Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 18.1

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்----18

தாமரை சென்ற பிறகு கூட ஆதித்யா நின்ற இடத்திலேயே நின்று விட்டான். சத்யா தான் “தலைவா வா போகலாம்.” என்று அழைக்க அப்போது தான் தன் திகைப்பிலிருந்து வெளி வந்தவன். “சத்யா அவ என்ன சொல்லிட்டு போறா பாத்தியா….என் குழந்தையைய்….” என்று அதற்க்கு மேல் பேசாது சத்யாவை பார்க்க.

சத்யாவுக்கு கூட தாமரையின் செயலிலும் பேச்சிலும் என்ன செய்வது என்று தெரியாது தான் விழித்திருந்தான். இது வரை ஆதித்யாவுக்கு தாமரை விசயத்தில் அனைத்து திட்டமும் போட்டு கொடுத்தது நான் தான்.

ஆனால் இப்போது தாமரையின் பேச்சிலும் அவள் பார்வையிலும் என்ன செய்வது என்று தெரியாது சத்யாவும் ஆதித்யா போல் விழித்து தான் இருந்தான்.சத்யாவின் கண்ணுக்கு இப்போது தாமரை வேறு மாதிரி தெரிந்தாள்.

அவள் கண்களில் முதலில் எல்லாம் சோகம் இல்லை பயம் தான் பார்த்திருக்கிறான். ஆனால் இன்று தாமரையின் கண்கள் தீ பிழம்பு போல் தான் காட்சி அளித்தது. இனி அவள் என்ன செய்வாளோ….என்று தான் நினைக்க தோன்றியது. இனி அடுத்த என்ன என்று அவன் யோசிக்கும் வேளையில்.

தான் கேட்டதுக்கு பதில் அளிக்காது இருந்த சத்யாவை பார்த்து “ என்ன சத்யா எதுவும் பேசமாட்டேங்கிறே….” என்று கேள்விக்கு ஒரே வார்த்தையில் “யோசிக்கனும் தலைவா….இனி என்ன என்றாலும் யோசித்து தான் செய்யனும்.” என்று காலம் கடந்து யோசிக்க கற்று கொடுத்த சத்யா ஆதித்யாவை வீட்டுக்கு அழைத்து சென்றான்.

ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு தலைவரை தாமரை வீட்டுக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகாவது தாமரையின் கோபம் குறையுதா என்று பார்ப்போம் என்று சத்யா திட்டம் வகுக்க.

உன் சட்ட திட்டத்துக்கு எல்லாம் நான் கட்டு பட மாட்டேன் என்று நினைத்த ஆதித்யா ஒரு நாளே அதிகம் என்பது போல் அடுத்த நாளே தாமரையின் வீட்டுக்கு சென்றான். எப்போதும் அவன் கூடவே செல்லும் சத்யாவும் தான் தடுத்தால் கண்டிப்பாக தலைவர் கேட்க மாட்டார் என்று நினைத்து அவனும் வேறு வழி இல்லாது ஆதித்யாவுடன் சென்றான்.

எப்போதும் போல் சத்யா ஹாலிலேயே அமர்ந்துக் கொள்ள ஆதித்யா தாமரையின் அறைக்கு சென்றால் அங்கு தாமரை அப்போது தான் ஒரு ஆப்பிளை எடுத்து ஒரு கடி கடித்தவள் ஆதித்யாவை பார்த்து அடுத்த கடி கடித்துக் கொண்டே ….

“ஆதித்யநாரயணன் இந்த ஆப்பிள் நல்லாவே இல்லே….அதனால் என்ன செய்யிறே….உன் அல்லகையைய் ஊட்டிக்கு அனுப்பி ஒரு கூடை ஆப்பிளை வாங்கி வர சொல்லு.” என்று பேசிக் கொண்டே ஆப்பிளை சாப்பிட்டு முடித்தவள்.

பின் டேபிளில் மீது இருக்கும் பாலை எடுத்து குடித்து முடித்தவள் தன் உதட்டின் மீது இருக்கும் பாலை துடைத்துக் கொண்டே….

“வெறும் பாலை தான் குடித்தேன். இந்த சமயத்தில் குங்கும பூ போட்டு குடித்தால் குழந்தை கலரா பிறக்குமுன்னு சொல்லுவாங்க அதனாலே இன்னொரு அல்லகையிடம் காஷ்மீர் குங்குமா பூ வாங்கி வர சொல்.” என்று சொன்னவள்.

