Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 12

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 12

ரவிக்கு கல்யாணமா? உண்மையிலேயே நம்மை மறந்து விட்டானா? நமது காதல் தான் ஆங்கில ஆசிரியர் சொன்ன மாதிரி பாஸிங் க்ளௌட்ஸா? தான் ஒவ்வொரு நொடியும் அவனை நினைத்து உருகியது வீணா? கல்யாணிக்கு மனம் மிகவும் வலித்தது. மேரி டீச்சர் ஆண்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று தான் இத்தனை நாள் பார்க்காமல் இருக்க சொன்னாரா? பாங்க் என்று அறிவுக்கு தெரிகிறது மனதிற்கு தெரியவில்லையே! கண்கள் பெருகி வழிய தாவணியின் தலைப்பை எடுத்து துடைக்க துடைக்க அது தெப்பமாய் நனைந்தது.
உள்ளே நித்யாவுக்கு கொதித்தது. நித்தம் நித்தம் இவனை நினைத்து கல்யாணி உருகிக் கொண்டிருக்க இவன் படித்து வேலை கிடைத்ததும் அவளை மறந்து இவளைப் பிடித்து விட்டானா?
ரவி பக்கத்தில் இருந்த பெண்ணை நித்யாவிடம் அறிமுகப்படுத்த முனைந்தான்.
'நித்யா!. இது சுஜா. என் கூட வர்க் பண்றா'
அவன் சுஜாவிடம் திரும்பி,
'சுஜா!..' என்று தொடங்குவதற்குள் ஊடே புகுந்தாள் நித்யா.
'நிறுத்துடா பொறுக்கி! என்ன ஒண்ணும் ஒன் பொண்டாட்டிக்கு அறிமுகப்படுத்த வேண்டாம். இவளுக்கு எதுவும் தெரிய வேண்டாம். இவ கிட்டயாவது உண்மையா இரு. ஆனா ஒண்ணு... என் பிரண்ட் பாவம் ஒன்ன சும்மா விடாது. காசு, வேல வந்ததும் பழசெல்லாம் மறந்துட்ட பாத்தியா! இப்படியா நாலு வருசம் கழிச்சு ஒண்ண அவ பாக்கணும்.'
ரவி திடுக் என்று எழுந்தான்.
'என்ன கல்யாணி வந்திருக்காளா? எங்க?'
நித்யா சீறினாள்.
'ஏன் அவ கண்ணீர் வடிக்கிறத பாக்க அவ்ளோ ஆசயா? செருப்பால அடிச்சதுக்கு பழிவாங்கிட்ட பாத்தியா! இனி நான் அவள எப்படி ஆறுதல் படுத்தப் போறேன்?'
அந்த சுஜா எழுந்து நித்யாவின் கையைப் பிடித்தாள்.
'கல்யாணியை உங்களுக்கு தெரியுமா?'
நித்யா அவள் கையில் இருந்து தன் கையை உருவினாள்.
'ஓ! ஒனக்கு தெரிஞ்சே தான் அது நடக்குதா? நீயும் ஒரு பொண்ணு தான! இன்னொருத்தி லவ் பண்றவன கல்யாணம் பண்றதுக்கு எப்படி தான் மனசு வருதோ?'
அங்கே கல்யாணி நின்றபடியே உடைந்து கொண்டிருந்தாள். பாங்கிற்கு வந்தவர்கள் இவள் அழுவதையும் தாவணியால் கண்களைத் துடைப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தனர். இதே இவர்களது கிராமம் என்றால் 'என்னாச்சு' என்று ஒவ்வொருத்தரும் கேட்டு அவளை சுற்றி ஒரு கும்பலே கூட்டி இருப்பார்கள்.
சுஜா குரலை உயர்த்தினாள்.
'என்னம்மா சின்ன பொண்ணுன்னு பாக்றேன். ஓவரா பேசறியே! எனக்கும் இவனுக்கும் கல்யாணம்னு யார் சொன்னா?'
நித்யா புரியாமல் அவளைப் பார்க்க, அவள் தொடர்ந்தாள்.
