Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

லக்ஷ்மி-1

Advertisement

Crazy Queen

Well-known member
Member
இரவு 9 மணி கடந்து விட்டது!

வாசலுக்கும், உள்ளுமாக அலைந்து கொண்டிருந்தாள் மகிழ்வதனி !

இருப்பு கொள்ளவில்லை !

போன் அடித்துப் பார்த்தால் எடுக்கவில்லை தவிப்பாக இருந்தது !

தாமதமாகும் என்றால் , எழில்விழி போன் அடித்து அதை சொல்லிவிடுவாள் ! இன்று அதையும் சொல்லவில்லை!

சொந்த வாகனத்தில் தினசரி எழில்விழி வேலைக்குப் போவதால் மகிழ்வதனிக்கு எப்போதும் பயம்தான் !

உச்சகட்ட போக்குவரத்து !

எங்கே பார்த்தாலும் சாலை விபத்து !

கெட்டதை நினைக்காதே ! எப்பவும் பாசிட்டிவா (positive) இரு ! எழில்விழி சொல்லுவாள்.

'ஆனாலும் மனசு எங்கே இழுத்துப் பிடிப்பது!'

ஆபிசுக்கு போன் போட்டாலும் யாரும் எடுக்கவில்லை !

சரியாக மணி ஒன்பதே முக்காலுக்கு எழில்விழி வந்துவிட்டாள்.

"வாசல்லே நிக்கிறியா ? நெனச்சேன் !" என்று கூறிக்கொண்டு எழில்விழி வீட்டுக்குள் நுழைந்தாள்.

"ஒரு போன் பண்ண மாட்டியா?"

"முடியல மா! பட்ஜெட் மீட்டிங்! செல் போன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு தான் உள்ள போவோம். லேட் ஆச்சு! என்ன செய்ய?"

"சரி , முகம் கழுவி, டிரஸ் மாத்திகிட்டு வா ! தோசை ஊத்தி குடுக்கிறேன்!"

"முதல்ல இதுப்பிடி !"

" என்னது இது" ?

"உனக்கு பிடிச்ச ஸ்பெஷல் மைசூர் பாக்கு! "

"என்ன விசேஷம்?"

"பட்ஜெட் மீட்டிங் முடியும் ல எங்க ஆபீசுக்கு நாலு பேர் பதவி உயர்வு! அதுல நானும் ஒருத்தி! டெபுடி ( deptuy) மேனேஜர் போஸ்ட் ! இனி கம்பெனி கார் கிடைக்கும் ! கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு!"

மகிழ்வதனி முகம் மலர்ந்தது!

"இனி டாக்ஸி போக கைக்கு 60 ஆயிரம் ரூபாய் வரும்மா! சரியா?"

அம்மாவைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்!

"சரி! நீ வாம்மா! பசிக்கும்!"

"டிரைவிங் கிளாஸ் போகணும்! நானே காரை ஓட்டப் போறேன்!"

அதில் தயாராகி வருவது போல் அம்மா தக்காளி சட்னி அரைத்து தோசை ஊற்ற தொடங்கி விட்டாள்!

"நீயும் வா !ரெண்டு பேரும் சாப்பிடலாம்!"

"நீ சூடாக சாப்பிடு முதல்ல!"

"அம்மா! நமக்கு சொந்த வீடு வேணும் உனக்கு எனக்கும் டபுள் பெட்ரூம் போதும்! எங்க ஆஃபீஸ் வட்டி சலுகை லோன் கிடைக்கும்! ஃபிளாட் தேடலாம் வாரக் கடைசியில் !"

"வேண்டாம் எழில்விழி!"

"அம்மா இந்த வீட்டை வாடகைக்கு 15,000 மேல் பத்து ரூபாய் போட்டு, வீட்டு ஒன்றுக்கு இ.எம்.ஐ. கட்டிடலாம்!"

"உனக்கு வயசு 27 ஆகுது!"

"தெரியுமே!"அதுக்கு என்ன இப்போ?

"கழுத்துல ஒரு ஒரு தாலி ஏறனும்! இப்ப என்கூட இருக்கற வாழ்க்கை இல்லை! புருஷன் வரணும்! புள்ளை பெத்துக்கணும்! உனக்கென்று ஒரு குடும்பம் வரணும் எழில்விழி!