பின் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு “ஆ முக்கியமானதை மறந்துட்டனே….நேத்து டாக்டரிடம் இந்த சமயத்தில் என்ன சாப்பிடனும் எப்படி நடந்துக் கொள்ளனும் என்று கேட்டேனா….? அதுக்கு குழந்தை நல்லதுக்காக அவங்க மூன்று மாசம் கட்டிலை காட்டி சேர கூடாது என்று சொல்லி இருக்காங்க. அதனால் வீனா ஏன் வந்து போயி இருக்கனும். அந்த சமயத்தில் உங்க உயிருக்கும் மேலான கட்சி வேலையாவது பார்க்கலாம் இல்லையா….?” என்று பேசுபவளை ஒரு கைய்யாளக தனத்துடன் தான் பார்த்திருந்தான்.

அதுவும் அவள் கட்டிலை காட்டி சொன்ன அந்த வார்த்தை அவன் மனதை வால் கொண்டு அறுத்தது போல் இருந்தது. இருந்தும் அவன் தன் கோபத்தை காட்டவில்லை என்பதை விட காட்ட முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எனக்கு என் குழந்தை மிக முக்கியம் தாமரை எதுவும் செய்ய மாட்டாள் என்பது நிச்சயமே ஆனால் அவனுக்கு அது போததே….சமுகத்தில் அக்குழந்தை தலை நிமிர்ந்து இருக்க வேண்டாமா….? என்று நினைத்தவன்.

பின் தாமரையிடம் “தாமரை உனக்கு என்ன கோபம் தாலி கட்டவில்லை என்று தானே….? நீ விருப்பபட்டா… என் கட்சி ஆபிசின் முன்னவே பந்தல் போட்டு ஊர் மக்கள் முந்நிலையில் நான் உன்னை மனைவியா ஏத்துக்கிறேன். என்ன சொல்றே….?” என்று சொல்லி விட்டு அவளை ஆவளாக பார்க்க.

தெனவெட்டாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே “இப்போ உன் கட்சி பதவி ஆசை எங்கே போயிடுச்சி ஆதித்யநாரயணன்.” என்று கேள்வி கேட்டவள்பின் அவளே….” எங்கே போயிடுச்சின்னு நான் சொல்லவா….தன் வயிற்றை காண்பித்து இங்கு போயிடுச்சி.

நானா பதவியான்னு வரும் போது உன் கண் முன்னே பதவி வந்து நின்னுச்சி….ஆனா குழந்தைன்னு வரும் போது பதவி பின்னுக்கு போயி குழந்தை பாசம் கண் முன்னால் நிக்குது.

நீ தான் என் மேல் ஆசை பட்ட நான் இல்லே...சரி என்னை நீ விட மாட்ட என்று தெரிந்ததும் ஒரு தாலியாவது கட்டுனு சொன்னேன். ஆனா நீ அதுவும் கொடுக்காம தானே என்னை தொட்ட. இப்போன்னா கல்யாணத்தை கட்சி ஆபிஸ் முன்னவே நடத்துட்டான்னு கேட்கிறே….ஏன்னா இந்த குழந்தை உன் இரத்தம் அதற்க்கு சமுகத்தில் ஒரு அங்கிகாரம் கிடைக்கனும்.

ஆனா நான் எவனோ பெத்த பொண்ணு தானே….அதுக்கு சமுகத்தில் அங்கிகாரம் கிடைத்தா என்ன கிடைக்கலை என்றால் என்ன….” என்று அவள் பேச பேச ஆதித்யா வாய் இருந்தும் ஊமையாக நின்றான்.

பின் ஆதித்யா ஏதோ பேச வரும் போது தாமரை வாயைய் பொத்திக் கொண்டு பாத் ரூம் நோக்கி விரைய. அதித்யாவும் என்னவோ ஏதோ என்ற பதட்டத்துடன் தாமரை பின் சென்று பார்த்தால் தாமரை சற்று முன் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்ததை பார்த்து.

பதட்டத்துடன் அவள் தலையை பற்றியவன் “என்ன தாமரை இப்படி வாந்தி எடுக்குறே…வா ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்.” என்று அழைக்க.

