Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 7

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 7

முறுக்கு மீசை வாலிபனின் கன்னத்தில் கழட்டிய செருப்பால் ஓங்கி அடித்தாள்.
அவன் 'ஆ' என்று அலற, மற்ற இருவரும் விபரீதத்தை உணர்ந்து கல்யாணியின் கையைப் பிடிக்க வந்தனர். அவர்கள் கன்னங்களிலும் பளீர் பளீர் என அடித்து விட்டு செருப்பை கீழே போட்டு அணிந்து கொண்டாள்.
'இனிம யாரயாவது கிண்டல் பண்ணீங்க... இப்ப செருப்பு. இனிம வெளக்குமாறு தான். பொறுக்கிகளா.' மூவரும் ஷாக்காயி நிக்க கல்யாணி நித்யாவிடம் 'வாடி போலாம். அந்தோணியார் பக்கத்துல இப்படியும் சில கிறுக்குங்க..' என்றாள்.
நித்யா தான் பதறிப் போனாள்.
'ஏண்டி நமக்கு வம்பு?'
'இப்படி எல்லா பொம்பளங்களும் ஒதுங்கிப் போறதால தான் இவனுங்களுக்கு குளிர் விட்டுப் போகுது.'
வீட்டிற்குச் சென்றதும் மேரி டீச்சரிடம் நித்யா சொல்ல, மேரி டீச்சர் கல்யாணிக்கு தான் ஆதரவு தந்தார்.
'சரியா குடுத்த கல்யாணி. இப்படித்தான் ஒவ்வொரு பொண்ணும் இருக்கணும். மாமாட்ட, பாட்டிட்டல்லாம் சொல்ல வேண்டாம். நீயே தண்டன கொடுத்துட்ட. எதுக்கு அவங்க மூலமா மறுபடியும் தண்டன.'
இருவரும் சரி என்பது போல் தலை ஆட்டினர்.
மறு நாள் மாமாவின் கடைக்கு போகலாம் என்று அங்கே சென்றனர். மாமா அத்தைக்கு ஒத்தாசையாய் பொருட்கள் எடுத்து கொடுத்தனர். நித்யா புண்ணாக்கு கொஞ்சம் எடுத்து கல்யாணிக்கும் தந்து இருவரும் கொறித்தார்கள்.
'எள்ளு உருண்ட டேஸ்ட் வருதுல்ல.'
'ஆமாம்.'
அப்போது பழக்கமான வாய்ஸ் கேட்டது.
'அண்ணாச்சி! ரெண்டு லிரில் சோப், நாலு சிக் எக் ஷாம்பு, ரெண்டு கிலோ புண்ணாக்கு குடுங்க.'
இருவரும் நிமிர்ந்தார்கள்.
செருப்படி வாங்கின முறுக்கு மீச!
'என்ன ரவி! வேற ஏதும் வேணுமா?' அத்தை கேட்க, அவன் அப்போது தான் இவர்களைப் பார்த்தான். இவர்களை இங்கு எதிர்பார்க்காததால் முகம் வெளிறியது.
ஓ முறுக்கு மீசைக்கு பேரு ரவியா!
'கல்யாணி! அங்க ஒன் பக்கத்துல தான் லிரில் சோப்பும் சிக் ஷாம்பும் இருக்கு ரெண்டு லிரில், நாலு சிக் எக் எடும்மா.'
'சரிங்க அத்த.'
கல்யாணி அவற்றை எடுக்கத் துவங்க, குளோரி கல்லாவில் இருந்து நித்யாவை முடிக்கினாள்.
'நித்யா! ரெண்டு கிலோ புண்ணாக்கு நிறுத்து கொண்டுட்டு வா!'
நித்யா ரெண்டு கிலோ புண்ணாக்கை எடுத்து நிறுத்து அவன் நீட்டிய மஞ்சப்பையில் போட, கல்யாணி அவற்றோடு சிக் ஷாம்பையும், லிரில் சோப்பையும் போட்டாள்.
அவன் நிமிர்ந்து கூட பாக்காமல் குளோரி கேட்ட பணத்த குடுத்து விட்டு ஓடியே போய் விட்டான்.
விடுமுறை முடிந்ததே தெரிய வில்லை. அனைவரும் ஊருக்குத் திரும்பினர். பாட்டியும் குளோரியும் நித்யாவுக்கு எடுத்த மாதிரியே கல்யாணிக்கும் புதுத் துணிகளும், கவரிங் நகைகளும் எடுத்துத் தந்தனர்.
மறுபடியும் பள்ளி வாழ்க்கை தொடங்கியது.
