Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரஞ்சிதாவின் ராம் வெட்ஸ் சீதா -3

Advertisement

Ranjitha

Member
Member
ராம் வெட்ஸ் சீதா -3

"மிஸ் இவன் பொய் சொல்றான் நான் மாங்காய் சாப்பிடவே மாட்டேன் மிஸ்",எனவும் ஆசிரியை திரும்பி முருகேசனை பார்த்து "நீங்க ரெண்டு பேரும் கிளாஸ் விட்டு வெளியே நில்லுங்க,கெட் அவுட் ஆப் மை கிளாஸ் "என்றதும் ராமும்,முருகேசுவும் வெளியே வந்து நின்றான்கள்.

"ஏன்டா முருகேசு என்னைய மாட்டிவிட்ட, நான் உனக்கு பிரண்ட் தானே,அதுவும் பெஸ்ட் பிரண்ட் தானே "என்ற ராமை பார்த்து " வாயில நல்லா கெட்டவார்த்தை வரும்,ஏன் டா நீ தானே என்னைய முதல்ல மாட்டி விட்ட,என்னமோ நான் தான் உன்னைய போட்டு கொடுத்த மாதிரி ஓவரா பில்ட்டப் பண்ற போடா, செத்த நேரம் உன் திருவாயை மூடிட்டு கம்முனு நில்லு "என்றான் முருகேசு.

ஆசிரியயை நடத்தும் பாடத்தை வெளியே நின்று கவனித்து கொண்டிருந்த,ராமும் முருகேசுவும் எப்போ தான் பெல் அடிப்பாங்களோ என்று நொடிக்கொரு தரம் கை கடிகாரத்தை பார்த்து கொண்டிருந்தனர்.



நேரம் அதன் பாட்டுக்கு செல்ல இதோ வீட்டிற்கு செல்லும் மணியடிக்க ராதாவும்,சீதாவும் தங்களது புத்தக பையை எடுத்துக்கொண்டு சைக்கிள் நிற்குமிடத்துக்கு வந்து அவர்களது சைக்கிளை எடுத்து கொண்டு பள்ளியில் இருந்து மெயின் ரோட்டிற்கு வரும் வரை அமைதியாக இருந்தார்கள்.

அந்த மௌனத்தை கலைத்த ராதா "அடி சீதா,இன்னக்கி அந்த பெரிய பள்ளிக்கூடத்து பசங்க வருவார்களா,எப்படி டி அவங்க சைக்கிளை பஞ்சாராகுறத்து,ஏதாவது ஐடியா கொடு டி "என்றதும் சீதா யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

"ஏன் டி நீ உன் கல்லெறிக்குற திறமையை காட்டு,நான் அப்படி ஓரமா நின்னு வேடிக்கை பாக்குறேன் "என்ற சீதாவை முறைத்து பார்த்தாள் ராதா.

"என்னை ஏன் டி முறைச்சு பாக்குற,நான் என்ன நல்ல ஐடியா தானே கொடுத்தேன்," என்றவளை நோக்கி "எதே நல்ல ஐடியாவா ,ஏன் டி கல்லை எடுத்து அடிச்சா நாம தான் அடிச்சோம் ன்னு அவனுங்களுக்கு சந்தேகம் வந்துடும், "என்று கூறும் போது அவர்கள் மாங்கனியை குறிவைத்த தோட்டம் வந்தது..

"சரி வா அங்க சைக்கிள் ஓரமா மறைச்சு நிறுத்திட்டு ஒரு சின்ன கல்லு எடுத்து அவன் முதுகுல போடலாம்,தப்பு தவறி மண்டையில பட கூடாது, "என்று சொன்ன ராதாவை யோசனையோடு பார்த்த சீதா,

"அடியேய் ராதா, இப்போ தான் சொன்ன நீ கல்லெறிஞ்சா,அது உன்வேலை தான் ன்னு நினைச்சி மாட்டிக்குவன்னு,அப்புறம் ஏன் மறுபடியும் கல்லெறிக்கலாம்ன்னு சொல்ற "என்று தனது சந்தேகத்தை தொடர்ந்தாள் சீதா.

தோழியின் கேள்விக்கு மௌனத்தை பதிலாக கொடுத்த ராதா சைக்கிளை தோட்டத்தின் மறைவான இடத்தில் நிறுத்திவிட்டு அங்கு கீழ கிடந்த சிறுகற்களை பொருக்கி ,ராம் மற்றும் முருகேசுவின் வருகைக்காக காத்திருந்தனர்.

