Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரஞ்சிதாவின் ராம் வெட்ஸ் சீதா -2

Advertisement

Ranjitha

Member
Member
ராம் வெட்ஸ் சீதா -2

"எதே பக்கத்துல வரத்தா,இந்த சோடாபுட்டி என்ன கிறுக்கனா,பின்னாடியே வான்னு சொல்லத்துக்கு போயி பக்கத்துல வான்னு சொல்றாரே, அய்யயோ ராதா சாப்பாடு தட்டு வேற அவர்கிட்ட இருக்கு அந்த சாப்பாட்டை அவரே சாப்புட்டு புட்டாருன்னா, அந்த ராதா என் சாப்பாட்டை புடிங்கி தின்னுடுவாளே, சந்தேகமே இல்லை இன்னக்கி நான் பட்டினியா தான் வூட்டுக்கு போவணும் "என்று மனதுக்குள் புலம்பி கொண்டு பலராம் செல்லும் பாதையை நோக்கி நடக்க தொடங்கினாள் சீதா.

அங்கு விளையாட்டு கூடத்தில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு டென்னிஸ் விளையாடும் மாணவிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அப்போது ஆசிரியர் பின்னாலே வந்த சீதா அவளை ஆஆஆஆவென பார்த்துக்கொண்டு வந்தாள்.

என்ன இவ இங்க வந்து நல்லா சொகுசா கால நீட்டி உட்கார்த்திட்டு இருக்குறா, ஏதோ சரில்ல, என்னமோ நடக்குது இங்க என்று யோசித்து கொண்டு இருக்கும் போது ராதாவின் அருகில் வந்தார் ஆசிரியர்.

"இந்தா ராதா உனக்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு,இதுக்கு தான் மாங்கா அடிக்க அடிக்கடி போவ கூடாதுனு சொல்றத்து "என்பவரை திரு திருவென முழித்தவள், வாத்தியாரோடு சாப்பாடு தட்டோடு நின்று இருந்த சீதாவை பார்த்தாள்,

அவள் தோழி சீதாவோ பசியில் நின்றுகொண்டே தட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

எங்கே அவள் சாப்பாட்டையும் ராதா தின்னு விடுவாளோ என்ற பயம் தான்.

அவள் எதற்காக இப்படி ரொம்ப அவசரமாக சாப்பிடுகிறாள் என்பதை உணர்ந்த ராதா எழுந்து அவள் அருகில் வந்து அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக "அடியேய் இந்த சோடாபுட்டியை ஏன் டி கூப்பிட்டு வந்த,என் சாப்பாட்டு தட்டை வேற அவரு கையிலே வச்சிருக்காரு டி, முதல்ல அதை வாங்கி கொடுத்துட்டு அப்புறம் நீ கொட்டிக்கிட்டா என்னவாம் உனக்கு,பசி உயிர் போயிடுமா என்ன "என்றவளை பார்த்து முறைத்த சீதா, ஆசிரியரிடம் வந்து " சார் ராதாக்கு பசி எடுக்குதாம்,அந்த சாப்பாடு தட்டை இப்படி என்கிட்ட கொடுங்க நான் அவகிட்ட கொடுத்துடறேன்" என்றாள் சீதா.

"ஆமா நான் வேற வந்ததும் மறந்துட்டேன்,இந்தா ராதா சாப்பாடு பொறுமையா சாப்பிட்டு கிளாஸ்க்கு போ,ஒரு சின்ன சாதம் கூட மீதி வைக்க கூடாது,எல்லாத்தையும் சாப்பிடணும் "என்று கூறி சென்றவரை பார்த்து திகைத்து நின்றாள் ராதா..

" ராதா என்ன டி அந்த ஆளு எப்போ பார்த்தாலும் உனக்கே வக்காலத்து வாங்கறாரு,ஆமா நீ எப்படி இங்க வந்த அதை சொல்லு முதல்ல என்ற தோழியை பார்த்து " இரு டி நான் கொட்டிக்கிட்டு வரேன்,அப்புறம் அந்த கணக்கு டீச்சர் மேகி பாக்கெட்க்கு மேக்கி கிண்டிட்டு வந்து நடந்தது சொல்றேன் டி "என்றவள் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி சீதாவிடம் கொடுத்து அவளை வகுப்புக்கு அனுப்பிவிட்டு மேகலாவை தேடி சென்றாள் ராதா.