'ரவி என் க்ளாஸ்மேட். ரெண்டு பேரும் எக்சாம் எழுதி லக்கிலி ஒரே ப்ராஞ்சுல வேல. எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகப் போகுது. அவன் என் மேரேஜுக்கு ஹெல்ப் பண்றான். அதான் இன்விடேஷன் பத்தி ஐடியா கேட்டேன். அதக் கேட்டுட்டு எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு முடிவு பண்ணிடறதா?'
நித்யா திகைக்க அவள் மேலும் தொடர்ந்தாள்.
'இவன் கை மணிக்கட்ட பாரு.' ரவியின் வலது கையை எடுத்து நீட்ட மணிக்கட்டில் ஒரு வெள்ளியிலான ப்ரேஸ்லெட் இருந்தது.
நித்யா புரியாமல் விழிக்க சுஜா சிரித்துக் கொண்டே சொன்னாள்.
'இந்த ப்ரேஸ்லெட்ல நம்மலாம் டாலர் செயின்ல பதக்கம் போடுவோம்ல அது மாதிரி பதக்கம் வச்சி மேல மூடி போட்ருக்கான். அப்பப்ப நாம டைம் பாக்ற மாதிரி அத தொறந்து பாப்பான். என்னனு கேட்டா அவன் லவ்வர் போட்டாவ சின்ன சைஸா டப்பி சைஸுக்கு அந்த பதக்கத்துக்குள்ள மறச்சு வச்சிருக்கான். சாதாரணமா பாத்தா ப்ரேஸ்லெட் மாதிரி தான் இருக்கும். இந்த ரகசியம் என்னயும் இவன் க்ளோஸ் பிரண்ட் இன்னும் ரெண்டு பேருக்கும் மட்டும் தான் தெரியும். ஆமா. ஒரு ஆம்பளைக்கு ஒரு பொம்பள பிரண்டா இருக்கக் கூடாதா? ஒண்ணு லவ்வராவோ இல்ல பொண்டாட்டியாவோ தான் இருக்கணுமா?'
நித்யா கன்னத்தில் செருப்பால் அடித்தாற்போல் இருக்க அவள் அசடு வழியும் முகத்தோடு அவன் நீட்டிய கையில் இருந்த ப்ரேஸ்லெட் பதக்கத்தைத் திறந்தாள். அதில் சிறிய சைசில் கல்யாணி சிரித்தாள்.
அடுத்த கணம் இன்னொரு கரம் அந்த கரத்தைப் பற்றியது. கண்ணில் ஒற்றிக் கொண்டது.
ரவி சிலிர்த்தான்.
'கல்யாணி!' என்றான்.
அவள் கண்களின் கண்ணீர் அந்த ப்ரேஸ்லெட்டை நனைக்க தலை மெதுவாக அசைந்தது மேலும் கீழும்.
அவளது தலையை மெல்ல உயர்த்திப் பார்த்தான் ரவி.
விழிகளில் வழிந்த கண்ணீரோடு அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் கூசி கண்களை மூடிக் கொண்டாள் கல்யாணி. சட் என்று அவன் காலில் விழுந்தாள்.
'எ...என்ன மன்னிச்சிடுங்க.. நான் ... ஒங்கள ... த..தப்பா நெனச்சுட்டேன்.'
ரவி அவளைத் தூக்கினான்.
சுஜா கை தட்டினாள்.
'எப்பா. தெய்வீக காதல்னு படிச்சிருக்கேன். அது இது தானா? நாலு வருஷம் கழிச்சு சந்திக்கிறீங்களா? பேஷ்! ம்ம். என் ஆளும் இருக்குதே. அதான் இந்தா கட்டிக்கப் போறோமே. அரேஞ்ச்ட் மேரேஜ் தான். பக்கத்துல வேல பாக்குது! ஒரு எட்டு இங்க வந்து என்னப் பாக்கலாம்ல. இதுக்கெல்லாம் நான் எப்படி தான் எல்லாத்தயும் புரிய வைக்கப் போறேனோ?'
நித்யா ரவியிடம் மெதுவாகப் பேசினாள்.
'சாரி! நானும் விஷயம் தெரியாம ஏதேதோ பேசிட்டேன். கல்யாணிக்கு ஒண்ணுன்னா இந்த நித்யா துடிச்சுருவா. என்ன மன்னிச்சிருங்க.'
'பரவால்ல நித்யா. எழுந்துரு கல்யாணி. என்ன இருந்தாலும் நீங்க சின்ன பொண்ணு தான.'
