Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 3

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 3

ஒரு வழியாக சௌம்யா திருநெல்வேலியில் அந்த பள்ளியில் சேர்ந்து விட்டாள். ஆனால் அவளை அங்கு அனுப்புவதற்குள் சந்துருவும், சௌம்யாவின் அப்பாவும் பட்ட பாடு...
சந்துருவுக்கு பல நிபந்தனைகள்:
வாரம் ஒரு கடிதம் வர வேண்டும்.
அவன் நண்பனான கோவிந்தனோடு அதிகம் வச்சுக்கக் கூடாது.
வாரம் சனிக்கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
அவள் அப்பாவும் அவளது கண்டிஷன்களிலிருந்து தப்பிக்க வில்லை.
அவருக்கான நிபந்தனைகள்:
அவள் ஊருக்கு வர வேண்டும் என்று லெட்டரில் அனுப்பும்போது ஸ்கூலில் எதயாவது சொல்லி கூட்டி வர வேண்டும்.
ஒரு நாள் லீவ் என்றாலும் கூட்டிப் போக வர வேண்டும்.
அவரும் சின்னப் பெண் தானே, ஹாஸ்டல் போய் படிக்க ஆரம்பித்தால் ஊர் நினைவு வராது என்று அவள் சொல்வதற்கெல்லாம் தலையை தலையை ஆட்டினார்.
அவளை ஹாஸ்டலில் சேர்க்க ஒரு பெரிய கும்பலே வந்தது.
அவளது அப்பா, அம்மா, சந்துரு, சந்துருவினுடைய அம்மா, சந்துருவினுடைய நண்பன் கோவிந்தன், சௌம்யாவினுடைய பெரியப்பா குடும்பம், சித்தப்பா குடும்பம் என்று ஒரு பாதி பஸ்ஸே கொள்ளும் அளவுக்கு ஜனங்கள். அது போக பெரிய சூட்கேஸ், அது கொள்ளும் அளவு உடைகள், அவள் ஊருக்கு வந்தால் எடுத்து வர ஒரு சிறிய சூட்கேஸ், ஹேண்ட் பாக், புத்தக பை, படிக்க உதவும் அத்தனை ஸ்டேஷனரி ஐட்டமும் புதிதாக என்று...
வார்டன் சிஸ்டர் ஒரு நிமிடம் புருவத்தை உயர்த்தி இவர்களை பார்க்கும் அளவுக்கு இருந்தது இவர்களது செயல்கள்.
சாயந்திரம் ஆறு மணி முதல் ஹாஸ்டலுக்கு மாணவிகளைக் கொண்டு விட பெற்றோர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அன்று மட்டும் ஆண்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் அதுவும் பல சிஸ்டர்கள் கண் கொத்திப் பாம்பாய் ஹாஸ்டல் முழுக்க ரௌண்ட்ஸில். வந்த பெற்றோர்களை சீக்கிரம் வெளியே துரத்துவதிலேயே அவர்கள் குறியாய் இருந்தனர்.
சௌம்யா தங்கப் போகும் அறை பத்துக்கு பத்து இருக்கும். இரண்டு மூலைகளில் இரு நாற்காலி மேஜைகள், பொருட்கள்,புத்தகங்கள் வைக்கும் அளவுக்கு ஒரு உயரமான அலமாரி.
சௌம்யாவிற்கு எதிலேயும் கவனம் இல்லை. கண்கள் கண்ணீரைப் பிழிந்தபடியே இருந்தன. அடிக்கடி கைக்குட்டை எடுத்துத் துடைத்துக் கொண்டாள். அவளது அறை இருந்த வராந்தா முழுவதும் அவளுடன் வந்த ஜனங்கள். அறைக்குள் அவள், அவளது அம்மா. சந்துரு அறை வாசலில்.
'இன்னும் ரெண்டு வருஷம் தான். அதுக்கு அப்புறம்...' என்று எல்லாரும் பாடும் பல்லவியையே அம்மாவும் பாட, அப்போது உள் நுழைந்தனர் ஒரு தாவணி போட்ட குண்டுப் பெண்ணும் அவளது பெற்றோர் என்று கருதப்படும் அவளது ஜாடை கொண்ட மத்திய வயசு ஆணும், பெண்ணும்.
அந்தப் பெண் சௌம்யாவின் அம்மாவை நெருங்கினாள்.
"அக்கா, என் பேரு முத்துலச்சுமி. இது என் பொண்ணு, சுமதி. இங்க தான் பதினொண்ணாம் க்ளாஸ் சேத்திருக்கோம். இந்த ரூம் தான் குடுத்துருக்காங்க."
