Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மின்னல்-காதல்-(7)

Advertisement

Crazy Queen

Well-known member
Member
கனி ஸ்ரீ கெஸ்ட் ஹவுஸுக்கு திரும்பி வந்து விட்டால்.

எங்கம்மா போயிருந்த போயி ரொம்ப நேரம் ஆச்சு பதை பதைப்போட இருந்தேன். ஆமா .... என்ன டிரஸ் ஈரமா இருக்கு ? சாரல் கூட அப்பவே நின்னு போச்சே ?

ஆத்துல ஆசைப்பட்டு குளிச்சிட்டு வந்தியா? ஆமா..... உன் கூடவே ரெண்டு பேரும் வந்து.... உன்னைவிட்டு போறாங்களே ? அவங்க யாரு ?

துர்கா கேள்விகளே அடுக்கி கொண்டு போனாள்.

"ஒரே நேரத்தில் எத்தனை கேள்விதான் கேட்ப ? அவங்களை அகத்தியன் தான் என் துணைக்கு அனுப்பி வச்சாரு....."

இளைய ஜமீன்தார் ? அவரை நீ பார்த்தியா ?

"உம்.... பார்த்தேன்."

நேராக அறைக்குள் புகுந்து ஈர உடையை கழற்றி விட்டு.... வேறு உடை மாறினாள்.

ஜமின் வம்சத்துக்கு அவ்வாறுதான் ஏகபோக வாரிசாம்... அவர்கிட்ட மரியாதையா முகம் கொடுத்து பேசினியா? இல்லையா .....

சட்டென்று இடைமறித்தாள் கனி ஸ்ரீ.

"அதெல்லாம் பேசினேன்..... தலை வலிக்கிற மாதிரி இருக்கு சூடா ஒரு சுக்கு காப்பி போட்டு தர சொல்லேன்....."

அவர் உன்கிட்ட ஆசையா பேசியிருப்பாரே? அதற்கு தகுந்தாற் போல......

அம்மா .....நான் காபி கேட்டேன்....

உக்கும்.... எதையும் விலாவரியா சொல்ல மாட்டியே ? உனக்கு சாமர்த்தியம் பத்தல....

நிறுத்திறியா? இந்தப் பேச்சை இதோட நீ நிறுத்திக்கலைன்னா..... நான் மறுபடியும் வெளியே போய் கிளம்பிடுவேன்.

கனி ஸ்ரீ குரலை உயர்த்தியதும் துர்கா அடங்கிப்போனாள்.

"காபியை வேலைக்காரர் அம்மா கிட்ட குடுத்து அனுப்பு.... குடிச்சிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கிறேன்."

வேலைக்காரன் தந்த சுக்கு காபியை குடித்து விட்டு..... அறைக் கதவை சாற்றி விட்டு .....கூந்தலை நன்கு கோதி விட்டபடி..... ஆளுயர கண்ணாடியில் தன்னை நோட்டமிட்டாள்.

தங்க சிலை ஒன்று உயிர்ப்பெற்று வந்ததுபோல் பேரழகுடன் மிளிர்ந்தாள்.

அகத்தியன்....‌. இளைய ஜமீன்தார்..... வாட்டசாட்டமாய் ஆஜானு பாகுவாய் இருக்கும் ஆணழகன்.

அவருக்கு நான் பொருத்தமானவள் தானே? அவர் அழகான இளைஞர் தான்.

என்னைப் பார்த்து எத்தனை விதமாய் வர்ணித்தார்? 'அழகான உருவம்'.... 'பூ' .... 'புஷ்ப மூட்டை'.... 'நுரையால் செய்த சிலை'.... கடைசியாய் 'உயிரோவியம்' என்றாரே ?

இருவரும் அருகருகே நின்றால்.... ஜோடிப் பொருத்தம் பிரமாதம் அனைவரும் கூறுவார்கள்.

என்னையும் அறியாமல்.... அவரிடம் மனதைப் பறிகொடுத்து விட்டேன்.

அவரும் என்னை விரும்புகிறார் என்று அப்பட்டமாய் தெரிகிறது.

என்னை விரும்புகிறாரா ? அல்லது இந்த அழகை மட்டும் விரும்புகிறாரா? என்று தெரியவில்லை?

உருக உருக நேசிக்கிறார் என்று புரிகிறது. ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள பிரியப்படுகிற போலிருக்கிறதே ?

ஜமீன் பரம்பரையில் பிறந்தவர்களை சர்வசாதாரணமாக ஆசைநாயகி வைத்துக் கொள்வார்களே?

