Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம்7

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 7

'உன் பேர் என்ன?' என்று சிஸ்டர் கேட்கவும், சௌம்யா மெல்லிய குரலில் பேரைச் சொன்னாள்.
'என்னோட இத்தன வருஷ அனுபவத்துல நீ பொய் சொல்றேங்கறத ஒன் கண்ண பாத்தே கண்டுபிடிக்கத் தெரியாதா? ஆனாலும் நான் ஏன் ஒன்ன ஒண்ணும் சொல்லலேன்னா நீ அத சமாளிச்ச விதம். நல்லா படிச்சா மட்டும் போதாதும்மா. ஒழுக்கமும் வேணும்.' என தன் அக்மார்க் கண்டிப்பான குரலில் சொல்லவே, சௌம்யா தலை குனிந்தாள்.
'சாரி சிஸ்டர்.'
அவள் கண்கள் சட் என்று நீர் வார்க்கத் தொடங்கின.
'சரி. இனி இத மாதிரி பண்ணாதே. ரூமுக்குப் போ'
'ஓ.கே. சிஸ்டர்.'
கண்களைத் துடைத்துக் கொண்டு, தன் ரூமை நோக்கி நடந்தாள் சௌம்யா.
மாடிப்படிகளில் ஒளிந்து நின்று கொண்டிருந்த சுமதி ஓடி வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.
'என்னடி சொன்னாங்க சிஸ்டர்? அழுற..'
'என் பொய்ய கண்டுபிடிச்சிடாங்க சுமதி.'
'டைனிங் ஹால்ல நாம பேசிட்டிருந்தத ஒட்டு கேட்டு இருப்பாங்களோ?'
'அது என்னவோ தெரியல. சரி. இத மறந்துரலாம். ஸ்கூலுக்கு டைம் ஆச்சு.'
இருவரும் அவசர அவசரமாய் ரூமுக்கு வந்து ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பலானார்கள்.
சௌம்யா ஒரு கணம் நின்றாள்.
'சுமதி! நீ முன்னால போறியா? இதோ ஒரு தடவை சாமி கும்பிட்டு வந்த்துர்றென்'
சுமதி குறும்பாய் ஒரு பார்வை பார்த்தாள்.
'சாமியா? ஆசாமியா?'
சொல்லி விட்டு 'ஐயயோ.. நான் ஒண்ணும் சொல்லலடியம்மா..அப்புறம் அதுக்கு வேற மூஞ்சிய தூக்கி வச்சிக்குவ..நான் முன்னால போறேன். நீ வா. மேத்ஸ், பயாலஜி க்ரூப் தான நீயும்?'
இன்னும் இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் வேறு என்ன என்னமோ பேசிக் கொண்டிருந்தோமே என்று மெல்ல மனதிற்குள் தன்னை கடிந்து கொண்டாள்.
'ஆமாம் சுமதி.'
'சரி. நான் வாரேன்.'
என்று சொல்லி விட்டு சுமதி கீழே போக, சௌம்யா கதவை உட்புறமாகத் தாழிட்டு விட்டு சூட்கேசைத் திறந்தாள்.
சந்துருவின் போட்டோவை எடுத்தாள்.
'மாமா! உனக்கும் இப்ப எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும். இந்த போட்டாவப் பார்த்து பேசி உன் கிட்ட பேசுற மாதிரி நெனச்சுக்கறேன். நான் நல்லா படிச்சு ஒன் ஆசப்படி எதயாவது சாதிக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா.'
சொல்லியவாறே சந்துருவின் போட்டாவை தன் தலை மீது வைத்து எடுத்து மீண்டும் சூட்கேசினுள் அதை பத்திரமாக வைத்தாள்.
பின்னர் விடு விடென்று ரூமை விட்டு வெளியே வந்து தன் கையில் இருந்த சாவியால் கதவைப் பூட்டி விட்டு ஓட்டமும் நடையுமாய் பள்ளியை நெருங்கவும், முதல் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