சௌம்யாவின் அம்மா சிநேகமாய் சிரித்தாள். பின்பு சுமதியயும் ஒரு பார்வை பார்த்தாள். ஒத்த ஜடை போட்டிருந்தாள். பெரிய கண்கள். முகத்தில் எண்ணெய் வழிந்தது. 15 வயதுப் பெண்ணுக்குரிய உடல்வாகை விட சற்றுப் பெருத்திருந்தாள். இவள் அவளைப் பார்த்த போது லேசாக அவளது உதடுகள் விரிந்தன.
'என்ன இந்தப் பொண்ணு அழற மாதிரியே தெரியலயே' என்று ஒரு கணம் வியத்தவள் பின்பு 'மாமா பையன் அல்லது அந்த மாதிரி எதுவும் இருக்காது போல' என்று சமாதானப் படுத்திக் கொண்டாள். பின்பு சௌம்யாவிடம் திரும்பினாள்.
"சௌமி! இந்தப் பொண்ணு தான் ஒங்கூட இந்த ரூம்ல தங்குதாம்."
சௌமியா கலங்கும் கண்களால் சுமதியைப் பார்த்து விட்டு கதவருகே நின்ற சந்துருவைக் கண்டதும் மீண்டும் அழுகை வரவே, முகத்தை அந்த அறையில் இருந்த ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்.
உடனே சௌம்யாவின் அம்மா பார்வதி முத்துலச்சுமியைப் பார்த்தாள்.
"எல்லா சொந்த பந்தங்களும் எங்க ஊர்லெயே தான். சின்னதுல இருந்து ஊர விட்டு எங்கெயும் போனதில்லயா. அதான் அழுதுட்டே இருக்கா.நல்ல படிப்பா. பத்தாவதுல 440 மார்க். அவங்க அப்பாவுக்கு நல்ல படிக்க வைக்கணும்னு ஆச. அதான்.."
மார்க்கை கேட்டதும் முத்துலச்சுமியும், சுமதியும் ஒரு நிமிடம் திரும்பி நின்றிருந்த சௌமியாவைப் பார்த்தார்கள். பின்னர் முத்துலச்சுமி தொடர்ந்தாள்.
"சுமதி கம்மி தான். படிப்பு ஏற மாட்டெங்குதுன்னு தான் ஹாஸ்டல்ல கொண்டு விடறொம். அப்பாடா! உங்க பொண்ணு கூட சேந்து இவ படிச்சுடுவா. சரி. நாங்க கெளம்புறொம். எட்டு மணி கடைசி பஸ்ஸ புடிக்கணும்" என்று சொல்லி விட்டு சௌமியாவிடம் வந்தாள்.
"ஏம்மா, அழாதம்மா. ரெண்டு நாள்ல பழகிப் பொயிடும். இதப் பாரு. எப்படி 'திங்'னு இருக்கறத. சரி. நான் வரேம்மா. பேசாம இருக்கான்னு நெனக்காத. வாயத் தொறந்தா மூடவே மாட்டா. அவளயும் கொஞ்சம் சொல்லிக் குடுத்து பாத்துக்கம்மா. கடல மிட்டாய், அதிரசம்லாம் வச்சிருக்கேன். நீயும் எடுத்துக்கோ" என்று சொல்லி விட்டு அவளது தலயை தடவி விட்டு பார்வதியிடம் திரும்பினாள்.
"அப்போ நான் வர்றெங்க. என்று சொல்லி விட்டு கணவனைத் தேடினாள். அவர் வராந்தாவில் சந்துருவோடு பேசிக் கொண்டிருப்பதை பாத்து விட்டு சுமதியிடம் வந்தாள்.
"வரென் சுமதி. இது வீடு இல்ல. சிஸ்டர் சொல்றத கேட்டுக்கோ. அப்பா காலாண்டு லீவுக்கு வருவாரு. இடயில பண்டம் யார்ட்டயவாது குடுத்து விடுவாரு. அடிக்கடி லெட்டர் போடு." என்று சொல்லி விட்டு ரூமை விட்டு வெளியே வந்தாள்.
"ஏங்க" என்று கூப்பிடவும், சுமதியின் அப்பாவான சிவராசன் திரும்பினார்.
போலாமா என்பது போல் பார்க்க முத்துலச்சுமி தலை அசைக்க, அவர் ரூமினுள் எட்டிப் பார்த்தார்.
"சுமதி, வரேம்மா" எனவே சுமதி "சரிப்பா" என்றாள்.

Nirmala vandhachu ???
 
சுமதி சௌமியா இப்படி தான் friends ஆனாங்களா. அருமை. கொஞ்சம் பழகிட்டா அழுகை இருக்காது
 
Top