Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 2

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 2

வீட்டில் சாப்பிட்டு முடித்து மேரி டீச்சர் நித்யாவிற்கு கெட்ட குமாரன் கதை சொல்லிக் கொண்டிருந்தார். கணவர் ஜேம்ஸ் பக்கத்து ஊர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். வராந்தாவில் ஈஸி சேரில் உட்கார்ந்து ஹிண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.
நித்யா கேட்டாள்.
'டீச்சர்! எனக்கு ஒரு சந்தேகம்.'
மெல்ல அவளது மண்டையில் குட்டினாள் மேரி.
'ஆமாம். ஸ்கூல்ல அம்மான்னு கூப்பிடு. இங்க டீச்சர்னு கூப்புடு.'
'சாரிம்மா.'
'சரி. சந்தேகத்த சொல்லு.'
அம்மாவின் மடியில் தலையை சாய்த்துக் கொண்டாள். மேரியின் கைகள் அவளது கூந்தலை வருடித் தந்தன.
'மொத பையன் நல்ல பையன். அப்பா சொன்னதயெ கேட்டு அப்பாவுக்கு புடிச்ச மாதிரி இருக்கறான். அவனுக்கு ஆடு வெட்டி சாப்பாடு போடாத அப்பா பணத்த செலவழிச்சு கெட்ட பையனா திரிஞ்சு பன்னி மேச்சு அப்பாவத் தேடி வர்ற இளைய மகனுக்கு கறி சாப்பாடு போட்டு சந்தோஷப் படறாரெ! இது தப்பில்லையா?'
சிரித்தாள் மேரி.
'இல்ல.மனிதர்கள் தவறு செய்றது சகஜம். ஆனா செய்த தப்புல இருந்து மீள்றது பெரிய விஷயம். மூத்த குமாரன் நல்லவன் தான். ஆனா இளைய குமாரன் தவறு செஞ்சி திருந்தி திரும்புறவன். அந்த திருந்துன நல்ல விஷயத்த போற்றத்தான் அப்பா அவன அப்படி வரவேற்கறார். அடுத்தவங்க தவறுகள ஒணர்ந்து திருந்திரப்ப அத மன்னிச்சு ஏத்துக்கணும்னு தான் பைபிள் சொல்லுது.'
நித்யாவின் நினைவில் விமலா சொன்னது நியாபகம் வந்தது.
'அம்மா! நம்ம க்ளாஸ்ல கல்யாணி இருக்காள்ல?'
'ஆமா. வாய்பாடு திக்காம சொன்னாள்ல அவ தான?'
'ம்! அவ அம்மா கெட்ட பொம்பளயாம்.'
'யாரு சொன்னா?'
'விமலா. கெட்ட பொம்பளன்னா என்னம்மா?'
மேரி திடுக்குற்றாள்.
எப்படி சொல்லி புரிய வைப்பது? ஒரு கணம் யோசித்து விடை பகன்றாள்.
'அது நித்யா. நம்ம மக்கள் இப்படித் தான் வாழணும்னு வச்சிருப்பாங்க. அத மீறி சிலர் செயல்படறப்ப அவங்கள கெட்டவங்கன்னு சொல்லுவாங்க. மத்தவங்க சொல்றத வச்சு யாரயும் எட போடக் கூடாது. நாம தீர விசாரிச்சு தெரிஞ்சுக்கணும். வள்ளுவர் 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.' அப்படின்னு ஒரு குரள்ல தீர விசாரிக்கணும்னு சொல்லி இருக்காரு. நான் விசாரிச்சு சொல்றேன். அதுக்கும் மேல அவள ஒனக்குப் புடிச்சிருந்தா நீ ப்ரெண்டா ஏத்துக்க. பழகிக்க. அவங்க அம்மா அப்படியே கெட்ட மனுஷியா இருந்தாலும் இந்தப் பொண்ணு என்ன செய்யும், பாவம்'
'நீ தானம்மா சொல்லுவ. கெட்ட புள்ளங்க கூடல்லாம் சேரக்கூடாதுன்னு.'