மாணவிகள் ப்ரேயருக்கு வரிசையாய் நின்றார்கள். அவள் ஓடிப் போய் அணி அணியாய் நின்ற மாணவிகளின் ஒரு அணிக்குப் போய் கடைசியில் நின்ற மாணவியிடம்,
'இது பயாலஜி க்ரூப்பா?' என, அந்தப் பெண் 'இன்னைக்கு யார் வேணும்னாலும் எங்க வேணும்னாலும் நிக்கலாம்னு சிஸ்டர் சொன்னாக' என்றாள்.
அந்தப் பெண்ணின் பின்புறம் கடைசியாய் போய் சௌம்யா நின்று கொண்டாள். சிறிது நேரத்தில் அவள் பின் இரண்டு மாணவியர் வந்து நின்றனர். ப்ரேயர் தொடங்கியது.
ப்ரின்சிபல் மதரின் இன்ஸ்ட்ரக்ஷனுக்குப் பிறகு, சிஸ்டர் ஒருவர் வகுப்புகள் எங்கு எங்கு உள்ளன என்று சொல்லவே, சௌம்யா மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.
ப்ரேயருக்குப் பிறகு அவர் அவர் அவரவரது வகுப்பிற்குப் போகவே, கடைசி பெஞ்சில் இருந்த சுமதி இவளை நோக்கி கை காட்டினாள்.
'சௌமி, இங்க வா.' என்றாள்.
சௌம்யா காலியாய் இருந்த முன் வரிசை பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்து சுமதியை 'நீ இங்க வா' என்றாள்.
ஒரு கணம் தயங்கிய சுமதி திடீர் தைர்யம் வரப் பெற்றவளாய் அவள் அருகில் அமர்ந்தாள்.
'முன் பெஞ்சில் இருந்தா அடிக்கடி கொஸ்டின் கேப்பாங்க..பரவால்ல நீ தான் இருக்கேல்ல..'
சௌம்யா சிரிக்க, ஒரு டீச்சர் உள்ளே வந்தார்.
உடனே அனைவரும் எழுந்து நிற்க, 'குட் மார்னிங் சில்ட்ரன். சிட் அவுன்.' எனவே அனைவரும் அமர்ந்தனர்.
'ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்ல இருந்து வந்திருப்பீங்க. ஹாஸ்டலைட்ஸ் வேற நெறய இருக்கிறீங்க. நாம படிக்க வந்திருக்கோம். அத மட்டும் பண்ணீங்கன்னாலே லைப்ல ஜெயிச்சுடலாம். என் பேர் மெர்லின். ஒங்களுக்கு மேத்ஸ் சொல்லித் தர போறேன்...'
உடனே சுமதி ஒரு நிம்மதி பெருமூச்சுடன் சௌம்யாவைப் பார்க்க, சௌம்யா 'மிஸ்ஸப் பார்' என்பது போல் கண்ணைக் காட்டினாள்.
அப்போது..
'எக்ஸ்க்யூஸ் மி மிஸ்' என சப்தம் கேட்கவே, டீச்சரைப் போலவே அனைவரும் வாசலைப் பார்த்தனர். அங்கே... நின்றிருந்தார் ரோஸி சிஸ்டர்.
சிஸ்டரைப் பார்த்ததும் அனைத்து மாணவியரும் எழுந்து நிற்க, 'வாங்க சிஸ்டர்' என்றார் மெர்லின் டீச்சர்.
'இது ஏ செக்ஷன். நீங்க இந்த வருஷம் பி செக்ஷனுக்குத்தான்.'
என ரோஸி சிஸ்டர் சொல்லவே, உண்மை உறைத்து, 'சாரி சிஸ்டர்.' என்று அசடு வழிந்த மெர்லின் டீச்சர் நின்றிருந்த மாணவிகளிடம் 'இவங்க சிஸ்டர் ரோஸி. இவங்க தான் உங்க மேத்ஸ் டீச்சர்' என்று சொல்லி விட்டு 'சீ யூ கேர்ள்ஸ்' என்று விட்டு மீண்டும் சிஸ்டரிடம் ஒரு சாரியை உதிர்த்து விட்டு வெளியே அகன்றார். சௌம்யா சுமதியைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஈயாட வில்லை.

