Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 3

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 3

தேளைக் கண்டதும் டக் என்று நித்யாவின் கையை தட்டி விட்டாள் கல்யாணி. தேள் கல்யாணியின் கையில் தன் கொடுக்கை வைத்து ஒரு கொட்டு கொட்ட'ஆ' என்று கையை பின்னால் எடுத்த கல்யாணி ஆத்திரம் தாங்காமல் பக்கத்தில் கிடந்த கல்லை எடுத்து வேகமாய் ஓடிக் கொண்டிருந்த தேளின் தலையில் அதைப் போட்டாள். தலை நசுங்கி கொடுக்கு மட்டும் ஒரு நிமிடம் ஆடி அடங்கியது.
நடந்ததெல்லாம் கண்டு ஒரு நிமிடம் ஷாக் ஆன நித்யா, 'அம்மா! தேளு.' என்று கத்தினாள்.
ராணி படித்துக் கொண்டிருந்த மேரி டீச்சர் 'எங்கடி?' என்றபடி அவர்கள் அருகில் ஓடி வந்தார்.
நித்யா செத்துக் கிடந்த தேளை அவருக்குக் காட்டியதுடன், 'என்ன தாம்மா கொட்ட வந்துச்சு. இவ என் கைய இழுக்கும்போது அவ கைல கொட்டிருச்சு.' என்றாள்.
அதிர்ந்த மேரி டீச்சர் கல்யாணியின் கையைப் பார்த்தாள். கடி வாயில் லேசாய் கொடுக்குத் துகள் இருந்தது. தாலிக் கொடியில் இருந்த ஊக்கை எடுத்து கடிவாயில் இருந்த கொடுக்குத் துகளை எடுத்தார். நித்யாவிடம் 'ஓடிப் போயி பக்கத்து வீட்டு பாட்டிட்ட அம்மா கொஞ்சம் சுண்ணாம்பு கேட்டாங்கன்னு வாங்கிட்டு வா.' என்று சொன்னாள்.
நித்யா ஓடிப்போய் ஒரு பனை மட்டையில் சுண்ணாம்போடு வந்தாள்.
அதை எடுத்து கடிவாயில் கொஞ்சம் தடவி விட்டார் மேரி.
தேளின் விஷம் ஏற மெதுவாய் அரற்றினாள் கல்யாணி.
வாசலில் சைக்கிள் வந்து நிற்கும் சப்தம் கேட்க, எழுந்தார் மேரி.
ஜேம்ஸ் உள்ளே வந்து கொண்டிருந்தார்.
வாசலுக்கு கல்யாணியை இழுத்துக்கொண்டு ஓடினார் மேரி டீச்சர்.
சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு பூட்டி விட்டு உள்ளே வந்த ஜேம்ஸிடம் நடந்ததைச் சொன்னார் மேரி.
'அப்படியா! இங்க வாம்மா!' என்று கடிவாயைப் பார்த்தவர் 'நான் எதுக்கும் பக்கத்து ஊர் டாக்டர் வெங்கட்ராம பாத்துட்டு வந்துர்றென். நீ இந்தப் பொண்ணு வீட்டுக்கு போய் அவங்க அப்பா அம்மாட்ட விஷயத்த சொல்லி முடிஞ்சா வெங்கட்ராம் க்ளினிக்குக்கு வரச் சொல்லு' என்றார்.
மேரி டீச்சர் எப்படி சொல்வது எனத் தயங்கி பின்னர் 'நீங்க டாக்டரப் பாத்துட்டு வர நைட்டாயிரும். நான் அவங்க வீட்ல விஷயத்த சொல்லி இவ நைட் இங்க தான் தங்குவான்னு சொல்லிட்டு வந்துர்றென். மத்தத அப்புறம் பேசிக்கலாம்.' என்றார்.
ஜேம்ஸுக்கு எதுவும் புரியா விட்டாலும் புள்ளயை டாக்டருக்கு கூட்டிப் போவதே முதல் விஷயம் என்று மனதில் பட்டதால் கல்யாணியை அழைத்துக் கொண்டு சைக்கிள் பக்கம் வந்தார். பூட்டை விடுவித்து கேரியரில் கல்யாணியை உட்கார வைத்து விட்டு ஸ்டாண்டை விடுவித்து பக்கத்து ஊரைப் பார்க்க சைக்கிளை மிதித்தார்.