"நீ முதல்ல சாப்பிட்டு முடி! அப்புறம் பேசலாம்!"

அம்மா மகிழ்வதனி சாப்பிட்டாள்!

"சரி! நான் கல்யாணாம் முடிஞ்சு போகும் போது உன்னையும் கூட்டிட்டு போக முடியுமா? "

"எதுக்கு? நான் இங்கே தான் இருப்போன்!"

"உனக்கு வருமானம் இருக்கா?"

"அதான் உங்கப்பா எனக்குனு எதையும் வைக்காம போய்ச் சேர்ந்துட்டாரே! மூன்று புள்ளைங்களைப் பெத்தேன்! மூத்தவன் கொஞ்சநாளைக்கு டெல்லியில் இருந்துட்டு அவன் குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆகிவிட்டான் ! அம்மா தங்கச்சிகள் ரெண்டு பேரும் யாரைப்பற்றியும் அவர் யோசிக்கவில்லை வந்தவ யோசிக்க விடலை !"

சரிம்மா இவனுக்கே பந்த பாசம் இல்லை! இவன் பாசமா இருந்தா, அவளால் தடுக்க முடியுமா! அவளுக்கு முன்னால் இவன் பிச்சுக்கிட்டு வருவான் ! அப்படி ஒரு சுயநலம்!"

அதான் என் தலைவிதி அடுத்து உங்க அக்கா ராணி..... அவர் வேற்று மத காரணை கல்யாணம் செஞ்சுக்கிட்டா ! என்னால ஒத்துக்க முடியலை ! அவங்க குடும்பமும் ஏத்துக்கலை! அவ துபாய்ல போய் செட்டில் ஆயிட்டா!"

"நீ பிடிவாதமா இருந்தே ! அக்கா நல்லவதான்!"

என்னத்த நல்லவ? விடு! பேசினா அதிகமாயிடும் , மூணாவது கடைசி நீ ! மாட்டிக்கிட்ட!

நான் அப்படி நினைக்கலையேம்மா!

"படிச்சு முடிச்சு இந்த வருஷம் வேலை பாக்குறேன் ! எல்லாம் உதவித் தொகைல, மெரிட்டில் படிச்சு இந்த உயரத்துக்கு வந்திருக்கேன் ! உனக்கு யாரும் ஆதரவு தரல எழில்விழி! சுயமா நீயே எழுந்து வந்து இருக்க!"

"அது நல்லதுதானே மா!"

"நல்லதுதான்! வயசுதாண்டிட்டா, வாழ்க்கை விலகிப் போய்விடும்மா!"

"ஏன்மா கழுத்துல தாலி ஏறினால் தான் வாழ்க்கையா?"

"காலம் முழுக்க தனிமரமாய் இருக்கமுடியுமா எழில்விழி?"

"கல்யாணம் பண்ணிக்கிட்டு மூன்று பிள்ளைகளை பெத்தே! என்னத்த கண்டே?"

"உன்னை மாதிரி ஒருத்திய பெத்து தான் நான் செஞ்ச புண்ணியம்!"

"நான் செய்றது கடமைம்மா!"

"இல்லைம்மா! இனி உன் பேச்சை நான் கேட்க மாட்டேன்! உனக்கு கல்யாணம் நடந்தே ஆகணும்!"

"உன்னை தனியா எப்படிமா விட முடியும்?"

"வேண்டாம்..... ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு அதற்கான பணத்தை கட்டிவிட்டு ! வாரம் ஒரு முறை வந்து பார்த்துக்கோ!"

"பெத்த மகள் நான் இருக்கும்போது உனக்கு எதுக்கு முதியோர் இல்லம்!"

"தப்பே இல்ல மா! முதியோர் இல்லம் கேவலம் இல்லை பாதுகாப்பு தான்! குழந்தைவாழ்க்கையை நிம்மதியாக இருக்கும் ! நானும் என்னால் முடிந்தது இங்கே உழைப்பேன்! வேறு வழி இல்லை! உனக்கு கல்யாணம் நடக்குமா என்ற ஏக்கத்தில் நான் படுத்த படுக்கையா ஆயிடுவேன்! நீ நெட்ல பார்த்து தேர்ந்து எடு! யாருக்கும் பாதகமில்லாமல் நல்ல வரன் கிடைக்கும்! நீ படிச்சு பெரிய வேலை நல்ல சம்பளத்துல இருக்க! உனக்கு நல்ல புருஷன் கிடைப்பான். நாம் பேசலாம். சென்டிமென்ட் பற்றி உன் வாழ்க்கை வீணாக கூடாது! பிராக்டிகலா(practical) யோசி எழில்விழி, வயசு கூடி ஏதோ ஒரு கட்டத்துல எல்லாம் கசப்பா மாறும்! இந்த நிலைக்கு வரக் கூடாது நீ புத்திசாலி! புரிஞ்சுக்கோ!"