மகளின் அறிவுத்தனமான விவாதத்தை நினைத்து மகிழ்ந்து கொண்டே பதில் சொன்னாள் மேரி.
'ஆமாம்மா. ஆனா கல்யாணி கெட்ட புள்ளயா இல்லயாங்கறது தெரிஞ்சுக்கணும் இல்லயா? தெரியாம ஒருத்தர் சொன்னாங்கங்கறதுக்காகவோ, அந்த பொண்ணோட அம்மா கெட்ட மனுஷிங்கறதுக்காகவொ அவளோட பழகாம இருந்தா அந்தப் பொண்ணு மனசு கஷ்டப்படும் தான?'
'எனக்கு அவளப் புடிச்சிருக்கும்மா.'
'அப்ப ப்ரெண்ட்ஷிப் வச்சுக்க. அந்தப் பொண்ணு நல்லா படிக்கும்னு நெனக்கறென். தப்பான பழக்கங்கள் இருந்தாலும் நம்ம அவள திருத்திரலாம். சரி வா படுக்கலாம்.'
நித்யாவின் கனவில் அவளும் கல்யாணியும் கெட்ட குமாரன் கதையில் நல்ல குமாரனாக நித்யாவும், கெட்ட குமாரனாக கல்யாணியும் கிறிஸ்துமஸ் விழாவில் நடிப்பது போல் வந்தது.
மறு நாள் பள்ளியில் ஆசிரியர்கள் ஓய்வறை.
அம்பது வயது தாண்டிய ஆசிரியை ரஞ்சிதத்திடம் அதைக் கேட்டாள் மேரி.
'டீச்சர்! அந்த மூணாம் க்ளாஸ் படிக்கிற கல்யாணி நல்லா படிப்பா தான?'
தலை நரைத்து கண்ணாடி போட்டுக் கொண்டு குமுதத்தில் வரும் தொடர்கதையைப் படித்துக் கொண்டிருந்த ரஞ்சிதம் நிமிர்ந்தார்.
'ஆமாம். பரவா இல்லயே. வந்த நாளே புள்ளங்களப் பத்தி கெஸ் பண்றியே? குட்.'
மேரி எப்படி கேட்பது என்பது போல் தயங்கி பின்னர் கேட்டாள்.
'என் பொண்ணு அந்த க்ளாஸ் தான் படிக்கிறா. அவ கூட ப்ரெண்டா இருக்கட்டுமான்னு கேட்டா?'
'கேட்டுட்டா ப்ரெண்ட்ஸிப் வைக்கறது?'
'அப்படி இல்ல டீச்சர். நான் அவ கூட ப்ரெண்ட் ஆயிட்டேன். ஆனா கூட படிக்கிற புள்ள அந்தப் பொண்ணொட ஃபாமிலி பத்தி ஏதோ சொல்ல இவ என்கிட்ட வந்து கேட்டா?'
'கூட படிக்கிற புள்ள என்ன சொன்னாளாம்?'
என்ன இது. அதை சொல்வதை தவிர்க்கலாம் என்றால் சொல்ல வற்புறுத்துகிறாரெ!
'அந்தப் பொண்ணோட அம்மா கொஞ்சம் சரி இல்லன்னு சொன்னாளாம்.'
குமுதத்தை மூடி வைத்து விட்டு நிமிர்ந்து அமர்ந்தார் ரஞ்சிதம்.
'மேரி. நீ அதுக்கு என்ன சொன்ன?'
'எதயும் ஆராயாம முடிவு பண்ணக் கூடாதுன்னு சொன்னேன்.'
'ரொம்ப சரி. அந்த கல்யாணியோட அப்பா ஒரு குடிகாரன். இவ பொறந்து கொஞ்ச நாள் கழிச்சு ஓடிப் போயிட்டான்.