ஆசிரியர் ஓய்வு அறையில் மூணு ஆசிரியர் மட்டும் உணவு உண்டு விட்டு சிறிது நேரம் மேஜையில் தலையை சாய்ந்து படுத்து கொண்டிருந்தனர்.அதில் மேகலாவும் ஒருவர்.

கையில் சிறிய குழாங்கல்ளோடு ஆசிரியர் ஓய்வு அறையின் ஜன்னலோரத்தில் நின்று "எங்கே அந்த குந்தாணி மேகி பாக்கெட் ,ஒரு புள்ள மயக்கம் வருது ன்னு சொன்னா சாப்பாடு வாங்கி கொடுக்காம,நீ மட்டும் நல்லா தின்னுட்டு தூங்கறியா,இரு டி உன்னைய நான் மேகி நூடுல்ஸ்ஸா கிண்டல என்பேரு ராதா இல்லை,என்றவள் யாராவது வருகிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கையில் இருந்த கூழாங்கல்லை எடுத்து மேஜை மீது குறட்டை அடித்துக்கொண்டிருந்த மேகலாவின் மண்டையை நோக்கி குறிப்பார்த்தாள் ராதா..

மாங்கனியை குறி பார்த்து அடித்த ராதாவுக்கு ஆசிரியர் மண்டையை குறி பார்க்க கடினமாக இருக்குமா என்ன?

சாப்பிட்டு அசதியில் குறட்டை அடித்து தூங்கி கொண்டிருந்த மேகலா உச்சிமண்டையில் வலி ஏற்படவே ஆஆஆஆஆ வலிக்குது என முனங்க கல்லை எறிந்தவளோ ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.

தலையை தேய்க்கும் போது முடியில் சிறிய கூழாங்கல் ஒன்று சிக்கி இருப்பதை பார்த்த மேகலாவுக்கு அதிர்ச்சி,யாரு அது என்னையே கல்லால அடிச்சது என்று அறையை விட்டு வெளியே வந்து பார்த்தார்.

வெளியே யாருமில்லாமல் போகவே அங்குமிங்கும் நடந்து பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு வகுப்புகளிலும் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு சுற்றி விளையாடி அரட்டை அடித்து கொண்டிருந்த மாணவிகளின் முகம் இறுக்கியது ஒரு சில வகுப்பு மாணவிகள் "ச்சே இந்த பொம்பள டீச்சர் கணக்குல தான் தொல்லை கொடுக்கும் ன்னு பார்த்தா சாப்பிடற நேரத்துக்கு வந்து தொல்லை கொடுக்குது,முதல்ல இத பள்ளிக்கூடத்தை விட்டே தொரத்தணும்,என்றும் ஒவ்வொரு வகுப்புகளிலும் உள்ள மாணவிகள் மேகலாவை கழுவி ஊத்த,ஆசிரியரோ மண்டையில் கல்லெறிந்தவளை வலை வீசி தேடி வருகிறார்.

அந்த அம்மா பொறுமையா தேடட்டும்,
வாங்க நம்ம நாயகனுக்கு ஒரு என்ட்ரி கொடுப்போம்.

ஏவிஆர் மெட்ரிகுலேஷன் பள்ளி..

அந்த பிரமாண்டமான நான்கு மாடி கட்டிடத்தை கொண்ட இருபாலும் படிக்கும் பள்ளியில் தான் நமது நாயகன் ராமகிருஷ்ணனும், அவனின் உயிர் தோழன் முருகேசன்னும் பன்னிரெண்டாம் வகுப்பின் கணித பிரிவில் படிக்கிறார்கள்.

மதிய உணவுவேளை,அனைத்து மாணவ மாணவர்களும் சாப்பிட்டு முடித்து விட்டு தங்களது புத்தகபையை தலையணையாக வைத்து உறங்கிக்கொண்டிருக்க நமது நாயகனோ சீதாவிடம் இருந்து திருடின மாங்கனியை சுவைத்து கொண்டிருந்தான்,பக்கத்தில் இருந்த அவன் நண்பன் முருகேசனிடம்,

" முருகேசு என்ன டா மாங்கா இந்த புளி புளிக்கிது,ஆனாலும் நல்லாத்தான் இருக்கு,நாளைக்கும் அவளுங்க கிட்ட இருந்து திருடுவோம்" என்ற ராமை பார்த்து "அடேய் ராமு, நாம மாங்காய் திருடுனதை அந்த புள்ள ராதா பார்த்துப்புட்டா டா,நாளைக்கு எப்படி அது நம்மளை திருடவுடும், ஏதாவது வில்லங்கம் பண்ணிட போகுது, மாங்காய் வேணும்னா என்கிட்ட கேளு நான் உனக்கு மாங்காய் என்ன பலாச்சுளை கூட தரேன் டா" என்றான் அவனின் முருகேசு.


