Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -20

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -20

இவர்களின் தனிமையில், சக்கரவர்த்தி இனியனுக்கு கால் செய்ய... தன் அப்பா தான் போனில் தன்னை அழைப்பது என்று தெரிந்தவுடன்..போனை எடுக்கவில்லை இனியன்..

பாரு உன் மாமனாருக்கு மூக்குல வேர்த்திடும்... அவருக்கு எப்படியும் தெரியும் நான் உன்கூட தான் இருப்பேன்னு.. எதுக்கு போன் செய்யனும் கரடி.. என்று திட்ட..

எங்க மாமாவ திட்டாத சொல்லிட்டேன் ,தேனு அவனிடம் சண்டையிட..

பெரிய மாமா... அவர் பொண்டாட்டிக் கூட இருக்கும் போது நான் போய் பேசிருக்கேனா... எவ்வளவு டிசன்ட்டா ஸ்பேஸ் கொடுத்திருக்கேன்... இப்ப என்னவாம் அவருக்கு..

உங்கப்பா போய் இப்படி பேசுவீயா..

ஆமாம்... நான் உன்னை ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன் சத்யா மாமாகிட்ட போட்டுக்கொடுத்திருப்பாரு..

மாமா எதுக்கு உனக்கு இப்படி கோவம் வருது.. உன்னை சமாளிக்கிறதான் கஷ்டம் போல..

புரியுதா.. பிரச்சனையே என்னை சமாளிக்கிறதான்.. அதைவிட்டு எதுஎதுவோ யோசிக்கிற... மாமனை கவனி.. சரி முதல்ல ப்ரஷ் அப் ஆயிட்டு வா... தேனு பாத்ரூமுக்குள் நுழைய..

தன் தந்தையை அழைத்தான் மொபைலில்... இரண்டாவது ரிங்கிலே போனை எடுத்தார்...

ஹலோ என்ன விஷியம் சொல்லுங்க... அங்கே அவர் பேச பேச ம்ம் கூட்டி கேட்டுக்கொண்டிருந்தான்..

உங்க பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டிங்களா..

நீ போனை எடுக்கல.. அதுக்குள்ள அவ கால் பண்ணி கேட்டா.. சொல்லிட்டேன்..

எங்கனா உங்களுக்கு அறிவிருக்கா பா... லேடிஸ்கிட்ட விஷியத்தை சொல்லலாமா.. அப்படியே மறைக்க வேண்டியதுதானே.. சென்டிமென்ட் பார்த்து பிரச்சனை செய்வாங்க... முதல்ல புரிஞ்சிக்குங்க... யாரு வந்து தடுத்தாலும் அவளைதான் கல்யாணம் செய்துப்பேன் தெரியும்..

அப்படியிருந்தும் இந்த பூஜை, பரிகாரமெல்லாம் எதுக்கு... முடியாது... போனை வைங்க நான் நேரில்ல வந்து பேசுறேன்..

அந்த நேரம் கதவை திறந்து வெளியே வந்தாள் தேணு... மாமா என்ன பரிகாரம்...கல்யாணம் பேசிட்டு இருந்தீங்க..

அதுவொண்ணுமில்ல... கொஞ்சம் நேரம் சரியில்லையாம் குலதெய்வத்திற்கு பூஜை செய்யனுமாம்... சொல்லும் போதே கண்கள் கலங்கிவிட்டது தேனுவிற்கு..

என்ன சொன்னாங்களாம் குருஜீ... மாமா எனக்கு பயமாயிருக்கு, அவனின் முன் சட்டையை பிடித்தாள்..

ஏய் லூசு.. ஒண்ணுமில்ல நாளைக்கு வீட்டுல பூஜை வைக்கிறாங்களாம்.. கல்யாணமில்லையா அதுக்குதான்.. நீயும் சேர்ந்து பண்ணனுமாம்.. அதுக்குள்ள கண்ணை கசக்கிட்டு இருக்க...

அவளை அள்ளி தன் மடியில் உட்காரவைத்து... இங்கபாரு தேனுமா.. உன் மைன்ட் புல்லா என்னைபற்றியே யோசிப்பீயா... எதுக்கு இப்படி அதீதமான லவ்... சாதாரணமாவே இருடா... மனசுல மட்டும் மாமனை வச்சிக்கோ.. மைன்டுல வேண்டாம்... உன் செயல் சிந்தனை எல்லாம் நான் ஆக்கிரமிச்சிடுவேன்... நீ நீயா இருடா...

சரி இப்போ மாமாக்கு முத்தா கொடு...

க்கும் மாட்டேன்.. கல்யாணத்திற்கு அப்பறம்தான் ஃபிரன்ஜ் கிஸ்..

