மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 21

Advertisement

அம்மா பொண்டாட்டி யாரு மேலயும்
கொஞ்சம் கூட பாசம்
இல்லை யோகனுக்கு

ராக்காயி மகன் வீட்டுக்கு கூப்பிட வந்து இருக்காங்களா
ஆமாம் சகி 🥰🥰
 
அருமையான பதிவு 😍 😍 😍.
அடேங்கப்பா ராக்கு நெம்ப திங்கிங்குல இருக்கே🧐🧐🧐.
காலங்காத்தால வந்து ராக்குக்கு நல்ல தரிசனம். வாயி என்றாளுக்கு கூட இல்லை ராக்க் வாய்தான் வாடிவாசல் வரை நீண்டு குத்தி கிழிக்குது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😬😬😬😬😬😬
யோகராசாக்கு யாராவது செருப்படி சீவமாத்தடி குடுத்தா தான் புத்தி வரும் ஒன்னும் சொல்லறதுக்கில்லை அவனை😤😤😤
அவனை தண்ணி தளிச்சு விட்டுடலாம் நாம :ROFLMAO::ROFLMAO:
 
கனகம் நல்லவளா இருக்கலாம் அதுக்காக ஓவர் நல்லவளா இருக்க கூடாது 🤭🤭🤫

மாமியாருக்கு ஆக்கி போட்ட சரி ஆனா தினமும் வந்து வெட்டி பேச்சு பேசுற கூட்டத்துக்கு ஏன் சோறு போடணும் 🤧🤧🤧🤧🤧

அழுக்கு துணி எல்லாம் அந்த யோக ராசா துவைக்க மாட்டானா 🥶🥶🥶தம்பி பொண்டாட்டி கிட்ட துவைக்க சொல்ல வெக்கமா இல்லை 🤧 🤧 🤧 🤧

அம்மா ராசியில்லாத பிள்ளை என்று சொன்னதை யோகனும் நம்புறானோ 🥺🥺🥺🥺

ராக்காயி வீட்டு வேலைக்கு ஆள் தேடி வந்திருக்கு 🙁 🤫 🤫 🤫 இப்போ பார்த்ததுக்கு தனியா இருக்கும் போது ஏதாவது சொல்லுமே 😖😖😖😖😖
அவனுக்கு எந்த பிரச்சனையும் அவனை தேடி வரக்கூடாது யார் எப்படி போன என்ன 🥰 🥰
 
அடக்கடவுளே, இந்த ராக்காயி இப்படி உடனே திருந்தி வருந்தி அடுத்த நாள் காலையிலேயேவா வந்து நிக்கணும் மகன் வீட்டு வாசலில.
டேய் ராஜகுமாரா, இப்ப உங்கம்மா கிட்ட சொல்லு, "உனக்கு அடிபட்ட வேளை எந்த வேளையோ தெரியலை, எனக்கு குடும்பம் நடத்தி பிள்ளை பெத்துக்கற யோகமே குறைஞ்சுட்டு வருதுன்னு".
கெஞ்சி கூப்டாங்கனாலும் உடனே போயிடாத. உனக்கும் குறிக்கோள் இருக்கனும்-உன் மனைவிக்கு செவ்வந்திக்கும் உன் அக்காவுக்கும் கிடைக்கற அதே ஓய்வை கிடைக்க வைக்கணும்ன்னு.

4 மாசம் முடிஞ்சுமா செவ்வந்தி பிறந்த வீட்டுல இருக்கா. இனிமேல் வந்து அவளோட புருஷனுக்காவது அவளே சாப்பாடு செஞ்சு கொடுக்கலாமே. கனகம் எப்படிப் பார்த்துக்கிட்டாலும், நல்ல பேரு செவ்வந்திக்கு தான். அப்ப அவளோட தலையெழுத்தை (யோகன்) அவ தான் சுமக்கனும். செல்லிக்கு அந்த பொண்ணோட பொறுமையான நடத்தை மட்டும் தானே புடிச்சுருக்கு. கனகத்தை கரிச்சு கொட்டிகிட்டே தான் இருக்காங்க. அவங்க ராஜனும் யோகன் மாதிரியே இருந்தா நிம்மதியா இருப்பாங்கன்னு தோணுது. ஒரு மகளுக்கு மட்டும் நல்ல குணமா புருஷன் அமைஞ்சுது அவங்களோட கண்ணை ரொம்ப உறுத்துது.

யாரும் யோகனை வையாதீங்கப்பா. அவரு தனக்குப் பொறக்கப் போற குழந்தை நல்லா பொறக்கணும்னு, மச்சினி செஞ்சு கொடுத்த சாப்பாட்டை மூணு வேளையும் நல்லா கொட்டிக்கிட்டு, கழட்டின உடுப்பக் கூட துவைக்காம தவம் பண்ணிட்டு இருக்காரு. மனைவி, அம்மா, அப்பாங்கிற உறவுகளையெல்லாம் மறந்து(துறந்து) தன் வருங்கால சந்ததியோட நலனுக்காக மட்டுமே வாழறாரு.
அவர் சுகவாசி 🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top