மேரி டீச்சர் வீட்டைப் பூட்டிக்கொண்டு நித்யாவை கூட்டிக் கொண்டு கல்யாணியின் அம்மாவைப் பார்க்க விரைந்தார். ஆறே தெருக்கள் கொண்ட சிறிய கிராமம் அது. சுற்றிலும் விவசாய பூமி. தென்னந்தோப்புக்காரர்கள் அங்கேயே வீடு கட்டி குடி இருந்தனர். சில பணக்காரர்கள் தோப்புக்குள்ளேயே தோப்பில் வேலை செய்பவர்களுக்கு குடிசை வைத்துத் தந்திருந்தனர். அப்படி ஒரு தோப்பில் தான் குடியிருந்தாள் கல்யாணியின் தாய் முத்தம்மாள்.
பள்ளியில் படிக்கும் ஒரு அஞ்சாம் க்ளாஸ் பெண்ணிடம் கல்யாணியின் வீட்டை விசாரித்து தோப்பை கண்டுபிடித்து அங்கு ஒரு ஓரமாய் இருந்த குடிசையை நெருங்கினார் மேரி நித்யாவுடன்.
வாசலில் நின்று 'கல்யாணி' என்று கத்தினார்.
ஒரு மெலிந்த கருத்த ஆனால் களை மிகுந்த பெண் ஒருத்தி வெளியே வந்தாள். தூக்கி இருந்த முடிக்கற்றைகளை இடது கையால் தணித்து கொசுவத்தை இடுப்பில் செருகிக் கொண்டு 'யாரு?' என்றவாறு வந்தாள்.
'நீங்க கல்யாணியோட அம்மாவா?'
அவள் ஒரு நிமிடம் யார் இவள் என்று யோசித்துக்கொண்டே 'ஆமா. நீங்க?' என்றாள்.
'நான் கல்யாணியோட டீச்சர்.'
உடனே ஒரு மரியாதை வந்து அவளின் உடல்மொழியில் வந்து உட்கார்ந்து கொண்டது. சேலையை முட்டின் கீழ் இறக்கி விட்டு 'வாங்க டீச்சர். கல்யாணி இன்னும் வரல்லயே! உள்ள வாங்க' என்றாள்.
'பரவால்ல. கல்யாணிக்கு தேள் கொட்டிடிச்சி..'
'என்னது! என்ன டீச்சர் சொல்றீங்க?' அவள் முகம் மாறி அழுதுவிடுவாள் போலிருக்கவே மேரி டீச்சர் நடந்ததைச் சொல்லி 'சார் டாக்டர்ட்ட கூட்டிட்டு போயிருக்காங்க. அவ இன்னைக்கு எங்க வீட்ல இருந்துகிட்டும். நாளைக்கு எங்க வீட்ல இருந்து நானே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போயிட்டு சாயந்திரம் வரச் சொல்றேன்.'
அவள் கையெடுத்து கும்பிட்டாள்.
'அந்தப் பாழாப் போன பய விட்டுட்டுப் போன நாள்ல இருந்து கஷ்டம் தான் டீச்சர். இவ ஒருத்திக்காகத்தான் நான் உசிரோட இருக்கேன். இல்லன்னா என்னைக்கோ அரளி வெதய அரச்சி சாப்ட்ருப்பேன். பேச்சுல, பாட்டுல ஜெயிச்சிட்டேன்னு ஏதேதோ பேப்பர் கொண்டு வருவா. டம்ளர், கிண்ணம், ஏன் குடம் கூட ஒரு தடவ கொண்டு வந்தா. பேச்சியம்மன் தான் அவளக் காப்பாத்தணும். நான் அவளுக்கு மாவெளக்கு போடறென். நீங்க அவளப் பாத்துக்கங்க டீச்சர். அந்த பேச்சி தான் ஒங்க ரூபத்துல வந்திருக்கா'
'அய்யோ! பெரிய வார்த்தலாம் சொல்லாதீங்க. என் பொண்ண காப்பாத்த போயி அவ வலியில வேதனப்படறாளேன்னு எனக்கு கஷ்டமா இருக்கு. நான் கர்த்தர்ட்ட அவளுக்கும் சேர்த்து வேண்டிக்கிறென். இனி எனக்கு ரெண்டு புள்ளைங்க. இந்த நித்யா அப்புறம் ஒங்க கல்யாணி. அதனால அவளப் பத்தி நீங்க கவலப்படவே வேணாம். எம் புள்ள மாதிரி நான் அவள கவனிச்சுக்கறென்.'
முத்தம்மாள் மறுபடியும் கும்பிட்டாள்.