ஜமீன் வம்சத்துக்கு வாரிசு அதே 'கல்யாண குணம்' தானே இருக்கும்?

அவரிடம் எப்படி நான் மனதை பறி கொடுத்தேன்? ஏன் அனுமதியின்றியே என்று என் இதயம் அவரிடத்தில் தொலைந்து விட்டதே?

என்ன காரணம்?

அவர் நினைத்தால்...... அந்த மர விட்டு தனிமையில்...... அதுவும் சுய நினைவின்றி மயங்கி கிடப்பவளிடம்.... எப்படியும் வேண்டுமானாலும் நடந்து கொண்டிருக்கலாமே ?

ஆனால் ..... அகத்தியன் அப்படி கீழ்தரமாய் நடக்கவில்லையே?

எனனைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு..... நான் ஆசைப்பட்ட காற்று ரோஜாக்களை ஏராளமாய் சுற்றிலும் அழகு படுத்தி வைத்து விட்டு.... மர வீட்டை விட்டு கீழே இறங்கிப் போய் நின்று கொண் டாரே?

இந்த கண்ணியம்..... அவரது நேர்மை... என்னை காந்தமாய் அவரிடத்தில் இருந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

வனாந்தரம் ..... ஏகாந்தமான மர வீடு.... ஏன் என்று தட்டிக் கேட்க ஆள் இல்லை.

அப்படிஒரு சந்தர்ப்பத்தை கிடைத்ததும்..... தன்னிலை தவறாமல் கண்ணியமாக நடந்து கொண்டாரே ?என்ற வியப்பில் தான்.... நான் அவரை விரும்பி விட்டேன்.

அவருக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று எனக்குத் தெரியும்.

அதுவும் இந்தக் குலத்தில் பிறந்த பெண்..... பாரம்பரியமான ஜமீன் வம்சத்து வாரிசு எப்படி விரும்பலாம் ?

இதெல்லாம் நன்கு புரிந்தவள் தான்.

ஆனால்... இந்த பாழாப்போன மனதிற்கு புரியவில்லையே? சட்டென்று அவரை விரும்பி தொலைத்து விட்டதே?

இதை நான் வெளியே சொல்ல முடியுமா?

வெளியே என்ன ? அகத்தியன் இடமே சொல்ல முடியாது?

மனதில் உள்ளதை அப்படியே பிரேமாவிடம் கொட்டித் தீர்த்து விடுவதற்கு எனக்கு கொடுப்பினை இல்லையே?

இவளை எனக்கு பெரிய எதிரியாக இருக்கிறாளே?

தெரிந்து தெரியாமலோ..... அகத்தியனை என் மனம் விரும்பி விட்டது.

இனி..... கால முழுவதும். அகத்தியன் நினைவில் இப்படியே இருந்துவிட வேண்டியது தான்.

அவருக்குத்தான் என்ன ரசனை ?

இந்த காலத்து இளைஞர் இருந்தாலும் பழைய பாடலை ராகம் மாறாமல்.... அருமையாக பாடினார்.

அவளுக்கு சற்று முன்னர் நடந்த சம்பவம் ...... ஞாபகத்திற்கு வந்தது.

அவன் பாடி முடித்ததும் அவளையும் அறியாமல் சிலிர்ப்புடன்அவனை ஏறிட்டாள்.

அதை நான் எதிர்பார்க்கவே இல்லை சார் ....! நிஜமாக ரொம்ப அற்புதமான பாடறீங்க... என்றாள்.

நீ மட்டும் என்னவாம் ? பிரமாதமா டான்ஸ் ஆடறியே? உன்னுடன் நடனத்துக்கு முன்னாடி இது கால் தூசி பெறுமா?

சேச்சே.....! அப்படி எல்லாம் சொல்லாதீங்க.

நான் ஒண்ணை தொலைச்சுட்டு தேடிட்டு இருக்கேன் தெரியுமா ?

எ... எதை தொலைச்சீங்க?

முக்கியமானது ஒன்னு ... இங்கே கண்டுபிடி பார்க்கலாம்...‌‌

நோ ஐடியா சார்....! நீங்களே சொல்லுங்க...."

கனி ஸ்ரீ மங்கலாய் விழித்தாள்.

நீங்க எதை சொல்றீங்க? தயங்கியபடி கேட்டாள்.

புரியலையா? அதை நீங்களே எங்கே தொலைச்சிங்க என்று தெரியுமா?

