Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 22 1

Advertisement

அத்தியாயம்------22

தாமரை வீட்டில் இருந்து நேராக தன்னுடைய புதிய கட்சி அலுவலகத்துக்கு வந்த ஆதித்யா இருந்தது என்னவோ கொஞ்ச நேரம் தான்.பின் என்ன நினைத்தானோ சத்யாவிடம் “டையாடா இருக்கு வீட்டிக்கு போகிறேன்.” என்று சொல்லி விட்டு போக.

சத்யாவும் ஆதித்யாவின் மனநிலை புரிந்தவனாய் “சரி தலைவா நான் இங்கு பார்த்துக் கொள்கிறேன்.” என்று அவனை அனுப்பி விட்டு தன் வேலையைய் தொடர்ந்தான்.

இன்னும் சொல்ல போனால் ஆதித்யாவுக்கு கட்சி வேலை தலைக்கு மேலே தான் இருந்தது. என்ன தான் ஆதித்யா அந்த தொகுதிக்கு பரிச்சம் ஆனாவனாக இருந்தாலும் பழைய கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி ஆராம்பித்தது ஓட்டை பாதியாக பிரிக்கும் என்று அவனுக்கு நன்கு தெரியும்.

என்ன தான் அவன் அந்த தொகுதிக்கு நல்லது பல செய்தாலும் ஜாதி வெறி பிடித்தவன் ஓட்டும் கட்சி மேல் நம்பிக்கை இருப்பவர்களின் ஓட்டும் இவன் என்ன தான் தலை கீழாக நின்றாலும் கிடைக்காது என்பது நிச்சயமே….

அதனால் தன்னுடைய வெற்றி வாய்ப்பு ஐம்பது சதவீதாம் தான் என்று தெரிந்தும் கட்சி வேலை பார்க்க மனம் இல்லாது தன் அறைக்கு வந்து முடங்கியவன் மனம் முழுவதும் தாமரையே…..

இந்த திருமணம் மட்டும் நல்ல விதமாக நடந்து இருந்தால் இப்போது நான் மட்டுமா இந்த படுக்கையில் படுத்துக் கொண்டு இருப்பேன் என்று நினைத்தவனால் கூடவே ஏற்கனவே ருசிக்கண்ட பூனையாய் தாமரையுடன் இருந்த பொழுதும் நினைவு வர.

அதற்க்கு மேல் முடியாதவனாய் பேசாமல் அங்கு போய் விடலாமா...என்று நினைத்தவன். பின் வேண்டாம் நான் செய்த செயலை மன்னித்தாளோ இல்லையோ அவள் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததே பெரிய விஷயம் இதில் அவள் கூட வாழும் வாழ்க்கையைய் அவள் விரும்பாது வாழ கூடாது.

அதுவும் திருமணம் மட்டும் செய்துக் கொள். மற்றது எல்லாம் உன் விருப்பம் என்று அன்று ஜம்பமாக பேசி விட்டு இன்று போய் நிற்பது நல்லது அல்ல என்று நினைத்தவனாய் அன்றைய பொழுதை எப்படியோ கஷ்டப்பட்டு கடத்தினான்.

இங்கு தாமரையும் உறக்கம் வராமல் தான் இருந்தாள். அதற்க்கு காரணம் இன்று பகல் முழுவதும் நாம் தூங்கியது தான் காரணம் என்று அவளே அவளுக்கு சமாதானமும் கூறிக் கொண்டாள்.

இருந்தும் இன்றைய தூக்கத்தை கெடுத்தது ஆதித்யா தான் என்று அவளின் நியாயமான மனம் எடுத்துரைத்தது. அவன் நினைவு என்றால் ஆதித்யா நினைப்பது போல இல்லை.

இதுவே முறைப்படி இந்த திருமணம் நடந்து இருந்தால். குறைந்த பட்சம் தான் தாலி கட்டு என்று சொன்னதும் தாலி கட்டி குடும்பம் நடத்தி இருந்தாலும் இந்த திருமண தினம் இப்படியா….இருக்கும் என்று நினையாமல் இருக்க முடியவில்லை.

இப்படி இருவரும் தனி தனியாக நினைவலையில் பயணிக்க. ஆதித்யா ராஜனாமா செய்ததால் அந்த தொகுதியில் இடைதேர்தல் நாளும் நெருங்கி வர.ஆதித்யா தன் கட்சியின் பிராச்சாரத்தை முப்பத்தியாறு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விட.

எதிர் கட்சிகளும் அப்படியே செய்தது. தன் உறுப்பினர்களுடம் ஜெயிக்கும் வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று அவன் விவாதித்ததில் சத்யா அடித்து சொன்னான்.

“தலைவா நீங்க கவலை படாதீங்க.இந்த தடவையும் நாம் தான் ஜெயிப்போம்.” என்றதற்க்கு.”

சந்தேகத்துடன் “நீ ஏதாவது செய்து இருக்கிறாயா….?” என்று கேட்க.