லீவு முடிந்து அவர்கள் ஊருக்கு வரும்போது அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அவர்களது ஊருக்கு காலை ஒரு தடவை மாலை ஒரு தடவை பஸ் ஓடத் துவங்கி அவர்களது நடைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. என்ன அதுவரும் நேரத்திற்கு போகாவிட்டால் நடை தான். முதலில் கஷ்டமாக இருந்தாலும் பழகி விட்டனர் மாணவ, மாணவியர்.
ஒரு நாள் மாலை கல்யாணியும், நித்யாவும் ஸ்பெஷல் க்ளாஸ் இருந்ததால் பஸ்ஸை மிஸ் பண்ணி விட்டு நடக்கத் துவங்கினர். கொஞ்சம் தூரம் நடந்திருப்பர். ஒரு சைக்கிள் அவர்கள் முன் வந்து நிற்க, அதில் இருந்து இறங்கினான் முறுக்கு மீசை. இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது. இவன் என்ன இங்க? எப்படி?
அவன் மெதுவாக அவர்கள் அருகில் வந்தான்.
கல்யாணி அவனைப் பார்த்து கேட்டாள்.
'என்ன குடுத்தது பத்தலயா?'
அவன் பக்கத்தில் வந்தான்.
'நான் திருப்பி குடுத்துட்டு போகத்தான் வந்தேன்.' என்று சொல்லி விட்டு அவள் தலையைப் பிடித்து பளிச் என்று அவள் இதழ்களோடு தன் இதழ்களைப் பதித்தான். இதனை சற்றும் எதிர்பாராத நித்யா திகைத்து நிற்க, கல்யாணி திமிறுவதற்குள் அவன் அவளை விட்டு நகர்ந்து சைக்கிளில் ஏறி திரும்பிப் பார்த்தான்.
'இது எப்படி இருக்கு?' என்றான்.
கல்யாணி திகைக்க, 'இனி ஆம்பளைங்க கிட்ட வச்சுக்காத' என்று சொல்லி விட்டு சைக்கிளில் ஏறிப் பறந்தான்.
நித்யா கல்யாணி கையைப் பிடித்துக் கொண்டாள்.
'அன்னைக்கே சொன்னேன் கேட்டியா? ரவுடிகள்ட்ட வச்சுக்க வேண்டாம்னு. இப்ப பாரு.'
கல்யாணி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.
'முதல் முத்தம் வாழ்க்கைல யாருக்குமே மறக்காது. ஆசயோட தர வேண்டியது இப்படி முரட்டு முத்தமா போயிடிச்சி. அவன நான் சும்மா விட மாட்டேன்.'
'ஏய்! வேண்டாம்டி. யாரும் பாக்கல. இத மறந்துட்டு நாம நம்ம வேலய பாக்கலாம். இல்லன்னா மறுபடியும் வம்பு வந்து சேரும்.'
'நித்யா! இந்த சனிக்கிழம நாம ரெண்டு பேரும் ஸ்பெஷல் க்ளாஸ்னு சொல்லிட்டு உங்க பாட்டி வீட்டுக்கு போறோம்.'
'அய்யோ. அங்க யாராவது பாத்துட்டாங்கன்னா.'
'ம்ம்ம்.. ஆமால்ல. ஒண்ணு பண்ணலாம். மேத்ஸ்ல டவுட். ப்ராங்ளிண்ட்ட கேட்டுட்டு வரலாம்னு காலைல போயிட்டு சாயந்திரம் வந்திர்லாம்.'
'பயமா இருக்கு கல்யாணி.'
'நீ பயப்படாத. டீச்சர்ட்ட நான் சொல்றென்.'
'சரிடி'
அந்த சனிக்கிழமை காலை இருவரும் நித்யாவின் பாட்டி ஊருக்கு வந்தார்கள். பேருக்கு ஒன்றிரண்டு சந்தேகங்களை பிராங்க்ளினிடம் கேட்டு விட்டு அந்தோணியார் கோவிலுக்குப் போனார்கள். அவர்கள் நினைத்த மாதிரியே அந்த முக்கில் அந்த மூவர் அணி நின்றிருந்தது.
கல்யாணி அவர்களை நெருங்கினாள். ரவி மீசையை முறுக்கிக் கொண்டு சிரித்தான்.
'இப்ப என்ன?' என்றான்.
'ஒன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். அந்த குட்டி சுவர் பக்கம் வா'என்றாள்.
மத்த இருவரும் 'ரவி, வேண்டாம். இவ ராங்கி. ஏதாச்சும் பண்ணிருவா.' என் பயமுறுத்த, அவன் தைரியமாய் 'ஒரு தடவ கை வச்சதுக்கே என்ன நடந்ததுன்னு அவளுக்கு தெரியும்ல. என்ன தான் பண்றான்னு பாப்போம். ஜோக் பாத்தீங்களாடா! ஒரு குட்டி குட்டி சுவருக்கு கூப்புடுது' என்று சிரித்துக் கொண்டே அவளுடன் அந்த குட்டி சுவரை நோக்கி நடந்தான்.
