார் வந்துவிட்டது.

நாலே முக்காலுக்கு அம்மா, எழில் இருவரும் போய் இறங்க மற்ற சில ஊழியர்களும் இருக்க ஐயர் வந்துவிட்டார்.

பூஜை அறையில் சகலம் ஒழுங்குபடுத்தி அம்மா பம்பரமாக சுழன்று கொண்டாள்.

எல்லாம் உள்ள வீடு என்பதால் எதுவும் தேவைப்படவில்லை.

சரியாக ஐந்து மணிக்கு கிருஷ்ணன் தன் மகன் தவரூபன்யுடன் வந்துவிட்டார்.

எழில்விழி தான் ஓடிப்போய் வரவேற்றாள்.

கிருஷ்ணனின் வசீகரமும். தவரூபன் அதைவிட அழகு!

சினிமா பட நாயகன் போல் அத்தனை அற்புதமாக இருந்தான்.

முதல்ல உங்க அம்மாவை கூப்பிடு எழில்.

மகிழ்வதனி வெளியே வந்து வணங்க.

கிருஷ்ணனும் தன் மகனும் கைகூப்பி வணங்கினார்கள்.

கோவில் மாதிரி பண்ணிட்டீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. தவரூபன் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கோ.

தவரூபன் மகிழ்வதனியின் காலில் விழப் போக..

"ஐயோ நீங்க முதலாளி மகன். என் கால்ல போய்..."

"தப்பே இல்ல அம்மா. அம்மா என்ற உறவு கடவுளுக்கு சமம்."

"கடவுளை விட பெரிய முதலாளி யாரும் இந்த பூமியிலே இல்லம்மா அவனுக்கு அந்த உறவோட வாழ அதிர்ஷ்டம் இல்லை. பெரியவங்கள எங்க தரூ ரொம்ப மதிப்பான்."

மகிழ்வதனிவுக்கு உணர்ச்சி பொங்கி கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

பிறகு அய்யர் பூஜை ஆரம்பித்து விட்டார்.

ஜெமஹி ஜெயராமன் நேரில் வர எழில்வழி அறிமுகப்படுத்த கிருஷ்ணன் கை குலுக்கினார்.

தரமான காப்பி எல்லாருக்கும் வழங்கப்பட்டது.

இதுக்காகவே தமிழ்நாட்டுல வாழலாம்.

பாலை அடுப்பில் வைத்தார்கள் அது பொங்கி வந்த போது எழில்விழி அவரை அழைக்க.

உங்கம்மாவை பூஜை செய்ய சொல்லு என்று கிருஷ்ணன் கூறினார்.

"நானா?"

"நீங்க தான் அந்த தொகுதிக்கு ஒரு தாய் எப்போதும் உண்டு செய்ங்கம்மா".

மகிழ்வதனி பூஜை செய்தால்.

எழில், தரூயும் பாலை எல்லாருக்கும் கொடுத்தார்கள்.

தொடர்ந்து ஹோமங்கள் நடந்தன.

ஊழியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

எல்லாம் தடபுடலாக நடந்தது.

"நீங்க எல்லாரும் ஆபீசுக்கு போகலாம். எழில் நீ மட்டும் இங்கே இரும்மா."

"சரி சார்."

"இங்கே ஒரு ரூம் மட்டும் நம்ம ஆபீஸ் ரூம் ஆக்கி, இங்கே இன்டர்நெட் வசதிகள் உண்டாக்கணும். கான்பிடின்ஷியில் ரூம். சிலர் பிஸ்னஸ் ரகசியங்களை இங்கே தான் பார்க்கணும். நீதான் அதற்கு பொறுப்பு. தினமும் காலை அரை நாள் நீ ஆபீஸ்ல இங்கே இருக்கணும். கம்பெனிக் கார் உன் வீட்டில் பிக்கப் பண்ணி ட்ராப் பண்ணும்.

சரி சார்.

தரூயும் மிகப்பெரிய பதவியில் இருந்தான்.

இயல்பாக கலகலப்பாக ஏழில் , மகிழ்வதனி இருவரிடம் பேசினான்.

மதிய சாப்பாட்டுக்கும் லட்சுமி கேட்டரிங் சொல்லிவிடலாமா என்று கேட்டாள் எழில்.

நாலு பேருக்கு தானே நானே சமைக்கிறேன்‌, எழில் அங்க ரெண்டு பேருக்கும் என்ன பிடிக்கும்னு கேளு?