சுஜா கிண்டல் செய்தாள்.
'ஆமா. அய்யா ரொம்ப வயசானவரு.' நித்யாவிடம் திரும்பினாள்.
'நீங்க தான் நித்யாவா? உங்களப் பத்தி ரவி நெறய சொல்லி இருக்கான். அவங்களது தெய்வீகக் காதல்னா ஒங்களது தெய்வீக நட்பு! எப்பா என்னா ஒரு காம்பினேஷன்! சரி. நீங்க வாங்க. நாம வெளிய போய் நிக்கலாம். அவங்க ஏதாவது பேசிக்கட்டும்.'
இருவரும் அவர்களை அந்த சோபாவில் விட்டு விட்டு வெளியே வந்தனர்.
நித்யா சுஜாவிடம் மன்னிப்பு கோரினாள்.
'நீங்களும் என்ன மன்னிக்கணும்! ஏதோ ஒரு யோசனைல தப்பு தப்பா பேசிட்டேன்.'
'என்ன நித்யா! நீ என் பிரண்டு வைஃப்புக்கு பிரண்டுன்னா எனக்கும் பிரண்ட் தான. பரவால்ல. தெரியாம தான பேசுன. ஆமாம். கல்யாணி எப்படி இத்தன நாள் சமாளிச்சா?'
'அவ இவர் மாதிரி லாக்கெட் எல்லாம் போடல. நெஞ்சுக்குள்ளேயே காதல வளர்த்தா. என் கிட்ட அடிக்கடி ரவி எப்படி மாறி இருப்பார்னு தெரியலயே. வேல கெடச்சிடுச்சான்னா தெரியலயே அப்படி இப்படின்னு ஒரே பொலம்பல். ஆனா அவங்க காதல் எப்படி ஆரம்பிச்சிச்சுன்னு ஒங்களுக்கு தெரியுமா?'
'ஓ! செருப்பால பட்ட அடி தான. இப்பவும் வா வா அன்பே அவனோட ஃபேவரைட் சாங். மோதலில் காதல். சில சமயம் சினிமால நடக்ற மாதிரியே வாழ்க்கைலயும் நடக்குது இல்லயா?'
இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க அங்கு ரவியும் கல்யாணியும் ஒருவரை ஒருவர் கண்களால் குடித்துக் கொண்டிருந்தனர்.
அவன் அவளை மேலும் கீழும் பாத்து விட்டு 'நல்லா வளந்திட்ட கல்யாணி. அழகு கூடி இருக்கு.'
அவள் வெட்கப்பட்டாள்.
'சீக்கிரம் எங்க ஊருக்கு வந்து மேரி டீச்சர்ட்ட வேல கெடச்சத சொல்லுங்க. சந்தோஷப்படுவாங்க.'
'கண்டிப்பா! நான் வருஷத்த எண்ணிகிட்டு இருக்கேன். நீ காலேஜ்ல சேந்ததுக்கு அப்புறம் வரலாம்னு நெனச்சேன். நீ முந்திகிட்ட.'
'என்ன ப்ரேஸ்லெட்ல வைக்கற அளவுக்கு அவ்ளொ காதலா, காதலா?'
'ஆஹா! குட்டிக்கு தமிழ் நல்லா பேச வருதே! பின்ன காதல்ல விழுந்தா வலி தான'
'ஆமாம். ஐயாவுக்கு மட்டும் பேசத் தெரியாதாக்கும்.'
'சரி கல்யாணி. எனக்கு வேல இருக்கு. நீ டிடிக்கு குடுத்துட்டுப் போ. மத்யானம் ஒரு மணிக்கு வா. நான் ஹாஃப் அ டே லீவ் போட்டுட்டு வாறேன். ஏதாவது படம் பாக்க போலாமா?'
'ஐய. அதெல்லாம் வேண்டாம்.'
ரவியின் முகம் சுருங்கியது.
அதைப் பார்த்த கல்யாணி 'சரி போலாம். ஆனா ஐயா கையையும் வாயையும் வச்சுகிட்டு சும்மா இருக்கணும்.' என்று கண் சிமிட்டினாள்.
ரவியும் 'சரிங்க மேடம்' என்று குழைய இருவரும் பக் என்று சிரித்தார்கள்.

(தொடரும்)
 
Nice epi.
Nangalu than avasara pattu misunderstand pannitanga?? Authore ippadi ellam payamuruthina unga kanavu la pei varum .
 
Top