தேணு இப்பதான் எனக்கு பயம்வருதுடி... அன்னிக்கு நைட் நடக்கிற விவரமெல்லாம் தெரியுமா... மாமவை நல்லா கவனிப்பியா..

ம்ம்.. அதெல்லாம் நல்லாவே தெரியும்.. எங்க அம்மா எப்படி எங்க அப்பாவை பார்த்துப்பாங்களோ அதைவிட உன்னை நல்லா பார்த்துப்பேன் மாமா..

கிழிஞ்சது போ... எங்கடி உங்க அம்மா கவனிக்கிறாங்க எங்க மாமாவை... ஒத்த பொண்ணோட இருக்க சொல்லவே தெரியல உங்கம்மா கவனிச்ச லட்சணம்.. மெதுவாக இனியன் முணங்க..

என்ன சொன்னீங்க... அவளின் இதழை முற்றுகையிட்டான்...

சும்மா ஜாமூன் மாதிரி ஸாப்டா இருக்கு... அப்படியே கடிச்சிட்டே இருக்கலாம் போல இருக்குடி..

வலிக்குது மாமா..

“வானிலிருக்கும் நட்சத்திரங்களை

எண்ணிவிடலாம் பெண்ணே..

நான் முத்தமிடும்

எண்ணிக்கை எண்ணில் அடங்காது இனியவளை....”

.....

அடுத்த நாள் காலை 9.00 மணிக்கே தவசி தனது ஆட்களை கொண்டு பூஜைகளுக்கான வேலைகளை ஆரம்பித்தார்.. அகிலாவும், சத்தியமூர்த்தியுடன் வந்தாள்..இனியன் வேட்டியிலும், தேனு பட்டுபுடவையிலும் வந்து அமர்ந்தார்கள்... தன்னவளை பட்டுப்புடவையில் அதுவும் தலையில் சூடியிருக்கும் மல்லிகை பூவிலும் பார்க்கும் போது தனக்கு கல்யாணமா என்று தோன்றியது இனியனுக்கு... இருவரும் அம்மன் முன்னே வணங்கி எழுந்தார்கள்...

அந்த பங்களாவே சாம்பிரானி, யாகம் புகைகளாக காட்சியளித்தது.. லதா தவசி கேட்கும் பொருட்களை எடுத்துக்கொடுப்பது.. வந்திருப்பவர்களை கவனிக்கவும் சரியாகயிருந்தது...

அந்த பக்கம் சரண் போனில் பேசியபடி, இனியனிடம் ஆபிஸ் விஷியமாக கேட்க பதில் அளித்துக்கொண்டிருந்தான் இனியன் வேர்வையில்... கடைசியாக பூஜை முடித்து தேங்காயை உடைத்தார் தவசி.. தேங்காய் அழுகி போயிருக்க... அனைவரும் மிரண்டு நின்றன..

இனியன் அதை பொருட்படுத்தாமல் முதலில் தேணுவை பார்த்தான்.. கண்களில் அவள் காட்டும் அதிர்ச்சி... அவள் கையை இறுக்க பற்றிக்கொண்டான்..

பரிகாரம் பலனில்ல சக்கரவர்த்தி ஸார், அதுக்குதான் அப்பவே சொன்னேன்.. தவசி வாயை எடுக்க...

நீங்க கிளம்பலாம் தவசி ஐயா என்று சிங்கம் போல் கர்ஜித்தான் இனியன்..

நீங்க விதியுடன் விளையாடுகிறீங்க தம்பி.. அப்பறம் உங்க இஷ்டம் அந்த இடத்தைவிட்டு கிளம்பினார் தவசி...

லதா இனியனிடம் எதுக்கும் தவசி சொன்னதை யோசிச்சு அவள் முடிக்கும் முன்னே.. இனியன் தேனுவின் கண்களில் கண்ணீர் வடிய நின்ற கோலத்தை பார்த்தவுடன்...கோவத்தில் டீபாய், டிவி எல்லாத்தையும் உடைத்தான்... அவனை அடக்கிய சரண்..டேய் டென்ஷன் ஆகாத இனியா.. அபி தேனுவின் கையை பிடித்துக்கொண்டாள்.

தன் அப்பாவை நோக்கி, எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்... நான் அப்பவே சொன்னேன் எனக்கு இதில்ல நம்பிக்கையில்லைன்னு... இந்த வீட்டுல என் பேச்சை கேட்க கூடாதுன்னே இருக்கீங்க... கத்த ஆரம்பித்தான்... அவ எப்படி நிற்கிறா பாரு என்னால அவள பார்க்கமுடியல..