'படிச்சவக படிச்சவகதான். என்ன இந்த ஊர் பேசற பேச்ச பெருசா நெனக்காம என்னயும் மனுஷியா மதிச்சு வந்து இம்புட்டு தூரம் வந்து நடந்தத சொல்லி மன்னிப்பு கேட்கறீங்களே! நீங்களும் ஒங்க புள்ளயும் நல்லா இருப்பீங்கம்மா. எம் புள்ளய நல்லா படிக்க மட்டும் வச்சுருங்கம்மா. வேற எதுவும் எனக்கு வேணாம்.'
'இனி எனக்கு நித்யா வேற கல்யாணி வேற இல்ல. நான் வர்றென்.'
விடை பெற்றுக் கொள்ள, முத்தம்மாள் கண்களில் வழியும் கண்ணீரோடு விடை கொடுத்தாள்.
இவர்கள் வீடு போய்ச் சேர்ந்த கொஞ்ச நேரத்தில் ஜேம்ஸ் கல்யாணியுடன் வந்தார்.
அவளை சைக்கிளில் இருந்து இறக்கி வீட்டினுள் கூட்டி வந்தார். மேரி டீச்சர் கல்யாணியை ஆதுரத்துடன் அணைத்தவாறு கேட்டார்.
'என்னங்க சொன்னாங்க?'
'பயப்பட வேணாம்னு சொல்லி கல்யாணிக்கு ஒரு இஞ்சக்ஷன் மட்டும் போட்டாரு. ரெண்டு மாத்திர தந்திருக்காரு. காச்சல் வந்தா தரச் சொல்லி இருக்காரு. ரெண்டு இட்லி தரச் சொன்னார். காலைல சரியாயிரும்னாரு.'
சட்டையைக் கழற்றி ஹாங்கரில் போட்ட ஜேம்ஸ் பின்னால் சென்று கால், கை முகம் கழுவி வந்தார்.
பின்னர் ஹாலில் வந்து ஹிண்டு பேப்பரோடு உட்கார்ந்தார்.
'கல்யாணி! நான் உங்கம்மாட்ட சொல்லிட்டேன். நாளைக்கு சாயந்திரம் நீ வீட்டுக்குப் போனா போதும். இன்னைக்கு இங்கேயே தங்கிக்கலாம்.'
கல்யாணி மெதுவாகத் தலை ஆட்டினாள்.
சுடச்சுட இட்லி ரெண்டு சாப்பிட்டு விட்டு பாயில் நித்யாவும், கல்யாணியும், மேரி டீச்சரும் படுக்க, ஜேம்ஸ் முன் அறையில் பாய் விரித்து படுத்துக் கொண்டார். கல்யாணிக்கு முதலில் தூக்கம் வர வில்லை. பின்னர் மருந்து வீரியத்தில் மெதுவாக கண் அசந்தாள். மேரி டீச்சர் இடை இடையே எழுந்து கல்யாணியின் கழுத்தில் கை வைத்துப் பார்த்தார்.
காலையில் கல்யாணி கண் முழித்து வலி எல்லாம் இல்லை என்று சொன்னதும் தான் நிம்மதி வந்தது மேரி டீச்சருக்கு.
பிரஷ் பயன்படுத்தி பழக்கம் இல்லாததால் கோபால் பல்பொடி தந்தாள் நித்யா அவளுக்கு.
பல் விளக்கி குளித்து நித்யாவின் யூனிஃபார்ம் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு இரண்டு பேரும் கிளம்பி விட்டார்கள்.
'நீங்க ரெண்டு பேரும் முன்னால போங்க. நானும் சாரும் வரோம்.'
'சரிம்மா'
நித்யாவும், கல்யாணியும் கை கோர்த்து பேசியவாறே நடக்க, கணவனுக்கு டிபன்பாக்ஸை எடுத்து வைத்தவாறே கல்யாணியைப் பற்றியும், தான் கல்யாணியின் அம்மாவிடம் சொன்னது பற்றியும் சொன்னார் மேரி டீச்சர். ஜேம்ஸ் சார் உச் கொட்டியபடியே 'சரிம்மா. நமக்கு இனி ரெண்டு பொண்ணுங்க' என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுக்க, மேரி டீச்சர் கதவைப் பூட்டிக் கொண்டு வந்தார். இருவரும் சைக்கிளில் ஸ்கூல் நோக்கி பயணப்பட்டனர். மேரி டீச்சரை ஸ்கூலில் இறக்கி விட்டு விட்டு ஜேம்ஸ் சார் அவரது ஸ்கூலை நோக்கி சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார்.