தமிழ்நாட்டின் பாரம்பரிய வத்தக் குழம்பு மிளகு ரசம் கீரை மசியல் பீர்க்கங்காய் துவையல் என்று கிருஷ்ணன் பற்றிய சாப்பாட்டை பட்டியல் ஒன்று போட, அதற்கான பொருட்கள் பட்டியல் போட்டு வாங்கிவர ஆள் அனுப்ப எல்லாம் துரிதமாக நடந்தது.

சமையல் கட்டில் எல்லாம் இருந்தது.

மளிகை சாமான்கள் காய்கறிகள் அரைமணி நேரத்தில் வந்து இறங்க, மகிழ்வதனி சமைக்கத் தொடங்கி விட்டாள்.

தனி அறையில் நவீன தொழில்நுட்பத்தை எப்படி அமைக்கலாம் என கிருஷ்ணன் - தரூ - எழில் மூவரும் ஆலோசித்துக் கொண்டு இருந்தார்கள் அதற்கான ஆட்களை பிடித்து டெலிபோன் மூலம் அந்த சர்வீஸ் எஞ்சினியர்கள் உடனே வர உத்தரவிட்டு வளவளவென்று வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

வேகம் நாலேஜ் அழகு சுறுசுறுப்பு என்று எழில் ஏங்கிக் கொண்டு இருப்பதே ஒரு ரசனையுடன் கவனிக்கத் தொடங்கினான் தவரூபன்.

அவன் கவனிப்பது சிறிதும் பொருட்படுத்தாமல் எழில் செயல்படுவதையும் பார்த்தார் கிருஷ்ணன்.

அம்மா மகிழ்வதனி கண்ணும் கருத்துமாக சமையல்கட்டில் தன் பணியை செய்து கொண்டிருக்க.

பெண் வாசனை இல்லாமல் இருந்த இரண்டு ஆண்களுக்கு பொறுப்பான ஒரு அம்மா மகளைப் பார்த்து வியந்து போனார்கள்.

கிருஷ்ணன் இந்த வயதிலும் திடகாத்திரமான, வசீகரமான ஆண்பிள்ளை!

மனைவியை இழந்து அவருக்கு அமெரிக்காவில் வீசாத பெண்கள் இல்லை.

பெரிய பதவி- லட்சங்கள் சம்பாதிக்கும் பணம் - வசீகரம், ஆண் தன்மை.

அவரை அடைய துடித்த பெண்கள் பட்டியல் பெரிது.

கிருஷ்ணன் எதிர்க்கும் வளைந்து கொடுக்கவில்லை.

எந்தவித சபலத்துக்கும் ஆளாகவில்லை.

அவரது படுக்கையறை வரை வந்து அவரை வளைக்கப் பார்த்த பெண்கள் ஏராளம்.

இரும்பு மனிதர் கிருஷ்ணன்.

அவர் நினைத்தால் எப்படியும் வாழலாம்.

ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் என்பது கடுகளவு கூட அவர் அசைந்து தரவில்லை.

அவரது கொள்கை கூட மாறவில்லை.

அதனால் அவர் மேல் எல்லா பெண்களுக்கும் அழுத்தமான மரியாதை உண்டு.

மதிய உணவு தயாராகி ஆகிவிட்டது.

அப்பா பிள்ளை உட்கார சொன்னாள் மகிழ்வதனி.

வாங்க நாலுபேரும் ஒண்ணா சாப்பிடலாம்.

ஐயோ வேண்டாம்.

நீங்க பதவி ஏற்றம் தாழ்வு எதுவும் இல்லை ஆபீஸில் தான் நான் எழில்க்கு மேல் அதிகாரி.
அதும் கடமை தவறாத ஊழியர் போலி மரியாதை காட்ட வேண்டாம். இப்ப நம்ம எல்லாம் நண்பர்கள் இல்லை உட்காருங்க.

கொஞ்சம் தயங்கி மகிழ்வதனி நிற்க.

உட்காருங்க அம்மா செல் சர்வீஸ் தான் எல்லாத்தையும் டேபிள் மேல வச்சு இருக்கீங்க.

கொண்டுவந்து வைக்க.

முதலில் மகிழ்வதனி பரிமாறினாள்.

"நீங்களும் எங்க கூட உட்காருங்க."

நால்வரும் சாப்பிடத் தொடங்கினார்கள்.

சூப்பர் ஒருவர் ஐட்டம் அத்தனை அற்புதமாக இருக்க இந்த மாதிரி சாப்பிட்டு பல வருஷங்கள் ஆச்சு என்று கூறினார் கிருஷ்ணன்.