Ha ha.. Maths teachers eppovum strict ah than iruppanga. Daily home work kuduthu athai follow panni purinchu podarangala, parthu copy adikkirangalannu check panni, avangalum hard work pannaranga other subject teacher sa vida. So they seems strict.
 
ஒரு ஐந்து நிமிடம் சுமதிக்கு சந்தோசத்தை கொடுத்துட்டு போயிட்டாங்களே மெர்லின் மிஸ். சூப்பர்
 
வந்தாச்சு ரோஸி சிஸ்டர்
சுமதிக்கு திக் திக், ??
 
Nice epi.
Vanthu alla namada kaniyasthtri kanakku padipikkan.
Sumathi unn santhosathin aayul romba kuravu pola.
Inni Sumathi vs Rosy ah, Super.
 
அத்தியாயம் 7

'உன் பேர் என்ன?' என்று சிஸ்டர் கேட்கவும், சௌம்யா மெல்லிய குரலில் பேரைச் சொன்னாள்.
'என்னோட இத்தன வருஷ அனுபவத்துல நீ பொய் சொல்றேங்கறத ஒன் கண்ண பாத்தே கண்டுபிடிக்கத் தெரியாதா? ஆனாலும் நான் ஏன் ஒன்ன ஒண்ணும் சொல்லலேன்னா நீ அத சமாளிச்ச விதம். நல்லா படிச்சா மட்டும் போதாதும்மா. ஒழுக்கமும் வேணும்.' என தன் அக்மார்க் கண்டிப்பான குரலில் சொல்லவே, சௌம்யா தலை குனிந்தாள்.
'சாரி சிஸ்டர்.'
அவள் கண்கள் சட் என்று நீர் வார்க்கத் தொடங்கின.
'சரி. இனி இத மாதிரி பண்ணாதே. ரூமுக்குப் போ'
'ஓ.கே. சிஸ்டர்.'
கண்களைத் துடைத்துக் கொண்டு, தன் ரூமை நோக்கி நடந்தாள் சௌம்யா.
மாடிப்படிகளில் ஒளிந்து நின்று கொண்டிருந்த சுமதி ஓடி வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.
'என்னடி சொன்னாங்க சிஸ்டர்? அழுற..'
'என் பொய்ய கண்டுபிடிச்சிடாங்க சுமதி.'
'டைனிங் ஹால்ல நாம பேசிட்டிருந்தத ஒட்டு கேட்டு இருப்பாங்களோ?'
'அது என்னவோ தெரியல. சரி. இத மறந்துரலாம். ஸ்கூலுக்கு டைம் ஆச்சு.'
இருவரும் அவசர அவசரமாய் ரூமுக்கு வந்து ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பலானார்கள்.
சௌம்யா ஒரு கணம் நின்றாள்.
'சுமதி! நீ முன்னால போறியா? இதோ ஒரு தடவை சாமி கும்பிட்டு வந்த்துர்றென்'
சுமதி குறும்பாய் ஒரு பார்வை பார்த்தாள்.
'சாமியா? ஆசாமியா?'
சொல்லி விட்டு 'ஐயயோ.. நான் ஒண்ணும் சொல்லலடியம்மா..அப்புறம் அதுக்கு வேற மூஞ்சிய தூக்கி வச்சிக்குவ..நான் முன்னால போறேன். நீ வா. மேத்ஸ், பயாலஜி க்ரூப் தான நீயும்?'
இன்னும் இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் வேறு என்ன என்னமோ பேசிக் கொண்டிருந்தோமே என்று மெல்ல மனதிற்குள் தன்னை கடிந்து கொண்டாள்.
'ஆமாம் சுமதி.'
'சரி. நான் வாரேன்.'
என்று சொல்லி விட்டு சுமதி கீழே போக, சௌம்யா கதவை உட்புறமாகத் தாழிட்டு விட்டு சூட்கேசைத் திறந்தாள்.
சந்துருவின் போட்டோவை எடுத்தாள்.
'மாமா! உனக்கும் இப்ப எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும். இந்த போட்டாவப் பார்த்து பேசி உன் கிட்ட பேசுற மாதிரி நெனச்சுக்கறேன். நான் நல்லா படிச்சு ஒன் ஆசப்படி எதயாவது சாதிக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா.'