அடுத்து வந்த இரண்டு தினங்களில் கல்யாணியும் நித்யாவும் மிகவும் நெருங்கிப் போயினர்.
கதை கேட்ட மிட்டாய் பாட்டி 'அப்படியாம்மா. நீ இன்னொரு அஞ்சி பைசா தர வேணாம். நான் குடுத்ததா சொல்லி இத அந்தப் புள்ளைக்கு குடு.' என்று இன்னொரு டம்ளரில் அளக்காமல் நெல்லிக்காயை அள்ளித் தந்தார். பாவாடையில் அதைப் பிடித்து சுருட்டி வைத்துக் கொண்டு 'வரேன் பாட்டி' என்றவாறு நித்யாவை நோக்கி ஓடினாள் கல்யாணி.
ரெண்டு வருடங்களில் அவர்களது நட்பு அவர்களைப் போலவே வளர்ந்தது.
ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு சேர்வது பற்றி பேசும்போது கல்யானி சொன்னாள்.
'டீச்சர்! நீங்க பயப்படாம நித்யாவ எங்கூட அனுப்புங்க டீச்சர். ஒண்ணர மைல் தான. இந்த ஊருப் புள்ளைங்களொட நாங்களும் நடந்து போய் படிக்கிறோம்.'
'இல்லம்மா! ஒரு அர மைல் காடா இருக்கும். பயமா இருக்கும்மா.'
'பயப்படாதீங்க டீச்சர். இந்த ஊர்ல இருந்து கொஞ்சம் அண்ணன்களும் அங்க பத்து, பன்னண்டு படிக்கிறாங்க. அவங்க பின்னாலயே போறோம். அவங்க உதவி பண்ணுவாங்க.'
மேரி டீச்சர் பக்கத்து டவுனுக்கு வீடை மாற்றி விட்டு தான் மட்டும் இங்கு நடந்து வரலாமா என்று யோசித்தார். பின்னர் ஆலோசனை செய்து பணிமாற்றம் கிடைக்கும் வரை கல்யாணியுடன் நித்யா போகட்டும் என்று முடிவுக்கு வந்தார்.
இருவரும் அந்த மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தனர். அவர்கள் ஊரில் இருந்து அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளோடு சேர்ந்து பள்ளிக்குப் போவதும் வருவதுமாய் இருந்தனர்.
ஒரு நாள்...
நித்யா சுதந்திர தின விழாவிற்கு நடன நிகழ்ச்சிக்கு தேர்வாகி இருந்தாள். பிராக்டீஸ் பள்ளி நேரம் முடிந்து அரை மணி நேரம் தொடர்ந்தது. கல்யாணி காத்திருந்த மற்ற மாணவ மாணவிகளை அனுப்பி விட்டு அவள் மட்டும் நித்யாவிற்காக காத்திருந்தாள். சங்கே முழங்கு பாடலுக்கு மாணவிகள் நடனமாடி முடிக்க டீச்சர் அவர்களை அனுப்பி வைத்தார்.
மணி ஐந்தாகி விட்டது.
இருவரும் விறு விறு என்று வேக நடை போட்டு ஊரைப் பார்க்க விரைந்தனர். அந்த அரை மைல் காடு நெருங்கியது. எங்கிருந்தோ சட சட என்று மழை வானத்தைப் பிளந்து கொட்ட ஆரம்பித்தது.
ஒரு ஓரமாய் இருந்த ஆலமரத்தின் அடியில் இருவரும் ஒதுங்கினர்.
வானம் கரு கரு என்று இருட்ட மின்னல் சரேல் சரேல் என்று வெட்ட மழை இப்போது ஓயாது போல் இருந்தது.
கொஞ்சமே கொஞ்சம் வெளிச்சம் இருந்தது.
அவர்கள் ஒதுங்கி இருந்த மரத்தின் மேல் இருந்து ஒரு உருவம் மெல்ல இறங்கி அவர்களின் எதிரே தொம் என்று குதித்தது.

(தொடரும்)

மேரி மட்டும் இல்லாமல் ஜேம்சு்ம் நமக்கு இரு பெண்கள் என சொல்வது அருமை. கல்யாணியம்மா மகளை மேரிட்ட விட்டுட்டு மேலுலகம் போய்டுவாங்களோ...
கடைசியில் என்னதிது ஆத்தரின் வில்லத்தனம் ஆரம்பமாகிடுச்சா . பாவம் சிறு பிள்ளைகள்.
என்னாகுமோ
 
Nirmala vandhachu ???
 
Top