எனக்கு விவரம் தெரிஞ்சு இப்படி ஒரு ருசியான சாப்பாட்டை தான் சாப்பிட்டதில்லை கூறினான் தவரூபன்.

இருவரும் புகழ்ந்து தள்ளினார்கள். அப்படியே ஒரு பிடி பிடித்தார்கள் இருவரும்.

உங்களுக்கு என்ன எல்லாம் பிடிக்கும் என்று பட்டியல் போட்டு அனுப்புங்க நான் சமைச்சு அனுப்புறேன்.

வாரம் ஒரு நாள் மெனு கண்டிப்பா உங்களுக்கு வரும்.

தினமும் செஞ்ச அனுப்பவும் நான் தயார் என்று கூறினார் மகிழ்வதனி.

இல்லம்மா அந்த அளவுக்கு கஷ்டம் கொடுக்கிறேன் ஞாயம் இல்லை இது ஒரு நம்பர் ஒன் அடுத்தபடியாக வார நாட்கள் சுமாராக சாப்பாடுதான் வார கடைசியில் இருந்த அருமை தெரியும் ஏற்கனவே நான் கொஞ்சம் குண்டுதான் இல்லை இப்படி சாப்பிட்டா தொப்பை பெரிதாகிவிடும் கிருஷ்ணன் சொல்லி சிரிக்க.

அதற்கு அவகாசம் தராமல் தரூ சாப்பிட்டான்.

கொஞ்சம் ஓய்வு எடுங்க எல்லாரும்.

நான் ராத்திரி உங்களுக்கு டின்னர் பண்ணி ஹாட் பேக்கில் போட்டு வச்சுட்டு புறப்படுகிறேன்

எதுக்கும் சிரமம்?

இல்லை எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை.

ரொட்டி இரண்டு வகை சட்னி ஒரு புலாவ் என்று நான்கைந்து ஐட்டங்கள் மகிழ்வதனி தயாரிக்கத் தொடங்கினாள்.

மாலை 6 மணிக்குள் உணவு தயாராகி விட்டது.

இன்டர்நெட் சங்கதிகளை முழுமையாக அங்கே நிறைவு விட்டார்கள்.

தலைமை அலுவலகம் , வெளிநாடு நேரடியாக தொடர்பு கொள்ள சகல வசதிகளும் நடைபெற கொண்டிருந்தது.

தரூ இந்த மாதிரி தொழில்நுட்பங்களில் மாஸ்டராக இருந்தான்.

அவனது நேரடிப் பார்வையில் அது நடந்தது.

எழில் அருகில் இருந்து பல சங்கதிகள் நேரடியாக கற்றுக்கொண்டாள்.

அதற்காக தொழில்நுட்ப வல்லுநர்களும் கூடவே இருந்தார்கள் எல்லாம் முடிய இரவு 7 ஆகிவிட்டது.

நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு போயிடுங்க அம்மா.

இல்ல சார் வீட்டுக்கு போய் குளிச்சு விளக்கேற்றி 4 ஸ்லோகங்கள் சொல்லிட்டு தான் நான் சாப்பிடுவேன்.

சரி மா.

எழில் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள்.

தரூ அவளை ஆழமாக பார்த்தால் அவன் உடன் பணிபுரியும் பல புத்திசாலி பெண்கள் இருந்தாலும், எழில் பார்த்த மாத்திரத்தில் ஒரு ஈடுபாடும் வந்து விட்டது அவனுக்கு.

கம்பெனி கார் தயாராக இருந்தது.

அம்மா - மகள் புறப்பட்டுச் சென்றார்கள்.

அப்பா - மகன் உள்ளே வந்தார்கள்.

நான் சென்னைக்கு வந்தது உனக்காக மட்டும் தான் தரூ. ஆனா பல வெளிச்சங்கள் நான் கொஞ்சம் எதிர்பாராத சந்தோஷங்கள் தலைவாசல் திறந்திருச்சு என் உள் மனசு சொல்லுது என்று கூறினார் கிருஷ்ணன்.

தவரூபன் பதில் சொல்லவில்லை.

தவரூபன் எதற்குமே உடனடியாக ரியாக்ட் செய்யும் ரகம் இல்லை.

ஆழமாக உள்வாங்கி ஒரு தெளிவுக்கு வந்தபிறகு தான் பேசுவான்.

?தவரூபன் காதல் வயப்பட்டு விட்டானோ? ?

?எழில் ,தவரூபன் காதலுக்கு என்ன பதில் சொல்வாள்? ?
 
என்ன சொன்னாலும் சீக்கிரம் சொல்ல சொல்லுங்கள்...... மேம்
 
Top