அவர்களின் காத்திருப்பை ஐந்து நிமிடம் தாமதித்து விட்டு சிரித்து கொண்டே சைக்கிளின் வந்து கொண்டு இருந்தார்கள் ராமும் முருகேசுவும்.

அவர்களின் வரவை எதிர்பார்த்து கொண்டிருந்த ராதாவின் விழிகள் பளிச்சென்று ஆனது. உடனே ஓடிப்போய் மரத்துக்கு பின்னால் மறைந்து கொண்டு சீதாவிடம்

"அடியேய் சீதா வரானுங்க டி அவனுங்க, அந்த கல்லை இப்படி என்கிட்ட கொடு நான் அடிக்குற,நீ கத்தாம நின்னுட்டு வேடிக்கை மட்டும் பாரு டி "என்ற தோழியின் சொல்லுக்கு தலையை ஆட்டியவளுக்கு தெரியவில்லை.. கத்தியே மாட்டிப்போமென்று.

" கிட்ட வன்டானுங்க டி இப்போ பாரு இந்த ராதா சாகசத்தை " என கல்லை அவளின் விழிக்கு நேரே வைத்து முருகேசு பக்கம் குறிபார்க்க இருந்தவளின் செவியில் "பாம்பு பாம்பு பாம்பு யாராவது காப்பாத்துங்க "என கூவும் சத்தம் கேட்டது, அது சீதாவின் சத்தம் தான்.

சைக்கிளில் சென்று கொண்டிருந்த ராமின் காதில் பாம்பு என்ற சொல்லு மட்டும் விழ அவனோ "முருகேசு பாம்பு பாம்பு வா டா அப்படி ஓடி போயி நின்னுக்குவோம்," என்றதும்

"எது பாம்பா அடேய்ய் எங்கே டா பாம்பு, அது யாரோ கத்துற சத்தம் கேட்குது என்றவன் எந்த பக்கமிருந்து சத்தம் வருகிறது என்று செவியை கூர்மையாக மாந்தோட்டத்து பக்கம் தலையை சாய்ந்து பார்த்தான்.

அங்கு ராதாவும் "பாம்பு பாம்பு யாராவது காப்பாத்துங்க ப்ளீஸ் யாராவது ஓடியாங்க ",என்றதும் முருகேசுவோ ஓடிச்சென்று "எங்கே மா பாம்பு இருக்கு ஏன் இப்படி சவுண்ட் வுடரிங்க, என்றவன் பக்கத்தில் நின்று இருந்த ராமிடம் வந்தது அந்த சாரை நாகம்..

உடனே ராமோ பயந்து அலறி ஓடி அங்கு ஓரமாக பயத்தோடு நின்றிருந்த சீதா மீது மோதி விழும் போது அந்த இருவருவின் முகங்கள் நேருக்கு நேராக சந்தித்து கொண்டது.

அவளின் சிவந்த இதழை பார்த்துக்கொண்டு வேணுமென்றே அவளின் இதழை தனது இதழால் கவ்வினான் ராமகிருஷ்ணன்.

ஏற்கனவே பயத்தில் இருந்த சீதாவோ அவனின் இந்த செயலால் மேலும் பயத்தில் அதிர்ந்து தான் போனாள்.

அங்கு அவர்களை சேர்ந்து வைத்த சாரை நாகமோ மனித உருவமாய் மாறியது. " ராமா உன் திருவிளையாடலை உன் மனையாளாக வரப்போற சீதையிடம் மணமாவதற்கு முன்னமே காட்டிவிட்டாயா, நீங்கள் இருவரும் மறுஜென்மம் எடுத்தவர்கள், இதோ உன் நண்பன் முருகேசன் தான் அனுமானாக இந்த ஜென்மத்தில் உன்னோடு சுற்றிகொண்டுயிருக்கிறான். உன்னை படைத்த அந்த பிரம்மனே உனக்கு சோதனை கொடுத்தாலும் உனக்கென்று நான் இருப்பேன் ராமா, "என்று ராமகிருஷ்ணன் நோக்கி கையெடுத்து கூப்பிட்டு விட்டு யாருமறியாமல் மீண்டும் நாகமாய் மாறி சரசரவென சென்றது..

"அடேய்ய் ராமு எழுந்துறு டா " என்ற முருகேசுவும், "அடியேய் சீதை எழுந்துரு டி "என்ற ராதாவும் மாறி மாறி நான்கு தடவை கூறியவர்களுக்கு தெரியவில்லை ராமும் சீதாவும் மயக்க நிலையில் இருக்கிறார்களென்று..
 
Top