Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 14

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 14

பரீச்சை முடிந்தது.
ரிஸல்ட்டும் வந்தது.
சௌம்யா 1200க்கு 1153 வாங்கி திருநெல்வேலி மாவட்டத்திலேயே முதலாவதாகவும், மாநிலத்தில் நான்காவதாகவும் வந்திருந்தாள். கணக்கில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றிருந்தாள். அதுவும் மாநிலத்திலேயே அவள் ஒருத்தி தான் கணக்கில் செண்டம்.
சௌம்யாவின் அப்பாவுக்கு மறுபடியும் குஷி பிய்த்துக் கொண்டு வந்தது. சௌம்யா போட்டோ வந்த தினத்தந்தி, தினமலரையும் ஊரெங்கும் இலவசமாக விநியோகித்தார். சந்துரு சௌம்யா மார்க் வந்த பேப்பர் செய்தியைப் போட்டு ஒரு நோட்டீஸ் ரெடி பண்ணி ஊரெங்கும் ஒட்டினான்.
சௌம்யாவின் அம்மா மாரியம்மனுக்கு மாவிளக்கேற்றி ஊருக்கே விருந்து கொடுத்து கொண்டாடினாள்.
அன்று, சௌம்யாவின் பள்ளியில் இருந்து கடிதம் வந்தது. அந்த கான்வெண்டிலேயே டிஸ்ட்ரிக் பர்ஸ்ட் எடுத்த முதல் பெண் சௌம்யா என்பதும், ஸ்டேட் ராங்கும் முதல் தடவையாக வாங்கும் மாணவி அவள் தான் என்பதும் அதற்கு ஒரு பாராட்டு விழா கலெக்டர் முன்னிலையில் பள்ளியில் நடைபெற இருப்பதாகவும் தவறாது கொள்ளுமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சௌம்யாவிற்கு விருப்பம் இல்லை. டி ஸி வாங்கும்போது மட்டும் பிரின்சிபல் சிஸ்டரைப் பார்த்து விட்டு அந்த பள்ளிக்கூடத்திற்கே ஒரு கும்பிடு போட்டு வந்து விட வேண்டும் என்று நினைத்தாள்.
ஆனால் அவளது அப்பா ஒத்துக் கொள்ள வில்லை.
'எந்த ஸ்கூல்ல நான் தல குனிஞ்சு நின்னேனோ, அங்க தல நிமிர்ந்து நீ கேடயம் வாங்கறதப் பாக்கணும்.' என்று வற்புறுத்தினார்.
சந்துருவும் அதற்கு ஓகே சொன்னான்.
விழா நடந்த அன்று வழக்கம் போல் ஊரே அங்கு சென்றது.
சுமதியை மறுபடி அங்கு தான் பார்த்தாள்.
ஓடிப் போய் கையைப் பிடித்துக் கொண்டாள்.
'எப்படிடி இருக்க?'
ஒரு சுற்று பெருத்திருந்தாள்.
'பாத்தா தெரியல. மூணு மாசம் லீவா. வீட்லயே உட்காந்து தின்னு தின்னு பருத்துட்டேன். ஆமாம். எங்க அவரு?'
'அங்க பாரு ரெண்டு வரிசை தள்ளி.'
சுமதி பார்த்தாள். சந்துரு முக மலர்ச்சியுடன் அங்கு இருந்தான்.
'எப்படியோ நல்லா இருந்தா சரி. ஒன் அட்ரஸ் குடு. லெட்டர் போடலாம்னா ஒன் அட்ரஸ் தெரியல. வீட்டுக்கு வரலாம்னா அங்க என்ன நெலவரமோ நான் வந்து எதாவது குட்டையை குழப்பிட்டாங்கற பயம்..'
சௌம்யா அட்ரஸ் சொன்னாள்.
குறித்துக் கொண்ட சுமதியைப் பார்த்து சௌம்யா கேட்டாள்.
'ஆமாம். ஒம் மார்க்?'
'ஒன்ன மாதிரி ரேன்க்லாம் இல்லடி. 857 தான்.அப்பா மாப்ள பாத்திட்டிருக்கார். உடனே கல்யாணம் தான். எனக்கு என்ன மொறப்பையனா என்ன'
சௌம்யா வெட்கத்தோடு சிரிக்க,