களைப்புடன் கட்டிலில் வந்து அமர்ந்தவள் “அது எல்லாம் வேண்டாம் இது மாதிரி சமயத்தில் எல்லா பெண்ணுக்கும் இருக்கும் பிரச்சனை தான்.” என்று கண் மூடி அமர்ந்து விட்டாள்.

கண் மூடி அமர்ந்தவளுக்கு இது தோன்றாமல் இல்லை. அனைத்து பெண்கள் போலவா தன் நிலை. மசக்கையால் உடல் சோர்வு அனைவருக்கும் தான் இருக்கும். ஆனால் அவர்களுக்கு தோள் சாய கணவன் இருப்பார்.

பின் அவர்கள் பிறக்க போகும் குழந்தையின் வளர்ச்சியை பற்றி எதிர்கால கனவு பற்றி பேசும் போது அந்த களைப்பு என்பது பெரிய விசயமாக தெரியாது.ஆனால் நான் என்று நினைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கும் போது ஆதித்யா தன்னையே கவலையுடன் பார்த்திருப்பதை பார்த்து.

நான் நினைத்தால் இப்போதே இவன் தோள் சாயலாம். ஆனால் அதன் பின்….?இவன் செய்ததை நான் எப்படி மறப்பது. மறக்க கூடிய தவறையா செய்து இருக்கிறான். இதோ இப்போது தன் குழந்தைக்கா துடிக்கும் துடிப்பு. அன்று நான் துடித்த போது சட்டை செய்ய வில்லையே ….என்று நினைத்தவள்.

அதற்க்கு மேல் அவள் சிந்தனை செய்ய முடியாது மயக்கம் அவளை ஆழ்த்த அங்கு ஒருத்தன் தன்னையே பார்த்திருப்பதை சட்டையே செய்யாது அப்படியே படுத்து உறங்கி விட்டாள்.

அவள் உறங்கியதும் தான் ஆதித்யா அவள் அருகில் சென்று கலைந்த அவள் கூந்தலை ஒழுங்கு படுத்திக் கொண்டே அவள் முகத்தையே பார்த்திருந்தான். சற்று முன் தன் குடலே வெளியேறும் வரை வாந்தி எடுத்த தாமரையைய் நினைக்கும் போது தான் அவன் தவறின் அளவே தெரிந்தது.

இது மாதிரி சமயத்தில் மனதில் ஆயிரம் ஆசைகள் இருக்கும் என்று சொல்லுவார்களே….இவளுக்கு என்ன ஆசையோ….இதே நான் இவளை திருமணம் செய்து இருந்தால் கண்டிப்பாக என்னிடம் சொல்லி இருப்பாள் தானே…

தாயும் இல்லாது தந்தையும் இல்லாது. வளர்த்த பாட்டியையும் பறிகொடுத்தவளிடம் நான் நடந்து கொண்டது பெரும் பிழையோ….அதுவும் தன்னிடம் நம்பிக்கை வைத்த வள்ளியம்மாவின் நம்பிக்கையை அழித்து விட்டோமோ...என்று காலம் கடந்து யோசிக்க ஆராம்பித்தான்.

இவள் சொல்வது போல் என் குழந்தை என்று வந்ததும் என் பதவியை பற்றி சிறிதும் யோசிக்காது அனைவரின் முந்நிலையிலும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்த நான் அப்போது ஏன் இந்த முடிவை எடுக்க வில்லை.

இவள் மீது நான் காதலாய் தானே இருந்தேன். பின் ஏன் நான் அந்த முடிவை எடுக்க வில்லை என்று நினைத்துக் கொண்டே தாமரையை பார்த்துக் கொண்டே இருக்கும் போது சத்யாவிடம் வந்த அழைப்பால் கீழே போனவன்.

சத்யாவிடம் எதுவும் பேசாது அவனை அழைத்துக் கொண்டு கட்சி ஆபிசுக்கு சென்று விட்டான். இருந்தும் அங்கு அவனுக்கு ஒரு வேலையும் ஒடவில்லை. தாமரை திருமணத்துக்கு சம்மதிப்பாளா….?மாட்டாளா….? என்ற சிந்தனையே தான் ஒடிக் கொண்டு இருந்தது.
 
???

தன் ரத்தம்னதும் இவ்ளோ துடிக்குதே......
அவ சொல்றப்போ கொஞ்சம் கூட காது கேக்கலையே உனக்கு......
இப்போ வருந்தி என்ன பயன்?

காத்திருடா காதலா.....
 
Last edited:
Top