Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் "விதி"

Advertisement

rishiram

Well-known member
Member
1
கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள் சௌம்யா.
"ஐ! மாலு...மாலு..." என்று காரிலிருந்து குதித்தான் நான்கு வயது வாலு யஜ்னீஷ்.
சேலையை சரி செய்தபடியே யஜ்னீஷின் கையைப் பிடித்துக் கொண்டாள் சௌம்யா.
"யஜு! அம்மா கைய விடாம பிடிச்சுக்கணும். சரியா?" குனிந்து அவனிடம் சொல்லி விட்டு அவனது பிஞ்சுக் கையை பிடித்துக் கொண்டாள் சௌம்யா.
அது தலையைத் தலையை ஆட்டியவாறு கண்கள் ப்ரகாசமாக அந்த பிரமாண்டமான மாலயே வெறித்தது.
யஜனீஷுக்கு மாலுக்கு போவதென்றால் எப்போதுமே குஷி தான். அவனுக்கு அம்மா தள்ளும் ட்ராலியின் மேல் உள்ள சின்ன பலகையில் உட்கார்ந்து ராஜாவாட்டம் 'மால்வலம்' வர வேண்டும்; வரும்போது ஒரு சாக்கலேட் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு சாப்டுகிறேன் பேர்வழி என்று ட்ரஸ் முழுக்க ஆக்க வேண்டும்.
"சௌம்யா! நீங்க முன்னால போங்க. நான் வரேன்." என்று தன் பக்கத்திலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து வாய்க்குள் சரித்துக் கொண்டு 'க்ள.. க்ள..' என்றான் அரவிந்த்.
"சரிங்க." என்று விட்டு யஜ்னீஷைப் பிடித்துக் கொண்டு அந்த கார் பார்க்கிங்கில் இருந்து சோப் டப்பாக்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வகையான கார்களைத் தாண்டி என்ட்ரன்ஸ் பக்கம் வந்தாள் சௌம்யா. செக்கிங் டோரைத் தாண்டி வரவும், வரிசையாக அடுக்கப்பட்டிருந்த ட்ராலிகள் பக்கம் ஓடினான் யஜ்னீஷ். ஒரு ட்ராலியை அதன் வரிசையிலிருந்து இழுக்கவும் முனைந்தான்.
"இரு, யஜு. நான் வரேன்." என்று விரைந்து வந்து அவன் கை வைத்த ட்ராலியை இழுத்து அதன் மேல் உள்ள அந்த சின்ன சீட்டை நகர்த்தி அதன் மேல் யஜ்னீஷை உட்கார வைத்தாள். அவன் 'ஹையா' என்று சின்ன கைகளை கொட்டிக் கொண்டு 'ப்ர்ர்ர்ர்...' என்று ஓசை எழுப்பினான். அர்த்தம்... வண்டியை நகர்த்த வேண்டும்.
சௌம்யா கைப்பையைத் திறந்து அந்த லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ரேக்காக நகரத் துவங்கினாள்.
சௌம்யா மால் கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும் அதன் தந்திரங்களில் விழுந்து விட மாட்டாள். எது வாங்க வேண்டும் என்று லிஸ்ட் போட்டிருக்கிறாளோ அதை மட்டும் வாங்குவாள். அந்த லிஸ்ட்டைத் தாண்டி ஒரு பொருள் வாங்க மாட்டாள். யஜுக்கு என்ன வேண்டும் என்று முதலிலேயே கேட்டு விடுவாள். அதை கண்டிப்பாக வாங்கித் தருவாள். அதைத் தவிர வேறு எதை அவன் கேட்டு அடம் பிடித்தாலும் தீர்க்கமாய் மறுத்து விடுவாள்.