சொல்லியவாறே சந்துருவின் போட்டாவை தன் தலை மீது வைத்து எடுத்து மீண்டும் சூட்கேசினுள் அதை பத்திரமாக வைத்தாள்.
பின்னர் விடு விடென்று ரூமை விட்டு வெளியே வந்து தன் கையில் இருந்த சாவியால் கதவைப் பூட்டி விட்டு ஓட்டமும் நடையுமாய் பள்ளியை நெருங்கவும், முதல் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
மாணவிகள் ப்ரேயருக்கு வரிசையாய் நின்றார்கள். அவள் ஓடிப் போய் அணி அணியாய் நின்ற மாணவிகளின் ஒரு அணிக்குப் போய் கடைசியில் நின்ற மாணவியிடம்,
'இது பயாலஜி க்ரூப்பா?' என, அந்தப் பெண் 'இன்னைக்கு யார் வேணும்னாலும் எங்க வேணும்னாலும் நிக்கலாம்னு சிஸ்டர் சொன்னாக' என்றாள்.
அந்தப் பெண்ணின் பின்புறம் கடைசியாய் போய் சௌம்யா நின்று கொண்டாள். சிறிது நேரத்தில் அவள் பின் இரண்டு மாணவியர் வந்து நின்றனர். ப்ரேயர் தொடங்கியது.
ப்ரின்சிபல் மதரின் இன்ஸ்ட்ரக்ஷனுக்குப் பிறகு, சிஸ்டர் ஒருவர் வகுப்புகள் எங்கு எங்கு உள்ளன என்று சொல்லவே, சௌம்யா மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.
ப்ரேயருக்குப் பிறகு அவர் அவர் அவரவரது வகுப்பிற்குப் போகவே, கடைசி பெஞ்சில் இருந்த சுமதி இவளை நோக்கி கை காட்டினாள்.
'சௌமி, இங்க வா.' என்றாள்.
சௌம்யா காலியாய் இருந்த முன் வரிசை பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்து சுமதியை 'நீ இங்க வா' என்றாள்.
ஒரு கணம் தயங்கிய சுமதி திடீர் தைர்யம் வரப் பெற்றவளாய் அவள் அருகில் அமர்ந்தாள்.
'முன் பெஞ்சில் இருந்தா அடிக்கடி கொஸ்டின் கேப்பாங்க..பரவால்ல நீ தான் இருக்கேல்ல..'
சௌம்யா சிரிக்க, ஒரு டீச்சர் உள்ளே வந்தார்.
உடனே அனைவரும் எழுந்து நிற்க, 'குட் மார்னிங் சில்ட்ரன். சிட் அவுன்.' எனவே அனைவரும் அமர்ந்தனர்.
'ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்ல இருந்து வந்திருப்பீங்க. ஹாஸ்டலைட்ஸ் வேற நெறய இருக்கிறீங்க. நாம படிக்க வந்திருக்கோம். அத மட்டும் பண்ணீங்கன்னாலே லைப்ல ஜெயிச்சுடலாம். என் பேர் மெர்லின். ஒங்களுக்கு மேத்ஸ் சொல்லித் தர போறேன்...'
உடனே சுமதி ஒரு நிம்மதி பெருமூச்சுடன் சௌம்யாவைப் பார்க்க, சௌம்யா 'மிஸ்ஸப் பார்' என்பது போல் கண்ணைக் காட்டினாள்.
அப்போது..
'எக்ஸ்க்யூஸ் மி மிஸ்' என சப்தம் கேட்கவே, டீச்சரைப் போலவே அனைவரும் வாசலைப் பார்த்தனர். அங்கே... நின்றிருந்தார் ரோஸி சிஸ்டர்.
சிஸ்டரைப் பார்த்ததும் அனைத்து மாணவியரும் எழுந்து நிற்க, 'வாங்க சிஸ்டர்' என்றார் மெர்லின் டீச்சர்.
'இது ஏ செக்ஷன். நீங்க இந்த வருஷம் பி செக்ஷனுக்குத்தான்.'
என ரோஸி சிஸ்டர் சொல்லவே, உண்மை உறைத்து, 'சாரி சிஸ்டர்.' என்று அசடு வழிந்த மெர்லின் டீச்சர் நின்றிருந்த மாணவிகளிடம் 'இவங்க சிஸ்டர் ரோஸி. இவங்க தான் உங்க மேத்ஸ் டீச்சர்' என்று சொல்லி விட்டு 'சீ யூ கேர்ள்ஸ்' என்று விட்டு மீண்டும் சிஸ்டரிடம் ஒரு சாரியை உதிர்த்து விட்டு வெளியே அகன்றார். சௌம்யா சுமதியைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஈயாட வில்லை.
Nirmala vandhachu ???
 
Top