அன்று சிறுவயதில் ,எப்படி தன் தாய்க்காக சண்டையிட்டானோ... அதேபோல் இன்று தன் மகளுக்காக நிற்கிறான்... இவன் மாறவேயில்ல... அகிலா மனதில் நினைத்து, இனியனை பார்க்க..

அகிலாவிடம் ,நீங்க என்ன சொல்ல போறீங்க... அவளை தூக்கிட்டுபோய் கல்யாணம் செஞ்சிப்பேன்.. அவ சம்மதம் கூட எதிர்ப்பார்க்க மாட்டேன்...

எனக்கும் இந்த ஜாதகத்தில நம்பிக்கையில்ல இனியா... எனக்கு குழந்தையே பிறக்காது சொன்னாங்க, ஆனா ஆரா பிறந்தா... இப்போதான் என் பெண்ணை உனக்கு கொடுக்க முழுசம்மதம்... நிச்சயதார்தில பார்க்கலாம்.

பால்கனியில் போடப்பட்டிருந்த சோபாவில் தலைசாய்த்து கண்மூடி இனியன் உட்கார்ந்திருந்தான்... மாமா என்று தேனு அவனருகில் வந்து நின்றாள்...

கண்ணை திறந்து பார்க்கவில்லை இனியன்...

ஸாரி மாமா, இனிமே அழமாட்டேன்.. உன்மேல நம்பிக்கையில்லாம இல்ல பேசிக்கொண்டிருக்கும்போதே அவள் இடுப்பில் கையை வைத்து, இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டான்..

அந்தபக்கம், இந்தபக்கம் திரும்பி பார்த்து அவனின் இதழில் முத்தமிட்டாள்.. இவளாக கொடுக்கும் முதல் முத்தம்..

என்னடி... ஓவரா பண்ணற..

இந்த வேட்டிசட்டையில கல்யாண மாப்பிள்ள மாதிரி தேஜஸா இருக்க... அப்படி ஒரு மேன்லி லுக்..

நீதான் ஹாலிவுட் ரேன்ஜூக்கு புருஷனை தேடுறேன் சொன்ன..

ஆமாம்... பாரின்ல படிச்சிட்டு வந்தது நீதானே உன்னை வச்சிதான் சொன்னேன்... சாப்பிட வா மாமா..

அவள் உதடுகளை நோக்கி.. எதை சாப்பிட...

ஆரம்பிச்சாட்டாங்களா சந்து கேப் கிடைக்க கூடாது, கிடாவே வெட்டிடுவான் சரண் அவர்களை கலாய்க்க.. இனியனின் மேலேயிருந்து இறங்கி நின்றாள் தேனு...

குட்டிமா.. அம்மா கிளம்பறாங்களாம்.. உன்னை கூப்பிட்டாங்க..

சரிண்ணா... வரேன் இனியனிடம் கண்களால் பாஷைகளை பரிமாறிவிட்டு கீழேயிறங்கினாள் தேன்மொழியாள்

இரவு சக்கரவர்த்தியின் அறையில்.. ஏங்க இனியன் இப்படி பண்ணுறான்.. எனக்கு பயமாயிருக்குங்க..

அவன் தெளிவாயிருக்கான்.. அப்பவே சொன்னான் உன்கிட்ட செல்லகூடாதுன்னு நான்தான் சொல்லிட்டேன்..

இங்க பாரு லதா... அவன் நேத்து பார்த்து தேனுவை விரும்பல... அவ பிறந்தது முதல் தேனுமேல கிரேஸ்... இவன் மாறுவான் நம்பிதான் வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பினேன்.. இவனுடைய பழக்கவழக்கம், உணவுமுறை மாறினதே தவிர மனசு மாறுல.. தேனுவைதான் மனசுல நினைச்சிட்டு இருக்கான் தெரிஞ்சிடுச்சு..

இவனைவிட நம்ம குட்டிமா ஆரா உயிரே விட்டுவிடுவா... விடு நல்லதே நினைப்போம்.. நல்லது நடக்கும்..

அப்பறம் அவன் நினைச்சதைதான் சாதிப்பான்.. உன்னையும் பார்க்கமாட்டான்.. என்னையும் மதிக்கமாட்டான்..

.......

ஒரு திருமணத்தை எப்படி பிரம்மாண்டமாக நடத்துவானோ.. அதேபோல் நிச்சயதார்த்தை நடத்தினான் இனியன்.. பெரிய மஹால் பிஸினஸ் சைட் அனைவரையும் அழைத்திருந்தனர் சக்கரவர்த்தியும், சத்யாமூர்த்தியும்... தேனுவின் கிராமத்திலிருந்து சொந்தங்கள்.. திருச்சியில் அவளின் தாய்மாமன் குடும்பமே வந்திருந்தனர்...

