Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - அறிமுகம்

Advertisement

TNWContestWriter078

Well-known member
Member
ஹாய் மக்களே,

Super excited to be part of this festival!

மௌனத்தின் மறுபக்கம் - ஒரு கணவன், மனைவியின் காதலை மீட்டெடுக்கும் கதை.

கதை மாந்தர்கள் : ஷ்யாம் & அனாமிகா - நீங்க உங்க daily life-ல பார்க்கிற நிறை, குறையோட இருக்கிற சராசரி தம்பதிகள்.

காதல் ஒரு உணர்வு அப்படின்றத தாண்டி அது ஒரு தவம்னு கூட சொல்லலாம். அந்த தவத்தின் பலனை அடைவதற்கு முன் நிறைய தடைகற்களை தாண்ட வேண்டியிருக்கும். சண்டைல கிழியாத சட்டை எங்கிருக்குன்ற மாதிரி, பிரச்சனை இல்லாத திருமண வாழ்க்கையே இல்லை. பல நேரங்களில், உள்ளிருக்கும் எதிரியை வெல்வது தான் வெற்றியே.

ஷ்யாம் - அனாமிகாவின் காதலில் அப்படி என்ன சவால், அதை அவங்க எப்படி ஃபேஸ் பண்ணி கடந்து வந்தாங்க அப்படீன்றது தான் கதை.

சிலருக்கு கொஞ்சம் சீரியஸா இல்ல முரண்பாடா தெரியலாம். ஆனால் இது happy ending story தான். உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்.

நாளையில் இருந்து பதிவிடுகிறேன். படித்து, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே :).
 
மௌனத்தின் மறுபக்கம்.....

மௌனத்தின் மறுபக்கம்
புரிந்து கொள்ள முடியாத சோகங்களும்
புரிய வைக்க முடியாத விளக்கங்களும்
கேட்ட முடியாத கேள்விகளும்
சொல்ல முடியாத பதில்களும்
நிரந்தமாக இருக்கும்.....

வாழ்த்துகள் சகி ??????
 
Top