“தலைவா என்ன தலைவா உங்களுக்கு தெரியாமா….நான் ஏதாவது செய்து இருக்கிறேனா….?”

“இல்லை போன வாரம் எல்லாம் ஜெயிப்பது பாதி பாதி தான் என்று சொல்லிட்டு இருந்தே இப்போ அவ்வளவு நம்பிக்கையா சொல்லவும் தான் நான் கேட்டேன்.” என்றதற்க்கு.

“தலைவா அது போனா வாரம்….”

அவன் சொல்லிய விதத்தில் சிரித்துக் கொண்டே “அப்போ இந்த வாரம்.”

“இந்த வாரம் நாமா பண்ண பிராசரத்தில் அப்படியே மாறிடுச்சிலே….” என்றதும்.

“நிஜாமா சத்யா.” என்று ஆவாளுடன் கேட்டான்.

ஆதித்யா என்ன தான் தாமரை குழந்தை என்று தன் பதவியைய் ராஜனாமா செய்த போதும் அடி மனதில் கொஞ்சம் வலிக்க தான் செய்தது. இந்த கட்சிக்குக்காக நாம் இழந்தது கொஞ்சமா நஞ்சமா…

முக்கியமாக தன் படிப்பு.அது மட்டும் இல்லாமல் ஒரு எம்.எல்.ஏவாக பந்தவாக இருந்த இடத்தில் அந்த பதவியைய் இழந்து நிற்பது அவனுக்கு என்னவோ போல் தான் இருந்தது.

அப்படி இருக்கும் போது நமக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்று சொன்னவுடன் அவன் மனதுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது.அந்த மனநிறைவோடவே பின் பக்கம் இருக்கும் தன் வீட்டுக்கு சத்யாவுடன் சென்றான்.

பழைய கட்சி இருந்தது தன் இடம் தான் என்பதால் கொஞ்சம் நாள் கழித்து அவர்கள் வேறு இடத்துக்கு தன் கட்சி ஆபிஸை மாற்றிக் கொண்டனர். ஆதித்யாவும் அந்த கொஞ்ச நாட்களுக்கு வேறு இடத்தில் சும்மா பேச்சி வார்த்தை பேசுவதற்க்கு மட்டும் ஒரு இடத்தை பிடித்திருந்தவன் பின் தன் இடத்துக்கே தன் கட்சி ஆபிஸை மாற்றிக் கொண்டான்.

கட்சி ஆபிசில் இருந்து பின் பக்கமாக இருக்கும் தன் வீட்டுக்கு வரும் வழியில் மரம் எல்லாம் நிறைந்து இருக்கும் அதனால் சத்யா நிறைய லைட்டை போட்டு வைத்ததால் இரவு நேரத்திலும் இருட்டாக இல்லாமம் வெளிச்சமாக தான் காட்சி அளிக்கும்.

ஆதித்யாவும் சத்யாவும் நாளை மறுநாள் நடக்க இருக்கும் தேர்தல் பற்றி பேசிக் கொண்டு வரும் போது அனைத்து விளக்கும் மொத்தமாக அணைய சத்யா “ தலைவா” என்று ஆதித்யாவை தன் பக்கம் இழுக்கவும்.

ஆதித்யா “சத்யா….” என்ற அலரல் குரலும் ஒன்றாக கேட்க.

அந்த இருட்டில் கால் மிதி பட்டு ஓடும் ஓசையும் கூடவே கேட்டவுடம் சத்யா பதட்டத்துடன் “தலைவா என்ன தலைவா என்ன ஆச்சி….?” என்று பதட்டத்துடன் கேட்க.

ஆதித்யா வலி நிறைந்த குரலில் “அவனை பிடி அவனை பிடி.” என்று கத்த.

அந்த இருட்டில் சத்யாவுக்கு யார் ஓடியது என்றும் தெரியவில்லை. எந்த பக்கம் ஓடினான் என்பதும் தெரியவில்லை.ஆனால் ஓடியவன் ஆதித்யாவை ஏதோ செய்து விட்டு தான் ஓடி இருக்கிறான் என்று ஆதித்யாவின் வலி நிறைந்த குரல் எடுத்துரைக்க.

இப்போது ஓடியவனை பிடிப்பதை விட ஆதித்யா தான் முக்கியம் என்று நினைத்து முதன் முறையாக தன் தலைவர் சொல்லுக்கு கட்டு படாது தானே அங்கு இருக்கும் வேளையாட்களை சத்தம் போட்டு அழைக்க.

சத்தம் வந்த திசை இருட்டாக இருக்க மெயின் சுச் இருக்கும் இடத்தில் போய் பார்த்து ஆப் பண்ணி இருந்த மெயினை ஆன் செய்து விட்டு ஒன்று இரண்டு பேர் அந்த இடத்திற்க்கு வந்த போது சத்யா ஆதித்யாவின் உடல் பாரம் தன் மீது விழ.