'லெட்டர் அனுப்புவென். கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும். என்ன. ஒன் கல்யாணம்?'
'எங்க? மாமா டிகிரி படிச்சாதான் கல்யாணம்னு சொல்லிட்டாரு.'
'ம்ம் உங்க மாமாவுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியல. அங்க பார். சிஸ்டர் ஒன்ன கூப்டறாங்க. போ' என சௌம்யா ஹாஸ்டல் வார்டன் சிஸ்டர் அருகில் வந்தாள்.
'கங்கிராஜுலேஷன்ஸ் சௌம்யா' என்று நடந்ததை எல்லாம் மறந்தமாதிரி சிஸ்டர் கை குலுக்க, சௌம்யாவும் 'தாங்க்ஸ் சிஸ்டர்' என்று கை கொடுத்தாள்.
பார்த்த அனைவரும் பகிர்ந்த வாழ்த்துகளுக்கு பதில் சொல்லி சொல்லியே வாய் வலித்த அவளுக்கு கலெக்டரின் வருகை விடுதலை அளித்தது.
எல்லோரும் அமைதியாய் அவரவர் இருக்கையில் அமர, கலெக்டர் மேடை ஏறியதும், விழா துவங்கியது.
கலெக்டர் உரைக்குப் பின் பிரின்சிபல் ஓரிரு வார்த்தை பேசி விட்டு மேடைக்கு கீழ் முன் வரிசையில் அமர்ந்திருந்த சௌம்யாவின் பக்கம் பார்த்தார்.
'அடுத்து நமது மாவட்டத்திற்கு மட்டுமல்ல, நமது பள்ளிக்கும் பெருமை சேர்த்த யாருமே செண்டம் எடுக்காத கணிதத்தில் செண்டம் எடுத்த ஒரே மாணவி என்ற சாதனை படைத்து மேத்ஸ் டீச்சர் சிஸ்டர் ரோஸிக்கு பெருமை சேர்த்த நம் பள்ளி மாணவி செல்வி சௌம்யாவிற்கு இந்த கேடயமும் ரொக்கப்பரிசும் வழங்குமாறு நமது மாவட்ட கலெக்டர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். சௌம்யா மேடைக்கு வரவும்' எனவே பலத்த கர கோஷத்துடன் சௌம்யா மேடை ஏறினாள்.
சந்துரு விசில் அடிக்க, சௌம்யாவின் அப்பாவும், அம்மாவும், அத்தையும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.
'சட்' என்று கலெக்டர் எழுந்து 'கங்கிராஜுலேஷன்ஸ் சௌம்யா. ஆனா நான் இந்த கேடயத்த வழங்கறத விட உங்களுக்கு அருமையா கணிதம் கற்றுக் கொடுத்த சிஸ்டர் வழங்கினா அது தான் நல்லா இருக்கும்' என மைக்கில் கூறி விட்டு தன் இருக்கையில் அமரவே பிரின்சிபல் சிஸ்டர் மைக்கில் பெருமையாக 'சிஸ்டர் ரோஸி மேடைக்கு வரவும்' என அனௌன்ஸ் பண்ண சிஸ்டர் ரோஸி கைத்தட்டலுக்கு நடுவே மேடை ஏறினார்.

சௌம்யா என்ன நினைத்தாளோ, மைக்கின் முன் போய் நின்று 'கலெக்டர் சாருக்கு வணக்கம். இந்த சிஸ்டர் கையால் கேடயம் வாங்க எனக்கு விருப்பம் இல்லை. ப்ளீஸ் வற்புறுத்தாதீர்கள். நீங்கள் தந்தால் வாங்கிக் கொள்கிறேன். இல்லை என்றால் பிரின்சிபல் சிஸ்டர் தரட்டும். நன்றி' என்று சத்தமாய் சொல்லவே, அரங்கமே ஷாக் ஆனது.
 
Nice epi.
Ithu collector ku thevai illatha jolly. Ungala prize kodukka sonna athu maathram seyanum ippadi kanniyasthri ya illathu asinga padutheeteengale sir. Avale kola veriyilla irrukka.
 
சௌமி தன் மறுப்பை சொல்லிட்டாளே ரோசி சிஸ்டர் என்ன செய்வார் :love: :love: :love:
 
Top