இவ இந்தப் பிள்ளய வச்சு கஷ்டப்பட்டா. இந்த ஊரு பண்ணையார் கண்ணுல பட்டா. வேலி இல்லாத நிலத்துக்கு பட்டா போட்டுட்டாரு அவரு. ஊர் எல்லாம் தெரிஞ்சது தான். தன் பாதுகாப்புக்கும் தன் பிள்ளயோட வாழ்க்கைக்காகவும் ஒத்துகிட்டதா சொல்லி அழுதா. என்ன பண்றது? ஒவ்வொருத்தர் வாழ்க்க ஒவ்வொரு மாதிரி. எம் புள்ளய நல்லா படிக்க வைக்கணும் டீச்சர்னு அழுவா.'
ரஞ்சிதம் ஒரு நிமிடம் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்.
'இது கிராமமா. ஊர் எல்லாம் தெரிஞ்சதுனால அவ கூட ஒருத்தரும் வச்சுகிட மாட்டாங்க. சின்ன புள்ளைங்கள்லாம் கல்யாணிய வெளயாட்டுல சேத்துக்க மாட்டாங்க. ஆனா புள்ள ப்ரில்லியண்ட். தன்னோட கவனத்த கத புஸ்தகங்கள் மேல திருப்பிட்டா. இந்த வயசுலேயே பக்கத்து வீட்ல வாங்கற தேவில வர்ற தொடர்கத படிக்கிறான்னா பாரேன். கூப்புட்டு இந்த வாரம் என்னாச்சுன்னு கேட்டா அப்படியே சொல்லுவா. நல்ல மரியாதயான பொண்ணு. என்ன டீச்சர் பண்ணனும்னு என்ன உதவி கேட்டாலும் செய்வா. ஒரு நாள் தலைய வலிக்குதுன்னு கவுந்துருந்தேன்னா எங்கேருந்தோ யூகலிப்டஸ் தைலம் வாங்கிட்டு வந்து தேச்சு விட்டா.'
மேரி நித்யாவின் சாய்ஸ் நல்ல சாய்ஸ் தான் என்று பெருமூச்சு விட்டாள்.
அன்று இடைவேளையின் போது...
விமலா மறுபடியும் கல்யாணி கூட நின்று குழந்தைகள் கிச்சி கிச்சி தாம்பாளம் விளயாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நித்யாவின் பக்கம் வந்தாள்.
'ஏ நித்யா. நேத்தே இவ கூட சேராதேன்னு சொன்னேன்ல?'
நித்யா அவளை முறைத்தாள்.
'நான் அப்படி தான் சேருவேன்.'
'அப்புறம் நாங்க யாரும் ஒன்ன வெளயாட்டுல சேத்துக்க மாட்டோம்.' என அவள் பின் நின்ற ஒரு நாலஞ்சு பிள்ளைகள் கூட்டம் ஆமாம் சாமி போட்டன.
நித்யா 'அதான் கல்யாணி இருக்காள்ல. நான் அவ கூட வெளயாண்டுட்டு போறேன்.' என்றாள்.
'நீ அந்த கெட்ட புள்ள கூட சேந்தின்னா ஒன்னயும் கெட்ட புள்ளன்னு சொல்லுவோம்.'
நித்யா கல்யாணி பக்கம் வந்து அவள் தோள்பட்டையை அணைத்துக் கொண்டு 'சொன்னா சொல்லிக்கோ. ஜீசஸ் ஒன்ன தான் கண்ண குத்துவாரு.' என்றாள்.
கல்யாணி அதிர்ச்சியுடன் தன் தோள் மீது விழுந்த நித்யாவின் கையையும் அவளது முகத்தையும் பார்த்தாள்.
'என்ன கல்யாணி? நீ எனக்கு பிரண்டு தான?' சிரித்த நித்யாவின் கையை இறுகப் பிடித்தாள் கல்யாணி.
