Unmaiyavey unga review vera level dear. Sirichikittey padichenஅருமை.... ஆர்பாட்டம் இல்லாத அருமையான கதை....சமூகத்திற்கு தேவையான கருத்துக்களம்
....எத்தனை தான் விஞ்ஞானம் வளர்ந்து வந்தாலும்....பெண் பிள்ளைகளை சுமையாக பார்க்கும் வழக்கம் இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.... அதிலும் ஒன்றிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் என்றால் சொல்லவா வேண்டும்
.....சரி கதைக்கு வருவோம்......
வேண்டா முத்து அங்கிளோட ஐந்தாவது பொண்ணு....போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு ன்னு பெயர் வைத்தால் அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் ன்னு மூட நம்பிக்கையில் வேண்டா ன்னு வச்சிருக்காங்க....சின்ன பொண்ணு பிறந்ததும் தாய் இறந்துவிட முத்து தான் சின்னுவையும் மற்ற மகள்களையும் வளர்த்து பெரிய பொண்ணுங்களை திருமணம் செய்தும் கொடுத்து விடுகிறார்...மற்ற மகள்கள் சுயநலவாதிகளா இருக்க,சின்னு வை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் ன்னு நினைக்கும் போது அலமேலு முத்துவோட தங்கை தனக்கு பணத்தேவை இருப்பதாகவும் அதற்கு உதவி செய்தால் வெளிநாட்டில் படிக்கும் தன் இளைய மகன் வசீகரனை சின்னு வுக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறார்....
அதை நம்பி ஏமாந்த முத்து பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்கிறார்...தன் தேவை தீர்ந்ததும் அலமேலு சின்னு வை வேணாம் னு சொல்ல முத்து அந்த நேரமே இறந்தும் விடுகிறார்.... ஆதரவற்ற நிலையில் இருக்கும் சின்னுவை அவளின் தோழி செல்வி படிக்க சென்னை அழைத்து வருகிறாள்....அங்க தான் இருக்கு ட்விஸ்ட்....சின்னு சேர்ந்த காலேஜ் ப்ரோஃபஸர் சரவணன் வசீயுடைய அண்ணன் அவளை தன் வீட்டிற்கே குழந்தையை பார்த்துக்கொள்ள அழைத்து வர அலமு க்கு அட்டாக் வராத குறை தான்
....இதுக்கே டென்ஷன் ஆனா எப்புடி அக்கடச்சூடு
....வசீயும் வெளிநாட்டில் படிப்பு முடிந்து வந்து விடுகிறான்
....அப்பறம் என்ன அடுத்த கட்டம் மிரட்டல் தான் வச் கிட்ட எதையும் சொல்லாமல் வேலைக்காரியா இருக்கனும் னு உத்தரவு வேற
....சரி சரவணன் வொயிஃப் லதா நல்லவளா இருப்பா ன்னு பார்த்தா அந்த அம்மனி அலமுக்கும் மேல எம்எல்ஏ பொண்ணாம்
....
இதுல்லாம் ஒரு பக்கம் னா சின்னு ஓட வசி துரத்தன்னு ஒரு குஜால் தான்.... வசீகரன் சரியான கேடி
.... ஒவ்வொரு விஷயத்திலும் சின்னு க்கு பார்த்து பார்த்து பண்றான்...டவுட் ஆகிடுச்சு... இவனுக்கு எப்படி சின்னு வை தெரியும் னு... சின்னு ஓரகத்தியா வந்தா லதா வுக்கு ஸ்டேட்டஸ் ப்ராப்ளம் மாம்... அப்பறம் என்ன வழக்கம் போல லதா அலமு வை தூண்டி விட்டு சின்னு வை வீட்டை விட்டு விரட்டியாச்சு
...அதோடு விட்டாங்களா இந்த தாயம்மா அமைச்சர் பொண்ணை தான் வசீ கல்யாணம் பண்ணனும் னு ஹார்ட் அட்டாக் ட்ராமா வேற...இந்த பையனும் பொசுக்குன்னு ஒத்துக் கிட்டான்
...சும்மா லுல்லுல்லாய்க்கு தான் ஏதேதோ கோல்மால் வேலை பார்த்து சின்னுவையே கண்ணாலம் கட்டிக்கிட்டான் பா
....ஸ்ஸ்ஸ்ப்பா அப்போ தான் நிம்மதியாச்சு
....
மருமகளா சின்னு வந்ததும் அலமு ஆட்டம் அரங்கேற்றம் ஆகிடுச்சு... எல்லாத்தையும் வசீ சமாளிச்ச ஸ்டைல் வேற ரகம்.... கல்யாணம் ஆகிடுச்சு குழந்தை, குடும்பம் ன்னு விடாமல் வேண்டா வை கலெக்டர் க்கு படிக்க வைச்சான் பாருங்க....இவனை பாராட்டியே கை வலிக்குதுப்பா
....வசீக்கு எப்படி சின்னு வை தெரியும்....சின்னு வை படிக்க வச்சது யாரு ன்னு தெரியும் போது ப்ப்பாஆஆஆ செம
....
அலமு ட்ராமா ரிவில் ஆனப்போது நட்டு அங்கிள் தான் அலமு வை கண்டிக்கலன்னு ஒரு கதறல்ஸ் தான்....இந்த பக்கம் அலமு அந்த பக்கம் லதா ன்னு நாங்க பண்ணின ரோஸ்ட் ல எம்எல்ஏ பொண்ணு சரணடைந்து விட்டது
...திருந்தி தானே ஆகனும் வேற வழி
..... சரவணன் ஹீரோ க்குரிய பத்து பொருத்தமும் பக்காவா அமையப்பட்ட ஹீரோ வோட அண்ணன்...செம கேரக்டர்
லதா வை வச்சு செஞ்சப்போலாம் லல்ல்ல்லா தான்
....அது மட்டும் இல்லாமல் சார் க்கு ஹீரோ வாய்ப்பு கேட்டு ரிக்வெஸ்ட் போட்டு இருக்கேன்...கண்டிப்பா லதா ஹீரோயின் இல்ல
.....
வேண்டாவோட அக்கா காவேரி,ஜமுனா கேரக்டர் மட்டும் தான் என்ட் கார்ட் ல திருந்தும்....இவங்களை பத்தி சொல்ல அப்படி ஒன்னும் இல்ல சரியான சுயநல பிசாசுங்க... எல்லாத்தையும் அபகரிக்க பார்க்கும் ஆளுங்க...
வேண்டா பொண்ணை வேணும் னு கல்யாணம் பண்ணி தானும் தன்னுடை இலக்குகளை அடைந்து...அவளையும் உயர வைத்த வசீ... உண்மையாவே வசீகரன் தான்..... பெண்களுக்கு வசீகரன் போல கணவன் அமைந்து விட்டால் வாழும் போதே சொர்க்கம்.... நல்ல கருத்துள்ள குடும்ப கதை.... இன்னும் பாராட்டிக்கிட்டே போகலாம்.. சூப்பர் சிஸ்
...
perukkana karanam unmai tha sis. Mathapadi ellam karpanai. Thank you so much for your wishesSuperb story ma. Congrats.போட்டியில்யவெற்றி பெற வாழ்த்துக்கள். உங்கள் மாமா பெண்ணின் சொந்த கதையா. நன்றாக இருப்பார்கள்.