என்னவோ ஏதோ என்று அந்த இருட்டிலேயே அவன் உடல் பகுதியை ஆராயும் போது சத்யாவின் கைய் ஆதித்யாவின் வயிற்று பகுதிக்கு வரும் போது அங்கு சொருவி இருந்த கத்தி தட்டு பட அதன் மீது கைய் வைப்பதற்க்கும் அந்த பகுதியில் வெளிச்சம் வருவதற்க்கும் சரியாக இருந்தது.

அந்த இடத்தில் வந்த இரண்டு பேரில் சத்யாவை பிடிக்காத மகேஹூம் இருக்க சத்யாவின் கைய் ஆதித்யாவை குத்திய கத்தியில் இருக்கவும் “அய்யோ நம்ம தலைவரையே போட்டுட்டானே……” என்று சொல்ல.

அங்கு வந்த மற்ற அனைவருக்கு அந்த காட்சி மகேஷ் சொன்னது போல தான் நினைக்க தோன்றியது.சத்யா ஆதித்யாவின் பழக்கத்தை பற்றி தெரிந்த சிலர் “இருக்காது” என்று சொன்ன போதும்.

அந்த குரல் மிக மெல்ல தான் கேட்டது ஏன் என்றால் அனைவரின் கருத்தும் சத்யா ஆதித்யாவை குத்தி விட்டான் என்பதே…..சத்யாவுக்கு அவர்களின் பேச்சி எதுவும் காதில் விழ வில்லை.

அவன் கவனம் முழுவதும் ஆதித்யாவின் மேல் தான் இருந்தது ஆதித்யாவுக்கும் அவர்கள் பேசுவது எங்கயோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் இருந்தாலும் அந்த பேச்சின் தாக்கம் அவன் அடிமனது வரை தீண்டியதால்.

அந்த நிலையிலும் தன் கைய் அசைவில் இல்லை என்று சொல்ல. ஆனால் பாவம் அது யாருக்கும் தான் தெரியவில்லை. ஆனால் சத்யா ஆதித்யாவின் கைய் அசைவில் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்ற மகிழ்ச்சியில் “ சீக்கிரம் காரை எடுங்க தலைவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகனும்.” என்று பதற.

அதற்க்கு அங்கு இருந்த மகேஷ்” ஏன் காரியம் சரியாக முடிக்கவில்லை என்று காரில் முடிக்கவா…..” என்று கேட்டுக் கொண்டே சத்யாவின் அருகில் வந்தவன் அவனை தள்ளி விட்டு ஆதித்யாவை தான் ஏந்திக் கொண்டு தன் ஆள் ஒருவனை வண்டி எடுக்க சொல்ல.

அப்போது தான் சத்யாவின் சந்தேகம் மகேஷ் மீது விழுந்தது. ஆதித்யா அந்த கட்சியில் இருந்து வரும் போது அவனை பிடித்த சில உறுப்பினர்கள் அவன் கூடவே வர.

அப்போது ஆதித்யா கூட மகேஹூம் வர அதுவும் இரண்டு நாள் கழித்து வர. சத்யா ஆதித்யாவிடம் “இவன் ஏன் வரான்.” என்று ஆட்சேபிக்க.

அதற்க்கு ஆதித்யா “தனிப்பட்ட பகை வேறு கட்சி வேறு” என்று சத்யாவை அடக்கி விட. அத்தோடு சத்யா அந்த பேச்சை விட்டு விட்டான்.

இப்போது நாம் அதை அப்படியே விட்டது தப்போ என்று நினைத்தவன் தனக்கு ஆதரவாக பேசியவர்களை கண் ஜாடை காட்டி அவனுடம் போக சொல்ல.

மகேஷ் ஆதித்யாவை காரில் ஏற்றி தன்னுடைய ஆட்களுடம் அவனும் ஏறும் போது சத்யாவின் விசுவாசியும் காரில் ஏறுவதை பார்த்து “நான் கூட்டி போகிறேன்.” என்றதற்க்கு.

“நாங்களும் வரோம்.ஏன் இதில் ஏதாவது உனக்கு பிரச்சனையா…..?” என்று கேட்க.

அதற்க்கு மேல் எதுவும் பேச முடியாது மகேஷ் காரில் ஏறிக் கொன்டவனின் மனம் அய்யோ காரில் முடித்து விடலாம் என்று நினைத்தோமே….என்று நினைத்தான்..

ஆம் ஆதித்யாவை கத்தியால் குத்தியது மகேஷ் தான். ஆதித்யாவும்


மகேஹூம் ஒன்றாக தான் அந்த கட்சியில் சேர்ந்தார்கள். ஆதித்யா தலைவரின் ஜாதியாக இருந்த காரணத்தால் அவருக்கு நெருக்கமானதோடு அடுத்த எம்.எல். ஏவும் அவனே ஆனாதை அவனால் தாங்க முடியவில்லை.

Sathya and vasanthy super sis, waiting for next epi...
 
Top