'ஆமாம் நித்யா. நீ எனக்கு பிரண்டு தான். யாராவது நித்யா மேல கை வை பாப்போம். பின்னிப் போடுவென்.' விமலாவின் கூட்டத்தை மிரட்டினாள்.
'ஆமாம். பின்னினா நாங்க பூ வச்சுக்குவோம்.' என விமலா சொல்ல, மற்ற சிறுமிகள் கொல் என்று சிரித்தனர்.
கோபம் முகத்தில் படர கல்யாணி ஏதோ சொல்வதற்குள் நித்யா அவளை இழுத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் போனாள்.
'வேண்டாம் கல்யாணி. அவங்க கூட பேசாத. இன்னைக்கு சாயந்திரம் எங்க வீட்டுக்கு வா. நாம கேரம் வெளயாடலாம்.'
'கேரம்னா?'
'ஓ நீ கேரம் வெளயாண்டதில்லயா? வா ஜாலியா இருக்கும். நான் சொல்லித் தர்றென்.'
கல்யாணி சரி என்று தலையாட்ட, அன்று பள்ளி முடிந்ததும் புத்தகப் பையோடு நித்யாவின் வீட்டுக்குப் போனாள் கல்யாணி.
மேரி டீச்சர் கதவைத் திறந்து இவர்களோடு உள்ளே நுழைந்தார். ஜேம்ஸ் பக்கத்து ஊர் என்பதால் வர லேட் ஆகும்.
மேரி டீச்சரும் அவளை வரவேற்றார்.
'வா கல்யாணி. உள்ள வா.'
கல்யாணி ஒரு வித மிரட்சியுடன் உள்ளே நுழைந்தாள். சின்ன ஓட்டு வீடு தான் என்றாலும் படு சுத்தமாக இருந்தது. பேப்பர் மடித்து வைக்கப்பட்டு இருந்தது. ஹாலில் சேர்கள் ஒழுங்காய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காலண்டரில் ஜீசஸ் ஆணியில் அறைந்த நிலையில் 'உனக்காகத்தான் மகளே' என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார். 'நானே வழியும் ஜீவனும் சத்தியமுமாய் இருக்கிறேன்' என்ற பைபிள் வாசகம் ஒரு மரப்பலகையில் அழகிய டிசைனில் எழுதப்பட்டு மாட்டப்பட்டிருந்தது.
'பின்னால போய் ரெண்டு பேரும் கை கால் முகம் கழுவிட்டு வாங்க.' என்றார் மேரி.
'வா கல்யாணி' என்று பின்னால் அழைத்துச் சென்றாள் நித்யா.
ஹாலுக்கு அப்புறம் பெட் கட்டிலுடன் ஒரு ரூம். அதற்குப் பிறகு பீரோ வச்சு ஒரு ரூம். அதற்குப் பிறகு ஒரு சமையலறை. சமையலறைக் கதவைத் திறந்தால் சிறிதாய் ஒரு வெளி. அதில் ரோஜா செடிகள் ரெண்டு, வாடாமல்லி செடிகள், கிரேந்தி செடிகள், அவற்றின் பக்கத்தில் ஒரு வேப்ப மரம் அதை ஒட்டி ஒரு பேப்பர் ரோஸ் மரம். வேப்ப மரத்துக்கு கீழே ஒரு பெரிய அண்டாவில் தண்ணீர். அந்த அண்டாவில் ஒரு பெரிய மக். அந்த மக் நிறைய தண்ணீர் எடுத்து மூஞ்சி கழுவி கை கால் கழுவிக் கொண்டு கல்யாணியிடம் முகம் நிறைய வழியும் தண்ணீரோடு நீட்டினாள் நித்யா.
கல்யாணி அதை வாங்கிக் கொண்டு அவள் செய்தது போலவே செய்தாள்.