எழில்விழி எதுவும் பேசவில்லை!

அம்மா புத்திசாலி, விவேகமாக பேசுவாள். பொறுப்பில்லாத அப்பா - என்றைக்கும் அம்மா தான் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும்!

அம்மா உத்யோகத்துக்கு போகா விட்டாலும் தையல், சமையல், கைவேலை என பல சங்கதிகளில் ஈடுபட்டு பிள்ளைகளை வளர்க்க பட்டபாடு கொஞ்சமில்லை!

இருக்கும் நகைகளை விற்று, வட்டிக்கு கடன் வாங்கி, சீட்டு பிடித்து, எப்படி மூன்று பேரை ஆளாக்கினாள் என்பது உலக மகா சாதனை!

அண்ணா , அக்கா இருவருக்குமே அப்பாவைப் போல் தப்பிக்கும் குணம்!

எழில்விழி தலை தூக்கிய பிறகு தான் அம்மாவுக்கு வெளிச்சம் வந்தது!

இருக்கும் கடன்களை எல்லாம் அடைத்து கிடந்த இரண்டு வருடங்களில் குடும்ப செலவு போக மாதம் 10,000 ஆயிரம் என சேமித்து கையில 4,5 லட்சம் வட்டியோடு சேர்ந்திருக்கிறது!

பார்த்து பார்த்து சிக்கனமா குடும்பம் நடத்தும் அம்மாவின் ஆற்றலால் இது நடக்கிறது!

அம்மா யோசிப்பதில் தவறில்லை!

அடிபட்டால், அம்மாவுக்கு அனுபவம் அதிகம்! மனிதர்களை எடைபோடுவதில் அம்மாவை மிஞ்ச முடியாது!

ஒரு பார்வையில் ஆட்களை கணித்து விடுவார்கள்!

எழில்விழி தனியார் நிறுவனத்தில் வேலை! யாரிடமும் அதிகமாக நெருங்கிப் பழக மாட்டாகள்!

அதற்காக சிடுமூஞ்சியும் அல்ல!

உழைக்கும் பெண்! ஓரளவுக்கு எல்லாம் தெரிஞ்சு, தைரியமான பெண்!

இரவு எழில்விழி சரியாக உறங்க வில்லை.

'தாங்கி பிடிக்க ஒரு ஆண் துணை இந்த குடும்பத்திற்கு அவசியம் வேண்டும்!'

'இல்லாவிட்டால் ஒரு சோர்வும் விரக்தியும் வரும்!'

'அம்மா சொல்வதும் சரிதான்'

'அம்மாவையும் விடாமல் வாழ்க்கையும், கெடாமல் எனக்கு ஒரு ஆண் வருவானா?'

யோசிக்கத் தொடங்கினாள்.

எழில்விழி பேரழகி இல்லை ஆனால் லட்சணமான பெண்!



யாருமே அவளைத் தள்ள முடியாது!

காதலில் எழில் விழித்து நம்பிக்கை இல்லை காரணம் அக்காவா என்று தெரியவில்லை !

நள்ளிரவுக்கு மேல் உறங்கிப் போனாள்!

? எல்லாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ?

?என்னடா இவ எதுவும் சொல்லாம ஸ்டோரி போட்ல பார்க்காதீங்க ஏதோ தோணுச்சு போட்டேன்

? என்னோட மத்த கதை மாதிரி இந்த கதைக்கும் கொஞ்சம் உங்க சப்போர்ட் வேணும்?
 
உங்களுடைய "மஹாலக்ஷ்மி"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தஸீன் பாத்திமா டியர்
 
Last edited:
உங்களுடைய "மஹாலக்ஷ்மி"
or "அகத்தியம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தஸீன் பாத்திமா டியர்


மஹா லக்ஷ்மி தான்
 
Top