அவன் பூடகமாக எதை சொல்ல வருகிறான் என்பது புரியாத அளவுக்கு.... அவள் முட்டாள் இல்லை?

அவள் மௌனமாய் நின்றாள்.

உன்னோட பாத சலங்கை இல்ல என் இதயத்தை தொலைத்துவிட்டேன் கனிஸ்ரீ.

அவளது இதயத்துடிப்பு திடீரென்று ஏறியது.

அவன் வெகு உரிமையாக அருகே வந்தான்.

சட்டென்று அவளது வலது கரம் பற்றி தன் மார்பின் மீது வைத்து அழுத்தினான்.

இந்த இதயம் ..... ஒவ்வொரு கணமும் உன்னுடைய பெயர் தான் சொல்லிக்கிட்டு இருக்கு....

உனக்கு கேக்குதா டார்லிங்?

அவளது புறங்கையில் அழுத்தமாக முத்தமிட்டான்..

ஏதோ ஒரு விருட்சத்திலிருந்து.... குயில் 'குக்கூ....' என்று இனிமையாக கூவியதும்.... தன்னை மறந்து நின்றவள் சட்டென்று சுதாரித்து கையை உருவிக் கொண்டாள்.

என்னது இது ? யாரையும் இப்படி அருகில் வந்து நிற்பது இருக்கே அனுமதித்ததில்லை?

இதற்கு மேல் இங்கே இருப்பது முறையல்ல....

உள்மனம் எச்சரிக்கை மணி பலமாய் அடித்துவிட்டது

சார் நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு அம்மா தேடுவாங்களா என்ற பார்வையை தழைத்தபடி மெல்லிய குரலில் கூறினாள்.

நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவில்லை பரவால்லை அப்புறம் பார்த்துக்கலாம் என்றான் தனது கைகளை பலமாய் தட்டினான்.

அந்த ஓசையை கேட்டதும் ....இலை சருகுகள் பலமாய் வரும் சத்தம் கேட்டது.

தபதபவென்று இரு வேலையாட்கள் ஓடிவந்தனர்.

இருவரும் எதிரில் வந்து கோரஸாய் எஜமான் என்றார்.

கனிஸ்ரீ கெஸ்ட் ஹவுஸில் பத்திரமாய் கொண்டு விட்டு வாங்க.

உத்தரவு எஜமான்

போனதும் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிடு. ஈரத்தில் ஜலதோஷம் பிடிச்சுட போவது.... நாளைக்கு டான்ஸ் ப்ரோக்ராம் இருக்குல்ல? அங்கே சந்திக்கலாம் . டேக் கேர் கனி ஸ்ரீ...!

தேங்க் யூ சார்....!

நான்கு விழிகளும் நேசமும் கலந்த போது உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது.

அகத்தியன்.... நேரடியாக சொல்ல எனக்கு தைரியம் வரலை . தைரியம் மட்டுமல்ல . அதற்கான தகுதியும் எனக்கு இல்லை.

ஆனா ... இப்ப தனிமையில சொல்றேன். நான் மனப்பூர்வமா உங்களை விரும்புகிறேன்.

உங்க கண்ணியம் பிடிச்சிருக்கு. நேர்மை பிடிச்சிருக்கு. உங்க ரசனை பிடிச்சிருக்கு.

இதையெல்லாம் காலம்பூரா என் மனசுல மட்டும்தான் சொல்லிக்க முடியும்.

காதலை மனசுக்குள் காலத்துக்கும் புதைத்து வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை அகத்தியன்!

பெரியம்மா கிட்ட சொன்னா விரும்பின அவருக்கே ஆசை நாயகியாக இருந்தா தப்பு இல்லன்னு சொல்லி நச்சரிக்க தொடங்கிவிடுவா.....

நான் நேர்மையா கற்பு நெறியுடன் சமுதாயத்தில் எனக்கு ஒரு அங்கீகாரத்துடன் பிரியப்படுகிறேன்.... ஐ லவ் யூ அகத்தியன்....!"

அவன் முத்தமிட்டு அதை புறங்கையில் தானும் இதழ் பதித்தாள் கனிஸ்ரீ.

விதி சிரித்தது அவள் வாழ்க்கை மோசமாக விளையாட தக்க தருணம் பார்த்து.

? கனி ஸ்ரீ தன் காதலை வெளிப்படையாக கூறுவாளா??

? விதியின் விளையாட்டு என்ன? ?

? டான்ஸ் ப்ரோக்ராம் நல்லபடியாக முடியுமா??
 
Top