நித்யா ஒரு துண்டு எடுத்து வந்தாள்.
'துடச்சிக்கோ'
அவள் ஏற்கனவே துடைத்திருந்தாள்.
அவர்கள் ஹாலை அடைந்ததும், கல்யாணியை தரையில் உட்கார வைத்து தூக்க முடியாமல் ஒரு கேரம் போர்டை தூக்கி வந்தாள் நித்யா. கல்யாணியின் கண்கள் விரிந்தன. நான்கு குழிகள் வலையோடு மூடி இருக்க உள்ளே புதிது புதிதாய் வட்டங்களும், கோடுகளும் இருப்பதை ஆவலாய் பார்த்தாள். போர்டை வைத்து விட்டு கல்யாணியின் எதிரே உட்கார்ந்தாள் நித்யா. ஒரு டப்பாவைத் திறந்து காயின்களை எடுத்தாள். அதில் பரப்பி வைத்தாள். ஸ்ட்ரைக்கரை எடுத்து அடித்துக் காட்டினாள். கருப்பும் வெள்ளையுமாய் இருந்த காயின்கள் வலையை நோக்கி ஓடுவதை வியப்புடன் பார்த்தாள் கல்யாணி. அவளும் ஸ்ட்ரைக்கரை நித்யாவைப் போலவே பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் கொண்டு சுண்டினாள். ஆனால் நித்யா அடிப்பது போல் அது நகர வில்லை. கொஞ்ச தூரமே நகர்ந்தது.
நித்யா, 'மொதல்ல அப்படித்தான் இருக்கும்.' என்று சொல்ல மேரி தட்டு நிறைய மில்க் பிக்கிஸ் பிஸ்கட்டுகளுடன் வந்தார்.
'ரெண்டு பேரும் எடுத்துக்கங்க.' சொல்லி விட்டு உள்ளே சென்றார்.
கல்யாணி கூச்சத்துடன் பார்க்க, நித்யா ரெண்டு பிஸ்கட்டை எடுத்து அவள் கையில் கொடுத்தாள். கல்யாணி மெதுவாய் கொறிக்க, மேரி ரெண்டு டம்ளர் கருப்பட்டி காப்பியுடன் வந்தார்.
'வேண்டாம் டீச்சர். ' என்று தயக்கத்துடன் சொன்னாள் கல்யாணி.
'சும்மா குடி. நான் பொற வாசல்ல ஒக்காந்து புக் படிக்கிறென். ரெண்டு பேரும் வெளயாண்டுகிட்டு இருங்க' என்று விட்டு செல்பில் இருந்த அந்த வார ராணி புக்கை எடுத்துக் கொண்டு குரங்கு குசலா பதில்கள் படிக்க ஆரம்பித்தார்.
சிறிது நேரம் விளையாடி களைத்ததும் 'வா ரோஜா செடி பாக்க போலாம்' என்று நித்யா அவளை அழைத்துக் கொண்டு ரெண்டு அறைகளைத் தாண்டி ராணி படித்துக் கொண்டிருந்த அம்மாவையும் தாண்டி ரோஜா செடிகள் பக்கம் கல்யாணியை அழைத்துச் சென்றாள்.
ரெண்டு மஞ்சள் ரோஜாக்கள் பூத்திருந்தன. ரெண்டயும் பறித்த நித்யாவின் கையில் இருந்து ஒரு ரோஜா கீழே நகர்ந்து கொண்டிருந்த தேளின் மேல் விழுந்தது. அது கோபத்துடன் ரோஜாவை எடுக்க முனைந்த நித்யாவின் கையில் கொட்ட கொடுக்கை உயர்த்தியது.

(தொடரும்)
 
Nirmala vandhachu ???
 
Interesting epi.
Teacher and daughter conversation and explanation suuuuuuuuper.
Kalyana condition pitiable.
Healthy friendship.
 
Top