அகிலாவின் அண்ணாவிற்குதான் கவலை தன் வீட்டுக்கு வரும் மருமகளாக தேனுவை நினைத்திருந்தார்.. விக்கியும் வந்தவர்களை கவனித்துக்கொண்டிருந்தான்... ஒருபக்கம் அபியும், சரணும் உரசியபடி இருந்தார்கள்... சரண் மாமா அடுத்து இரண்டு வருஷம் கழிச்சு நம்ம கல்யாணம் தானே..

ஏன்டி இரண்டு வருஷமாகுமா.. சீக்கீரம் பண்ணிக்கலாம்...

பிங்க் கோல்டன் கலந்த வேலைபாடுகளோடு லேங்காவில் தேவதைபோல் வந்தாள் தேன்மொழியாள்...

கண்களின் இமை மூடாமல் பார்த்தபடி நின்றான் இனியன்.. அவனருகில் நிற்க... அங்கே ஆர்செஸ்ட்ரா குழுவும் பாட்டு பாடி வரவேற்றார்கள்..

பெரியவர்கள் தாம்பூலம் மாற்றினார்கள்... கொஞ்சம் நேரத்தில் பட்டுபுடவை மாற்றி தேனுவர... அவர்களின் முறைபடி இருவரையும் உட்கார வைத்து சந்தன நலங்கு வைத்தனர்.. கல்யாண பத்திரிக்கை எழுதி நாள் குறித்தனர்... இரண்டுமாசம் பின் திருமணம் உறுதியானது..

பங்கஷன் ஒரு வழியாக முடிய இரவு 10.30 மணிக்கு மேல் ஆனது... சத்யா மாமா.. நான் தேனுவை கூட்டிட்டு வரேன் அவரிடம் பர்மிஸன் வாங்கினான் இனியன்...

சென்னை மாநகரமே ஒய்ந்திருந்த வேலை ,ஆள் நடமாட்டம் குறைய ஆரம்பித்தது.. அவளின் தெருவின் ஒரமாக காரை நிறுத்தினான்.

ஏன் மாமா காரை இங்க நிறுத்திட்ட..

சில பல வேலையிருக்கு என்று காரின் லைட்டை ஆப் செய்தான்..

எதுக்கு காரை நிறுத்திட்ட..

இன்னைக்கு நிச்சயம் நடந்திருக்கு... இப்பவே பாதி புருஷனாயிட்டேன்டி.. ஏய் அப்படியே சந்தனம் வாசனை ஆள தூக்குதுடி.. அவளை அனைத்து முகம் முழுவதும் முத்தமிட்டான்.. நீ அவசியம் வீட்டுக்கு போகனுமா..

அவளின் கழுத்தில் தன் நாசியை தேய்க்க.. துள்ளி எழுந்தாள் தேனு.. டேய் என்னடா செஞ்ச...

நான் ஒண்ணும் செய்யல.. தெரியாம அங்க கை பட்டிருச்சு.. இப்படி அப்படி கட்டிபிடிச்சேனா.. அப்படி இப்படி தெரியாம டச் சாயிடுச்சு..

ஆகும்டா... இன்னும் இரண்டு மாசமிருக்கு.. அதுக்குள்ள என்ன அவசரம்..

இன்னும் இரண்டுடு மாசமிருக்கு நீட்டி சொன்னான்.. இப்பவே உன்னை பிரிய மனசு வரல.. போகாதடி.. வா நம்ம வீட்டுக்கு போகலாம் குழந்தையாக அடம்பிடித்தான்..

மாமா டைமாயிடுச்சு... நாளைக்கு சினிமா போறோம்.. யாருக்கும் தெரியாம... ஓகேவா..

ம்ம்.. வண்டியை அவளின் வீட்டின்முன் நிறுத்தினான்.. பாய் சொல்லி படியேறி வீட்டிற்குள் சென்றாள் தேன்மொழி... மாடியேறி தன் அறைக்குச் செல்ல... அந்த இரவின் நிசப்பதில் டமாருன்னு சத்தம் சன்னல் வழியாக பார்த்து அலறியடி ஒடினாள் மாமா என்று....

......மெய் தீண்டுவான்.
 
Nirmala vandhachu ???
 
என்ன ஆச்சு
இனியனுக்கு

இந்த ஜாதகம் பரிகாரம்
இதெல்லாம் ஏதாவது
கெட்ட எண்ணம் கொண்ட
ஆட்கள் வேலையா இருக்குமோ
 
என்ன ஆச்சு
இனியனுக்கு

இந்த ஜாதகம் பரிகாரம்
இதெல்லாம் ஏதாவது
கெட்ட எண்ணம் கொண்ட
ஆட்கள் வேலையா இருக்குமோ
விதியா கூட இருக்கலாம் சிஸ்
 
Top