Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-25(இறுதி)

Advertisement

Nice story, three days before only I started to read!!!! Lovely love story!!!! Love and love only, joins the lovely pair, vidhiyin vilaiyaattil kaadhal vendrathu!! En ullam un vasam, un ullam en vasam,
மென்மையான kadhal kathai!!! Super sis!!! Congrats??? to your future too!!! Happy ending always gives positive energy!!! Mana niraivu paditha engalukkum!!!! ???
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி ?
 
ஹாய் சகோதரிகளே....


இதுவரை இந்த கதைக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????

நிறைய சகோதரிகள் என்னை நன்றாக வழி நடத்தி ஆதரவாக இருந்தனர்..... அவர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.....
இனியும் தங்கள் ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பேன்....


இதோ இறுதி அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??



.அடுத்த நாள் காலை கற்பகமும் கணேசனும் வந்தனர்..... அவர்கள் வரும்போது தான் ஹர்சித் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வந்தான்.....

வந்தவன் கற்பகத்தின் அருகே அமர்ந்து "அம்மா ஒருதடவை நீங்க என் காலேஜ் க்கு வந்தப்போ ஒரு பொண்ண பார்த்தேன்... அவள் தான் என் மருமகள் னு முடிவுக்கூட பண்ணிட்டேன் என்று சொன்னீங்களே நியாபகம் இருக்கா.."... என்று கேட்டான்...

"ஆமாப்பா... ஆனால் அந்த பொண்ணு முகம் இப்போ நியாபகமில்லையேப்பா....இத இத ஏன் திடீர்னு கேட்க அந்த பொண்ணை எங்கேயாவது பார்த்தியா?"என்றார்...

"பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன் என்றவனின் பார்வை மகிழினியிடமிருக்க அவருக்கு புரிந்தது....


"ஆக மொத்தத்தில் நீங்க
ஓகே சொன்ன பொண்ணு தான் உங்க மருமகள்... சந்தோசம் தானே??"கேட்டான்...

"ரொம்ப சந்தோசம் ...."என்றவர் மகிழினி அருகே சென்று அவளுக்கு திருஷ்டி எடுத்தார்....

அதை பார்த்தவாறே மகிழ்ச்சியுடன் அலுவலகத்திற்கு கிளம்பினான்...

----------

மூன்று மாதத்திற்கு பிறகு,

அன்னப்பூரணி அம்மா இறந்துவிட்டதாக தகவல் வர ஸ்வேதாவைத் தவிர அனைவரும் கிளம்பினர்.....

அங்கே சென்று இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடித்து இரண்டு நாள் கழித்து கிளம்பும் போது கேசவன் மற்றும் அவனது பெற்றோர் மகிழினியை காண வந்திருந்தனர்....

(இப்போது தான் செய்த தவறுகள் அனைத்தும் புரிய அதற்கு தண்டனையாக தன் பிள்ளைகள் வாழ்வு வீணாகுவதை பார்க்க முடியாமல் தன் பெற்றோர் உடன் தனது சொந்த ஊருக்கே வந்து விட்டார் கேசவன்....காஞ்சனாவோ அங்கேயே இருந்து கொண்டார்....

சிலபேர் அப்படித்தான்.....திருந்தவும் மாட்டார்கள்......தன் தப்பை உணர்வும் மாட்டார்கள்.....அதற்காக பாதிப்பை ஏற்படுத்திவிடும் மன்னிப்பும் கேட்க மாட்டார்கள்....அதற்கு கேசவனும் காஞ்சனாவுமே சாட்சி....)


மகிழினிக்கு அவர்கள் யார் என்றே தெரியவில்லை..... தெரிந்தபின்னும் பெரிதாய் உறவு கொண்டாடவில்லை.... அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.....


-------------


ஐந்து வருடங்கள் கழித்து,


அன்று ஹர்சித் குடும்பம் பெரிய வீட்டிற்கு வந்திருந்தனர்.... கார்த்திக்,காவ்யா இருவரும் தங்களது இரண்டரை வயது தம்பி இனியன்,சுஷ்மிதா மற்றும் அவளது தம்பி சஞ்சய் & சந்தீப்(இரட்டையர்கள்) உடன் தங்கள் தாய்மார்க்கு உதவிக் கொண்டிருந்தனர்.....

வேறொன்றுமில்லை..... நிலாச்சோறு சாப்பிட மாடிக்கு உணவுகளை கொண்டு சென்றிருந்தனர்...

ஹர்சித் மற்றும் சரவணன் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருக்க மகிழினி மற்றும் ஸ்வேதா இட்லி,சட்னி, காய்கறிகள் குருமா ஆகியவற்றை முடித்து விட்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.... அவர்களுக்கு உதவியாக குட்டீஸ்களும் எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்.....

அங்கு மாடியில் கற்பகமும் கணேசனும் பாய் விரித்து கொண்டு அமர்ந்து இருந்தனர்....

எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்து அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டே நிலாச்சோறு சாப்பிட்டனர்... அதன்பின் குழந்தைகள் தோட்டத்தில் விளையாடினர்‌... பெரியவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்...

இது இவர்கள் வழக்கம்.... வாரத்தில் ஒருநாள் அவர்கள் இங்கே வர மறுவாரத்தில் இவர்கள் அங்கே என் பழகியிருந்தனர்....

சிறிது நேரம் கழித்து ஹர்சித் குடும்பம் விடைபெற்று கிளம்பினர்...

குழந்தைகள் மூவரும் உறங்கிய பின் மகிழினியை அணைத்து கொண்டே"ஏதோ சொல்ல நினைக்கிற போல?"என்றான்‌...

"இல்லையே"பொய் கூறினாள்...‌


"இல்லையா!!!!இல்லைனு இந்த உதடுகள் பொய் சொல்லுதே!!!!.....நான் சொல்லவா?".....

"என்ன சொல்ல போறீங்க?"

"ம்ம்ம்.....அடுத்த உறவு வருது"அவள் வயிற்றை வருடியவாறே கூற

"எப்படி கண்டுபிடித்தீங்க?"

"உன் முகத்தில் தெரிந்த உணர்வுகளை வைத்து தான்....""

"எப்படிங்க?"அதிசயமாய் கேட்டவளிடம்


".உன் சின்ன சின்ன அசைவும் எனக்கு தெரியுமே"...என்றுக் கூறி கண்ணடிக்க வெட்கத்தால் அவள் அவனை அணைத்து கொண்டே "ஐ லவ் யூ சோ மச் ஹர்சித்...என் வாழ்க்கையை நான் ஆசைப்பட்ட மாதிரியே கொடுத்துருக்கீங்க"என்றாள்...



அவள் கண்ணங்களை தாங்கி கண்களைப் பார்த்து"உன்னால் மட்டுமே தான் நான் மகிழ்ச்சியாய் நிம்மதியாய் இருக்கிறேன்ம்மா....நீ என் வாழ்வில் வராமல் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்றே என்னால் யோசிக்க முடியல......உன்ன எனக்கு குடுத்த கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது..என் உள்ளம் உன் வசமாகியது‌....உன் உள்ளம் என் வசமாகியது"என்று கூற அவள் ஆமோதித்தாள்....


முற்றும்........
Super sis ?and best wishes for upcoming stories...
 
Top