நித்யா குட்டி சுவருக்கு சற்று தள்ளி நின்று கொள்ள, ரவியின் நண்பர்கள் இருவரும் தூரமாய் நின்று என்ன நடக்கிறது என்று பார்க்க, கல்யாணி ரவியிடம் ஏதோ சொல்லுவது தெரிந்தது. ஆனால் யாருக்கும் கேட்கவில்லை. அவள் சொன்னது:
'இங்க பாரு. ஒன் மனசாட்சிய தொட்டுப் பாரு. நீ மொத தடவ கேலி பண்ணப்ப நான் பாட்டுக்கு பேசாம போனென். ரெண்டாவது தடவ இரட்ட அர்த்ததுல பாடுன ஒடனே தான் கோபப்பட்டு அடிச்சேன்.'
'அதான் தெரியுமே. சரி கிஸ் எப்படி இருந்தது?'
கல்யாணி முறைத்தாள்.
'ஒம் பேரு ரவிங்கறது தெரியும். அப்பா என்ன பண்றாங்க? நீ படிச்சிருக்கியா? என்ன வேலைக்குப் போற?'
அவன் ஒரு நிமிடம் குழம்பினான். என்ன இதெல்லாம் கேக்குறா? வீடு தேடி வந்து மானத்த வாங்கப் போறாளோ! அப்படி பண்ணா எந்த எல்லைக்கும் போவேன்னு இவளுக்குத் தெரியாமலா இருக்கும்?
'அப்பா துணிக்கட வச்சிருக்கார். நான் காலேஜ்ல பி.காம். செகண்ட் இயர் படிக்கிறேன். ஆமாம். இந்த டீடெய்ல்ஸ்லாம் எதுக்கு கேக்கற?'
'ஏதாவது கெட்ட பழக்கம்? சிகரெட், தண்ணி அப்படி இப்படின்னு?'
'சிகரெட், தண்ணிலாம் கிடயாது. பொண்ணுங்கள சைட் அடிக்கிறது, கிண்டல் பண்றது பொழுதுபோக்கு. ஆமாம். ஏன் இதெல்லாம் கேட்கற?'
'ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கப்பட்டு தான் எங்கம்மா சீரழிஞ்சி நிக்கறாங்க. நான் கொஞ்சம் சுதாரிப்பா இருக்க வேணாம். நான் என்னப் பத்தி சொல்றேன். எங்கப்பா எங்க அம்மாவ விட்டு ஓடிப் போயிட்டாரு. அம்மா என்ன காப்பாத்தறதுக்காக எங்க ஊரு பண்ணயாரு கூட கொஞ்ச நாள் இருந்தாங்க; இப்ப இல்ல. அதோ அந்த நித்யா இருக்காள்ல. அவன்னா எனக்கு உசிரு. அவங்க அம்மா, அப்பா எனக்கு அந்த அந்தோணியார் மாதிரி. எனக்கு ஒன்ன பிடிச்சிருக்கு. ஒனக்கும் என்ன பிடிச்சிருந்தா நாளைக்கு எங்க ஊர்ல என்ன எங்க பாத்தியோ அங்க நாளைக்கு வா. பிடிக்கலன்னா வர வேண்டாம். நான் தற்கொல எல்லாம் செஞ்சுக்க மாட்டேன். எனக்கு குடுத்து வச்சது அவ்ளொ தான்னு நெனச்சு என் வழியப் பாக்க போயிருவேன்.'
ரவி கேட்பதெல்லாம் நிஜமா என்ற சந்தேகத்தில் அதிர்ந்து போயி நிற்க மீண்டும் வாய் திறந்தாள் கல்யாணி.
'அப்புறம் இன்னொரு விஷயம். எதயும் திருப்பிக் கொடுத்து தான் எனக்கு பழக்கம். பிடிக்குதோ பிடிக்கலயோ வாங்கிக்கோ' என்று தன் இதழ்களைக் குவித்து அவன் மீசையுடன் சேர்ந்த மேல் முதட்டில் அழுந்த முத்தமிட்டாள்.
தூரத்தில் இருந்து இதைக் கண்ட அவனது நண்பர்களும், நித்யாவும் மின்சாரம் பாய்ந்தது போன்று சிலை ஆயினர்.

(தொடரும்)


 
Shocking epi.
Ippadi oru twist ethirparkala.
8 th std girl B.Com 2nd year boy randu ennamum ...Toooo much.
Gaani thunbathai kandu othungukiran nu niyamam theriyatha kalyani??
If a dog barks we should not react for tht.
 
கல்யாணி ஏதோ அவனை செய்ய போறான்னு தோணுது. ஆனா முத்தம் தான் இடிக்குது
 
Top