மெதுவாக ட்ராலியைத் தள்ளிக் கொண்டே ஒவ்வொரு ரேக்காய் நகர்ந்து லிஸ்ட் ப்ரகாரம் பொருட்களை அள்ளி ட்ராலியில் போட்டுக் கொண்டே வந்தாள். இரண்டு மூன்று ரோஸ் தாண்டி இருப்பாள். அடுத்த ரோ திரும்பும்போது இன்னோரு ட்ராலி மீது லேசாக இடித்துக் கொண்டாள். சட் என்று 'சாரி' சொன்னாள். அந்த ட்ராலியை பிடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் 'நோ ப்ராப்ளம்' என்று சொல்லி விட்டு 'டக்' என்று 'சௌமீ.." என்று ஒற்றை விரலை நீட்டியவாறு அவளைப் பார்த்தாள்.
சௌம்யா உற்றுப் பார்த்தாள்.
நாற்பது வயது மதிக்கத் தக்க குண்டு என்று சொல்ல முடியாதவாறு.. ஆனால் குண்டுப்பெண். வட்ட முகம். சுடிதார் அணிந்திருந்தாள். மூக்கின் மீது உள்ள மச்சம் சௌம்யாவின் நினைவடுக்குகளில் ஒளிந்திருந்த அவளது பெயரை நினைவுக்கு கொண்டு வந்தது..
"சுமதி..?"
"அப்பா..மறந்துட்டியோன்னு நெனச்சேன்.. மறக்கற மாதிரியா நம்ம நடந்திருக்கோம்.. பாத்திமா ஸ்கூல் ஹாஸ்டல் முழுக்க நம்ம அட்டகாசம் தானே.. மேத்ஸ் சிஸ்டர் மெர்லின் 'சைலன்ஸ்ங்க்ற வேர்டயே உங்க க்ளாஸ்ல தான் ரொம்ப யூஸ் பண்றேன்னு அலறுமே... ஆமா.. இது தான் பையனா?.. ஸோ க்யூட்.. கண்ணா.. உன் பேரென்ன....?உங்க அம்மா போன் நம்பர் சொல்லு ராஜா"
சுமதி பட பட என பொரிந்து தள்ள, சௌம்யாவிற்கு மனோகராஜ் சார் நினைவில் வந்தார். ப்ளஸ் டூ வரை நாம எப்படி இருக்கோமோ அப்படியே நம்ம வாழ்க்கை பூரா இருப்போம்.. அது எத்தனை சரி. சுமதி அப்பவும் பட்டாஸ்.. இப்பொ இந்த நாப்பது வயசுலயும் பட்டாஸ்..
"ஆமாம் சௌமி..பையன் கலரு ஒன்ன மாதிரி தான்.. ஆனா ஜாடை உன்ன மாதிரியும் இல்ல.. உங்க மாமா மாதிரியும் இல்ல... ஒரு வேள அவங்க தாத்தா மாதிரியா...? நீயும் உங்க மாமாவும் லவ் பண்ண ஸ்பீடுக்கு மூணு, நாலு பெத்துருப்பேன்னு நெனச்சேன். இவன் ஒருத்தன் தானா இல்ல வீட்ல விட்டுட்டு வந்திருக்கியா..?"
சௌம்யாவின் முகம் வெளிற, அந்த நேரம் பார்த்து அரவிந்த் பக்கம் வந்து நின்றான்.
"அரவிந்த்.. இது சுமதி.. என்கூட ஹாஸ்டல் மேட்..சுமதி.. இது அரவிந்த்..என் ஹஸ்பண்ட்.. ஒரு ப்ரைவேட் கன்சர்ன்ல மானேஜரா இருக்கார்..உடனே வீட்டுக்கு போகணும்... இன்னொரு நாள் பார்க்கலாம்."
சட் என்று கட் பண்ணி விட்டு பில் கவுண்டர் பக்கம் ட்ராலியை நகர்த்தினாள் சௌம்யா...
வாயாடி சுமதி வாய் பிளந்து அரவிந்தயே பார்த்தபடி நின்றாள்.
'இது சௌம்யாவோட மாமா சந்துரு மாதிரியே இல்லயே..'​
 
Nirmala vandhachu ???
Best wishes for your new story
 
Nice start.
Authore why this kolaveri???? font size ivalavu kuttyah pottu patience ellam check panna kudaathu. we pavam.
Travelling la eppadi vasikiratham.no time at home. Pls change it.
 
Top