மதிய உணவு வேளை முடிந்ததற்கான மணியடிக்க அனைவரும் வகுப்புக்கு வந்து அமரவும் ஆசிரியர் வரவும் சரியாக இருந்தது.


பாடவேளையில் கூட ஆசிரியைக்கு தெரியாமல் மேஜையின் கீழே குனிந்து மாங்காய் சாப்பிட்டு கொண்டிருந்தான்கள் அந்த இரு நண்பன்பர்கள்.

ஆனால் ஆசிரியை,மாணவ மாணவிகளும் அது தெரியாமல் இருக்குமா என்ன ,பொதுவாக மாங்காய் சாப்பிடும் போது அதனின் வாசம் அனைவரும்கும் வருமல்லவா,

அதில் அந்த இரண்டு பேரும் ஆசிரியையிடம் மாட்டிக்கொண்டனர்.
"யாரு அது கிளாஸ் டைம்ல மாங்காய் சாப்பிடறது "என்றதும் ராம் கையில் இருந்த மாங்காய் அவனின் பையில் போட்டு கொண்டான்.

ஆனால் முருகேசனோ மாங்காயின் ருசியில் தன்னையும் மறந்து மேஜையின் கீழே அமர்ந்து தின்னு கொண்டே ராமின் காலை சீண்டி கொண்டு இருக்க ரமோ "அடேய்ய் பன்னி கம்முனு இருடா,மிஸ்க்கு சந்தேகம் வந்துடுச்சி "என்றதும் அவன் நண்பனோ தலையை மட்டும் வெளியே காட்டி "அந்த கிழவிக்கு சந்தேகம் வந்தா நாம என்ன பண்றது, ஆமா உன் மாங்கா எங்கே அதுக்குள்ள தின்னுட்டியா டா "என்று பின்னால் அமர்ந்து இருந்த மாணவர்களுக்கு கேட்குமளவுக்கு சத்தமாக கூறிய போது ஆசிரியையின் செவியில் விழுந்தது.

வகுப்பை ஒரு சுற்று சுற்றி வந்து அனைத்து மாணவர்களின் ஒவ்வொரு இருக்கையாக சோதனை செய்யும் போது மாட்டி கொண்டான் முருகேசு.

"டேய் முருகேசு பெஞ்ச் கீழ உட்காந்து என்ன சாப்பிடற,எழுந்து வெளியே வா "என்றதும் ராம்கோ சிரிப்புதான் வந்தது.

ஆசிரியையின் குரலை கேட்டு வெளியே வந்த முருகேசுவின் வாயில் மாங்காய் தின்னு இருப்பதற்கான அறிகுறி தெரிய அவனோ மாங்காயின் வெறும் கொட்டையை கையில் வைத்து கொண்டிருந்தான்.

இதை கவனித்தவர்,"முருகேசு என்ன அது வெறும் கொட்டையா தெரிது என்ற உடனே அவனின் நண்பன் ராம் "மிஸ் அவன் கொட்டையை தான் இவ்வளவு நேரம் தின்னுட்டு இருந்தான் "என்றவனை பார்த்த முருகேசு,

அடப்பாவி கோர்த்து வுடறான்,இரு டா இப்போ பாரு இந்த முருகேசு ஆட்டத்தை என மனதில் அவனை திட்டி கொண்டு "மிஸ் அவனும் தான் மாங்காய் தின்னான், பாதியா மென்னுட்டு கையில தான் மிஸ் வச்சிருந்தான்,இப்போ பையில போட்டு இருப்பான்,நீங்க செக் பண்ணுங்க மிஸ் அவன் பையில "என்றதும் ஆசிரியையின் பார்வை ராமை நோக்கியது.
 
Last edited:
Top